பிரேம் கோபால் Vs ஏ ஆர் ரஹ்மான்
நானும் நேற்று தமிழ் இணையங்களுக்கு சென்றபோது பிரேம் கோபால் எனும் பெயர் அதிகமாக அடிபடுவதைப் பார்த்தேன். அவர் ஏதோ டான்ஸ் போட்டாராம், தமிழனின் உணர்வுகளை வெளிப்படுத்தினாராம் என்று. இது வழமையான உடான்ஸ் விவகாரமாக இருக்கும் என நினைத்து பார்க்காமலே விட்டுவிட்டேன். என் நண்பன் வேறு அதைப் பற்றிய பதிவிட்டிருந்தான். சரி பார்த்து விடுவோமே என்று இன்று காலைதான் பார்க்கத் தலைப்பட்டேன்.
தானாடாவிட்டாலும் தன் தசையாடும். நிஜமாகவே சொல்கிறேன். பார்க்கும்போது தொண்டை அடைத்தது. கண்ணீர் வழிந்தோடாவிட்டாலும் தேங்கி நின்றது. அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு ஏழு நிமிட உணர்ச்சிக் குவியலது. எல்லாத் தமிழ் மனங்களும் வேண்டி நிற்கும் தேவையது. ஆனாலும் 'பிரேம் கோபால் பிரதிபலிக்கின்ற உணர்வை வைத்திருக்கின்ற எல்லாத் தழிர்களினதும் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில எங்கள் போராட்டம் சரியான வழியில் சென்றதா? செல்கின்றதா?' என்ற கேள்வி மனதை இன்னும் கனக்கச் செய்தது.
இதேநேரம் ஏ ஆர் ரஹ்மானும் ஏனோ நினைவுக்கு வந்து சென்றார். பிரபலமில்லாத பிரேம் கோபால் வாழ்ந்து காட்டிய அந்து ஏழு நிமிடங்களுக்குரிய மதிப்பு எவ்வளவு அபரிமிதமானது என்று எல்லோருக்குமே புரிகிறது. பிரபலமான ஏ ஆர் ரஹ்மான் ஒஸ்கார் விருது பெறும் வைபவத்தில் 'அங்கே வாழ வழியின்றித் தவிக்கும் என் மக்களுக்கு விடுதலை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்' என்று ஒரு வசனம் கூறியிருந்தால் உலக அளவில் எவ்வளவு அடைந்திருக்கும்.
செய்யவேண்டிய நிலையிலிருப்பவர்கள் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இருப்பதுகூட தப்பாகவே படுகிறது. இதைப்பற்றி குறள் கூட இருக்கிறது ஞாபகம் இல்லை. தெரிந்தால் பின்னூட்டத்திலிடுங்கள்.
முத்துக்குமாரை நினைக்கவும் கவலையாக இருந்தது.
தானாடாவிட்டாலும் தன் தசையாடும். நிஜமாகவே சொல்கிறேன். பார்க்கும்போது தொண்டை அடைத்தது. கண்ணீர் வழிந்தோடாவிட்டாலும் தேங்கி நின்றது. அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு ஏழு நிமிட உணர்ச்சிக் குவியலது. எல்லாத் தமிழ் மனங்களும் வேண்டி நிற்கும் தேவையது. ஆனாலும் 'பிரேம் கோபால் பிரதிபலிக்கின்ற உணர்வை வைத்திருக்கின்ற எல்லாத் தழிர்களினதும் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில எங்கள் போராட்டம் சரியான வழியில் சென்றதா? செல்கின்றதா?' என்ற கேள்வி மனதை இன்னும் கனக்கச் செய்தது.
இதேநேரம் ஏ ஆர் ரஹ்மானும் ஏனோ நினைவுக்கு வந்து சென்றார். பிரபலமில்லாத பிரேம் கோபால் வாழ்ந்து காட்டிய அந்து ஏழு நிமிடங்களுக்குரிய மதிப்பு எவ்வளவு அபரிமிதமானது என்று எல்லோருக்குமே புரிகிறது. பிரபலமான ஏ ஆர் ரஹ்மான் ஒஸ்கார் விருது பெறும் வைபவத்தில் 'அங்கே வாழ வழியின்றித் தவிக்கும் என் மக்களுக்கு விடுதலை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்' என்று ஒரு வசனம் கூறியிருந்தால் உலக அளவில் எவ்வளவு அடைந்திருக்கும்.
செய்யவேண்டிய நிலையிலிருப்பவர்கள் செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல் இருப்பதுகூட தப்பாகவே படுகிறது. இதைப்பற்றி குறள் கூட இருக்கிறது ஞாபகம் இல்லை. தெரிந்தால் பின்னூட்டத்திலிடுங்கள்.
முத்துக்குமாரை நினைக்கவும் கவலையாக இருந்தது.
மதுவதனன் மௌ (aka) கௌபாய்மது
39 பின்னூட்டங்கள்.
//பிரபலமான ஏ ஆர் ரஹ்மான் ஒஸ்கார் விருது பெறும் வைபவத்தில் 'அங்கே வாழ வழியின்றித் தவிக்கும் என் மக்களுக்கு விடுதலை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்' என்று ஒரு வசனம் கூறியிருந்தால் உலக அளவில் எவ்வளவு அடைந்திருக்கும்.//
நானும் கற்பனையில் இதை ஒடவிட்டு ஒத்திகை பார்த்தேன் - அவர் விருது வாங்குவதற்கு முந்தைய நாள்...
அவர் இதைக் கண்டுகொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே, என்றும் எண்ணிக்கொண்டேன்.
அவர் தமிழன் என்கிற அடையாளம் என்றோ மாறிவிட்டது.
எல்லா விஷயங்களையும் எல்லா இடங்களிலும் பேசிவிட முடியாது...
தமிழர் பிரச்சினையை மாநில, நாடு அளவில் பேச தலைவர்கள் இருக்கும் போது ......அவர் பேசி என்ன ஆக போகிறது.......
எ.ஆர் . ரகுமானை அவதுறு பேசுவதை கண்டிக்கிறேன்...
ரகுமான் ஒஸ்கார் விருது வாங்கும் போது ஈழ தமிழர்களின் இனபடுகொலையை பற்றி பேசியிருந்தால் அது சர்வதேசத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் . ஆனால் அதை அவர் செய்யவில்லை ஈழ தமிழ் வாரிசான பாப் பாடகி தனக்கு கிடைத்த நேரத்தை பயன் படுத்தியிருக்கிறார் பிரேம் , மாதங்கி எங்கே ரஹ்மான் எங்கே ?
வாங்கோ ஊர்சுற்றி,
//அவர் இதைக் கண்டுகொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே, என்றும் எண்ணிக்கொண்டேன்.
அவர் தமிழன் என்கிற அடையாளம் என்றோ மாறிவிட்டது.//
கட்டாயமில்லை. கட்டாயப்படுத்தவும் முடியாது. கண்டு கொண்டிருந்தால் சிறிது சென்றடைந்திருக்கும் என்றொரு நினைப்பு.
மது.
சொல்லி இருக்கலாம்... ஆனால், சொல்லாதது குற்றம் இல்லை...
ஈழத்தமிழர்களை பற்றி கவலைப்பட வேண்டியதுதான், அதற்காக நம் சொந்த மண்ணின் தமிழர்களை மறந்ததேனோ? கோலார் தங்க வயலில்,ஆந்திரா கல் குவாரியில் மும்பை சேரிகளில் சித்திரவதைப்படும் தங்கத் தமிழனை யாராவது கண்டு கொண்டுகொண்டதுண்டா ?
வாங்கோ பாஸ்கரன் சுப்ரமணியன்,
//அவர் பேசி என்ன ஆக போகிறது.......//
இதென்ன பாஸ்கரன் கேள்வி? ஒப்பிட்டெழுதியிருக்கிறேனே.. ஒன்றுமே நடந்திருக்காது என்று நம்புகிறீர்களா? :-|
//எ.ஆர் . ரகுமானை அவதுறு பேசுவதை கண்டிக்கிறேன்...//
என்ன பாஸ்கரன், நடக்காத ஒன்றுக்கு கண்டிப்பு வேண்டாம். :)
மதுவதனன் மௌ.
வாங்கோ Suresh Kumar,
//மாதங்கி எங்கே ரஹ்மான் எங்கே ?//
அதனால் மாதங்கி உயர்ந்தவர் என்றோ ரஹ்மான் தாழ்ந்தவர் என்றோ இல்லை. ரஹ்மானும் அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்கலாம். அவ்வளவுதான்.
வதனன்.
வாஙகோ சரவணகுமரன்,
//சொல்லி இருக்கலாம்... ஆனால், சொல்லாதது குற்றம் இல்லை...//
சட்டப்படி குற்றமில்லைத்தான்.
எந்த நாடென்று மறந்துவிட்டது. ஹைவேயில் வாகனத்தில் செல்லும்போது விபத்தொன்றைக் கண்டு நிறுத்தாது சென்றால் அங்கு அது சட்டப்படி குற்றம். இவற்றை சூழலும் சந்தர்ப்பங்களுமே தீர்மானிக்கின்றன்.
கௌபாய்மது.
வாங்கோ M Poovannan,
//சொந்த மண்ணின் தமிழர்களை மறந்ததேனோ? கோலார் தங்க வயலில்,ஆந்திரா கல் குவாரியில் மும்பை சேரிகளில் சித்திரவதைப்படும் தங்கத் தமிழனை யாராவது கண்டு கொண்டுகொண்டதுண்டா ?//
இதைப்பற்றி நானும் சிந்தித்திருக்கிறேன். தலித்துக்களின் நிலை பற்றி காணொளிகளையும் பார்த்திருக்கிறேன். சுயநலமே இல்லாத இந்தியாவிடம் பொது நலத்தை எதிர்பார்த்துக் கிடப்பது பயனற்றதுதான். வேறு வழியும் கிடைக்குதில்லை.
மதுவதனன் மௌ.
பிறேம் கோபால் தொலைந்து கொண்டிருக்கின்ற மனிதத்துக்காக போராடுகின்றான்.
மது, என்னுடைய பதிவில் அந்நிகழ்ச்சியின் பாகம் - 01 மாத்திரம் இணைக்கப்பட்டுள்ளது. பாகம் -02 ஐ பார்வையிடாவிட்டால் அதையும் ஒருமுறை பாருங்கள்.
நன்றி
அங்கே புலிகளின் கட்டுபாட்டுபகுதிகளில் வாழ வழியின்றித் தவிக்கும் என் மக்களுக்கு விடுதலை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்' என்று ஒரு வசனம் கூறியிருந்தால் சிறிது பொருத்தமாக இருந்திருக்கும். நண்பரே எங்களுக்கும் இலங்கையில் உறவுகள் இருக்கின்றன.
//அங்கே புலிகளின் கட்டுபாட்டுபகுதிகளில் வாழ வழியின்றித் தவிக்கும் என் மக்களுக்கு விடுதலை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்' என்று ஒரு வசனம் கூறியிருந்தால் சிறிது பொருத்தமாக இருந்திருக்கும். நண்பரே எங்களுக்கும் இலங்கையில் உறவுகள் இருக்கின்றன//
http://www.channel4.com/news/articles/politics/international_politics/grim+scenes+at+sri+lankan+camps+/3126257
மதிப்புக்குரிய புலிகள் உறுப்பினர் Selva அவர்களுக்கு,
channel4.com வை நான் நம்பவில்லை. உனது உறவினர் சென்னதை நம்புகிறேன்.
// Anonymous said...
channel4.com வை நான் நம்பவில்லை. உனது உறவினர் சென்னதை நம்புகிறேன்.//
உறவினர் சொன்னதை நம்புகிறீர்கள். channel 4 இனை ஏன் நம்பவில்லை. ஏதாவது ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் ஒன்று?
வாங்கோ Selva,
channel 4 சொல்வது உண்மையாக இருக்குமிடத்து அநாமதேயம் சொல்வது பொய்யாக இருக்கவேண்டுமென எந்த முகாந்திரமும் இல்லை. என்னவோ மக்களுக்கு விடிவு வேண்டும். சரியான ஒரு வழி வேண்டுமதற்கு.
வாங்கோ ஆதிரை,
இரண்டு பகுதிகளையும் பார்த்தேன். என்ன செய்வது.. ம்ம்ம்
கட்டாயமில்லை. கட்டாயப்படுத்தவும் முடியாது. கண்டு கொண்டிருந்தால் சிறிது சென்றடைந்திருக்கும்.
வாங்கோ K.K,
நீங்கள் சொல்வது மெத்தச் சரி. பதிவில் ARR ஐயும் Prem ஐயும் ஒப்பிட்ட சந்தர்ப்பத்தை பாருங்கள்.
ARR இன் ஒஸ்கார் விருது வைபவத்தைப் பார்க்கும்போதும் உடலெல்லாம் புல்லரித்து கண்களில் நீர் கோர்த்துதான். அது ஆனந்தக் கண்ணீர்.
இதைப் பார்க்கும்போது தொண்டை அடைத்து கண்ணீர் தேங்கியது.
இரண்டுமே தமிழனாக இருந்து பார்த்தபடியால் வந்ததே.
மதுவதனன் மௌ.
எ.ஆர் . ரகுமானை அவதுறு பேசுவதை கண்டிக்கிறேன்.YENDA KULAPPAM PANNURINGE PANNIGALA////
தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009
KUTRAM KANDUPIDITHU PER VAANGALAM NO HITS VAANGUM NEE ?AMERICAVUKE PEPE SONNA RAJABAKSE??ITHULA RAHMAN YENNA PANNANUM ??VELLAI POKKAL PATTAI KETUPAAR
அப்போது பிரச்னை இவ்வளவு உக்கிரமடையவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் ரகுமான் இப்போது நினைத்து நிச்சயம் வருந்துவார். அப்படி மட்டும் அவர் செய்திருந்தால், நிச்சயம் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பார்.
ஐயா
ரஹ்மானை யார் மதிக்கிறார்கள்
அவர் ஒரு இசையமைப்பாளரே இல்லை என்று எத்தனை பேர் எழுதுகிறார்கள்
கோடானு கோடி ரசிகர்களை பெற்ற இளையராஜா இது பற்றி ஏதாவது அறிக்கை விட்டிருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள ஆசை
அப்படி சொல்லாத பட்சத்தில் நீங்கள் ரஹ்மானை மட்டும் இதில் எழுதுவது உங்கள் எண்ணம் இலங்கை தமிழர் நலமல்ல, ரஹ்மானை தேவையில்லாமல் வம்பிற்கிழுப்பது மட்டுமே என்று நிருபணமாகிறது
செய்தக்க அல்ல செயக்கெடும்
செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
- குறள்466
rahman solli irunthirukkallam. raja abdul kalam endu naangal niraya peer sollalam. ivarkal solla villai endu solli varuthapaduvathai vida naangal solpavarkaluku nandri kooralam.
on the oscar event a malayali boy said he said is award is for kerala ppl and rahman said it is for his religion. avar avarkaluku ethu mukkiyamo athai sollukirarikal. unarvu thaanaka varavenum. nichayam rahmanil ennaku kovam or veruppo kidayaathu. but I reaspet the malayali.
//கோடானு கோடி ரசிகர்களை பெற்ற இளையராஜா இது பற்றி ஏதாவது அறிக்கை விட்டிருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள ஆசை//
ARR got a chance to talk in American stage whilst Raja didnt get one to talk about it.
Try to get the point you idiot.
//நீங்கள் ரஹ்மானை மட்டும் இதில் எழுதுவது உங்கள் எண்ணம் இலங்கை தமிழர் நலமல்ல, ரஹ்மானை தேவையில்லாமல் வம்பிற்கிழுப்பது மட்டுமே என்று நிருபணமாகிறது//
Useless bunch always try to make scenes like this. Get a life you arsehole
தமிழ்நெஞ்சம் வாங்கோ,
உங்கள் அருமையான படத்தைப் பார்த்தாச்சு. நன்றி
ramalingam வாங்கோ,
உண்மைதான், இன்னொரு சந்தர்ப்பம் வரும்போது அதை அவர் தவற விடாதிருந்தால் மிக்க மகிழ்ச்சியே
மதுவதனன் மௌ.
savuccu said...
செய்தக்க அல்ல செயக்கெடும்
செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
- குறள்466//
ரொம்ப நன்றி சின்னனில படிச்சது. மறந்து போய்ட்டுது.
வாங்கோ வெண்காட்டான்,
என்னுடைய இந்தப்பதிவு ARR இனை தவறானவர் என்ற கருத்தைத் தொனிக்கிறதா?
நான் இங்கே கூற விளைவது நல்ல ஒரு சந்தர்ப்பத்தை, தவற விடக்கூடாத சந்தர்ப்பத்தைத் தவற விட்டுவிட்டார் என்பதே.
ரஹ்மான் பற்றின எனது உணர்வை பின்னூட்டத்திலும் போட்டிருக்கிறேன்.
உங்கள் செய்தி எனக்குப் புதுசு.
நன்றி.
இந்த அநாமதேயங்களின் அலப்பறை தாங்க முடியலங்கோ... :D
//Anonymous said...
ஐயா
ரஹ்மானை யார் மதிக்கிறார்கள்//
இதென்ன புதுசா கிடக்குது. ARR க்கு மதிப்பில்லை என்கிறீங்களா. முதல்ல ARR ஆரெண்டு அறிய முயற்சியுங்கோ
// அவர் ஒரு இசையமைப்பாளரே இல்லை என்று எத்தனை பேர் எழுதுகிறார்கள்//
ஆமா அதுக்கிப்போ என்னாங்கிறீங்க?
// கோடானு கோடி ரசிகர்களை பெற்ற இளையராஜா இது பற்றி ஏதாவது அறிக்கை விட்டிருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள ஆசை//
இதென்ன கோமாளித்தனமான ஆசை பெரியவரே. சம்மந்தமேயில்லாத பேச்சு.
//அப்படி சொல்லாத பட்சத்தில் நீங்கள் ரஹ்மானை மட்டும் இதில் எழுதுவது உங்கள் எண்ணம் இலங்கை தமிழர் நலமல்ல, ரஹ்மானை தேவையில்லாமல் வம்பிற்கிழுப்பது மட்டுமே என்று நிருபணமாகிறது//
என்னமா காரண காரியங்களோடு நிறுவுறாங்கப்பா. யோவ் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் வாசித்துவிட்டுத்தான் இதப் போட்டீங்களா. :D
மதுவதனன் மௌ.
இந்த அனாமதேயப் பெரியவர் யாருங்கோ :)
// Anonymous said...
//கோடானு கோடி ரசிகர்களை பெற்ற இளையராஜா இது பற்றி ஏதாவது அறிக்கை விட்டிருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள ஆசை//
ARR got a chance to talk in American stage whilst Raja didnt get one to talk about it.
Try to get the point you idiot.
//நீங்கள் ரஹ்மானை மட்டும் இதில் எழுதுவது உங்கள் எண்ணம் இலங்கை தமிழர் நலமல்ல, ரஹ்மானை தேவையில்லாமல் வம்பிற்கிழுப்பது மட்டுமே என்று நிருபணமாகிறது//
Useless bunch always try to make scenes like this. Get a life you arsehole//
எனக்குச் சப்போர்ட் பண்ணுற மாதிரியும் கிடக்குது. பின்னூட்ட மட்டறுத்தலையும் கொண்டு வந்துடுவார் போல கிடக்கு.
சூழலுக்கேற்ற வாக்கியங்களை பாவியுங்கோ. :D
//அங்கே புலிகளின் கட்டுபாட்டுபகுதிகளில் வாழ வழியின்றித் தவிக்கும் என் மக்களுக்கு விடுதலை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்' என்று ஒரு வசனம் கூறியிருந்தால் சிறிது பொருத்தமாக இருந்திருக்கும்.//
அப்படி சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் ஒரு நிகழ்ச்சி செய்து சொல்லலாமே. தன் உணர்வை அவர் வெளிப்படுத்தினார்.அவரது மக்கள் மேலுள்ள உணர்வுகளை பாராட்டுவதை விட்டுவிட்டு சம்பந்தம் இல்லாததுக்காக சண்டை போடுங்கோ.
channel 4 நேரடியான பேட்டியை உங்களால நம்ப முடியாமல் இருக்கு.
ஏன் உங்களுக்கு மட்டும் தான் அங்க உறவினர் இருக்கிறார்களா?
பிரித்தானியா, பிரான்ஸ், .....என்று எத்தனை லட்சம் மக்கள் போராடுகிறார்கள்.அவர்களுக்கு உறவினர்கள் இல்லையா?
//என்னுடைய இந்தப்பதிவு ARR இனை தவறானவர் என்ற கருத்தைத் தொனிக்கிறதா?//
ஆம்
//ARR got a chance to talk in American stage whilst Raja didnt get one to talk about it.
Try to get the point you idiot. //
பாயிண்ட் புரியுது புத்திசாலி. இளையராஜா இங்கு ஒரு பிரஸ் மீட் கூட்டி தனது கருத்தை தெரிவித்தாரா
திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டாரா (ரஹ்மானும் கலந்து கொள்ளவில்லை)
அப்படி இருக்கும் போது ரஹ்மானை மட்டும் குற்றம் சுமத்தும் மர்மம் என்ன. அவர் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்கு தானே
//பிரபலமான ஏ ஆர் ரஹ்மான் ஒஸ்கார் விருது பெறும் வைபவத்தில் 'அங்கே வாழ வழியின்றித் தவிக்கும் என் மக்களுக்கு விடுதலை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்' என்று ஒரு வசனம் கூறியிருந்தால் உலக அளவில் எவ்வளவு அடைந்திருக்கும்//
கடவுளை மனதில் நிறுத்தி இருக்கும் ரகுமான், ஒரு சில நிமிடமாவது மனிதனை மற்றும் மனிதம் பற்றி பேசி இருந்தால் ..ம்ம்ம்ம்ம்ம்ம்..கடவுளின் பெயரால் மனிதம் பற்றிய சிந்தனை எத்தனை தூரம் மழங்கடிக்கப்படுகிறது என்பதற்கு ரகுமானும் மற்றுமொரு உதாரணம்
வாங்கோ Dharan,
உங்களுடன் நான் முற்றிலும் ஒத்துப்போகிறேன். இவ்வாறான பெரிய மனிதர்கள் கடவுள் பற்றிய கருத்துக்களை ஆராய்ச்சியின்றியே கூறிவிட்டுச் செல்வது கடைக்கோடி மக்களை எவ்வளவு தூரம் பாதிக்கும். ஆனாலும் ரஹ்மான் எளிமையானவர்தான். மேலும் இந்தப் பதிவுக்கு இதைப்பற்றிக் கதைப்பது விலகிச் செல்வது போலத் தோன்றுகிறது. நேரம் வரும்போது கதைப்போம்.
மதுவதனன் மௌ.
ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!
www.kalakalkalai.blogspot.com
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ