இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஒலி வடிவவில் முழுதும்
முதல் சந்திப்பு, முழுமையான நிறைவோடு, எல்லாம் நலமாக நடந்து முடிந்தது. மொத்தமாக சந்தோசமான 3 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும்... ஒலி ஒளிபரப்பு சந்திக்கவிலயாதிருந்த பதிவர்களையும் வெளிநாட்டிலிருக்கும் பதிவர்களையும் சென்றடைந்தது கூடுதல் மகிழ்ச்சி.
ஒளிபரப்பு சாட்டிங்கினூடாக அவர்களின் கருத்துக்கள், கேள்விகள், நக்கல்கள் சந்திப்பை கூடுதல் சுவாரசியமாக்கியது. அவர்களின் கேள்விகள் சந்திப்பில் குறித்தளவு தாக்கத்தை உண்டாக்கியிருந்தது இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற அவாவை ஏற்படுத்தி நிற்கிறது.
சந்திப்பிற்கு வந்த குழந்தைப் பதிவர்வரை கொஞ்சம் கதைக்க வையுங்கோ, பங்குபற்றிய பெண் பிள்ளைகளில் பரிவு கொண்டு அவர்களில் யாரையாவது பேச விடுங்கோ, சந்திப்பு நிறைவடையும் நேரம் எல்லோரின் முகங்களையும் தனித்தனியே காட்டுங்கோ என்று அன்புக் கட்டளைகளை சாட்டிங்க் மூலமாக ஒளிபரப்பினூடு வேண்டுகோள் விடுத்தமை சந்திப்பைக் கலகலப்பாக்கியது.
நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது www.livestream.com இன் இலவச அடிப்படை கணக்கினூடாக. வழமையாக ஒளிபரப்புக்களை அவர்கள் சேமித்து வைப்பார்கள். இந்த முறையும் அவர்கள் சேமித்து வைப்பார்கள் நாங்கள் மீண்டும் பார்த்து மகிழலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். ம்ஹீம்... கொஞ்சம் ஓவர்தான். ஆறுபணத்துக் குதிரையும் வேணும் ஆறுகடக்கப் பாயவும் வேணும் எண்டு நினைக்கிறது நல்லதில்லைத்தானே. கிட்டத்தட்ட 4 மணித்தியால ஒளிபரப்பினை சலனமாகச் சேமித்து வைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நல்லாவா இருக்கு...
சுவாரசியமான சாட்டிங்க் வரலாற்றினையும் நகலெடுக்கத் தவறிவிட்டேன். கவலைதான் என்றாலும் சந்திப்பின் முழுமையான ஒலிப்பதிவு இருக்கிறது என்ற மகிழ்ச்சி இன்னும் நிலைக்கிறது. நிகழ்வினை முழுமையாகப் பதிந்த மதுவர்மனுக்கு (என்ர அண்ணாதான் :-))) நன்றிகள்.
சந்திப்பில் பங்குபற்றாதவர்கள் இதனைக் கேளுங்கள். பங்குபற்றியவர்களும் மீண்டும் ஒரு முறை கேளுங்கள் சுவாரசியமாகவும் அடுத்தமுறை நிறைய விடங்களைக் கதைக்கவும் உதவும்.
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 1
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 2
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 3
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 4
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 5
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 6
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 7
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 8
இந்த எட்டுப் பகுதிகளையும் தரவிறக்கிப் பாவிப்பதற்கான சுட்டிகளும் இதோ...
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 1
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 2
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 3
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 4
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 5
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 6
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 7
இலங்கைப் பதிவர் சந்திப்பு பகுதி 8
நேரடி ஒளிபரப்பினை கூடுதலாக 44 பதிவர்கள் ஒரே நேரம் பார்த்து சிறப்பு. கிட்டத்தட்ட 150 பேர்வரை நேரடி ஒளிபரப்பை இரசித்திருந்தார்கள். குசும்பனோட மொத்தமா (குசும்பனே மொத்தம்தான்) பத்து பேர் ஒன்றாக பார்த்து ரசித்தார்களாம்.
அருமையான ஒரு நாள்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது
46 பின்னூட்டங்கள்.
மிகவும் நல்லவிடையம் நண்பரே!
புல்லட் வீடியோகமராவோட திரிஞ்சவரெல்லே ? அவர வீடியோ தொகுப்பாக போடச்சொல்லுங்கோ !
வாசித்தேன்... சனநாயகக் கடமை செய்தேன் (வாக்கு).. தொடர்கிறேன்
வாழ்த்துக்கள் நண்பர்களே!
வாங்கோ மாயா...
வீடியோ தொகுப்பும் விரைவில் வரும்
வாங்கோ கிருத்திகன்,
உங்களது பதிவும் சுவாரசியம்
வாங்கோ பாலபாரதி,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
அருமை! உங்களுடைய உதவி மிகப்பெரியது! அனைத்து நிகழ்வுகளையும் கேட்க வழியமைத்தமைக்குத்தான்! நன்றிகள்!
This comment has been removed by the author.
வாங்கோ தங்கமுகுந்தன்,
உங்களது பாராட்டுக்கள் இன்னும் ஊக்கமளிக்கிறது. அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்ய முயலுவோம்
மது பிரதர்ஸ் ஒலி ஓளிபரப்பு சேவை (தனி) நிறுவனத்திற்கு எமது நன்றிகள்...!
20,000 இலங்கை ரூபாயை வீடியோ ஸ்ரிமிங் செய்ய் செலவிட்ட சிங்கம் மதுவிற்கு அடியேனின் வாழ்த்துக்கள் ;)
20,000 இலங்கை ரூபாயை வீடியோ ஸ்ரிமிங் செய்ய் செலவிட்ட சிங்கம் மதுவிற்கு அடியேனின் வாழ்த்துக்கள் ;)
வர வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாமல் கவலையோடு இருந்த என்னை நேரடியாக பங்கு கொண்டது போல் வீட்டிலே இருந்து சந்தோசமடைய வைத்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.
ஒளிபரப்பு ஏட்பாடுகளைச் செய்த மது அவர்களுக்கு நன்றிகள் பல...
இன்று சாதித்துவிட்டோம் என்று சந்தோசம் அடையும் அதே வேளை இன்னும் பல சாதனைகள் படைப்போம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது இன்றைய ஏற்பாடுகளைப் பார்க்கும் போது..
இனி வரும் காலங்களில் பல புதுமைகள் படைப்போம்... எனது 100 % பங்களிப்பு இனிவரும் காலங்களில் இருக்கும் நண்பர்களே.
அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள் பல...
மிக்க நன்றி மது
வாங்கோ நிமல் :-)))
மது பிரதர்ஸ் தனி நிறுவனமா... :)
நல்லாயிருக்கு
வாங்கோ மயூரேசன்,
டயலொக்கோட கதைச்சனான் இருபதினாயிரம் ரூபா வராது எண்டு சொன்னாங்கள் இந்த மாத பில் வரும்போதுதான் தெரியும்.. :-))
எவ்வளவு செலவெண்டாலும் மனநிறைவு இருக்குது.
வாங்கோ சந்ரு,
அடுத்த சந்திப்பில எல்லாரும் சேர்ந்து கலக்குவோம்
வாடா ஆதிரை,
எல்லாரும் சேர்ந்து செய்தம்... நல்லாப் போச்சுது... இனியும் செய்வோம்..
வர்மன் அண்ணாவுக்கு என் விசேட நன்றிகளை தெரிவித்து விடுங்கள் ... எத்தின உபத்திரவப்பட்டாலும் உந்த ரெக்கோட் பண்ணுறத விடமாட்டார் பொல இருக்கு ... ;)
உங்கள் லைவ் டெலிகாஸ்ட் உதவி அளப்பரியது... சொல்லிவேலை இல்ல... ரெக்கோட் பண்ண முடியாத வருத்தம் ஒரு மூலையில் இருக்கிறது.. இருந்தாலும் அரைக்காசு குதிரையை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும் என்பது உண்மைதான்..
நான் ஒளிப்திவை எடிற் செய்து வெளியிடுவன் மாயா!
வாழ்த்துகள்...முதல் சந்திப்பே சாதனைச்சந்திப்பாக அமைந்ததற்கு குழுவினருக்கு என் பாராட்டுக்கள்
ஒலியமைப்பில் ஏற்பட்ட சிக்கல் தவிர்க்க முடியாதது தான், எனினும் துல்லியமாக இல்லாவிடினும் இந்தளவுக்காவது கேட்க முடிகின்றதே என சந்தோசம் கொள்வோம்.
பாராட்டுக்கள் மது.
வாங்கோ புல்லட்,
ஏலவே றெக்கோட் பண்ணி கைதாகின கதையையும் அண்ணா சொன்னவர்தானே.. இதையா விடப்போறார்.. :)
வாங்கோ ஈழவன்,
அடுத்த முறை நல்லாச் செய்வோம்
வாங்கோ டொன் லீ,
உண்மையில் முதல் சந்திப்பு சாதனையாக, நன்றாக அமைந்தது எங்களுக்கு இன்னொரு சவால்... இனிவரும் சந்திப்புக்கள் இதனுடனேயே ஒப்பிடப்படும்... இனி வருவனவற்றை நேர்த்தியாகச் செய்யவேண்டிய கடப்பாடு எல்லாருக்கு உண்டு
இனிதே நிறைவேறிய இலங்கை பதிபவர் சந்திப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :)
மிக்க நன்றி மது.. புதுக் கம்கனி தொடங்கியிருக்கீங்க போலக்கிடக்கு.. வாழ்த்துக்கள்..
கலந்துகொண்டவர்களுக்கும் வழிநடத்தியவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
மதியச்சாப்பாடு என்னவென்று காலை நேரடி அரட்டையிலை கேட்டிருந்தனே இன்னமும் யாருமே சரியான பதிலை சொல்லவேயில்லை..இதுக்கை அடுத்த பதிவை இன்னமும் சிறப்பாக்கபோறாங்களாம்..
பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS
பூச்சரத்தில் இணையுங்கள்.
வாழ்த்துக்கள் மது.. உங்கள் பங்கு மிகப் பெரியது.. கலக்கி விட்டீர்கள்.. இந்த ஒலிப்பதிவுக்கும் நன்றிகள்.. வீடியோ வந்தவுடன் பகிர்ந்துகொள்வோம்.. :)
இனிய நாளொன்றின் நினைவுகளிலிருந்து என்றும்
மீளாத வண்ணம்,வலைப்பின்னல் நண்பர்களின் அறிமுகம் கிடைத்ததை இட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
நேற்று நேரடி ஒளிபரப்பை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது, ஆபிஸில் இருந்ததால் பேச்சை கேட்கமுடியவில்லை, ஊமை படம் பார்ப்பதுபோல் பார்த்தேன்! சிறப்பான ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி முடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
குட்டி பையன் பச்சை நிற டீசர்டில் இருந்தவர் யார்?
//மொத்தமா (குசும்பனே மொத்தம்தான்//
சிலிம்மா இருக்கும் என்னை பார்த்து எப்படி இப்படி சொல்ல மனசு வந்தது உங்களுக்கு நான் ஜஸ்ட் 75கிலோ தான்:))))
வாழ்த்துக்கள், சந்திப்பு பற்றிய முழு ஒலிக்கோவையையும் ஒரு கோப்பாக ( Rapidshare போல)இணையத்தில் ஏற்றி விட்டால் அதை நாங்கள் தரவிறக்கி கொள்ளலாமே..
வாங்கோ வேந்தன், சுபானு, ஊர்சுற்றி...
வாழ்ந்துக்களுக்கு நன்றி... இன்னும் நிறையச் செய்வோம்
வாங்கோ சாத்திரி,
இணைய உரையாடலை இந்த முறை சரியாகக் கவனிக்க முடியாது போய்விட்டது... அடுத்தமுறை நன்றே செய்ய முயல்கிறோம்.
வாங்கோ லோஷன்,
எல்லோரும் சேர்ந்து கலக்கினோம்... தொடர்ந்தும் கலக்குவோம்...
விஜி வாங்கோ,
நீங்களும் வந்திருந்தீர்களா...
அனைவரையும் ஞாபகப்படுத்த முடியவில்லை... அடுத்தமுறை நிறையக் கதைக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.. நம்புகிறோம்
வாங்கோ குசும்பன்,
சின்னப்பையன் யாசீர்...
உங்கட கலியாணவீட்டுப் படம் பாத்தனான்... அப்பாவியா நிக்குற படம்... அதில கொஞ்சம் தொக்கையாத் தெரிஞ்சீங்கள்... இப்ப ஜிம்முக்குப் போய்... கட்டா வந்துட்டீங்க போல :))
வாங்கோ யோ,
பதிவின் இறுதியில் தரவிறக்க ஏற்றவாறு வழிவகை செய்துள்ளேன். நீங்கள் கேட்பது ஒரே கோப்பாக என்று நினைக்கிறேன்...
சரி அதையும் ஏற்றிவிட்டு குறிப்பிடுகிறேன்.
வாங்கோ பூச்சரம்,
இதோ வருகிறேன்..
நன்றி சகோதரா...
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும் அதை ஒலி வடிவில் கேட்கும் போது புது சுகம் கிடைத்தது.
மிக்க நன்றி...
This comment has been removed by the author.
வாங்கோ கனககோபி,
இது பிற்காலத்தில் ஒரு ஆவணமாகவும் அமையுமல்வா... மீண்டும் கேட்கும்போது நிறைவாகவும் இருக்கும்
ஒலி வடிவில் தந்தமைக்கு நன்றி
வாங்கோ இலங்கன்,
தெளிவு கொஞ்சம் குறைவுதான் அடுத்த முறை வடிவாச் செய்வம்
இணையமூடாக சந்தித்த பலரையும் நேரடியாக சந்தித்து பேசி மகிழ்ந்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது .
அடுத்த சந்திப்பு எப்போ வரும் என்று ஆவலாக இருக்கிறது இப்போ .
அடுத்ததிலும் கலக்குவோம் .....
வாங்கோ பகீரதன்,
சந்திப்போம்... மிக அருமையாக மீண்டும் செய்வோம்
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ