ஒரு பெண் - நான் - ஒரு காலியான இருக்கை
ஒவ்வொரு நாளும் வேலைக்கு பேருந்தில் செல்வதென்பது எனக்கொன்றும்
கஷ்டமாக இருப்பதில்லை. ஐபொட்டில் பாட்டக்கேட்டுக்கொண்டு வாயசைத்துப் பாடிக்கொண்டு செல்வதில் அல்லது செல்பேசியில் வெற்றியின் விடியல் கேட்டுக்கொண்டு செல்வதில் எனக்கு அலாதிப் பிரியம்.
முதுகில் சிறுவயதில் பை தூக்கியமாதிரி இப்போதும் மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு செல்வதால் நண்பர்கள் சிலருக்கு வரும் களுத்துளைவு எனக்கு வருவதுமில்லை.
பேருந்தில் இருந்து செல்வதை விட இருக்கைகள் இருந்தாலும நின்று செல்வதில் ஏனோ இன்பம்.இப்படித்தான் நேற்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.இருக்கைகள் முற்றிலும் நிரம்பியிருந்தன. மூன்று பேர் இருக்கக்கூடிய இருக்கைகளை நோக்கியவாறு மேல கம்பியைப் பிடித்தபடி வெற்றியின் வியாழன் கேள்வி-பதில் நிகழ்ச்சியை இரசித்து கேட்டுக்கொண்டு சென்றேன்.
எனக்கு நேரே இருந்த இருக்கையில் ஒரு ஆண், இன்னொரு ஆண், நடுவிலே அழகான ஆம் தலைமயிரை நேராக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பறக்கவிட்டபடி அழகான ஒரு பெண்.
சிறிது தூரம் சென்றதும் ஜன்னலோர ஆண் பேருந்தைவிட்டு இறங்கிச் செல்ல அவ்விடம் காலியானது. அந்த இடம்தான் காலியானது ஆனால் என்னுடைய மனம் கலகப்பட்டது. இந்த மடிக் கணினியோடு, இரண்டு பக்க நீளக்காற்சட்டைப் பைகளிலும் தொலைபேசிகள் மற்றும் இதர பொருட்களோடு அவ்விடத்தில் போய் இருந்தால் அவளது மடியிலும் கைபடச் சந்தர்ப்பம் உளது, ஏன் வீண் பிரச்சினை என்று நின்றபடியே மீண்டும் லோஷனின் விடியலை தெளிவுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் சென்றதும் மறுகரையிலிருந்த ஆணும் இறங்கிவிட்டார்.
இப்போது அந்த இருக்கையில் பெண் மட்டும். சிறிது திரும்பி தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். நான் உண்மையாகவே விடியலில் லயித்திருந்தேன். அந்தப் பெண் அணிந்திருந்த உடுப்பு நான் அவளுக்கு நேர மேல கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்பதில் எந்தவித சங்கடத்தையும் அவளுக்கோ எனக்கோ ஏற்படுத்தாதபடி இருந்ததால் நான் அவ்விடத்தை விட்டு நகராது இருக்கையிலும் இருக்காது சென்றுகொண்டிருந்தேன்.
நான் இறங்கவேண்டிய இடம் வந்தது. இறங்கி நடைபாதையில் சென்றுகொண்டிருந்தேன்.
"எக்ஸ்கியூஸ் மீ..."
காதுக்குள் கேட்கிறதா... யோசித்துவிட்டு நடந்தேன்.
எனக்கு அருகில் வந்து மீண்டும் "எக்ஸ்கியூஸ் மீ..."
அதே அழகான பெண்.
ஒரு பக்கக இயர் போனை லாவகமாகக் கழற்றிக் கொண்டு...தலையசைப்பால் என்ன என்று கேட்டேன்.
"ப்ளீஸ்... எ ஸ்மோல் கொஸ்டின்"
"ஓ.கே." (இனி தமிழாக்கம்)
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி, ஏன் இடமிருந்தும் நீங்க அந்த இருக்கையில இருக்கவில்லை எண்டு சொல்ல முடியுமா?"
மனதுக்குள் சந்தோசத்துடன் கூடிய சிரிப்பு வந்தது.
"குறிப்பிட்ட காரணம் ஒண்டும் இல்ல... வழமையா நான் அப்படித்தான் வாறனான்...லப்டாப், பொக்கற்றில இருக்கிற பர்ஸ்கள், போன்கள் எண்டு
எல்லாம் இடைஞ்சலா இருக்கிறதால நிண்டு வாறதே சௌகரியமா இருக்கு"
"ம்ம்ம்... எனக்குச் சங்கடமா இருந்திச்சு அதான் கேட்டேன்... வேற ஒரு காரணமும் இல்லைத்தானே?"
என்ன கொடுமை சரவணா இது... பக்கத்தில இருந்திருந்தா விடியலை விட நல்லா இருந்திருக்கும்... இதுக்கு காரணம் வேற..
மனதுக்குள் யோசித்துக்கொண்டு
"அப்படியொண்டும் இல்லை"
"ஓகே. நன்றி... வித்தியாசமா யோசிக்காதேங்கோ... சந்திப்போம்"
அன்றைய நாள் முழுதும் ஏன் இதோ இப்ப தட்டச்சிக்கொண்டிருக்கும் வரை அவளை நினைக்கவோ அல்லது அந்த சந்தர்ப்பத்தை நினைக்கவோ
சந்தோசமாக இருக்கிறது.
இதுக்குள்ள நிறையத் தார்ப்பரியங்களும், மறைக்கப்பட்ட உண்மைகளும் இருக்கிறமாதிரி இருக்குது.
யாராவது பெண்பிள்ளைகள் அந்தப் பெண் ஏனப்படிக் கேட்டிருக்கும் என்று உண்மையைச் சொல்லுங்கோவன். அந்தப் பிள்ளை சிங்களப் பிள்ளையாகப்
போட்டுது. தமிழ்ப் பிள்ளை எண்டால் "அண்டைக்கு அந்த இருக்கையில் இருந்திருந்தால் இந்த மணவறையில இரண்டு பேரும் இருக்கேலாம போயிருக்கும் என்ன" எண்டு அந்தப் பிள்ளையையே கேட்கவேண்டிய காலமும் வந்திருக்கும்.
எண்டாலும் எனக்கொரு திருப்தி இருக்கு...
இன்னொரு நாள் இப்படி ஒன்று நடந்தால் நான் இருக்காவிட்டாலும் அந்தப் பிள்ளை இழுத்து இருத்தும். :-)
பிற்குறிப்பு : இலங்கையில் வெற்றி வானொலியில் கிழமை நாட்களில் காலை நேர நிகழ்ச்சியின் பெயர் விடியல். லோஷன் அவர்களால்
விடியல் நிகழ்த்தப்படுகிறது. (லோஷன் இல்லாட்டி அப்ப அந்த நாள் விடிய மாட்டுதா???)
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது
30 பின்னூட்டங்கள்.
விடியலில் இவ்வளவு ஈர்ப்புக் கொண்டுள்ளதற்கு நன்றிகள்..
நான் எடுத்துக் கொள்ளும் கவனமும்,செய்யும் மேலதிக ஆயத்தங்களும் வீண்போகவில்லை என்பது திருப்தி..
இந்தக் கதை மனதில் எதோ சிறு சலனத்தைத் தந்துவிட்டது..
நீங்கள் ஒரு நல்ல பெண்ணின் சிநேகத்தை தவறவிட்டு விட்டீர்களோ? :)
தமிழாக இருந்தால் வாய்ப்புத் தான்..
(நீங்கள் ரொம்ப நல்லவருங்கோ.. என்று 'யாரையோ' நம்ப வைக்கவா இந்த இடுகை???)
அப்ப லோஷன் உங்களுக்கு வில்லனாகி விட்டாரோ? எப்படியோ நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டீங்க. ஆமா எனக்கும் தான் விடியலோடு நாள் தொடங்கியது. இப்பல்லாம் அப்படி இல்ல. இங்க வெற்றி இப்ப வேலை செய்தில்லை.
அருமையான நினைவூட்டல் மது, தலைப்பை "ஒரு பெண் - நான் ஒரு காலியான இருக்கை" என இட்டிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும்!
வெற்றி எவ் எம் வானொலிக்கான விளம்பரமா அல்லது தோழர் லோஷனுக்கான விளம்பரமா எனத் தெரியவில்லை.
உங்களிடம் பல பொருட்கள் கைவசம் இருப்பதாகச் சொல்லி விட்டீர்கள், திருடர்கள் தொடர்ந்தாலும் தொடர்வார்கள் ஜாக்கிரதை.
தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சந்தற்பம் ஏற்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது!
வளரும் பயிரை முளையில் கிள்ளிய லோசன் :) :)
(வெற்றியில என்ன பாட்டு அந்தநேரம் போனது? )
ஓ ! இப்பிடி எல்லாருக்கும் பொதுவா நடக்கிறது .. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்ல.. :)
ஒன்றில் அது பலான ஐட்டமாக இருக்கும்.. அல்லது ஏதாவது அண்டைக்கு குளிக்க மறந்து சென்ட் அடிக்காமல் வந்த கேசாக இருக்கும்..
மற்றும்படி தாழ்வு மனப்பாங்கு இல்லாத , ஒழுக்கமான , எந்தக்பெண்ணும் உப்பிடி கேக்காது.. நம்ம கிட்ட கேளுங்க பாஸ் பொம்பளைங்கள பற்றி..ஹிஹி ;)
வாங்கோ லோஷன்,
விடியல் இதுவரை அட்டகாசமாகத்தான் போய்க்கொண்டிருக்குது..
//நீங்கள் ஒரு நல்ல பெண்ணின் சிநேகத்தை தவறவிட்டு விட்டீர்களோ? :)
தமிழாக இருந்தால் வாய்ப்புத் தான்..
(நீங்கள் ரொம்ப நல்லவருங்கோ.. என்று 'யாரையோ' நம்ப வைக்கவா இந்த இடுகை???)//
ஒரு நல்ல பெண்ணின் சிநேகத்தைத் தவறவிட்டேனா.. அல்லது ஒரு பெண்ணின் நல்ல சிநேகத்தைத் தவற விட்டேனா... தெரியாது...
ஒரு பெண்ணின் சிநேகத்தை தவறவிட்டுவிட்டேன்...
இவ்வாறான சிநேகங்களை எப்படி வளர்த்துக்கொள்ளமுடியும்... தொலைபேசி இலக்கம் கொடுக்கவோ கேட்கவோ விருப்பம்தான்... நிறையச் சங்கடங்கள் உள்ளன அதில்...
மீண்டும் சந்தித்தால் பார்ப்போம்...
இன்னொரு பேரூந்துக்கதை இங்கே வாசியுங்கள்... தொலை பேசி எண் குடுத்த கதை
வாங்கோ யோ,
நல்ல சான்சை மிஸ் பண்ணவில்லை...
நல்ல ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கியிருக்கிறேன்... :))
உங்கட இடம் எது... வெற்றியில அங்க வந்துட்டம் இங்க வந்துட்டம் எண்டு சொல்லுறாங்களே... உங்கட இடத்துக்கு இன்னும் வரவில்லையா... வந்துடுவாங்கள் வந்துடுவாங்கள்... :))
வாங்கோ ஈழவன்
// தலைப்பை "ஒரு பெண் - நான் ஒரு காலியான இருக்கை" என இட்டிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும்! //
ஏலவே தலைமயிர் வேற வளத்திருக்கிறன்.. இதுக்க ஒரு பெண் நான் என்று வேற சொல்லவேண்டுமா? :))
ம்ம்ம்.. நீங்க சொன்னாப்பிறகுதான் யோசிக்கிறன் ஒரு பெண் - ஒரு காலியான இருக்கை என்பதே நல்லாயிருந்திருக்கம் போல
//உங்களிடம் பல பொருட்கள் கைவசம் இருப்பதாகச் சொல்லி விட்டீர்கள், திருடர்கள் தொடர்ந்தாலும் தொடர்வார்கள் ஜாக்கிரதை.//
ஹீ ஹீ..அந்தப் பொருட்களுக்குள்ள திருடர்களை துரத்தவும் தேவையான பொருள் இருக்குதாக்கும்..
//தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சந்தற்பம் ஏற்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது!//
ம்ம்ம்... இச்சம்பவம் இயற்கையின் செயற்பாடுகளில் ஒன்று... அவள் ஒரு அழகான பெண்... நான் ஒரு அழகான ஆண்.. அவ்வளவுதான்..
வாங்கோ சயந்தன்,
அல்லது காப்பாற்றிவிட்ட லோஷன்... :))
கேள்வி-பதில் போய்க்கொண்டிருந்தது... பாட்டுகளும் கலவையாகப்போகும்... குறிப்பிட்டு ஞாபகம் இல்லை... சம்பவம்தான் ஞாபகம் இருக்குது.. :))
வாங்கோ சந்தனமுல்லை,
என்னை நினைச்சு சிரிக்கிறீங்களா.... :(
வாங்கோ புல்லட்,
//ஓ ! இப்பிடி எல்லாருக்கும் பொதுவா நடக்கிறது .. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்ல.. :)//
நான் நினைக்கவில்லை தல...
//ஒன்றில் அது பலான ஐட்டமாக இருக்கும்..//
பாக்க அப்படித் தெரியவில்லை
// அல்லது ஏதாவது அண்டைக்கு குளிக்க மறந்து சென்ட் அடிக்காமல் வந்த கேசாக இருக்கும்..//
சென்ட் பாவித்தல் successful negotiation இற்கு ஒரு வழிகூட.. :))
//மற்றும்படி தாழ்வு மனப்பாங்கு இல்லாத , ஒழுக்கமான , எந்தக்பெண்ணும் உப்பிடி கேக்காது.. நம்ம கிட்ட கேளுங்க பாஸ் பொம்பளைங்கள பற்றி..ஹிஹி ;)//
தல ஏலவே "கடுப்பைக் கிளப்பும் பெண்கள்" எண்டு வாங்கிக்கட்டினது ஞாபகம் வரவில்லையா.. :)))
சொல்லவே இல்லை. இதுகெல்லாம் சின்ன கொடுப்பனை தேவை.
@ அண்ணன் புல்லட்டுக்கு எட்ட பழம் புளிக்கும் தானே.;)
///நீங்கள் ரொம்ப நல்லவருங்கோ.. என்று 'யாரையோ' நம்ப வைக்கவா இந்த இடுகை???///
என்ன சந்தேகம் லோசன் அண்ணா... அதுக்குத்தான்
வாங்கோ றமணன்,
// Ramanc said...
சொல்லவே இல்லை. இதுகெல்லாம் சின்ன கொடுப்பனை தேவை. //
சின்னக் கொடுப்பினைக்கெல்லாம் சரிவரும் எண்டு யோசிக்கிறீங்களா...இது வேற கொடுப்பினை.. :))
வாங்கோ கிருத்திகன்,
எனக்குரிய இயல்புகளை எந்தவொரு நிகழ்வுக்கும் முன்னாலோ பின்னாலோ மாற்றமுடியாது... மாற்றுவது மாதிரிக் காட்டுவது பிரச்சினையிலேயே முடிக்கும் என்று நினைப்பவன்... நான் இப்படித்தான்... :))
மேல எழுதிய சில விடயங்களிலேயே தெரியும் நான் எல்லோரையும் போல எல்லாவற்றையும் பார்ப்பவன், இரசிப்பவன்... இயற்கையுடன் கூடிய ஒரு மனிதன்...
கொஞ்சம் விளக்கம் ஓவராகிட்டுதா...
ஹீ ஹீ... என்ன பண்ணுறது.. :-))
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட கௌபாய் வாழ்க...
(இங்க எது ஒற்றுமை எது வேற்றுமை எண்டெல்லாம் கேக்கப்படா..)
நீங்களும் என்னைப்போல் விடியல்காரரா? என்னுடைய ஒரு குணம் பஸ்சில் ஒரு சீட்டில் ஒரு பெண்ணுக்குப் பக்கத்தில் ப்ரியாக இருந்தால் எல்லா சீட்டும் நிரம்ப்பியிருந்தால் இருப்பேன் இல்லையென்றால் ஆண் இருக்கும் சீட்டில் தான் இருப்பேன், சிலவேளை நல்ல அழகான பெண்கள் இருந்தாலும் இமேஜ் கெட்டுவிடும் என வெயில் பக்கம் உள்ள சீட்டில் கூட இருந்திருக்கின்றேன். அதே நேரம் நாமாக நின்றுகொண்டிருக்கின்ற பெண்களிடம் அவர்களின் கைப்பைகளையோ இல்லை வேறு பாக்குகளையோ கேட்டுவாங்கினால் சில நோ தாங்க்ஸ் என்றபடி ஒரு மாதிரிப்பார்ப்பாகள், சிலர் தாமாகவே தருவார்கள்.
//தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சந்தற்பம் ஏற்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது!//
ஈழவன் சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது. மது தன் நெற்றியில் விபூதி அல்லது சந்தணம் இட்டிருந்தால் கடைசிவரை அந்தப்பெண் பேசியிருக்கவேமாட்டார். சிலவேளை மதுவை வழியில் இருக்கும் சோதனைச் சாவடியில் இறக்கவழி செய்திருப்பார். ஏனென்றால் இப்படியான நிகழ்வுகள் பலருக்கு நிகழ்ந்துள்ளன.
அடபாவி உனக்கு மூலவியாதி இருக்கிறது ஒருத்தருக்கும் தெரியாது!!! நீ பக்கத்தில இருந்திருந்தா அந்த பெண் 2 நிமிசத்தில எழும்பியிருப்பாள்!! உன்னோட காமலீலைகள் தெரிந்தவன் என்கிறதால சொல்லுறன்!!
சந்தர்ப்பம் கிடைக்கும் பொது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெரியவங்க சொல்லி இருக்கிறார்கள் மது. பெரியவங்க பேச்சைக் கேக்கணும்.
நீங்க நல்ல பிள்ளை மாதிரித் தெரியவில்லை. நல்ல பிள்ளைகள் இந்த சந்தர்ப்பங்கள் எல்லாம் பயன்படுத்தி விடுவார்கள். (சும்மா லொள்ளு)
அண்ணா நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்கோ....
அது சரி மீண்டும் சந்திக்க வாழ்த்துக்கள்...
பதிவுகள் தொடரட்டும்... அதற்கும் வாழ்த்துக்கள்....
வாங்கோ அருள்திரு நிமலப்பிரகாம் அவர்களே,
வேற்றுமை... நான் ஆண், அவள் பெண்
இதுவே ஒற்றுமையாகுவதற்குப் போதுமான காரணம். ;-)
வாங்கோ வந்தி,
கலியாண நேரம் நெருங்க நெருங்க இமேஜை கூட்டுறீங்கள் போல... :))
வாங்கோ சந்ரு,
இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து நான் நல்லவன் எண்டு யாரையும் நம்பவைக்க முடியாது.. எண்ட எல்லாப் பதிவையும் வாசிச்சா தெரியும் நான் எப்படிப்பட்டவன் எண்டு.. :))
சந்தர்ப்பம் ஒண்டை உருவாக்கி வைச்சிருக்கிறனில்ல இந்த சம்பவத்தால.. :-)
வாங்கோ செந்தூரன்,
ஐயகோ... நான் நல்லவனில்லை நல்லவனில்லை... லக்கிலூக் கதைகளில் வரும் வில்லன்கள் கதறுவது மாதிரி அழவேணும் போல கிடக்குது.. :)
நீண்ட காலம் எழுதாம இருந்தது... பதிவர் சந்திப்பு உசுப்பி விட்டிருக்குது..
வாப்பா rooto,
மூலவியாதி இருந்தா காமலீலைகள் நல்லாச் செய்யலாமோ... எனக்கப்படித் தெரியவில்லை...
காமலீலைகளுக்கு மூலவியாதி கொஞ்சம் இடைஞ்சலாத்தான் இருக்கும்... :))
வலைப்பூ முகவரியில இருந்து போடப்பா... அநாமதேயம் எண்டு நினைச்சிடப் போறாங்கள்..
இந்தப் படம் எந்த பஸ்ஸிலே எடுத்ததது?
வாங்கோ இலங்கன்,
எந்தப் பேருந்து எண்டு தெரியவில்லை. கூகுள் ஆண்டவரைத்தான் கேக்கவேணும்
//இந்த மடிக் கணினியோடு, இரண்டு பக்க நீளக்காற்சட்டைப் பைகளிலும் தொலைபேசிகள் மற்றும் இதர பொருட்களோடு அவ்விடத்தில் போய் இருந்தால் அவளது மடியிலும் கைபடச் சந்தர்ப்பம் உளது, ஏன் வீண் பிரச்சினை என்று //
இத நான் நம்போணும்?
எல்லாம் காலம்...
வாங்கோ கோபி,
பக்கப் பையிலிருக்கும் தொலைபேசியை எடுக்கும்போதெல்லாம் பக்கத்திலிருப்பவர் ஆணோ பெண்ணோ, அவரில் கைபட முறைப்பு வாங்கிய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு :)
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ