நா

அறிகுறி: பாதம் குளிர்தல் அல்லது ஈரமாதல்.
நோய்: கிளாஸை பிழையான கோணத்தில் வைத்திருக்கிறீர்கள் (பாதத்தில் மது ஊற்றப் பட்டுக்கொண்டிருக்கிறது).
தீர்வு: திறந்த பகுதி மேல்நோக்கிப் பார்க்கும்வரை கிளாஸை சிறிது சிறிதாக திருப்புங்கள்

அறிகுறி: நீங்கள் பார்க்கும் சுவர் வெளிச்சத்தாலோ அல்லது பல்புகளாலோ நிறைந்திருத்தல்
நோய்: உங்கள் உடல் தரையில் மேல்நோக்கிக் கிடக்கிறது.
தீர்வு: உடலை தரைக்கு 90 பாகைகள் இருக்கக்கூடியவாறு திருப்புங்கள்.

அறிகுறி: பார்ப்பவை எல்லாம் மங்கலாகத் தெரிதல்.
நோய்: நீங்கள் வெற்றுக் கிளாஸினூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
தீர்வு: உடனடியாக கிளாஸை உங்களுக்கு பிடித்த மதுவால் நிரப்புங்கள்.

அறிகுறி: தரை நகர்ந்து கொண்டிருத்தல்.
நோய்: உங்கள் காலைப்பிடித்து யாரோ உங்களை இழைத்துச் செல்லகிறார்கள்.
தீர்வு: குறைந்தது, அவர்கள் எங்கே இழுத்துச் செல்லகிறார்கள் என்றாவது கேளுங்கள்.

அறிகுறி: மற்றவர்கள் கதைக்கும்போதெல்லாம் எதிரொலி(echo)யை கேட்கிறீர்கள்.
நோய்: உங்கள் காதுகளில் வெற்றுக்கிளாஸ்கள் இருக்கிறன.
தீர்வு: நீங்களாகவே முட்டாள்தனமான வேலைகளைச் செய்யவதை நிறுத்துங்கள்.

அறிகுறி: உங்கள் அப்பாவும், சகோதரர்களும் உங்களை பார்த்துச் சிரிக்கிறார்கள்.
நோய்: நீங்கள் வேறு ஒருவருடைய வீட்டில் நிற்கிறீர்கள்.
தீர்வு: உங்களுடை வீட்டிற்குப் போகும் வழியைக் காட்டமுடியுமா என அவர்களிடம் கேளுங்கள்.

அறிகுறி: அறை ஆடுகிறது, எல்லோரும் வெள்ளை நிற உடுப்புகளுடன் இருக்கிறார்கள், இசை திரும்பத் திரும்ப வருகிறது.
நோய்: நீங்கள் ambulance இல் இருக்கிறீர்கள்.
தீர்வு: ஒன்றும் செய்யாதீர்கள், அவர்கள் தங்கள் சேவையைச் செய்ய அனுமதியுங்கள்.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

3 பின்னூட்டங்கள்.

நிமல்/NiMaL April 14, 2008 at 6:38 PM

இங்கு குறிப்பிடப்பட்டது 'குடிக்கும்' மதுவா? 'கௌபாய்' மதுவா?
:P

கௌபாய்மது April 15, 2008 at 9:50 PM

இது மெயிலில வந்தது. தமிழ்கூறும் நல்லுலகம் வாசித்து மகிழட்டுமென்று சும்மா இட்டிருக்கிறன்.

நிமல்,

இது கௌபாய்கள் குடிக்கும் மது. :))

G.Muthukumar February 28, 2009 at 11:52 AM

நல்ல பதிவு... சில விஷயங்கள் எல்லாம் ரொம்ப "உண்மை"தான்.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ