நா

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (ஒன்று)
பாலியல் வல்லுறவு என்ற சொல்லைவிட கற்பழிப்பு என்ற சொல்லையே அதிகம் கேட்டிருப்போம்; கேட்டுக்கொண்டிருக்கிறோம். பத்திரிகைகளும் மலிந்து கற்பழிப்பு என்ற சொல்லையே பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. கற்பு(??) என்பது பெண்ணுக்குரியது, ஒரு பெண்தான் கற்பழிக்கப்படலாம் என ஆண்டாண்டு காலம் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறோம். முன்னைய வரியை காரண காரியங்களோடு சிந்தித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். நான் சொல்ல வந்தது இதுவல்ல. நாம் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் சிலவற்றைத் தவறானதென்கிறேன். மேலும் இவற்றை அறியவேண்டிய தேவையும் இருப்பதால் இங்கே கூற விளைகிறேன்.

நம்பிக்கை ஒன்று : ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதில்லை.
விளக்கம் : ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக முடியும்; ஆளாகிறார்கள். ஆண்களின் தோற்றம், தொழில், உருவம், பலம், இனம், பாலியல் விருப்பு வெறுப்பு என்னவாக இருந்தாலும் அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படலாம். இராணுவத்தில், சிறையில், பூட்டிய அறையில், பொது கழிப்பிடங்களில், தொழில் செய்யும் இடங்களில், விடுதிகளில் என்று எங்குமே ஒரு ஆணின் மீதான பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்படலாம்.
ஆண்களின் மீதான வல்லுறவின் போது, வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் ஆண், பெண்கள் காட்டும் எதிர்ப்பைக்கூட காட்டாததான நிகழ்வுகளே அதிகம் உள்ளன. அல்லது அவன் எதிர்ப்பைக்காட்ட முடியாத அளவுக்கு உறைந்து போய்விடுகிறான் இவ்வாறான் ஒன்றை எதிர்பார்க்காததால்.

நம்பிக்கை இரண்டு : ஓரினச் சேர்க்கை (Homo-sexual) ஆண்கள் மட்டுமே பாலியல் வல்லுறவுக்கு உட்படுகின்றனர்.
விளக்கம் : ஓரினச்சேர்க்கை ஆண்களே பாலியல் வல்லுறவு செய்பவர்களின் அல்லது அந்த மனநிலையில் இருப்பவர்களின் அதிகமான இலக்காக இருக்கின்ற போதிலும் எதிரினச் சேர்க்கை (Hetro-sexual) ஆண்களும் பலவலாக பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உட்படும் ஆண்களில் 40 வீதமானவர்கள் எதிரினச் சேர்க்கை ஆண்களே.

நம்பிக்கை மூன்று : ஓரினச் சேர்க்கை ஆணொருவரே இன்னொரு ஆணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவார்.
விளக்கம் : ஆண் பாலியல் வல்லுறவு புரிந்த ஆண்களில் பலர் எதிரினச் சேர்க்கை ஆண்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிரினச் சேர்க்கை ஆணொருவர் ஒரு பெண்ணையோ ஆணையோ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும்போது அவர் தான் பெண் மீது வன்புணர்வதாகவே யோசித்துக்கொள்வார். மேலும் ஆண்கள் மீதான் வல்லுறவின் போது அவரது மேலாதிக்கமும் அதிகமாக இருப்பதாக சந்தோசம் கொள்வார்.
இங்கே ஒரு கருத்துத் தெளிவாகிறது. அதாவது பாலியல் வல்லுறவு என்பது அதிகமாக கோபம், மேலாதிக்கம், கொடூரம், கட்டுப்படுத்தல் என்பவற்றுடன் சிறிதளவு பாலியல் உணர்வாலுமே நடக்கின்றது.

பாலியல் வல்லுறவும் ஆண்களும்(இரண்டு)
பி.கு: நம்பிக்கைகளும் விளக்கங்களும் தொடரும். நேரம் இருக்கும்போது பதிகின்றேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

4 பின்னூட்டங்கள்.

புல்லட் June 6, 2009 at 11:46 AM

இது என்ன புதுசா இருக்கு? ஹிஹி! பரவால்ல... A தரம் குடுக்கலாம்... அருவருக்காமல் எழுதியிருக்கறீர்கள்... வாழ்த்துக்கள்...

Mathuvathanan Mounasamy / cowboymathu June 6, 2009 at 3:53 PM

வாங்கோ புல்லட்,
:D
XXX தரம் குடுக்காம விட்டீங்களே அதுபோதும்.

நன்றி,
மதுவதனன் மௌ.

பழமைபேசி June 7, 2009 at 1:29 AM

ஏற்கனவே நாலு நல்ல வாக்கியம் எழுதின நினைவு! இருந்தாலும், இனியும் ஒன்னு:

நல்ல வாக்கியம், கூடவே நல்ல இடுகை!!

Mathuvathanan Mounasamy / cowboymathu June 7, 2009 at 2:22 AM

வாங்கோ மணி,

நீங்க எழுதுற எல்லாமே நல்ல வாக்கியம்தான். :D

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ