நா

மாலைப்பொழுதா, காலைப்பொழுதா அனுமானிக்க முடியவில்லை. ஆனால் இது ஆறு சிறுவர்களுக்கும் ஆனந்தப்பொழுது, அனுபவிக்க முடிகிறது. இந்த ஆறு சிறுவர்களும் நண்பர்களாகத்தான் இருப்பார்கள்; எங்கோ ஒன்றுகூடி இங்கே வந்திருப்பார்கள்; ஆனால் ஒருவன் மட்டும் முன்னதாகவே ஆற்றுக்குள் குதித்து விட்டான்.


(மவுஸ் சுட்டியை படத்தின்மேல் கொண்டுவந்து சிறிது நேரம் வைத்திருங்கள்)

இது நீங்களும் கடந்து வந்த பருவம்தான். இந்த மனோநிலை உங்களுக்கும் இருந்திருக்கும். சிறுவர்கள் ஏதாவதொன்று செய்யும்போது, யார் முதலில் செய்கிறார்களோ அவர்தான் அந்தநேரத்து ஹீரோ.

நான் அன்று ஒருநாள் என்னுடைய வீட்டக்கு முன்னால் இருக்க்கின்ற மைதானத்தில் இரண்டு சின்னப் பையன்களுக்கு லன்ச் சீற்றில் பரசூட் விட்டுப் பழக்கிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த வீதியால் ஐஸ்கிரீம் வண்டி ஒன்று மணியடுத்துக்கொண்டு வந்தது. இரண்டு பையன்களும் மற்றவரின் முகத்தை மாறிமாறிப் பாத்தார்கள். ‘ஐஸ்கிரீம் வாங்கித்தாங்கோ’ என்று என்னிடம் கேட்போம் என்றுதான். இறுதியில் சின்னப்பையன் சொன்னான் ‘அங்க ஐஸ்கிரீம் வண்டில் போகுது’. எனக்கும் தெரியும் அவ்வீதியால் ஜஸ்கிரீம் வண்டி போகின்றதென்று, ஆனாலும் அவன் கூறியதன் அர்த்தம் தங்களுக்கு வாங்கித் தாங்கோ என்பது புரியாமலா இருக்கும்.

சரியென்று அவன்களுக்கு இரண்டு வாங்கிக்கொடுத்தேன். அவர்கள் அதைச்சுவைத்துக் கொண்டிருந்தவேளை சின்னப்பையன் கூறினான் “நான்தானே முதல்ல சொன்னனான் ஜஸ்கிரீம் வண்டி போகுது என்று”. பெரியவர்கள் இவ்வாறு கூறினால் அது நிச்சம் ஒரு கேலிக்கூத்தே. ஆனால் சிறுவர்களுக்குள் இவ்வாறு யார் முதற்காரணம் எனப்போட்டி நிலவுவது வழமையானதும் ரசிக்கக்கூடியதுமாகும்.

மேலே படத்தில் அழகாக பதிவாக்கப்பட்ட இரம்மியமான சூழ்நிலையுடன் சிறுவர்களின் அந்த இரசிக்கத்தகு மனோபாவமும் பதிவாக்கப்பட்டிருப்பதுதான் அருமை (மேலே பாயும் ஐந்து சிறுவர்களை விடவும் கீழே ஒருவன் முன்னதாகவே பாய்வது உங்கள் கலைக்கண்களுக்குத் தெரிகிறதுதானே!). ஒரு பையன் நிர்வாணமாகக் குதிப்பது மேலும் சூழ்நிலையை இரசிக்கத்தக்கதாக ஆக்குகிறது. இந்தவயதில் ஆபாசமாகத் தெரியாத நிர்வாணம், வயது வரவர ஆபாசமாகத் தெரிவது இயற்கையாலா அல்லது மனிதர்களின் நடத்தையாலா?

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

2 பின்னூட்டங்கள்.

Anonymous March 28, 2008 at 11:58 AM

இந்தப் பின்னூட்டம் குறியீட்டுப் படங்கள்(Smilies) சரியாக வருகிறதா என பரிசோதிப்பதற்காக இடப்படுகிறது

:)
:(
:p

Anonymous September 12, 2008 at 12:30 AM

வாழ்வின் கடந்துவந்த நாட்கள் எப்போதும் இனிமையாய் இருப்பவயல்ல. ஆனால் பால்யத்தின் விளையாட்டு பொழுதுகளும், பருவத்தின் காதல் கதைகளும் வாழ்வின் எல்லை வரை கூடவே வருகின்றன. காலில் இருக்கும் சிறிய தழும்புகள் கூட பால்யத்தின் ஆயிரம் கதைகளை சுமந்துகொண்டிருக்கின்றன. இந்த படத்தில் துள்ளிக்குதிக்கும் சிறுவர்கள் எங்கிருக்கிறார்களோ தெரியவில்லை, ஆனால் இவர்களின் துள்ளலில் தெரியும் உற்சாகம் பால்யத்தின் நினைவுகளாய் மனதின் ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருக்கிறது.

மது இந்த அழகான பதிவுகள் தொடரட்டும்!!

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ