நா
Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா நிலையில் ரேடியோ வேலைசெய்யாது.

அதற்குரிய மாற்று வழி கீழே வழங்கப்பட்டுள்ளது.

1. உபுண்டு இயங்குதளத்தில் Rythembox Music Player திறவுங்கள்


2. அதில் புதிய இணையத்தள  ரேடியோ ஒன்றினைத் திறவுங்கள்

  


3. வரும் பெட்டியில் http://vettrifm.net:8140 என்பதைத் தட்டச்சி add பொத்தானை அழுத்திவிடுங்கள்


பின்னர் Rythembox Music Player இல் Radio பகுதிக்குச் சென்று நீங்கள் சேர்த்துக்கொண்ட சுட்டியைப் பாருங்கள். அதன் மேல் இரட்டைச்சொடுக்குங்கள். இப்போது வெற்றி உங்கள் காதுகளில்...


Vettr FM : http://vettrifm.net:8140
Shakthi FM : http://www.priyan.ca:8000

UPDATE :  தற்போது  வெற்றி Fm இற்காக இந்தச் சுட்டியை பயன்படுத்துங்கள் http://76.73.21.74:8140

மேலுள்ள சுட்டிகள் எதிர்காலத்தில் மாறுபடலாம். இன்றைய தேதியில் இவை வேலை செய்கின்றன.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
- CowboyMathu

 

எல்லோருக்கும் இந்தப் பிரச்சினை வரும் எண்டில்லை. ஆனால் வந்தால் என்ன செய்யிறது? எங்கேயோ ஒரு சந்தர்ப்பத்தில உங்களுக்கும் உதவும் எண்டு சொல்லி வைக்கிறன். அல்லது இந்தத் தீர்வை வேற ஒரு சந்தர்ப்பத்தில நீங்கள் பாவிக்கக்கூடியமாதிரியும் இருக்கும்.

என்னெண்டா அண்டைக்கு வேலைத்தளத்தில் Gmail இல் Buzz ஐப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு புதிய பஸ் வந்தது. கீழே சாடை மாடையாப் போட்டிருக்கிறன். சொடுக்கிப் பாருங்கோ.





அந்த மேலே உள்ள பஸ் NSFW. அப்ப வீட்டில வச்சுப் பார்த்துக்கொண்டே இருக்கலாமோ எண்டெல்லாம் கேக்கக்கூடாது.

பார்த்துக்கொண்டிருந்தது வேலைத்தளத்தில். பக்கத்ததில், பின்னால எல்லாம் வேலை செய்யிறாக்கள் இருக்கினம். பொம்புளைப் பிள்ளைகளும் இருக்கினம். படாரெண்டு கீழே ஸ்குரோல் செய்திட்டன். (மேசைக்குக் கீழே குரோள் செய்யேல). அதையும் சொடுக்கிப் பாருங்கோ கீழே.




கொடுமை. Gmail காரன்கள் இன்பொக்ஸூக்குத் திருப்பிப் போகவோ அல்லது Buzz இல் இருந்து வெளியில வரவோ ஒரு வழியும் வைக்கேல. மேல ஸ்குரோல் செய்துதான் போகவேணும். மேல ஸ்குரோல் செய்தால் ஹீ ஹீ.

என்ன செய்யலாம்? உடனே நான் செய்தது. மேல Address Bar இல் உள்ள buzz என்பதை inbox என்று மாற்றிவிட்டு Enter செய்ததுதான். :)

https://mail.google.com/mail/u/0/?hl=en&shva=1#buzz இனை
https://mail.google.com/mail/u/0/?hl=en&shva=1#inbox என மாற்றிவிட்டு Enter செய்தேன்.

உங்களுக்கும் எங்கேயாவது உதவும். சும்மா குறிச்சு வச்சுக்கொள்ளுங்கோ.


பி.கு : அசோக்பரனின் பெயரில் சொடுக்கியிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
inbox ற்குப்பதிலாக mbox என்றுபோட்டிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
பிறகுதான் பார்த்தேன் gmail shortcut 'g then i' இனைப் பாவித்திருந்தாலும் நேரடியாக இன்பொக்சுக்குப் போயிருப்பன்.

பதிவில போட்டுப் பப்ளிக் ஆக்கியிருக்கிற பஸ்ஸை வேலைத்தளத்தில மட்டும் பாக்கேலாமப் போச்சோ உனக்கு, என்று கேட்பவர்களுக்கு - அது ஒரு அசையும் படம். படத்தைப் பார்த்தால் கொஞ்சநேரம் அசையாமல் நிப்பியள் :D

பிரியமுடன்,
மதுவதனன் மௌனசாமி - cowboymathu

 

உங்களுக்கு Badminton விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதா? இப்போதுதான் ஆர்வப்பட்டுப் பழக ஆரம்பித்திருக்கின்றீர்களா? நானும் உங்களைப்போல்தான். கடந்த சில மாதங்களாக Badminton இல் ஆர்வப்பட்டு விளையாடிக்கொண்டிருக்கிறேன். மேற்பார்வையாளர் எவரும் இன்றி YouTube காணொலிகளைப் பார்த்தும், இணைய உதவிகளைக் கொண்டும் சிறிது சிறிதாகவாவது முறையாக விளையாடப் பழகிக்கொண்டிருக்கிறேன்.

இணையத்தில் தேடியபோது 4 GB அளவிலான 30 பகுதிகளைக்கொண்ட காணொலி Badminton வழிகாட்டி கிடைத்தது. ஆனால் அதைத் தரவிறக்க வேண்டியிருந்தது Torrent மூலமாக. என்னைப்போல் ஆர்வக்கோளாறில் முந்நூறு, நானூறு பேர் இருப்ப்பார்கள் போல. அவ்வளவு எண்ணிக்கையான peers ஆனால் பத்தோ இருபதோ seeders. தரவிறக்கவேகம் 3 kbps இனைத் தாண்டியதில்லை. 0.01 kbps இலும் வரும். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எனது மடிக்கணினியை இரவுபகல் பாராது இயங்கவிட்டு முழுமையாக இறக்கிவிட்டேன். முந்தநாள்தான் வெற்றியடைந்தேன்.

இப்போது நானும் ஒரு seeder. என்னால் தரவிறக்க வேகம் சிறிது அதிகரித்திருக்கும். சரி இவ்வளவு கஸ்டப்பட்டு இறக்கினோமே, அதில் பலனிருக்கிறதா என்று பார்த்தால்... ஆம் நிச்சயமாக.

மிக அருமையான ஒரு வழிகாட்டி. தயார்படுத்தல், கையிற்குச் செய்யவேண்டிய பயிற்சிகள், Badminton இன் ஆரம்ப முக்கிய கூறான footworks முதற்கொண்டு எல்லாவற்றையும் சிறப்பாக விளங்கப்படுத்துகிறார்கள். இந்த வழிகாட்டி சீன மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் உபதலையங்கத்தைக் கொண்டிருப்பதால் விளங்கமுடிகிறது.

இப்போதெல்லாம் எனது அறையில் இந்த வழிகாட்டியைப் பார்த்து அதனைச் செய்து பார்க்கவிழைகிறேன். அறையின் மின்குமிழ் சிதறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் தெரிகின்றன. ஒரு Badminton bird இனைவிட மின்குமிழ் விலைகுறைவு என்பது கொசுறுத் தகவல்.

உங்களுக்கும் ஆர்வமிருக்கின்றதா? என்னைத் தொடர்பு கொள்வீர்களானால் அந்த முழுவழிகாட்டியினையும் தந்துதவமுடியும். இந்திய நண்பர்கள் தொடர்புகொண்டு "மாக்கா.. அப்பிடியே எனக்கு பார்சல் செய்யதுவிடு" என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். :-)

வாங்கோ செத்துச் செத்து விளையாடலாம்.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

 


ஜிமெயில் நுட்பம்
ஜிமெயிலின் சக்திவாய்ந்த இன்னொரு அம்சம்தான் "Search Mail". மடல்கள் வரும்போது அனைத்தையும் வாசிக்கமுடிவதில்லை. சிலவற்றை பின்னர் வாசிப்போம் என்று (பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்குக) விட்டுவிட்டு எங்கே போச்சுடா என்று தேடுவோம். ஜிமெயில் ஏலவே உள்ள அதாவது முன் பக்கத்தில் தெரியாத வாசிக்காத மடல்களை எவ்வாறு தேடி எடுப்பது என குழம்பியிருப்போம். அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டியதுதான் "Search Mail" அம்சம்.

"Search Mail" பொத்தானுக்கு முன்னாலுள்ள எழுத்து வெளியில் "is:unread" என மேற்கோட்குறிகள் இல்லாது தட்டச்சிவிட்டு பொத்தானை அமுக்கிவிடுங்கள். வாசிக்காத மடல்கள் அனைத்தும் டாண் என்று வந்து சிரிக்கும்.


கலகம்.காம் கலகம் விளைவிக்கிறதா?
கலகம்.காம் தமிழர்களுக்கு எதிரானது; அது பற்றி அவதானமாயிருங்கள். குளோபல் தமிழ் நியூஸ் உரிமையாளர் யார்; இவர் ஏன் சிங்கள மொழிக்கென ஒரு பகுதியை வைத்துள்ளார். NTamil நிரல்கள் அபாயகரமானவையா? சில தனிப்பட்ட நபர்கள் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுக்களைத் திருடுகின்றனரா? நான் செல்லும் இந்த இணையப்பக்கம் பாதுகாப்பானதா?

இவ்வாறான கேள்விகளும் குழப்பங்களும் எம்மைச்சுற்றிக்கொண்டிருக்கின்றன். இவை பற்றி அவதானமாக இருத்தலும் அவசியமாகின்றது. ஏனெனில் இவை எமது அந்தரங்கம் சம்மந்தமானது; சிலவேளைகளில் எமது உயிர் சம்மந்தமானது (இலங்கையில் உள்ளவர்களுக்கு). தமிழச்சியின் வலைப்பக்கம் திருடப்படதிலிருந்து திலீபனின் வலைப்பக்கம் முடக்கப்பட்டது வரை சிலர் பீதி கிள்ப்புவதும், சிலர் பீதி அடைவதும் இயல்பாகவே நடந்தேறுகின்றன.
நீங்கள் இணைய உலாவு நிலையங்களுக்குச் சென்றால் உங்களது கடவுச்சொற்கள், கடனட்டை இலக்கங்கள் போன்றவற்றை திருடுவதற்கு அவர்கள் நீங்கள் பாவிக்கும் கணிணியிலேயே சில மென்பொருட்களை தயார்செய்யது விட்டிருப்பார்கள். ஆனால் இணையத்தில் குறித்த ஒரு பக்கத்திற்குச் செல்லும்போது உங்களது விபரங்களை திருடுவதற்கான செயற்பாடு ஏறத்தாழ முற்றிலும் ஜாவாஸ்கிரிப்ட், ஜேஸ்கிரிப்ட் பிளாஷ் போன்றவற்றாலேயே ஏற்படுத்தப்படுகிறது.

அதாவது உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படாநிலையில் வைத்தால் இந்த தாக்குதல்களை நிறுத்தலாம். உலாவியிலுள்ல option இல் ஜாவாஸ்கிரிப்டை செயற்படாநிலைக்கு கொணரலாம். ஆனால் அங்கேயும் பிரச்சினை உளது. எங்கள் கூகுள் ஆண்டவரும் அவரது சொந்த பந்தங்களும் ஜாவாஸ்கிரிப்ட செயற்படுநிலையில் இருந்தாலன்றி இயங்க மாட்டார்கள். இது கூகுளுக்கென்றல்லாது வேறு பலப் பல இணையப் பக்கங்களுக்குப் பொருந்தும்.

அப்போ என்ன செய்வது. அதற்காக இருப்பதுதான் NoScript பயர்பாக்ஸ் Add-on. அதனை இங்கே இறக்கலாம். இந்த NoScript add-on இனை நிறுவிய பின்னர் நீங்கள் குறித்த இணையப் பக்கங்களுக்கு முற்றிலுமாகவோ பகுதியாகவோ ஜாவாஸ்கிரிப்டை அனுமதிக்கலாம். கலகம்.காம் கலகம் தருமென நினைத்தால் அப்பக்கத்திற்கு அனுமதிக்காது விடலாம். ஆரம்ப இயல்பாக இந்த add-on எந்தப் பக்கத்திற்கும் ஜாவாஸ்கிரிப்டை அனுமதிப்பதில்லை. ப்ளாஷ் உள்ளடக்கங்களையும் செயற்படா நிலையில் வைத்து உங்களது அனுமதியில் மட்டும் செயற்பட வைக்கும்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். என்னடா இது ஒவ்வொரு பக்கத்திற்கும் வந்து Javascript not allowed என்று சொல்கிறதே என்று. ஒரு முறை அனுமதி கொடுத்தீர்களானால் பின்னர் அந்தப் பக்கத்திற்குத் தொல்லைதாராது. ஆனால் போகப் போக பழகிவிடும்.

ஆறுபணத்துக் குதிரையும் வேணும்; ஆறு கடக்கப் பாயவும் வேணும் எண்டா ஒண்டும் பண்ணமுடியாது. :-D

பி.கு : இங்கு நான் கலகம்.காம், NTamil பெயர்களைப் பாவித்திருப்பது வலைப்பதிவுலகில் அதைப்பற்றிய கதைகள் உலாவுவதால் மட்டுமே. தனிப்பட்ட ரீதியில் நான் எந்த தாக்குதல் அறிகுறியும் இவற்றிலிருந்து பெற்றதில்லை. கூடுதல் தகவலாக நான் இவற்றுக்கு இன்னும் ஒருபோதும் சென்றதில்லை. :-)

NoScript இணைய முகவரி : http://noscript.net/
NoScript add-on முகவரி : https://addons.mozilla.org/en-US/firefox/addon/722
தெரிந்தால் சொல்லுங்கோ
Text box இற்கு சிறப்பான தமிழ் வார்த்தை என்ன? எழுத்து வெளி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

அப்படியே Add-on க்கும் என்ன தமிழ் வார்த்தை. முந்திப் பாவித்தேன் முற்றிலும் மறந்துவிட்டேன் :-(

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 

மல்டிபிள் செலக்ஷன்

இது ஒன்றும் மல்டிபிள் காம்பிளெக்ஸ் மாதிரி நோய் ஒன்றும் கிடையாதுங்கோ. பயர்பாக்ஸ் பாவிக்குற உங்களுக்கு இன்னொரு அருமையான அதன் இயல்பு. பயர்பாக்ஸில் இணையப் பக்கங்களைப் பார்வையிடும்போது ஒரு பத்தியின் வெவ்வேறு இடங்களை நகலெடுத்து ஒட்டவேண்டிய சந்தர்ப்பங்கள் எங்களுக்கு நிறையவே வந்திருக்கும். அந்த நேரமெல்லாம் முற்றாக நகலெடுத்து வேர்டிலே ஒட்டி தேவையற்றவற்றை நீக்கி என்று... அந்தத் தொல்லை எல்லாம் வேண்டாம்.

மல்டிபிள் செலக்சனை விளக்கும் படம்

இதனை நீ்ங்கள் Ctrl விசைய அழுத்தியபடி மௌஸ் சுட்டியால் தேர்வுசெய்வதன் மூலம் அடையமுடியும் (Ctrl + தேர்வு).

"பழகப் பழகப் பயர்பாக்ஸ் இனிக்கும்"

வாரணம் ஆயிரம் - ஒரு திருப்தியான அனுபவம்

பதிவிட தாமதம் ஆகிவிட்டதுதான் பரவாயிலை, சொல்லியாக வேண்டும். வாரணம் ஆயிரம் பற்ற நேர்மறையான விமர்சனங்கள் வலையுலகிலும் வந்து போயிருந்தன். எனக்கு அது ஒரு திருப்தியான அனுபவமாகத்தான் இருந்தது.


நானும் இன்னும் மூன்று நண்பர்களும் கொண்கோர்ட் தியேட்டருக்குச் சென்றிருந்தோம். ஏசி குளிர் அன்று கடுமையாக இருந்தது. ஒரு நண்பன் "வானரம் ஆயிரம் எண்டா என்னடா அர்த்தம்" என்று அப்பாவியாய்க் கேட்டதற்கு "அடேய் அது வாரணம் ஆயிரம்டா" (திருப்தி) என்ற கலாய்த்தலுடன் படம் பார்க்க ஆரம்பித்தோம். படத்தைப் பற்றி நான் என்ன வேற சொல்லவேண்டிக் கிடக்குது. ஏலவே பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்களே.

சமீரா ரொம்ப அழகு (திருப்தி). புகைவண்டில் முதல் சந்திப்பில் காட்டும் முகபாவங்கள் இப்போதும் கண்முன்னே. சூர்யா ஒன் மேன் ஆர்மியா படத்த நகர்த்த முயற்சித்திருக்கிறார். என்ன செய்யிறது ஒருவர் இழுத்து தேர் ஓடாதே. அடியே கொல்லுதே பாட்டின்போது நண்பனொருவனின் கால் வழமைக்கு மாறாக கட கட என்று ஆடிக்கொண்டிருந்தது. (ஏசி அவனுக்கு நேரே அடித்துக்கொண்டிருந்தது, பையனால் ஏசியை தாங்க முடியவில்லை).

"டேய்... என்னடா இப்பிடிக் கால் ஆடுது?"

"அது... நான் பாட்டுக்கு கால் ஆட்டிக்கொண்டிருக்கிறன்.."

"ம்ம்ம்... அது பாட்டுக்கு கால் ஆடிக்கொண்டிருக்குது" இது இன்னொரு நண்பன். (திருப்தி)

இப்படி குட்டிக் குட்டித் திருப்திகளோடு முதல் பாதி நகர்ந்தது. ஐயகோ இரண்டாம் பாதி நகரவே இல்லை. வெளியே வந்தபோது மூன்று படம் பார்த்த நேரம் சென்ற உணர்வு.

சரி படம் முடிஞ்சு ஒரு ஹோட்டலுக்குக் சென்று மத்தியானச் சாப்பாட்டுக்கு சொல்லவிட்டு இருக்கத்தான் பார்த்தேன் என்னோட செல்பேசியை எங்கோ தவற விட்டுவிட்டேன். தியேட்டரில்தான் இருக்கவேண்டும். பக்கத்து நண்பனின் செல்பேசியை வாங்கி ரிங்க் செய்தேன். ரிங்க் போகிறது. சாப்பிட்டுவிட்டு மீண்டும் தியேட்டருக்குச் சென்றேன்.

அடுத்த காட்சியில் மக்கள் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தார்கள். தியேட்டர் பணியாளர்களிடன் சென்று என்ர பிரச்சினையை சொன்னன். இடை நடுவில் உள்ளே சென்ற நான் இருந்த இருக்கையை பார்த்தோம். இருந்தவரும் சந்தோசமாக எழும்பி தானும் சேர்ந்து தேடினார். கிடைக்கவில்லை. வெளியில் வந்து பணியாளர் ஒருவரின் செல்பேசியில் எனது பேசிக்கு ரிங்க் செய்தேன். எனது இருக்கையில் இருந்தவர் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்திருப்பார் போல் தெரிகிறது, தொடர்ந்து தேடுவதிலேயே இன்பமடைந்து "இந்தாருங்கள் இருக்கைக்கு அடியிலே கிடந்தது" என கொணர்ந்து தந்தார்.

நன்றி கூறி வாங்கி; செல்பேசி தந்த பணியாளர் "வேற யாருமெண்டால் போனை எடுத்திருப்பாங்கள், ரீ குடிக்க ஏதாவது தந்துட்டு போங்கோ" எனறு தனது தூய உள்ளத்தை வெளிப்படுத்தினார். சரி என்று அவருக்கு 200 ரூபா கொடுத்துவிட்டு மொத்தத்தில் 550 ரூபா கொடுத்து படத்தை கஷ்டப்பட்டு பார்த்து முடித்திருந்தாலும் போன் திரும்பக் கிடைத்ததே என்ற திருப்தியில் (போன் மீள்க் கிடைத்தபோது உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தேன்) வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்த பின்னும் போன் கிடைத்த திருப்தி நிலைத்திருந்து.

இந்த திருப்தி வாரணம் ஆயிரம் படத்துக்குப் போனதாலதான வந்தது. எனவே வாரணம் ஆயிரம் - ஒரு திருப்தியான அனுபவம்.

மதுவதனன் மௌ.

 

நோக்கியா பயனர்களே!

நோக்கியா தொலைபேசியின் சில மாதிரிகளின் மின்கலம் ஆனது குறித்த எண்ணிக்கையான மின்னேற்றத்தின் பின்னர் அது வெடிப்பதாகவோ அல்லது பிழையான வழியில் செயற்படுவதாகவோ நோக்கியா நிறுவனத்தினர் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.

இவ்வகை மின்கலங்கள் குறித்தவொரு நிறுவனத்தால் குறித்த காலப்பகுதியில் நோக்கியா நிறுவனத்திற்காக செயப்பட்டவையாகும். இந்தவகை மின்கலங்களை நீங்கள் வைத்திருந்தால் நோக்கியா நிறுவனம் இலவசமாக மாற்றித்தரச் சம்மதித்திருக்கிறது.

முதலில் நீங்கள் பாவிக்கும் நோக்கியா தொலைபேசி கீழ்வரும் மாதிரிகளில் ஏதுமொன்றா என உறுதிப்படுத்துங்கள்.

Nokia 1100, Nokia 1100c, Nokia 1101, Nokia 1108, Nokia 1110, Nokia 1112, Nokia 1255, Nokia
1315, Nokia 1600, Nokia 2112, Nokia 2118, Nokia 2255, Nokia 2272, Nokia 2275, Nokia 2300,
Nokia 2300c, Nokia 2310, Nokia 2355, Nokia 2600, Nokia 2610, Nokia 2610b, Nokia 2626, Nokia
3100, Nokia 3105, Nokia 3120, Nokia 3125, Nokia 6030, Nokia 6085, Nokia 6086, Nokia 6108,
Nokia 6175i, Nokia 6178i, Nokia 6230, Nokia 6230i, Nokia 6270, Nokia 6600, Nokia 6620, Nokia
6630, Nokia 6631, Nokia 6670, Nokia 6680, Nokia 6681, Nokia 6682, Nokia 6820, Nokia 6822,
Nokia 7610, Nokia N70, Nokia N71, Nokia N72, Nokia N91, Nokia E50, Nokia E60

This product advisory also applies to the following accessories:

Nokia Wireless GPS Module LD-1W,
Nokia Wireless GPS Module LD-3W

மேலும் மின்கலத்தின் மேற்புறத்தில் "Nokia" மற்றும் "BL-5C" எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறதா எனவும் பாருங்கள்.
பின்னர் மின்கலத்தின் பின்புறத்தில் 26 எழுத்துக்களாலான மின்கல அடையாளக்க குறியீடு இருக்கிறதா எனப் பாருங்கள்.பின்னர் அந்த 26 எழுத்துக் குறியீட்டை இந்த நோக்கியாவின் இணைய முகவரிக்குச் சென்று கீழே உள்ள எழுத்து வெளியில் போட்டு உங்கள் மின்கலம் மீளப்பெறுவதற்குத் தகுதியானதா என பரிசோதித்து, அண்மையிலுள்ள நோக்கியா வாடிக்கையாளர் நிலையத்தில் போய் மாற்றிக்கொள்ளுங்கள்