மு.கு: இந்த இடுகையை வாசிக்க முன்னர் சந்தியாவுக்கு ஒரு காதல் கடிதம் - ஆகாஷ் எனும் இடுகையை வாசியுங்கள்
சந்தியா ஆகாஷூக்கு பதில் கடிதம் எழுதுறாள். அதுவும் ஆகாஷினுடைய கடிதம் போலவே கேள்வி-பதில் வடிவத்திலேயே இருக்கிறது.
அன்புள்ள ஆகாஷ்,
பின்வரும் ஆம் / இல்லை கேள்விகளுக்கு விடை தருக.
1. வகுப்பறையில் நுழையும் ஒருவர் சாதரணமாக, முதல் வரிசையில் இருக்கும் ஒருவரைப் பார்ப்பார்.
- ஆம்
- இல்லை
2. ஒரு பெண் சிரித்தவாறே ஒருவரைப் பார்த்தால் அது தற்செயலானதாய் இருக்க முடியாதா?- ஆம்
- இல்லை
3. பாடும்போது ஒருவர் பாடல் வரிகளை மறந்தால், அவர் பாடுவதை நிறுத்துவார்.- ஆம்
- இல்லை
4. நான் என் பெண் நண்பிகளுக்கு எனது சிறு வயதுப் புகைப்படத்தைக் காட்டும்போது நீ உன் மூக்கை நுழைத்தாய். சரியா?- ஆம்
- இல்லை
5. பேருந்தை தவறவிட்டு ஏறும்போது ஏன் நான் உன் கையைப் பிடிக்கவில்லை என்பது இப்போது உனக்கு விளங்குகிறது.- ஆம்
- இல்லை
6. எனது தோழி அஞ்சலிக்காக நான் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தால் அது சரி.- ஆம்
- இல்லை
7. ஒரு நண்பனாக உன்னை எனது பெற்றோர்களுக்கு அறிமுகப்படுதியிருந்தால் அது சரி.- ஆம்
- இல்லை
8. நீ உனக்கு தாமரைப்பூ, வாழைப்பூ மற்றும் தேங்காய்ப்பூ எல்லாம் பிடிக்கும் என்று கூறினாய்.- ஆம்
- இல்லை
9. ஓ..அன்று உனது பிறந்த நாளா? அதுதான் உன்னை கோயிலில் காணக்கூடியதாக இருந்ததா! நான் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குப் போவது உனக்குத் தெரியுமா?- ஆம்
- இல்லை
- இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு நீ ஆம் என்று பதிலளித்தால், நான் உன்னைக் காதலிக்கவில்லை.
- இல்லை என்று பதிலளித்தால் காதல் என்றால் என்ன என்று இன்னும் நீ விளங்கிக் கொள்ளவில்லை.
எல்லாம் தெளிவடைந்திருப்பாய் என்ற நம்பிக்கையுடன்...
உன் நண்பி,
சந்தியா.
0 பின்னூட்டங்கள்.
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ