நா

A for Apple இன் ஆதியை இங்கே ரவியில் பெறலாம். இடையில் லோசன் அண்ணா கவர்ச்சியாக இந்த தொடர்பதிவை போட்டிருந்தார். அந்தம் நானாக இருக்கச் சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனாலும், என்னாது... அமெரிக்கோ வெஸ்புச்சி அமெரிக்காவைக் கண்டுபிடிச்சிட்டாரா? என்று கேட்டுக்கொண்டு யாராவது இந்தத் தொடர் பதிவை இட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு கொசுறுத் தகவல் - இந்தத் தொடர்பதிவு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது ;-) . பழமைபேசி என்னை அழைக்கும்போது சென்ற ஆண்டு ஆகஸ்ட். :-))

A to Z தட்டச்சும்போது பயர்பாக்ஸ் location bar என்னத்தை காட்டுகிறது என்பதுதான் ஆதிப்பதிவின் நோக்கம். அதுவே உருமாறி வந்ததெல்லாம் சாதாரண சகஜம். என்னுடைய Location Bar இல் சில எழுத்துக்களைச் தட்டச்சும்போது வரும் இணையப் பக்கங்களை பொதுவில் வைக்கமுடியாதுள்ளமைக்கு வருந்துகிறன். :-) . அவற்றில் சில இலங்கையில் சட்டப்படி (???) தடையானவை.

A for http://www.answers.com
ஒரு ஆங்கில அகராதி என்பதற்கப்பால் நிஜமான அகராதியில் இல்லாத சொற்களுக்குரிய நாட்டு வழக்கங்கள், ஊர்வழக்கங்கள் Acronym களுக்குரிய விளக்கங்கள் என்று எல்லாவற்றையும் புட்டுப்புட்டு வைக்கும்.

B for http://www.blogger.com
ம்க்கும்... இதுக்கெல்லாம் விவரணம் வேணுமா?

C for http://www.cancerquest.org/
எதுக்கெடுத்தாலும் இது கான்ஸராக இருக்குமோ என்று கிலிப்படுத்துற உலகமப்பா இது. கிலி வேண்டாம் இங்க போங்கோ.

D for http://digg.com/
இன்றைய தமிழிஷ், தமிழர்ஸ், தமிழ் 10 களுக்கெல்லாம் முன்னோடி

E for http://www.esnips.com/
கோப்புக்களை பகிர்வதற்கு. நான் இசைக் கோப்புக்களை பகிர பாவிக்கிறேன். 5 GB இலவசமாகத் தருகிறார்கள்.

F for http://www.filehippo.com/
கணிணியைப் போமற் செய்தாலும் சரி, யாராவது புச்சா இந்த மென்பொருள் எங்கடா இருக்கு எண்டு கேட்டாலும் சரி இங்க போங்க. அவசியமான எல்லாம் இலவசமாக இருக்கு இன்றைய திகதியுடன். இந்த இணையத்தைக் காதலிக்கிறன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். :-)

G for www.gsmarena.com/
செல்பேசி வாங்கப் போறீங்களா... மிக மிக அருமையான இடம். Simply superb.

H for http://www.hypercloak.com/
"இந்த வீடியோவை உங்கள் நாட்டிலிருந்த பார்க்க முடியாது. மன்னிச்சுக்கோங்கோ" என்று கடுப்பேத்தும்போது இவரின் கைதான் உதவுகிறது. இலங்கையில இப்ப வேறதேவைக்குப் பயன்படுத்தினால் அதுக்கு நான் என்ன செய்யிறது? :-|

I for http://www.ilike.com/
ஆங்கிலப் பாடல்களும் சிலபல தமிழ் ஆல்பங்களையும் கேட்டு இரசிக்கலாம். நல்லாயிருக்கு.

J for http://jackiesekar.blogspot.com/
J ஐ தட்டச்ச இதுதான் வருது. "சாண்ட்விச் அன்ட் நான்வெஜ்" எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. :-D

K for http://keepvid.com/
சொந்தக் கணிணியா இருந்தா இணையப்பக்கத்திலிருக்கும் வீடியோக்களை தரவிறக்க ஏராளமான மென்பொருட்களை நிறுவியிருப்பீர்கள். இது போற வழியில உதவினாலும் உதவும்.

M for http://www.megadownload.net/
காசுகுடுத்து வாங்குறத விட இந்த , தேடிப்பிடிச்சு தரவிறக்கிறதே ஒரு சுகம்தான்.

N for http://naayakan.blogspot.com/
உங்களுக்கு நீங்களே பொறுப்பு. பதிவுகளின் அரைவாசியில் தலை கிறுகிறுத்தால் அப்படியே ஜாக்கிசேகரோட நான்வெஜ்க்கு தாவுறது நலம்.

O for http://www.onemorelevel.com/
நிரம்ப போர் அடிக்குதா?... நீங்க Action, Classics, Puzzle, Sports, Strategy and Trivia இல எது. போய் ஜமாய்ங்கோ.

P for http://portableapps.com/
யூஎஸ்பி போர்ட் இல்லாத கணிணியும் இல்லை. யூஎஸ்பி இல்லாத இளைஞரும் இல்லை.

R for http://www.raaga.com/channels/tamil/
இசையால் வசமாகா இதயம் உளதோ...

S for http://www.simplepassword.com/
என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒட்டி உறவாடும் ஒரு இணையப் பக்கம். I am now a fear free man. :))

T for http://www.technotraits.com/2008/08/22-incredibly-useful-windows-shortcuts/
என்னுடைய புக்மார்க்குகளில் ஒன்று. உதவுமய்யா உதவும்.

V for http://www.vikatan.com/
இலங்கையில இந்தப் புத்தகத்தை வச்சிருந்தால் எம்மை இழக்கச் சந்தர்ப்பம் உண்டு. :-(

W for http://www.webook.com/
ஆங்கிலத்தில ஏதாவது எழுதி எழுத்தாளரா வரவேண்டும் என்ற அவா எங்கேயோ ஒளிந்திருக்கிறதா?

Y for http://www.santosha.com/asanas/
யோகாவின் எல்லா ஆசனங்களையும் படங்களுடன் கூடிய விளக்கங்களோடு பெற. சிலருக்கு மிக உபயோகமாக இருக்கும்.

Z for http://www.zamzar.com
எந்தவிதமான Document, Music, Video, Image மற்றும் Compressssed வடிவங்களையும் (formats) வேறு வடிவங்களுக்கு மாற்றித் தரும். Bookmark பண்ணி வச்சுக் கொள்ளுங்கோ. தேவையான நேரம் கைகுடுக்கேக்க நிச்சயமா மகிழ்வீர்கள்.

யாரையும் இந்தத் தொடர்பதிவுக்கு மாட்டுறதா இல்லை. கும்முவீங்க எண்டு தெரியும்.

பி.கு : சுபானு அவர்கள் சுவராசிய வலைப்பதிவர் விருது வழங்கும் தொடர் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். A for Apple இனையே பதின்மூன்று மாதம் கடந்து போடுகிறேன். இதை எப்ப பதிவிடுகிறேனோ எனக்கே தெரியாது. :-)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ (Aka) கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

7 பின்னூட்டங்கள்.

சி தயாளன் August 4, 2009 at 7:59 PM

:-)) வித்தியாசமான அகரவரிசை

கலையரசன் August 4, 2009 at 8:29 PM

இதுவும் ஒரு தொடர் பதிவவவவவவாஆஆஆஆ?

ஆனாலும், அருமையான தகவல்கள்!

Nathanjagk August 4, 2009 at 8:44 PM

நிறைய ​ஸைட்டுகள் புது அறிமுகமா இருக்கு! உபயோகமான ABCDதான்!

பகீ August 4, 2009 at 9:38 PM

உண்மையிலேயே காந்தியை சுட்டுட்டாங்களா என்ன..??

நல்ல வiரிசைப்பட்டுத்தல்... நன்றி.

புல்லட் August 4, 2009 at 11:16 PM

மிக மிக சிறந்த பயன்மிக்க பதிவு மது.. பிந்தி வந்தாலும் பிரயோசனமாக வந்துள்ளது... இந்த இடுகைக்காக எனது விசேட நன்றிகள்.. இப்படியான பயன்மிக்க பதிவுகளை எதிர்பார்க்கிறேன்..
பணியை தொடரவும்...

Mathuvathanan Mounasamy / cowboymathu August 5, 2009 at 11:13 AM

வாங்கோ டொன் லீ,
இவ்வாறு நிறையப்பேர் அகரவரிசைப்படுத்தியிருந்தாங்க... எல்லாமே நல்லாயிருந்தது. நான்தான் கடைசி போல
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வாங்கோ கலையரசன்,
தொடர்பதிவுகளைக் கண்டாலே அலர்ஜியா இருக்கா... ஹீ ஹீ.. ஆனாலும் இந்தத் தொடர்பதிவு தகவல்களோடும் வந்தது சிறப்பு.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வாங்கோ ஜெகநாதன்,
நிச்சயமாக சிலதுகள் நிறையவே உதவும். நன்றி
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வாங்கோ ஊரோடி பகீ,
//உண்மையிலேயே காந்தியை சுட்டுட்டாங்களா என்ன..??
//
என்ன பண்றது... இவ்வளவு தாமதமாகிட்டோமே.. :))
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வாங்கோ புல்லட்,
// இப்படியான பயன்மிக்க பதிவுகளை எதிர்பார்க்கிறேன்..//
அப்போ இவ்வளவு நாளும் போட்ட பதிவுகள் மொக்கையாவா இருந்தது... அவ்வ்வ்வ்வ்...

Anonymous October 26, 2009 at 6:23 PM

hi... mathu....
nallarukku. vallththukkal..
thodaravum.
mathuxxx (mathuran)

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ