நா


ஜிமெயில் நுட்பம்
ஜிமெயிலின் சக்திவாய்ந்த இன்னொரு அம்சம்தான் "Search Mail". மடல்கள் வரும்போது அனைத்தையும் வாசிக்கமுடிவதில்லை. சிலவற்றை பின்னர் வாசிப்போம் என்று (பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்குக) விட்டுவிட்டு எங்கே போச்சுடா என்று தேடுவோம். ஜிமெயில் ஏலவே உள்ள அதாவது முன் பக்கத்தில் தெரியாத வாசிக்காத மடல்களை எவ்வாறு தேடி எடுப்பது என குழம்பியிருப்போம். அதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டியதுதான் "Search Mail" அம்சம்.

"Search Mail" பொத்தானுக்கு முன்னாலுள்ள எழுத்து வெளியில் "is:unread" என மேற்கோட்குறிகள் இல்லாது தட்டச்சிவிட்டு பொத்தானை அமுக்கிவிடுங்கள். வாசிக்காத மடல்கள் அனைத்தும் டாண் என்று வந்து சிரிக்கும்.


கலகம்.காம் கலகம் விளைவிக்கிறதா?
கலகம்.காம் தமிழர்களுக்கு எதிரானது; அது பற்றி அவதானமாயிருங்கள். குளோபல் தமிழ் நியூஸ் உரிமையாளர் யார்; இவர் ஏன் சிங்கள மொழிக்கென ஒரு பகுதியை வைத்துள்ளார். NTamil நிரல்கள் அபாயகரமானவையா? சில தனிப்பட்ட நபர்கள் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுக்களைத் திருடுகின்றனரா? நான் செல்லும் இந்த இணையப்பக்கம் பாதுகாப்பானதா?

இவ்வாறான கேள்விகளும் குழப்பங்களும் எம்மைச்சுற்றிக்கொண்டிருக்கின்றன். இவை பற்றி அவதானமாக இருத்தலும் அவசியமாகின்றது. ஏனெனில் இவை எமது அந்தரங்கம் சம்மந்தமானது; சிலவேளைகளில் எமது உயிர் சம்மந்தமானது (இலங்கையில் உள்ளவர்களுக்கு). தமிழச்சியின் வலைப்பக்கம் திருடப்படதிலிருந்து திலீபனின் வலைப்பக்கம் முடக்கப்பட்டது வரை சிலர் பீதி கிள்ப்புவதும், சிலர் பீதி அடைவதும் இயல்பாகவே நடந்தேறுகின்றன.
நீங்கள் இணைய உலாவு நிலையங்களுக்குச் சென்றால் உங்களது கடவுச்சொற்கள், கடனட்டை இலக்கங்கள் போன்றவற்றை திருடுவதற்கு அவர்கள் நீங்கள் பாவிக்கும் கணிணியிலேயே சில மென்பொருட்களை தயார்செய்யது விட்டிருப்பார்கள். ஆனால் இணையத்தில் குறித்த ஒரு பக்கத்திற்குச் செல்லும்போது உங்களது விபரங்களை திருடுவதற்கான செயற்பாடு ஏறத்தாழ முற்றிலும் ஜாவாஸ்கிரிப்ட், ஜேஸ்கிரிப்ட் பிளாஷ் போன்றவற்றாலேயே ஏற்படுத்தப்படுகிறது.

அதாவது உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படாநிலையில் வைத்தால் இந்த தாக்குதல்களை நிறுத்தலாம். உலாவியிலுள்ல option இல் ஜாவாஸ்கிரிப்டை செயற்படாநிலைக்கு கொணரலாம். ஆனால் அங்கேயும் பிரச்சினை உளது. எங்கள் கூகுள் ஆண்டவரும் அவரது சொந்த பந்தங்களும் ஜாவாஸ்கிரிப்ட செயற்படுநிலையில் இருந்தாலன்றி இயங்க மாட்டார்கள். இது கூகுளுக்கென்றல்லாது வேறு பலப் பல இணையப் பக்கங்களுக்குப் பொருந்தும்.

அப்போ என்ன செய்வது. அதற்காக இருப்பதுதான் NoScript பயர்பாக்ஸ் Add-on. அதனை இங்கே இறக்கலாம். இந்த NoScript add-on இனை நிறுவிய பின்னர் நீங்கள் குறித்த இணையப் பக்கங்களுக்கு முற்றிலுமாகவோ பகுதியாகவோ ஜாவாஸ்கிரிப்டை அனுமதிக்கலாம். கலகம்.காம் கலகம் தருமென நினைத்தால் அப்பக்கத்திற்கு அனுமதிக்காது விடலாம். ஆரம்ப இயல்பாக இந்த add-on எந்தப் பக்கத்திற்கும் ஜாவாஸ்கிரிப்டை அனுமதிப்பதில்லை. ப்ளாஷ் உள்ளடக்கங்களையும் செயற்படா நிலையில் வைத்து உங்களது அனுமதியில் மட்டும் செயற்பட வைக்கும்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். என்னடா இது ஒவ்வொரு பக்கத்திற்கும் வந்து Javascript not allowed என்று சொல்கிறதே என்று. ஒரு முறை அனுமதி கொடுத்தீர்களானால் பின்னர் அந்தப் பக்கத்திற்குத் தொல்லைதாராது. ஆனால் போகப் போக பழகிவிடும்.

ஆறுபணத்துக் குதிரையும் வேணும்; ஆறு கடக்கப் பாயவும் வேணும் எண்டா ஒண்டும் பண்ணமுடியாது. :-D

பி.கு : இங்கு நான் கலகம்.காம், NTamil பெயர்களைப் பாவித்திருப்பது வலைப்பதிவுலகில் அதைப்பற்றிய கதைகள் உலாவுவதால் மட்டுமே. தனிப்பட்ட ரீதியில் நான் எந்த தாக்குதல் அறிகுறியும் இவற்றிலிருந்து பெற்றதில்லை. கூடுதல் தகவலாக நான் இவற்றுக்கு இன்னும் ஒருபோதும் சென்றதில்லை. :-)

NoScript இணைய முகவரி : http://noscript.net/
NoScript add-on முகவரி : https://addons.mozilla.org/en-US/firefox/addon/722
தெரிந்தால் சொல்லுங்கோ
Text box இற்கு சிறப்பான தமிழ் வார்த்தை என்ன? எழுத்து வெளி கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

அப்படியே Add-on க்கும் என்ன தமிழ் வார்த்தை. முந்திப் பாவித்தேன் முற்றிலும் மறந்துவிட்டேன் :-(

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

2 பின்னூட்டங்கள்.

உங்கட பதிவை வாசித்தேன் சிறப்பக இருந்தது... ஆனால் சில சந்தேகங்கள்...

ஜ்கிரிப்ட் மூலம் பாஸ்வேர்ட் திருடும் சாத்தியம் இருக்குமா?அப்படி திருட கூடிய வகையில் லப்பக்கம் வடிவமைக்கப்பட்டிருப்பின் அதை அன்டிவைரஸ் சாப்ட் வெயார்கள் கண்டு கொள்ளாமல் இருக்குமா? ஏனெனில் அத்தகைய சாப்ட் வெயார்களை புதிதாக தோற்கடிக்கும் வகையில் கோட் எழுது இந்த கசாப்புக் கடைக்கும்பலுக்கு புத்தியிருக்குமா?

தமிழிச்சி திருடப்பட்டது குறித்து ஏதாவது காரண அறிக்கை வெளியிட்டாரா? அது குறத்த வலை முகவரியை தர முடியுமா?

மேலும் பதிவுலகம் பயங்க ரமாகி வருவது கவலையளிக்கிறது..

தொடர்ந்து எழுதவும்..

தாங்கள் பலகாலமாக எழுதுவதை விட்டு விட்டதால் தங்கள் வலைபதிவு பக்கம் வருவதை விட்டுவிட்டிருந்தேன்... மன்னிக்கவும்... இனி அவசியம் அடிக்கடி வருவேன்..

மதுவதனன் மௌ. June 4, 2009 at 3:10 PM

வாங்கோ புல்லட்,

ஜ்கிரிப்ட் மூலம் பாஸ்வேர்ட் திருடும் சாத்தியம் இருக்குமா?

நிறையவே உண்டு

அப்படி திருட கூடிய வகையில் லப்பக்கம் வடிவமைக்கப்பட்டிருப்பின் அதை அன்டிவைரஸ் சாப்ட் வெயார்கள் கண்டு கொள்ளாமல் இருக்குமா?

ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் உங்கள் கணிணியில் ஏதாவது வைரஸ் புகவெளிக்கிட்டால் அல்லது ஒவ்வாத மென்துண்டுகளை நிறுவ முயன்றால் காட்டும். இது இணையப் பக்கத்தில் நிகழ்வது. நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை தட்டச்சும்போது இணையப்பக்கத்திலிருந்தே பெறும் திருட்டு முயற்சி. ஆன்டி ஸ்பைவெயர்கள் சில தாக்குதல்களைத் தடுக்கும்.

ஏனெனில் அத்தகைய சாப்ட் வெயார்களை புதிதாக தோற்கடிக்கும் வகையில் கோட் எழுது இந்த கசாப்புக் கடைக்கும்பலுக்கு புத்தியிருக்குமா?

என்னதான் என்றாலும் இவ்வகையான திருட்டுக்கள் ஜாவாஸ்கிரிப்ட் மூலமானவை. தடுக்கமுடியும்

noscript இனைப் பாவித்துப் பாருங்கள்.

தமிழச்சியின் வலைப்பக்கத் திருட்டு நடந்து மிக நீண்ட காலம். அந்தக் காலம் வலைப்பக்கங்களை backup எடுத்துக்கொள்ள முடியாது. இப்போது அந்த இயல்பு உள்ளது. சும்மா அவவோட இந்த வலைப்பக்கத்துக்குச் சென்று பாருங்கள் தெரியும் http://thamilachi.blogspot.com/

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ