சின்னக் குட்டியார் இங்கேயும் , மதுவர்மன் இங்கேயும் சாய்பாபா பற்றிய பிபிசியின் விவரணச் சித்திரத்தை பதிந்திருந்தார்கள். இரண்டும் ஒரே சலனப்படங்களையே கொண்டிருக்கின்றன். வாசகர்கள் ஏதாவது ஒன்றையாவது பாருங்கள்.
இங்கே அதில் வரும் ஒரு காட்சி வெவ்வேறு கோணங்களில் குறைந்த வேகத்தில் காட்சிப் படுத்தப்படுகின்றது.
காட்சியை வடிவாக உற்று நோக்குங்கள். அவர் லிங்கத்தை அந்த கைத்துண்டில் வாயிலிருந்து எடுப்பதாகப் பாவ்லா காட்டும்போது வாய் திறக்கவேயில்லை. மேலும் அவர் மேலேயுள்ள கைவிரல்களுக்குள் லிங்கம் வாயிலிருந்து வந்ததுபோல செய்திருந்தாலும் பின்னர் உள்ளங்கைப் பகுதியிலுள்ள துண்டிலிருந்தே லிங்கத்தை எடுக்கிறார்.
ஏற்கனவே கைத்துண்டில் லிங்கத்தை வைத்துவிட்டு வாயிலிருந்து எடுப்பதுபோல் என்னமாய் கப்ஸா விடுகிறார் கடவுள்.
6 பின்னூட்டங்கள்.
//வாயிலிருந்து எடுப்பதாகப் பாவ்லா காட்டும்போது வாய் திறக்கவேயில்லை//
வணக்கம் கெளபாய்மது ..பதிவுக்கு நன்றிகள்
//நா என்பது நாய் - ஈழத்தில்.//
உங்களுக்கு யாரோ தவறான தகவல் வழங்கியிருக்கிறார்கள். ஈழத்தில் நானறிய வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி மலையகத்திலும்சரி இப்படி ஒரு வழக்கு இல்லை.
நாய் என்பதை வடக்கில் உச்சரிக்கும் விதம் வேறு கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் வேறு.
ஆனால் நாய் என்றுதான் "ய்" சேர்த்து சொல்கிறார்கள்.
இதுக் கெல்லாம் கன்னத்தில் போடும் கூட்டம் இருக்கும் வரை அவர் கப்சா
தொடரும்..
சின்னக்குட்டி வாங்கோ,
இப்படியான விழிப்புணர்வுப் பதிவுகள் குறைந்தது ஒருவரையாவது சென்றடைந்து அவரின் பின்வரும் சந்ததிகளுக்காவது பயன்தரும் என நம்புவோம். தொடர்ந்து செய்வோம். உங்களது பதிவுதான் என்னை இந்தப் பதிவைப் போடத்தூண்டியது.
நன்றி உங்களுக்கும்
வாங்கோ யோகன்,
நீங்கள் சின்னக்குட்டியின் பதிவில் பின்னூட்டமிட்டதைப்போல இந்த வகையான கேடுகெட்ட மனிதர்கள், மோதிரமும் வேண்டாம் சங்கிலியும் வேண்டாம் ஒரு பூசணிக்காயை காற்றிலிருந்து வருவித்துத் தரட்டும் நான் காலடியில் விழுந்து கிடப்பேன்.
என்றாலும் முன்னைய காலங்களைப் போலல்லாது இன்னைய காலத்தில் விழிப்புணர்வுகள் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. :)
மு.மயூரன் வாங்கோ,
நானும் ஈழம் நீங்களும் ஈழம். ஆனால் உங்கள் பகுதிக்கு நான் வந்து நீண்டநாட்கள் தங்கியதில்லை.
வன்னி, யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கண்டி என எல்லா இடங்களிலும் வாழ்ந்திருக்கிறேன். எல்லா இடமும் பேச்சு வழக்கில் நாய் என்பதை ய் இனை விடுத்தே கூறுவார்கள்.
'பேக் காட்டாதே' எனும்போது பேய் இல் உள்ள ய் மறைந்து பே எனப்படுவது போல் நாய் இலும் ய் மறைந்து நா யே பாவிக்கப் படுகிறது.
'நா மாதிரிக் கத்தாத' எனும்போது நன்கு புரியும். கவிதையை பேச்சுவழக்கில் கவித என்றும் மதுரையை பேச்சுவழக்கில் மதுர எனறும் அழைப்பது போல.
எல்லாமே ஒரே உச்சரிப்பால் வந்ததே. அதாவது நாய், பேய், கவிதய் மற்றும் மதுரய். எழுத்துவழக்கிற்கு நான் இங்கே தந்து பிழையாயினும் விளக்கத்திற்காக கூறியிருக்கிறேன்.
இது பற்றி எனது குரலில் ஒலிவடிவத்தில் ஒரு பதிவு போட்டால் நல்லது என நினைக்கிறேன். முயற்சிப்போம்.
நன்றி மயூரன். :)
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ