காலை உணவை முடித்துக்கொண்டு ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிய கலைஞர், அண்ணா சிலைக்கு முன்பாக ஏழு மணித்தியால சாகும்வரை உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டு மதிய உணவுக்காக ஒரு மணிக்கு மீண்டும் வீடு சென்றடைந்தார்.
"நா அசைய நாடே அசையும" என்று சொல்வார்கள். நான் நாடசைக்க இங்கு வரவில்லை. நாவுக்கு அகராதியிலே நாக்கு, தீயின் சுடர், சொல், அழகு மற்றும் நடு என வேறுபட்ட நல்ல அர்த்தங்களைப் பார்த்ததால் கவரப்பட்டு நாவென இந்த வலைப்பூவுக்குப் பெயர் சூட்டினேன்.
இரண்டினதும் ஒலிக்குறிப்புகள் முற்றிலும் வேறுபட்டன. "நா என்ன சொல்ல வரேன்னா" என்பதில் நாக்கு நடு அண்ணத்தைத் தொடுகிறது; "எனக்கு நா கடிச்சுப்போட்டுது" என்பதில் நாக்கு முன் அண்ணத்தைத் தொடுகிறது. நான் இல் 'ன்' உம் நாய் இல் 'ய்' உம் மறைகின்றன பேச்சுவழக்கில்.
7 பின்னூட்டங்கள்.
உண்மை தாங்க
மஞ்சல் துண்டுக்கு இதுவும் வேண்டும்...தமிழனாக இல்லாமல்,இந்தியனாக மாரினால்,இப்படிதான்,அவமானப்படவேண்டும்...கண் கெட்ட பிரகு (ஊதய) சூரிய நமச்காரம்!
வாங்கோ குணசீலன் மற்றும் ttpian,
உண்ணாவிரதமாம் அதிலும் சாகும்வரை உண்ணாவிரதமாம். இவங்க படுத்துற பாட்டில யாரும் உண்மையா உண்ணாவிரதம் இருந்தாக்கூட இனி ஒரு பயலும் கவனிக்கமாட்டான்.
கௌபாய்மது.
இப்பிடி பாத்தா 'மதுவதனன்' தினசரி அலுவலகத்தில இதவிட நீண்ட உண்ணாவிரதமெல்லாம் இருக்கிறவர்... :)
//பின்னூட்டங்கள் மட்டறுக்கப்படவில்லை. நல்ல வாக்கியங்களா எழுதுங்கோ..//
நல்ல வாக்கியம்!
நல்ல வாக்கியம்!!
நல்ல வாக்கியம்!!!
சுகம்தானே நண்பா?!
வாங்கோ நிமல்,
அலுவலகத்தில முப்பது தடவைக்குமேல் சாகும்வரை உணணாவிரதம் இருந்துட்டேனாக்கும்.
மது
வாங்கோ மணி,
நான் நலம் நாடலும் அஃதே. ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை.
சந்திப்போம்.
மதுவதனன் மௌ.
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ