இலங்கையில சார்க் மாநாடு என்றுமில்லாத எடுபிடிகளோட நடக்குது. இன்று காலையில் பேரூந்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். சார்க் மாநாடுக்கு கலந்து கொள்ள வந்த ஒருவர் ஷாப்பிங்குக்கு வந்ததால் கொழும்பு கல்கிஸ்ஸவில் வைத்து அனைத்து வாகனங்களையும் நிறுத்திவிட்டார்கள். நடந்து செல்ல அனுமதிக்கிறார்களாம் என யாரோ ஒருவர் அலம்பக் கேட்டு 26 ரூபா டிக்கட் எடுத்திருந்த பேரூந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால் வாகனங்களை மறித்த இடத்தில் எங்களையும் மறித்துவிட்டார்கள். வாகனங்களை அனுமதித்த பின் ஏதோ ஒரு பேரூந்தில் ஏறிக்கொண்டேன். பின்னர் தான் பார்த்தேன். அதே பேரூந்து, அதே நடத்துனர். வேறென்ன மேலும் 17 ரூபாவுக்கு அழவேண்டியதாகிவிட்டது.
கொழும்பில் டிஜிட்டல் பிரின்டிங்க் கடையின் முகப்பில் இரண்டு இஷான் சர்மா உயர விளம்பரம் ஒன்று மாட்டியிருந்தார்கள். ஒரு வெண்தோல் நங்கை பீச் மணலில் சிக்கன உடையில் காட்டவேண்டிய பாகங்களை ஆர்வமூட்டக்கூடிய வகையில் காட்டிக்கொண்டு தொடையில் பட்டிருக்கும் மணல் தெரியுமளவுக்கு இருந்தாள் (பிரின்டிங்க் குவாலிட்டி), நங்கையின் கைகளுக்கு இடையால் ஒரு வாசகம்..24 our service. படத்தைப் பார்த்துட்டு இது பிரின்டிங்க் கடையா இல்ல, 24 மணித்தியாலமும் இப்படியான பெண்கள் இருக்கும் கடையா என்று யோசிக்கவேண்டியிருக்கு.
மன்னிப்புக் கேட்டல் என்ற மகோன்னதமான விடயம் ரஜினியின் அறிக்கையிலிருந்த இறுதி வசனத்தால் பாழாக்கப்பட்டிருப்பதுடன் தமிழ்நாட்டில் குறிப்பிட்டளவு சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது. குசேலன் படத்தை கொழும்பில் வெளியிட விடமாட்டோம் என்று மகிந்த அரசாங்கம் அறிவித்தால் இலங்கை இராணுவம் தமிழக மக்களை கடலில் சுட்டுக் கொல்வது சரியானதே என்று ரஜினி வாய்ஸ் விடுவாரெனத் தோன்றுகிறது. அவதார புருஷர்கள் என்று யாரும் இல்லை என உணர தமிழர்களுக்கு இன்னும் காரணம் தேவைப்படுகிறது.
குசேலன் கொழும்பில் இன்று ஆகஸட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு ஒத்துவராத மாதம். அதனால்தான் சர்ச்சையில் சிக்கியுள்ளாரோ தெரியவில்லை. லக்கியின் குசேலன் விமர்சனம் பார்த்தேன். கதையைச் சொல்லாத நல்ல விமர்சனம் (ஒருவேளை கதை இல்லையோ). அவரோட விமர்சனத்தில இது இருந்தது..."குருவி எடுத்தவர்களை கோயில் கட்டி கும்பிடலாம்!".
மதுவதனன் மௌ.
7 பின்னூட்டங்கள்.
சாக்கு மாநாட்டுக்கு மத்தியிலும் கடமையே கண்ணாயிருக்கும் உங்கள் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. :)
24 our service நானும் பாத்திருக்கிறன். வேற பல இடங்களிலயும் இதமாதிரியே போட்டிருக்கிறாங்கள்.
///மன்னிப்புக் கேட்டல் என்ற மகோன்னதமான விடயம் ரஜினியின் அறிக்கையிலிருந்த இறுதி வசனத்தால் பாழாக்கப்பட்டிருப்பதுடன் தமிழ்நாட்டில் குறிப்பிட்டளவு சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது. குசேலன் படத்தை கொழும்பில் வெளியிட விடமாட்டோம் என்று மகிந்த அரசாங்கம் அறிவித்தால் இலங்கை இராணுவம் தமிழக மக்களை கடலில் சுட்டுக் கொல்வது சரியானதே என்று ரஜினி வாய்ஸ் விடுவாரெனத் தோன்றுகிறது. அவதார புருஷர்கள் என்று யாரும் இல்லை என உணர தமிழர்களுக்கு இன்னும் காரணம் தேவைப்படுகிறது.///
True...
மன்னிப்புக் கேட்டல் என்ற மகோன்னதமான விடயம் ரஜினியின் அறிக்கையிலிருந்த இறுதி வசனத்தால் பாழாக்கப்பட்டிருப்பதுடன் தமிழ்நாட்டில் குறிப்பிட்டளவு சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது. குசேலன் படத்தை கொழும்பில் வெளியிட விடமாட்டோம் என்று மகிந்த அரசாங்கம் அறிவித்தால் இலங்கை இராணுவம் தமிழக மக்களை கடலில் சுட்டுக் கொல்வது சரியானதே என்று ரஜினி வாய்ஸ் விடுவாரெனத் தோன்றுகிறது. அவதார புருஷர்கள் என்று யாரும் இல்லை என உணர தமிழர்களுக்கு இன்னும் காரணம் தேவைப்படுகிறது.
''இதை விகடனில் நகலெடுத்து ஒட்டியுள்ளேன் ''
வாங்கோ நிமல்,
கடமை உணர்ச்சி இருக்குத்தான் ஆனா லீவு கேட்டும் தரமாட்டேன் என்றுவிட்டார்களே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வாங்கோ மது,
வருகைக்கு நன்றி
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பூபதி வாங்கோ,
வருகைக்கு நன்றி
:))
தமிழன் வாங்கோ
வருகைக்கு நன்றி
ரஜனி கேட்டாலும் கேட்பார்.
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ