தன்னையே எரித்துக் காவியமாக்கிய முத்துக்குமரனின் சம்பவம் பற்றிய சிங்கள மக்களின் கருத்துக்களை இலங்கையில் வெளிவரும் இணையப் பத்திரிகையில் பின்னூட்டங்களாகப் பாருங்கள். அவை ஆங்கில மொழியில் இருப்பதுடன் பின்னூட்டமிட்டவர்களில் சிலர் தமிழர்களும் அடங்குவர்.
இங்கே சென்று பார்க்க. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39113
11 பின்னூட்டங்கள்.
நான் ஏற்கனவே பார்த்தேன். யார் என்ன சொன்னாலும் மத்தியில் குந்தியிருப்பவர்கள் மௌனிகள் தான் என்று அவர்களுக்கு புரியும். அதன் வெளிப்பாடுதான் இது.
அந்த உறவின் தியாகத்துக்கு தலை சாய்க்கின்றேன்.
பிணத்தை புனரும் சிங்களவனின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தமிழரை அவமதித்த உங்கள் சிங்கள உணர்வுக்கு என்ன சன்மாணம் வழங்குவது
முத்துக்குமாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
ஆனாலும் முத்துக்குமார் தவறிழைத்துவிட்டார்
இந்த பாசை இந்தி தேசத்திற்கோ சிங்களவனுக்கோ புரியாது
இவர்களுக்கு புரிந்த பாசை குண்டு வெடி தான் அதனுடன் சென்றிருக்கவேண்டும்
- .......Poor boy....Why? Our Tamils are Sri Lankans not Indians....
Posted By: wimale-
சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள்.இந்தியா அன்னியநாடு எங்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று புலிகளும் முன்பு சொன்னவர்கள்.
நான் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்த்துப் போட என்னினேன். பறவாயில்லை. அவர்களின் கருத்துக்கள் மிகக்கேவலமானவை. ஆனால் நீங்கள் ஒன்றை யோசிக்கவேண்டும். இன்று இந்திய மத்திய அரசும் இராஜபக்சவும் நடத்தும் தமிழின ஒழிப்பு போராட்டத்தில் இப்பத்திரிகையும் ஒன்று. ஆதரவான கருக்ததுக்கள் வராது. அதே நேரம் சிங்களவர்கள் தமிழ் பெயரில் பின்னுட்டம் இடுவார்கள். அதையும் நாங்கள் கவனிக்க வேண்டும்.
முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வேளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.
இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:
“அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:
சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்
தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு
அறப்போர்பற்றி சிந்தியுங்கள்!
தமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்
ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.
இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.
ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.
எனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
———நன்றி “விடுதலை” 29-1-2009
//தமிழன் said...
பிணத்தை புனரும் சிங்களவனின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தமிழரை அவமதித்த உங்கள் சிங்கள உணர்வுக்கு என்ன சன்மாணம் வழங்குவது //
தமிழன் என்ன நடந்தது உங்களுக்கு. நான் இதைப் போட்டதே வாசிக்கும் அனைவரும் சிங்கள மக்கள் எவ்வாறு மாயைக்குள் ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள் மற்றும் போர் வெற்றிக் களிப்பில் கூத்தாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டத்தான்.
பெயரில் நான் தமிழனைக் கொண்டிருக்காவிடினும் நான் ஒரு தமிழன் ஐயா...
வாங்கோ ஆதிரை, எமக்காக எத்தனை சாவுகள்? மஹீம்...
வாங்கோ வெடிகுண்டு,
அவரது இறுதி அறிக்கையை வாசித்து நொந்துவிட்டேன்... தீர்கமாகச் சிந்தித்து தவறிழைத்துவிட்டார் அந்த உறவு.
வாங்கோ வெண்காட்டான்,
நானும் கூடத்தான் எண்ணினேன். ஆனாலும் கருத்துகள் சிறிது மாறினாலும் இப்படியான உணர்வுபூர்வமான விடயங்களில் நல்லதல்ல என எண்ணி விட்டுவிட்டேன்.
வாங்கோ தமிழ் ஓவியா,
முத்துக்குமார் சம்மந்தப்பட்ட அனைத்து இடுகைகளிலும் உங்கள் இந்தப் பதிலைக் காண்கிறேன்.
நீங்கள் சொல்வதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
நன்றி.
மதுவதனன் மௌ.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ