நா
Showing posts with label எதிர்ப்பு. Show all posts
Showing posts with label எதிர்ப்பு. Show all posts

காலை உணவை முடித்துக்கொண்டு ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிய கலைஞர், அண்ணா சிலைக்கு முன்பாக ஏழு மணித்தியால சாகும்வரை உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டு மதிய உணவுக்காக ஒரு மணிக்கு மீண்டும் வீடு சென்றடைந்தார்.

மதுவதனன் மௌ.

 

கூகுள் - CO2 - வெப்பம்
கூகுள் தேடுதல் சுற்றுப் புறச் சூழலைப் பாதிக்கிறது என்ற செய்தி கடந்த மாதத்தில் விடப்பட்டது. அதாவது நாங்கள் செய்யும் இரண்டு கூகுள் தேடுதலானது, ஒரு கோப்பை தேநீருக்கான நீரை கொதிக்கவைக்கும்போது வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டை வெளிவிடும். அதாவது கூகுள் தனது தேடுதல் மேன்மைக்காக பாவிக்கும் கணிணிகள் வெளிவிடும் வெப்பமும் அதனால் வரும் விளைவுமே இது. உறுதிப்படுத்த இங்கே பார்க்க.

நான் கூகுளின் கன்னாபின்னா விசிறி. அவனின்றி அணுவும் அசையாது; கூகுள் இன்றி அவனும் அசையான் என்பது எனது கருத்து. கூகுள் தனது குரோமை சந்தைப்படுத்த செய்யும் வழிமுறைகளில் சிறிது வெறுப்பும் கொண்டவன். மேற்சொன்ன செய்தியை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தர்க்கமாக சிந்திக்கத் தலைப்படுகிறேன்.

ஏதோ மற்றத் தேடுபொறிகளான Yahoo, Live மற்றும் Ask என்பவற்றில் நாங்கள் தேடுதல் செய்ய மறுமுனையில் இருக்கும் நபர் அதைப் பார்த்து காகிதக் கோப்புக்களில் தேடி திரும்ப தட்டச்சி எங்களுக்கு அனுப்புகிறார் என்ற மாதிரியல்லவா இது இருக்கிறது. நல்லா கயிறு விடுறாங்கள். அவர்களும் கணிணிகளையும் தரவுத் தளங்களையும்தான் பாவிக்கிறார்கள். அவையும் வெப்பத்தையும் காபனீரொட்சைட்டையும் வெளிவிடும்தான். ஒரு கோப்பை தேநீருக்காக இல்லாதுவிடினும் முக்கால் கோப்பைக்கானதாக இருக்கும்.

கூகுளின் தேடுமுறைமைக்கான அல்கோறிதம் மிகச்சிறப்பு. அது செயற்படுத்தப்படும்போது நவீன கணிணிகள் தேவைப்படுவதோடு கூடியளவு வெப்பம், காபனீரொட்சைட் வெளிவிடப்படுவது சரியாக இருக்கலாம். ஆனால் கூகுளில் நாங்கள் விரும்பும் விடயத்தை மூன்று முயற்சிகளில் துல்லியமாகப் பெறலாமெனின் மற்றவைகளில் ஐந்து ஆறு முறை முயற்சித்தே ஆகவேண்டும். இப்போது வந்துள்ள கூகுளின் எங்கள் விருப்பத்துக்குரிய முறையில் மாற்றியமைக்கக் கூடிய தேடல் முறை முயற்சிகளை ஒன்றாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


எனக்கு இந்தச் செய்தி சொல்வதென்னமோ இதுதான். கூகுளைப் பாவிக்கும்போது தேடும் முயற்சிகளை குறைக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதாவது கூகுள் தேடுதலில் சரியான முடிவுகளைப் பெற சரியான, இலகுவான மற்றும் நுட்பமான ஏராளமான வழிமுறைகளுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மனதுக்கும் சந்தோசம். சுற்றுப்புறச் சூழலுக்கும் சாதகம்.

"முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியாது".

பிற்குறிப்பு : கூகுள் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் பாறைகளை உருகி வழிந்தோடச்செய்வதாகவும் Yahoo, Live, மற்றும் Ask போன்றன உருகும் நீரை மீண்டும் பனிக்கட்டியாக்குகின்றன என்பது போன்ற கருத்துத் தொனிக்கும் :-) இந்தச் செய்தியை வாசித்தபோது வந்த ஒரு பதிவு இது. உங்கள் கருத்துக்களும் வேண்டும் எனக்கு.

சக்தியைச் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே கறுப்பு நிற பின்புலத்தைப் பாவித்திருக்கிறேன். ;-)

பிற்சேர்க்கை :
கூகுளின் (உத்தியோகபூர்வமானதில்லையெனத் தெரிகிறது) சக்தி சேமிப்புத் தேடுபொறியானது அவுஸ்ரேலியாவில் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து அதிலேயே தேடினால் பிற்காலத்தில நாங்கள் எல்லாவற்றையும் தேடித்திரியவேண்டிய நிலை வந்தாலும் வரலாம். இருந்தாலும் WWW.BLACKLE.COM இற்குச் சென்று பார்த்து விடுங்கள்

மதுவதனன் மௌ.

 

கவிஞர் தமிழ்நதியின் பேட்டி விகடனில் வந்ததும், அப்பேட்டி தமிழ்நதி சொல்லாதவற்றையும் போட்டு பத்திரி்கைத் தர்மத்தை மீறியதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். விகடனை வாசிக்க எல்லோருக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்ககுமோ தெரியவில்லை. இங்கே பேட்டியும் மறுப்பும் உள்ளன. விகடனில் இருந்து நகலெடுத்து இங்கே போட்டிருப்பது எவ்வளது தூரம் சரியானது என தெரியவில்லையாயினும், வலையுலக நண்பர்களுக்காகவே இது. விகடன் இந்த மறுப்பில் கூட தனது வருத்தத்தைத் தெரிவிக்கவில்லை என்பது ஆ.வியில் எனக்குள்ள அன்னியோன்னியத்தைச் சிறிது ஆட்டம் காணத்தான் வைக்கிறது.

இவை ஐந்து படங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. படத்தில்மேல் சொடுக்கிப் பார்ப்பவர்கள் கவனத்திற் கொள்க.

தமிழ்நதியின் பேட்டி
தமிழ்நதியின் மறுப்பு

 

சின்னக் குட்டியார் இங்கேயும் , மதுவர்மன் இங்கேயும் சாய்பாபா பற்றிய பிபிசியின் விவரணச் சித்திரத்தை பதிந்திருந்தார்கள். இரண்டும் ஒரே சலனப்படங்களையே கொண்டிருக்கின்றன். வாசகர்கள் ஏதாவது ஒன்றையாவது பாருங்கள்.

இங்கே அதில் வரும் ஒரு காட்சி வெவ்வேறு கோணங்களில் குறைந்த வேகத்தில் காட்சிப் படுத்தப்படுகின்றது.



காட்சியை வடிவாக உற்று நோக்குங்கள். அவர் லிங்கத்தை அந்த கைத்துண்டில் வாயிலிருந்து எடுப்பதாகப் பாவ்லா காட்டும்போது வாய் திறக்கவேயில்லை. மேலும் அவர் மேலேயுள்ள கைவிரல்களுக்குள் லிங்கம் வாயிலிருந்து வந்ததுபோல செய்திருந்தாலும் பின்னர் உள்ளங்கைப் பகுதியிலுள்ள துண்டிலிருந்தே லிங்கத்தை எடுக்கிறார்.

ஏற்கனவே கைத்துண்டில் லிங்கத்தை வைத்துவிட்டு வாயிலிருந்து எடுப்பதுபோல் என்னமாய் கப்ஸா விடுகிறார் கடவுள்.

 

கீழே இருக்கிற செய்தியை முதல்ல பாருங்கோ. தினமணியில் வந்தது. வாசிச்சவுடன ஏதோ கொஞ்சம் எழுதவேணும்போல இருந்தது.


(படத்தில் மவுஸை சொடுக்குங்கோ, இது வேறு பக்கததுக்குப் போகாது)

அய்யப்பனுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொணடு, ரவி விரைவா குணமடையவேணும் எனவும் நினைத்துக்கொண்டு இதைபற்றி கதைக்கப்போறன்.

இந்த சம்பவம் நடந்தபின் அந்த ஊரில் யாரார் என்னென்னவெல்லாம் கதைத்திருப்பார்கள் என எண்ணுகிறேன்,

"அம்மனுக்கு ஏதோ நாம் செய்யல, குறை வந்திடு்ச்சி, அதால கொழந்தைய பலி எடுத்துட்டாங்க"

"அப்பன்காரன் போன வருஷம் அம்மனுக்கு செஞ்சிபோட்ட நகையில செப்பு கலந்துபுட்டான், சாமி புள்ளய கொண்டுபோயிடுச்சி"

"இந்த வருஷம் ஊருக்கு ஏதோ பெரிய அழிவு வரப்போவுது, அம்மன் குறி காட்டிட்டா"

"சாமிமேல பக்தி இல்லாம தீமிதிச்சா இப்பிடி ஏதாவது நடக்கும்னு சொன்னேன், கேட்டீங்களா"

நிச்சயமாக இவையும் இன்னும் வேறுவேறாகவும் அந்த ஊர் ஜனங்கள் கதைத்திருப்பார்கள். மறுப்பதற்கு யாரும் இல்லை.

தீமிதித்தல் என்பது சரியானதா? சரியானதாயினும்கூட ஒரு சிறுவயதுப் பாலகனோடு தீயுள் இறங்குவது சரியானதா? இதையெல்லாம் எங்கள் சமூகம் என்றுதான் சிந்தித்து தன்னைத் திருத்திக் கொள்ளப்போகிறதோ!

இப்பிடி தீமிதிக்கிறது பிழை, அதை நிறுத்துங்கோ என ஏதாவது சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினால், அதற்கு மேலால் இதெல்லாம் எங்கட பாரம்பரியம், கலாசாரம், விழுமியம் என எதிர்க்கொடி தூக்க ஏராளம்பேர் உள்ளனர்.

இதெல்லாம் எங்களுக்கொரு சாபக்கேடு, வேறென்ன.