பாலியல் வல்லுறவும் ஆண்களும் (இரண்டு)

நம்பிக்கை நான்கு: வயதுவந்த ஆணொருவர் பெண்ணால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக முடியாது.
விளக்கம் : பாலியல் வல்லுறவு நிகழ்வுகளில் 97 வீதமானவை ஆண்களால் நிகழ்த்தப்பட்டவையாக இருந்தாலும் பெண்களால் செய்யப்பட்ட வல்லுறவுகளும் பதிவுகளில் உள்ளன. பெண்களும் பாலியல் வல்லுறவை நிகழ்த்தியிருக்கிறார்கள்; நிகழ்த்துகிறார்கள்.
இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடயம் ஒன்றுளது. அதாவது பெண்களால் வல்லுறவுக்காளாக்கப்படும் ஆண்கள் அதை வெளியில் சொல்வதில்லை. சொன்னால் தாங்கள் கோழைகள் ஆகிவிடுவோமோ என நினைக்கிறார்கள்.
குறிப்பிட்ட இந்நிகழ்வுகளில் பாலியல் வல்லுறவுக்காளாக்கிய பெண்ணே ஆணை ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பிக்கிறாள். இதை வெளியில் கூறினாயானால் நீதான் என்னை வல்லுறவுக்குள்ளாக்கியதாக கூறிவிடுவேன் என்கிறாள். அதனால் இவ்வகை வல்லுறவுகள் பதிவுகளில் வருவதில்லை.
இவ்வகைக் நிகழ்வுகள் கிராமப் புறங்களைவிட நகரங்களிலும் மேற்குலக நாடுகளிலுமே அதிகமாக உள்ளது. இதன் போது ஆண் தனது பாலுறுப்பை பெண்ணினுள் செலுத்தவேண்டுமென்றில்லை. பெண் ஆண் மீது அதிர்வுக் கருவிகளை பாவிக்கிறாள்.
ஒரு பெண் பலவந்தமாக ஆணுறுப்பினை விறைப்புத்தன்மை ஆக்கமுடியாது என நினைக்கிறீர்களா? ஒன்றை யோசித்துக்கொள்ளுங்கள், ஆணாக நீங்கள் உங்கள் பாலுறுப்பின் மீது மிக மிகக் குறைந்த கட்டுப்பாட்டையே வைத்திருக்கிறீர்கள் அல்லது உங்கள் உடலில் நீங்கள் கட்டுப்படுத்த முடியாத பகுதிகளில் ஒன்றாக உங்கள் ஆணுறுப்பும் உள்ளது.
உதாரணத்திற்கு டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த இந்தச் செய்தியை வாசித்துப் பாருங்கள். மூன்று பெண்மணிகள் ஒரு ஆணை கடத்திப் பாலியல் வல்லுறவுக்காளாக்கிய சம்பவம் பற்றியது..
பி.கு: நம்பிக்கைகளும் விளக்கங்களும் தொடரும். நேரம் இருக்கும்போது பதிகின்றேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது
22 பின்னூட்டங்கள்.
மது,
அறிவியல் பூர்வமா பட்டை எடுக்கிறீங்க போலிருக்கு? வாழ்த்துகள்!
வாங்கோ பழமைபேசி,
பகுதி ஒன்றுக்கும் வந்து பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். இதற்கும் போட்ட உடனயே பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்.
நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
நீங்கள் சொல்வது உண்மை, நான் முதலில் என்னை உறவுக்கு வற்புறூத்தி அழைப்பதை பெருமையாக நினைத்தேன் பல முறை என்னை என் மனைவியின் தோழி கற்பழித்து இருக்கிறாள் ஒருமுறை அவளின் வீட்டு வேலைக்காரியுடன் நான் இருப்பதை ரசிக்க அழைத்த போதுதன் என் தன்மானம்
நான் கற்பழிக்கபடுவதை உணர்தியது..என் மனைவியிடம் சொல்லிவிடுவென் என்று சொல்லி சொல்லி என்னை வழித்துவிட்டாள். உலகம் அவள் என்னை கற்பழித்ததை நம்பவா போகிறது?
Good analysis, hey men, what is the percentage man.
Even in this one guy told that he was used by his wife's friend, which he realised later till then he was enjoying he did not have a forced...
Have some sense man.
நல்ல ஆராய்ச்சி ஒன்று.. தொடருங்கோ.. இப்படியான விஷயங்களும் வெட்கப்படாமல் எங்கள் சமூகத்தில் பேசப்பட வேண்டும்
நல்ல தகவல்.. பதிர்ந்தமைக்கு நன்றி
வாங்கோ லோஷன்,
நிறைப் பேர் இதைப் பற்றிப் பேசவேண்டும். இதுகள் பற்றிய விழிப்புணர்வு நிறைய வேண்டும்
வாங்கோ சுபானு,
தகவல்கள் விழிப்புணர்வுக்காக
கொஞ்சம் விவகாரமான விடயம் தான், ஆனால் நானும் இது போன்றவற்றை கேள்வி பட்டிருக்கிறேன். வயது குறைந்த சிறுவர்களை பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது நடக்கிற விடயம் தான்.
உண்மையாக நல்ல பதிவு அண்ணா. (வழமையான ரெம்பிளற் பின்னூட்டம் இல்லை இந்த வாழ்த்து)
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை என்றாலும் உங்கள் தேடலுக்கும், முக்கியமாக சீரியஸ் பதிவுக்கும் வாழ்த்துக்கள் சகோதரா.
வாங்கோ யோ,
இதில விவகாரம் எதுவும் இல்லை. விவரமா அறிஞ்சிருக்கவேண்டிய விடயம்.
நீங்க சொன்னமாதிரி நடந்த சம்பவங்களை நேரில் கேட்டறிந்திருக்கிறேன்.
வாங்கோ கோபி,
நல்லாயிருந்தாத் தொடர்ந்து எழுதுவோம்.
ரொம்ப சந்தோசமா இருக்கு நம்ம நாட்டுலயும் வெளிப்படையாக பதிவு எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள் எண்ணும் போது. எதிர் காலத்தில் உங்கள் பதிவுகளும் ஆராய்ச்சியாளர்களால் மேலதிக ஆராய்வுக்கு பயன்படலாம். வாழத்துக்கள் வர வர நம்ம நாட்டுலயும் சுதந்திர எழுத்தாளர்கள் அதிகமாகிறார்கள்.தொடருங்கோ..
உப்படி இல்ஙகையில் எந்த பிரதேசத்தில் செய்வார்கள்? தெரிந்தால் அந்தப்பக்கமாக வீடு வாடகைக்கு எடுக்க யோசிக்கிறேன்... ஆனால் நீங்கள் சுட்டிய ஆட்டிக்கலில் ரத்தம் வருவதாக எல்லாம் குறிபிட்டுள்ளார்கள்.. ஏதாவது கடித்துக்கு குதறிவீடுவார்களோ???? எதற்கும் உங்களைப்போல ஆட்களிடம் அட்வைஸ் கேட்டுவைப்பது நல்லது..
எஸ்.ஜே.சூரியா படத்துக்கு கதை ரெடி...
வாங்கோ இலங்கன்,
இதுசம்மந்தப்பட்ட தகவல்கள் ஆங்கில மொழியில் ஏராளம் உண்டு.. தமிழில் வெகு குறைவே..
வாப்பா புல்லட்,
நீங்கள் பகிடிக்காக எழுதினீர்களோ தெரியாது... இவ்வகையான செய்திகளைக் கேள்விப்பட்டு ஆகா.. நானும் பெண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டால் நல்லாய் இருக்குமே என்று நினைப்பவர்கள் ஏராளம் உண்டு..
அவர்களுக்கு பீதி கிளப்பும் வகையாக அடுத்தடுத்த பாகங்கள் வரும்..
பிரியமுடன்,
மது மௌ
இதை மாதிரி வித்தியாசமான பதிவுகளை எதிர்பார்க்கிறோம்!!!
வாங்கோ கார்த்தி,
எழுதுறேன்... வாசிக்க நீங்கள் இருக்கிறீங்கள்தானே..
//அவர்களுக்கு பீதி கிளப்பும் வகையாக அடுத்தடுத்த பாகங்கள் வரும்..//
?????!!!!
இப்படியெல்லாம் கூட நடக்குமா!?
வாங்கோ நாகு..
பீதி கிளப்ப நேரம் கிடைக்குதில்லை.. :(
வாங்கோ வால்பையன்..
என்னா அப்பாவித்தனமாக் கேக்குறீங்க.. நக்கல்தானே.. :))
vaalkaiyil evalavo pirachinaikal iruka iruthu than umaku mukiyama paduthe. nalla muneramthan. nadathungo nadathungo.
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ