மின்சாரத்தின் பயங்கரம் பற்றிய ஒரு சலனப்படம்
இதை எனக்கு என் நண்பனொருத்தன் அனுப்பியிருந்தான். பார்த்தபின் அதிர்ச்சியாக இருந்தது. யூடியூப்பில் இது சம்மந்தமாகத் தேடினேன் கிடைக்கக் கஷ்டமாக இருந்தது. இந்த வீடியோ நிறையப் பேரினைச் சென்றடைந்தால் நல்லது. மின்சாரம் சம்மந்தப்பட்ட வேலைகளை செய்யும்போதும் அதுசம்மந்தமான கருவிகளை பயன்படுத்தும்போதம் அவதானமாகச் செய்ய இந்த வீடியோவின் ஞாபகம் உதவிசெய்யும் என்பதில் தவறேயில்லை.
யூடியூப்பி்ல் ஏற்ற முயற்சித்தேன். தடுக்கிறார்கள். கடிதம் எழுதி கேட்கவேண்டும் என்ன பிரச்சினை என.
மேலும் இது கடந்த மே மாதம் டெல்லியில் நடந்ததாகக் கூறுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனாம். :'(
மேலும் இது கடந்த மே மாதம் டெல்லியில் நடந்ததாகக் கூறுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனாம். :'(
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது
19 பின்னூட்டங்கள்.
//பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ//
நீங்க நெம்ப நல்லவருங்க...இஃகிஃகி!!
http://suryakannan.blogspot.com/2009/06/blog-post_04.html
அவசியம் தேவையான பதிவு.
அத்துடன்
//பேச்சுவழக்கில் நா
நா என்பது நான் - பாரதத்தில்,
நா என்பது நாய் - ஈழத்தில்.//
ஈழத்தில் நா என நாயை அழைப்பதில்லை, ஆனால் யாழ்ப்பாணத்தின் சில இடங்களில் மருவிய ஓசையுடன் நாயை நஅ(ஐ) என அழைப்பதும் உண்டு.
"நா" என்னும் மரம் உள்ளது, இது ஸ்ரீலங்காவின் தேசிய மரம் ஆகும்.
வாங்கோ மணி,
////பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ//
நீங்க நெம்ப நல்லவருங்க...இஃகிஃகி!!//
மேல்க்கை என்னத்துக்கு, கீழ்க்கை என்னத்துக்கு என்றே தெரியாமல் சிலர் குத்திவிட்டுப் போற மாதிரி ஒரு பீலிங்கு. அதுதான் :D :D :D
வாங்கோ சூர்யா கண்ணன்,
உங்கள் பதிவும் பார்த்தேன். பலரும் இதை மீள் பதிந்தாலும் நல்லதுதான். யூடியுப் லிங்க் எடுத்தீங்க எண்டால் சொல்லுங்க. பலருடன் பகிரலாம்.
வாங்கோ தீவிரவாசகன்,
ஈழத்தில் பேச்சுவழக்கில் நீங்கள் கூறியவாறே நாயை நஅ என அழைக்கிறார்கள். அழைக்கிறோம். மதுரை இனை மதுர (மதுரஅ) என அழைப்பது போல நாய் இனை நஅ (நா) என அழைக்கிறோம். அதிலும் கோபத்தில் பேசும்போது (ஏசும்போது) இது அதிகமாக புலப்படும்
இலங்கையின் தேசியமரம் நாக மரம். அதன் பெயர் நா அல்ல நாக மரம்
வலைப்பூவுக்கு A சேட்டிபிகேட் கேட்டு வாங்கிறதெண்டே முடிவு பண்ணியாச்சு போல... வாழத்துக்கள்....
அதிசயம் என்னெண்டால் 2 செக்கனில பற்றி எரிய தொடங்கிட்டுது? ரயிலில இருந்தாக்களுக்கு பாதிப்பு இல்லையாமோ?
வாங்கோ புல்லட்,
:D :D
புகைவண்டியில் இருந்தவர்களுக்குப் பாதிப்பு வர எந்த முகாந்திரமும் இல்லை என்றே நினைக்கிறேன். புகைவண்டியின் சக்கரங்கள் தொடக்கம் எல்லாமே இரும்பினாலானவை. புகைவண்டிக்கும் கம்பிக்குமிடையான கடத்தியாக அந்த இளைஞன். ஆனால் உள்ளிருந்தவர்களுக்கு ஒன்றுமே நடந்திருக்காது. யாராவது ஒரு நபர் நடைபாதையில் நின்று புகைவண்டியில் கையூன்றியபடி நின்றிருந்தால் கூட பாதிப்பு இருந்திருக்காது. ஏனெனில் விதிப்படி மின்சாரம் மனிதனைவிட கூடிய கடத்தியான இரும்பினாலேயே பூமியை அடையும்.
இதனால்தான் நீர்த்தொடுகையுடன் நிற்கும்போது மின்னல் அடித்தாலும் நீங்கள் மண்டையைப் போடுவதில்லை.
கௌபாய்மது.
தவண்டு, பிரண்டு, பிராண்டி உங்கட laptop வயர் மாட்டேக்க இனிமேல் கவனமா இருங்கோ....!!!
வாங்கோ நிமல்,
கம்பனியில என்னதான் செய்யிறது. சொருகியக் கொண்டே அப்படிவச்சா ஒவ்வொரு காலையும் விழுந்து கும்புட்டுத்தான் மடிக்கணிணியை இணைக்கவேண்டிக்கிடக்கு. இப்ப பயமாத்தான் கிடக்கு. ஒரு நீட்சிச் சொருகி வாங்கினால் போச்சு.
:D :D :D
மது.
நண்பரே ! மிகவும் யதார்த்தமான சலனம்...
ஆனாலும் நீங்கள் எச்சரிக்கயோடுதான் இந்த இடுகையை இட்டு இருந்தாலும், எல்லோரும் இதை பார்க்கத்தான் போகிறார்கள்.
எனக்கு இந்த வீடியோவை பார்க்கும் போது தீவிரவாதிகள் கழுத்தை வெட்டும் போது வெளியிட்ட வீடியோவை பார்த்த உணர்வுதான் வந்தது , அது மிகவும் கொடுமையான மனதை பாதிக்கக் கூடிய உணர்வு..
நிறைய மரணங்களை நேரில் பார்த்த (செய்யும் தொழில் அப்படி) எனக்கே இப்படியான உணர்வு என்றால் சாதாரனமார்களை எவ்வளவு பாதிக்கும்...
அதுமட்டுமல்ல இப்படியான வீடியோக்கள் மூலம் வரும் பாதுகாப்பு உணர்ச்சியை விட குரோத உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்...
ஏதோ என் உணர்வில பட்டத்தை சொன்னேன் ,இனி என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு எடுங்கள்...
நண்பரே ! மிகவும் யதார்த்தமான சலனம்...
ஆனாலும் நீங்கள் எச்சரிக்கயோடுதான் இந்த இடுகையை இட்டு இருந்தாலும், எல்லோரும் இதை பார்க்கத்தான் போகிறார்கள்.
எனக்கு இந்த வீடியோவை பார்க்கும் போது தீவிரவாதிகள் கழுத்தை வெட்டும் போது வெளியிட்ட வீடியோவை பார்த்த உணர்வுதான் வந்தது , அது மிகவும் கொடுமையான மனதை பாதிக்கக் கூடிய உணர்வு..
நிறைய மரணங்களை நேரில் பார்த்த (செய்யும் தொழில் அப்படி) எனக்கே இப்படியான உணர்வு என்றால் சாதாரனமார்களை எவ்வளவு பாதிக்கும்...
அதுமட்டுமல்ல இப்படியான வீடியோக்கள் மூலம் வரும் பாதுகாப்பு உணர்ச்சியை விட குரோத உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்...
ஏதோ என் உணர்வில பட்டத்தை சொன்னேன் ,இனி என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு எடுங்கள்...
இந்த வீடியோ ஏற்கனவே இருக்குது....
http://www.youtube.com/watch?v=rcsYQOn4Vkg
//இதனால்தான் நீர்த்தொடுகையுடன் நிற்கும்போது மின்னல் அடித்தாலும் நீங்கள் மண்டையைப் போடுவதில்லை.//
குமாரப்பாளையத்தில் காவேரியில் குளித்த 4-5 பேர் ஒரே தடவையில் மின்னலடித்து செத்தார்கள்.
வாங்கோ மாயாதி,
நானும் கழுத்தை அறுக்கும் சலனத்தை பார்த்திருந்தேன். அதைப் பார்க்கும்போது ஒரு வித குரோதம் வரத்தான் செய்கிறது. ஆனால் இந்தச் சலனம் வேறு. இது தற்கொலை முயற்சியோ அல்லது யாராலும் தூண்டப்பட்டு நடக்கின்றவொன்றோ அல்ல.
இதைப் பார்க்கும்போது குரோதம் தோன்றச் சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு. ஒருவித அதிர்ச்சி பரவுகிறது.
தற்கொலை எண்ணம் வருபவர்கள் இதை ஒரு முறை சிந்திக்கத் தலைப்படலாம். ஆனால் தற்கொலை எண்ணம் வருபவர்களை தமக்குள்ளேயே தற்கொலை எண்ணம் வருபவர்களை தடுக்கமுடியாது என்பது ஆராய்ச்சி முடிவு. அது ஒரு கணம். அவர்களாக மாறினால்தான் உண்டு.
ஆனாலும் மாயாதி,
கழுத்தறுப்பது போன்ற சனலங்களை நான் நி்ச்சயமாக பதிவிடமாட்டேன்.
நன்றி மாயாதி
Vilvarasa Prashanthan said...
இந்த வீடியோ ஏற்கனவே இருக்குது....
http://www.youtube.com/watch?v=rcsYQOn4Vkg //
நீங்க தந்த சுட்டி வேறெதையோ தருகிறது. :(
வாங்கோ புகழினி,
//குமாரப்பாளையத்தில் காவேரியில் குளித்த 4-5 பேர் ஒரே தடவையில் மின்னலடித்து செத்தார்கள்.//
அவர்கள் ஐந்த பேரினும் தொடுகையுறுமாறு மின்னல் அடித்தால் அவர்கள் இறக்கத்தான் வேண்டும். மின்னல் ஒரு புள்ளியில் தாக்குவதில்லை மாறாக ஒரு குறித்த பரப்பையே தாக்குகிறது. பெரிய பரப்பல்ல.
அந்தச் சம்பவம் நடக்கும்போது ஐந்து, பத்து மீற்றர்களுக்கு அப்பால் குளித்துக்கொண்டிருந்த நபர்களுக்கு ஒன்றுமே நடந்திருக்காது.
இது உயர் அழுத்த மின்சாரமாக இருக்கக்கூடும்.. இல்லாவிட்டால் இப்படிப் பற்றி எரிய மாட்டாங்க.. :(
வாங்கோ சுபானு,
உண்மைதான் 24000 வோல்டேஜ் என்று செய்தியில் அறிந்தேன்.
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ