நா

சில வேளைகளில் உங்க பெண்தோழி(அதாங்க கேர்ள்பிரண்ட்) எதுக்கெடுத்தாலும் கூச்ச சுபாவமா இருந்து அந்த தோழியுடனான நட்பு உடைஞ்சு மனமொடிஞ்சு போயிருங்கிறீங்களா? வாங்க எப்படி அப்படிப்பட்ட பெண்களுடன் நட்பை நீடிக்கச் செய்யிறது என்று பார்ப்போம்.

1. முதல்ல எந்தெந்த வகையான் கூச்ச சுபாவம் உங்க தோழிக்கு இருக்கு என்று கணித்துக் கொள்ளுங்க.

  • நீங்க கதைக்கும்போது உங்க தோழி பயந்த மாதிரி இருந்தா அல்லது பின்னாடி பின்னாடி போனா அல்லது வேறெங்கோ பார்த்துக்கொண்டு கதைத்தா தோழி 'கதைத்தலுக்கு கூச்சம் உடையவர்'.
  • உங்களோடு சரளமாக கதைக்கிறா, ஆனா தனது கடந்தகாலம் பற்றி மூச்சுகூட விடுவதாக இல்லை எனின் தோழி 'வெளிப்படையா இருக்க கூச்ச சுபாவம் உடையவர்'. இதன்போது நீங்க, உங்க தோழி தான் யார் என்பதை மறைப்பது போல உணர்வீர்கள். ஆனா உங்க தோழியின் கடந்த காலத்தில அவ சிலவேளைகளில் எங்காவது காயப்பட்டிருக்கலாம். அதைப் பற்றி கதைக்க அவ பயப்படலாம்.
  • நீங்க உங்க தோழியை தொடும்போது அவ பின்வாங்கினாலோ அல்லது எதிர்மறையான சமிக்ஞை (அதாங்க சிக்னல்) யை காட்டினாலோ, தோழி 'உடல் ரீதியா கூச்ச சுபாவம் உடையவர்'.
2. ஏன் உங்க தோழி கூச்ச சுபாவமுடையவர் என ஆழ்ந்து சிந்தியுங்கள். அதற்கான காரணத்தை அறிய முயற்சியுங்கள். காரணத்தை அறிந்த பின் தோழியுடன் அதைப்பற்றி கதையுங்கள்.

3. உங்க தோழி பயப்படாத வகையில் மென்மையா கதையுங்க(முரட்டு ஆண்களைத்தான் பெண்களுக்குப் பிடிக்கும் என்பதெல்லாம் கப்ஸா. சினிமாவுக்குத்தான் பொருந்தும்).
  • நீங்க உங்க காதலை தோழியிடம் வெளிப்படுத்தப் போறீங்க என்றால் ரொம்ப ஜாக்கிரதையா, நீங்க கதைக்கிற நேரம் சரியானதா, அவ நீங்க கதைக்கிறதில ஆர்வமா இருக்கிறாரா, அவ பதிலளிக்க விரும்புகிறாரா என்றெல்லாம் அவதானியுங்கள்.(இந்த ஜட்ச்மெண்ட் பிழைச்சா அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்க.)
  • உங்கமேல பழிபோடாத வகையிலும், உங்க மனநிலையைப் புரிந்து கொள்ளக்கூடியவாறும் ஒரு கேள்வியோட உங்க உரையாடலை ஆரம்பியுங்க. "ஏன் நீங்க என்னோட கதைக்கிறதே இல்லை?" போன்ற அல்பமான கேள்விகளை விடுத்து "சந்தியா, நீங்க எதைப்பற்றியாவது என்னோட கதைக்கவேண்டி இருக்கா?" என்று கேட்பது நலம்.
4. தோழியோட நம்பிக்கைக்கு பாத்திரமானவரா இருக்க முயற்சி பண்ணுங்க. (முயற்சியே ஒழிய நாடகமெல்லாம் போட்டு நடிச்சுடாதேங்க. பின்னாளில் ரொம்ப பாதிச்சுடும்.)
  • வெளிப்படையாவும், உண்மையாவும் கதையுங்க. நீங்க பின்பால் (Pinball) விளையாடியிருக்கிறீங்களா? அதிலுள்ளதுபோல இந்த வகையான் உரையாடல் உங்களுக்கு போனஸ் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும்.
5. நீ்ங்க இருவரும் உரையாடல்களில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டபின், தொடுகைரீதியான உறவுக்கு போங்க. மென்மையாகவும், அரவணைப்புடனும், நேர்மையுடனும் தோழிய நெருங்குங்க. அவங்களோட முன்னங்கையை மெதுவாகப் பிடித்து நல்ல விடயங்களை பற்றி, உங்க எதிர்காலம் பற்றி ரொம்ப உரையாடுங்க.

6. இதுக்குமேல என்னங்க? தோழியோட நல்ல வாழ்கையை ஆரம்பிச்சாச்சு. சந்தோசமா இருங்க.


பி.கு:
  1. உங்க தோழியோட பெயர் ரம்யாவா இருக்கப்போய் "சந்தியா, நீங்க எதைப்பற்றியாவது என்னோட கதைக்கவேண்டி இருக்கா?"ன்னு கேட்டு காரியத்தை கெடுத்துடாதீங்க. சந்தியான்னு வர்ற இடத்தில உங்க தோழியோட பெயரை போட்டுக்கோங்க. :)
  2. இந்த ஆறு படிமுறைக்கப்புறம் அதாவது திருமண வாழ்க்கையில பிரச்சினை ~X( வர்றப்போ "எங்கடா அந்த பயல் கௌபாய்மது, நம்பள மாட்டிவிட்டுட்டானே"ன்னு கூச்சல் போடாதீங்க.
  3. இந்த அட்டு பிகருக்கு என்னென்னவெல்லாம் பண்ணவேண்டியிருக்கு:pன்னு ஆஹா எப்.எம்ல வர்ற விளம்பரம் மாதிரி feel பண்ணாதீங்க.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

6 பின்னூட்டங்கள்.

பகீ March 31, 2008 at 10:37 AM

ஒரு தோழியை பிடிச்சிட்டு அப்புறமா டவுட்டுக்கு வாறன் என்ன??

அது சரி பின்போல் எண்டா என்ன?? வின்டோஸ் இல வாற விளையாட்டா??

Santhosh March 31, 2008 at 12:44 PM

ஹஹஹ.. நல்லா தான் சொல்லி இருக்கீங்க :))...

Nimal March 31, 2008 at 4:04 PM

ஆஹா,
ஆஹா எப்.எம் நீங்களும் கேக்கிறீங்களோ...?

இது ஒரு அனுபவ பதிவா..? :)

Mathuvathanan Mounasamy / cowboymathu April 1, 2008 at 10:47 AM

வாங்கோ பகீ,
இப்பதான் தோழியையே பிடிக்க போறீங்களா..ரொம்ப லேட். பின்போல் வின்டோஸில வாறதுதான்.

வாங்கோ சந்தோஷ்,
தெரியாதவங்களுக்கு ஒரு உதவிதான். இதெல்லாம் தெரியாமலா இருக்கப்போறாங்க :p

வாங்கோ நிமல்,
நீங்க ஒருமுறை Twitter இல் போட்டத பாத்து நானும் ஆஹா எப்.எம் கேட்க ஆரம்பிச்சுட்டன். நல்லாயிருக்கு

Anonymous January 8, 2010 at 6:44 PM

கொய்யாக்கா தின்ட கொய்யா பயலே... உனக்கு உதாரணத்துக்கு வேற பெயர் கிடைக்கல்லையாட.... க்ர்ர்ர்ர்ர்

Mathuvathanan Mounasamy / cowboymathu January 8, 2010 at 11:12 PM

//Anonymous said...
கொய்யாக்கா தின்ட கொய்யா பயலே... உனக்கு உதாரணத்துக்கு வேற பெயர் கிடைக்கல்லையாட.... க்ர்ர்ர்ர்//

ஹீ ஹீ.. இந்தப் பதிவெழுதேக்க நீதான் ஞாபகத்துக்கு வந்திருப்பாய்.. அப்ப இந்தப் பெயரும் ஞாபகம் வந்திருக்கும்.. விடு பையா.. ஏதோ ப்ளோவில வந்திருக்கும்.. :))

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ