நா

கீழே இருக்கிற செய்தியை முதல்ல பாருங்கோ. தினமணியில் வந்தது. வாசிச்சவுடன ஏதோ கொஞ்சம் எழுதவேணும்போல இருந்தது.


(படத்தில் மவுஸை சொடுக்குங்கோ, இது வேறு பக்கததுக்குப் போகாது)

அய்யப்பனுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக்கொணடு, ரவி விரைவா குணமடையவேணும் எனவும் நினைத்துக்கொண்டு இதைபற்றி கதைக்கப்போறன்.

இந்த சம்பவம் நடந்தபின் அந்த ஊரில் யாரார் என்னென்னவெல்லாம் கதைத்திருப்பார்கள் என எண்ணுகிறேன்,

"அம்மனுக்கு ஏதோ நாம் செய்யல, குறை வந்திடு்ச்சி, அதால கொழந்தைய பலி எடுத்துட்டாங்க"

"அப்பன்காரன் போன வருஷம் அம்மனுக்கு செஞ்சிபோட்ட நகையில செப்பு கலந்துபுட்டான், சாமி புள்ளய கொண்டுபோயிடுச்சி"

"இந்த வருஷம் ஊருக்கு ஏதோ பெரிய அழிவு வரப்போவுது, அம்மன் குறி காட்டிட்டா"

"சாமிமேல பக்தி இல்லாம தீமிதிச்சா இப்பிடி ஏதாவது நடக்கும்னு சொன்னேன், கேட்டீங்களா"

நிச்சயமாக இவையும் இன்னும் வேறுவேறாகவும் அந்த ஊர் ஜனங்கள் கதைத்திருப்பார்கள். மறுப்பதற்கு யாரும் இல்லை.

தீமிதித்தல் என்பது சரியானதா? சரியானதாயினும்கூட ஒரு சிறுவயதுப் பாலகனோடு தீயுள் இறங்குவது சரியானதா? இதையெல்லாம் எங்கள் சமூகம் என்றுதான் சிந்தித்து தன்னைத் திருத்திக் கொள்ளப்போகிறதோ!

இப்பிடி தீமிதிக்கிறது பிழை, அதை நிறுத்துங்கோ என ஏதாவது சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினால், அதற்கு மேலால் இதெல்லாம் எங்கட பாரம்பரியம், கலாசாரம், விழுமியம் என எதிர்க்கொடி தூக்க ஏராளம்பேர் உள்ளனர்.

இதெல்லாம் எங்களுக்கொரு சாபக்கேடு, வேறென்ன.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

7 பின்னூட்டங்கள்.

செய்திக்கு... :-(((
உங்க கமெண்டுக்கு....:-)))

//அதற்கு மேலால் இதெல்லாம் எங்கட பாரம்பரியம், கலாசாரம், விழுமியம் என எதிர்க்கொடி தூக்க ஏராளம்பேர் உள்ளனர்//

இவர்களை,தீயில் உருளும் படி செய்ய வேண்டும்.

செய்தி ஏற்கனவே படித்து தலையில் அடித்தேன்.
நான் தெய்வத்தை நம்புகிறேன். ஆனால் இப்படியல்ல..சீ
வேதனையாயிருக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டு செல்ல வேண்டும்...

Thamizhan March 27, 2008 at 5:20 AM

நாம் ஒவ்வொருவரும் நமது ஊர்களிலே
திருக்குறள் படிப்புக்கள் தொடங்க வேண்டும்.
அவரவர் வந்து ஒரு திருக்குறளைப் படித்து அவர்கள் வாழ்வில் நிகழ்ச்சியுடன் சேர்த்து சில வார்த்தைகள் பேச வேண்டும்.
ஆரம்பித்து நடத்துபவர்கள் நன்றாகச் சொல்பவர்கட்குப் புத்தகங்கள்,மற்ற பரிசளிக்கலாம்.நன்கொடையும் கேட்கலாம்.
கடவுள் நம்பிக்கை என்பது மூடப் பழக்கங்கள் இல்லை என்பதை மெதுவாகத்தான் உணர வைக்க முடியும்.

கௌபாய்மது March 27, 2008 at 10:19 AM

வாங்கோ சின்னப்பபையன்,

இப்படி மடமைத்தனமான இறப்புகள் பற்றிய செய்திகள் :-( எதிர்காலத்தில வரக்கூடாது என்பதுதான் எனது அவா

கௌபாய்மது March 27, 2008 at 10:26 AM

வாங்கோ யோகன்-பாரிஸ்,

அன்றைய காலங்களைவிட இன்று எங்கள் சமூகங்களில் மூடநம்பிக்கைகள் பற்றிய விழிப்புணர்வுகள் கொஞ்சம் இருந்தாலும், உலகத்துடன் ஒப்பிட்டு நோக்கையில் நாம் எவ்வளவோ காலம் பின்னோக்கித்தான் நிற்கிறோம். விரைவில் அனைவரும் உணர்வார்கள் எனும் நம்பிக்கையுடன்... :-(

கௌபாய்மது March 27, 2008 at 9:59 PM

வாங்கோ தமிழன்,

திருக்குறள் உலகப் பொது மறைதான், அதன்படி ஒழுகினாலே உலகம் உருப்படும்.

கடவுள் நம்பிக்கையென்பது மூடநம்பிக்கையல்லவே என நீங்கள் கூறுவதுடன என்னால் ஒத்துப்போக முடியவில்லை.

மூடநம்பிக்கைகள் அற்றுப்போகுமெனில் கடவுள் நம்பிக்கைக்கான ஏராளமான காரணங்கள் பொய்த்துப்போகுமே. எல்லா மதங்களிலும் மூடநம்பிக்கைகளூடு கடவுள் நம்பிக்கை கட்டப்பட்டிருக்கிறது என நான் அறிகிறேன்.

இயற்கைவழி வாழ்வு இவ்வுலகுக்கு நல்லது.

Anonymous January 14, 2009 at 2:59 AM

மூடநம்பிக்கைகள் அற்றுப்போகுமெனில் கடவுள் நம்பிக்கைக்கான ஏராளமான காரணங்கள் பொய்த்துப்போகுமே. எல்லா மதங்களிலும் மூடநம்பிக்கைகளூடு கடவுள் நம்பிக்கை கட்டப்பட்டிருக்கிறது என நான் அறிகிறேன்.
இயற்கைவழி வாழ்வு இவ்வுலகுக்கு நல்லது.- கௌபாய்மது

அது. வாழ்த்துக்கள்.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ