நாநேரடி ஒளிபரப்பு - இலங்கைப் பதிவர் சந்திப்பு
இன்று (23-08-2009) ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடக்கவிருக்கும் இலங்கைப் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படவிருக்கிறது.பதிவிற்கு வரவியலாதுள்ள இலங்கையிலுள்ள பதிவர்களும், வெளிநாட்டிலிருந்து பதிவிடும் இலங்கைப் பதிவர்களும் நேரடியாக சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களைப் பார்த்து அதன்போதே உங்கள் கருத்துக்களைப் பகிரக்கூடிய (Chatting மூலமாக)சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது.

நேரடி ஒளிபரப்பு மற்றும் எழுத்துமூல உரையாடலுக்கான சுட்டி இதோ,

www.livestream.com/srilankatamilbloggers

இது இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்பாதலால் நேரடி ஒளிபரப்பின் முதல் அனுபவமும், அதன்மூலமான கருத்துக்களைக் கையாளும் தன்மையும் நன்றாக அமைய பங்குபற்றுபவர்களின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

0 பின்னூட்டங்கள்.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ