ரீடர்ஸ் டைஜஸ்ட் என்பது நீண்ட காலமாக வெறும் கனவாகவே என்னுடன் இருந்து வந்துள்ளது. மாதா மாதம் எனது குடும்பம் அனுப்பும் காசில் முந்நூறு ரூபாவுக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்குவதென்பது இயலாத விடயமாகவே இருந்தது. இப்போது வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். முதல் மாதச் சம்பளத்திலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்கிவிட்டேன்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஜூலை மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் அருமையான ஒரு கட்டுரை. "The Power of Sleep" என்று துறை போந்த வல்லுநர்களால் ஆராயந்து பெற்ற முடிவுகளைக் கொண்டு முறையான நித்திரை எப்படி ஒருவனை(ளை) கவர்ச்சியாக, உடல் வாகாக மற்றும் உறுதியாக வைத்திருக்கும் என சொல்லியிருக்கிறார்கள். இரவில படுக்கைக்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னரே சாப்பிடுங்கள் அதுவும் சோற்றைச் சாப்பிடுங்கள் என்று கூறுயிருக்கிறார்கள் (இன்னும் என்னென்னவெல்லாம் கூறியிருக்கிறார்கள் என்று எழுதினால் காப்பிரைட் சட்டம் என்மீது பாயலாம்). நல்லதொரு கட்டுரை. வேலை முடிந்து அந்தத் தூக்கம் பற்றிய கட்டுரையை நான் வாசிக்கும்போது நேரம் நடுநிசி தாண்டி இரண்டுமணியாகிக்கொண்டிருந்தது.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
விமர்சனங்கள் கூறுவதிலிருந்து படத்தின் பின்னே கிடக்கும் அந்த உண்மை புரிந்துவிட்டது. குசேலன் நட்பின் வீரியத்தைக் காட்டும் படம். பசுபதி - ரஜினி நட்பல்ல; கமல் - ரஜினி நட்பு. ஒரு சினிமாவுக்குப் பின்னால் நிஜ நட்பொன்றின் வலிமை கண்டு சிலாகித்தேன். ரஜினி தனது கமலுடனான நட்பைப் பாராட்டும் முகமாக; தசாவதாரம் 100 நாட்கள் கடந்தும் ஓடவேண்டும் என்பதற்காகவும், குசேலன் தசாவதாரத்தின் வரப்போகும் நாட்களின் வசூலை எந்தவித்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவும் மிகவும் சிரத்தையுடன் குசேலனை ஒழுங்குபடுத்தியிருக்கிறார். ரஜினியின் மகோன்னத மனத்திற்காக தசாவதாரம் இன்னொரு முறை பார்க்கப் போகிறேன்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
தமிழ்99 வடிவம் இலங்கை தமிழ் வல்லுனர்களால் ஆராய்ச்சிக்குட்டபடுத்தப்பட்டுள்ளது. நாங்கள் சாதாரணமாக எழுதுவதுவதிலிருந்து தமிழ்99 தட்டச்சல் வேறுபடுவதால் ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஆரம்பக் கருத்துக்கள் வந்துள்ளன. உதாரணமாக "நான் தமிழ்99 முறையிலேயே தட்டச்சுகிறன்" என ஊற்றுப் பேனாவொன்றால் ஒரு தாளில் எழுதவேண்டியதை " நஆனஃ தமஇழஃ99 மஉறஐயஇலஏயஏ தடடசசஉகஇறஏனஃ" எனத் தட்டச்சவேண்டியுள்ளதென்பதே அவர்கள் வாதம். நாம் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் வேறுபாடென்கிறார்கள். மேலும் சீன மற்றும் ஜப்பானிய எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சுகிறார்கள் என ஆராயவிருக்கிறார்கள். நல்ல முடிவுகள் வந்தால் மாறுவோம்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வால்ட் டிஸ்னி-பிக்ஸாரின் கலக்கும் அனிமேஷன் குறும்படம் ஒன்றை பிரேம்குமாரின் வலைப்பூவி்ல் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அருமையான படம். தரவிறக்கி வைத்துள்ளேன். பார்க்காதவர்கள் மறக்காமல் ஒரு முறை பார்த்துச் செல்லுங்கள் இங்கே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மதுவதனன் மௌ.
23 பின்னூட்டங்கள்.
//இப்போது வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். முதல் மாதச் சம்பளத்திலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்கிவிட்டேன்.//
இன்னமும் டிரீட் கொடுக்கேல்ல போல இருக்கு ;)
//தமிழ்99 வடிவம் இலங்கை தமிழ் வல்லுனர்களால் ஆராய்ச்சிக்குட்டபடுத்தப்பட்டுள்ளது.//
'தமிழ்99 ஐ ஏற்றுக்கொள்ளவே மாட்டோம், ஆராய்ச்சி பண்ணி சரியில்ல, தப்பிருக்கு எண்டு சொல்லுவம்.' என்கிற 'தமிழ் வல்லுனர்களின்' அரசியல் எனக்கு விளங்குதில்லை.
ta-IN, ta-LK பிரச்சினைய விட இதில நுண்அரசியல் காரணங்கள் அதிகம் இருக்கும் போல கிடக்கு.
நஆனஃ தஅமஇழஃ99 மஉறஐயஇலஏயஏ தஅடஃடஅசஃசஉகஇறஏனஃ"
அப்படியில்லை என்று நினைக்கிறேன்
நஆனஃ தமஇழஃ99 மஉறஐயஇலஏயஏ தடடசசஉகஇறஏனஃ
சோதித்து பாருங்கள்
நீங்கள் நினைப்பதை விட தமிழ்99 முறையில் விசைப்பலகையை குறைந்த முறையே உபயோகிக்க வேண்டும்
உதாரணமாக :
ண்டு - pod
ந்த - ;l
நினைப்பதை - ;sirjjlr
வைத்துக்கொள் - vrllfhhcyf
jj - ப்ப
po - ண்ட
என்று தானாகவே புள்ளி வைத்துக்கொள்வதால் வேலை எளிதாகிறது
வாங்கோ நிமல்,
ட்ரீட் கொடுக்க நேரம் கிடைக்குதில்லையே...:-))))
என்னோட நாவால ட்ரீட் வைக்குற தேதிய அறிவிக்குறேன். எல்லாரும் வந்து கலந்து கொள்ளுங்கள். :-)))
நிமல்,
எனக்கும் ta-IN, ta-LK என்று ஏன் இரண்டு வேறான Localization குறிப்பீடுகள் இருக்கவேண்டுமென ஒரு வித கவலை இருந்தது. ஆனால் அது தற்போதைய முறைமை எனத் தெரிய வருகிறது.
அதாவது Localization என்பது மொழி + நாடு என வந்து விட்டது. ஆங்கிலத்தில் அவ்வாறு இருப்பதால் கொணர்ந்தார்களோ தெரியாது. உதாரணமாக கனடாவி்ல் தமிழ் Localization செய்யவிழைகிறார்களெனின் அது ta-CA என அழைக்கப்பட வேண்டும். ஆனால் அவற்றுக்கிடையில் வேறுபாடுகள் மிக மிக குறைவாகவே இருக்கும்.
//
புருனோ Bruno said...
நஆனஃ தஅமஇழஃ99 மஉறஐயஇலஏயஏ தஅடஃடஅசஃசஉகஇறஏனஃ"
அப்படியில்லை என்று நினைக்கிறேன்
நஆனஃ தமஇழஃ99 மஉறஐயஇலஏயஏ தடடசசஉகஇறஏனஃ
//
வாங்கோ புருனோ,
நீங்கள் சொல்வது சரியே, நான் தட்டச்சிய பின் சரிபார்த்தேன், பிழை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அந்தப் பிழை நான் கூற வந்த கருத்துக்கு பங்கம் விளைவிக்கவில்லை என நம்புகிறேன். இதோ பிழை திருத்திவிடுகிறேன்.
//
புருனோ Bruno said...
நீங்கள் நினைப்பதை விட தமிழ்99 முறையில் விசைப்பலகையை குறைந்த முறையே உபயோகிக்க வேண்டும்
//
உண்மை புரூனோ உண்மை. நான் பாவிப்பது தமிழ்99 முறைமைக்கு கிட்ட நிற்கும் வின்டோஸிலுள்ள default(நியம ??) முறைமை. தற்போதய நிலையில் தமிழ்99தான் சிறப்பானதென எனக்கும் படுகிறது. ஆரோக்கியமான ஆராய்ச்சிகள் இறுதியில் நல்ல முடிவைத்தந்தால் நலமே.
//'தமிழ்99 ஐ ஏற்றுக்கொள்ளவே மாட்டோம், ஆராய்ச்சி பண்ணி சரியில்ல, தப்பிருக்கு எண்டு சொல்லுவம்.' என்கிற 'தமிழ் வல்லுனர்களின்' அரசியல் எனக்கு விளங்குதில்லை.//
நிமல் அப்படியல்ல. உங்கட ஆதங்கம் எனக்கும் இருக்குது. ஆனா ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் என்று யாரும் சொல்லவில்லை. குறை நிறைகளை ஆராய்கிறார்கள். குறை இருக்குது என்று சொன்னால் நல்ல முடிவொன்றையும் பிரேரிக்கவேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு. எனவே நல்ல இறுதி முடிவொன்றை நாங்கள் பெற்றுக்கொண்டிருப்போம்.
//குறை நிறைகளை ஆராய்கிறார்கள். //
இது தான் சிறப்பான முறை என்றோ இதை விட சிறப்பான முறைகள் வேறு இல்லை யென்றோ கூற முடியாது.
ஆனால் தற்சமயம் குறையாக கூறப்பட்ட விஷயம் குறையே இல்லை என்பது தான் நிஜம்
//" நஆனஃ தமஇழஃ99 மஉறஐயஇலஏயஏ தடடசசஉகஇறஏனஃ" எனத் தட்டச்சவேண்டியுள்ளதென்பதே அவர்கள் வாதம்//
இல்லாத ஒரு குறையை இருப்பதாக கூறிக்கொண்டு ஆராய்வது “எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் அரசாங்கங்கள் அமைக்கும் விசாரனை கமிஷன் அல்லது கருத்து கேட்கும் கூட்டம்” போன்றது என்பது என் கருத்து.
அனைத்து உயிர் எழுத்துக்கள் 1 விசை, க,ங,ச,ஞ வரிசை 1விசை, என 31 எழுத்துக்களை ஒரு விசையிலும், மீதமுள்ள 216 எழுத்துக்களையும் இருவிசையில் எழுதலாம். தமிழ் எழுத்துக்கள் 247 ல் எந்த தமிழ் எழுத்தை எழுதவும் இரண்டுக்கு மேற்பட்ட விசைகள் அவசியமில்லை. shift அல்லது வேறு துணைவிசைகளும் அவற்றுக்கு அவசியமில்லை. கிரந்த எழுத்துக்களான ஸ,ஷ,ஜ,ஹ போன்றவற்றை மட்டுமே shift உபயோகித்து எழுத வேண்டும்.
விஞ்ஞானப் பூர்வமான இந்த தமிழ்99 தட்டச்சு முறையால் குறைந்த விசையழுத்த முறைகளில் விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்பில் அதிக பக்கங்களை அதிக வேகத்தில் அதிக நேரம் கைகளுக்கு களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்ய முடியும்…
இம்முறையை கற்றுக் கொள்வதும் எளிமையானது. விசைகளை நினைவில் வைப்பதும் மிகவும் எளிது.
This comment has been removed by the author.
http://www.tamil99.org/kanichuvadi.pdf
மீண்டும் வாங்கோ புரூனோ,
தமிழ்99 தட்டச்சு முறை வேகமானது, பழகியபின் இலகுவானது மற்றும் குறைந்தளவு விசைகளையே அழுத்தவேண்டியுள்ளது என்பது மறுக்கமுடியாததே. அவர்கள் கூறுவது சிந்தனைக்கும் தட்டச்சலுக்குமிடையான வேறுபாடு.
அறிந்தவகையில் வேறு எந்த மொழியின் தட்டச்சலிலும் இல்லாத இயல்பு. நீங்கள் கூறுவது போல் அது குறையாக இல்லையெனினும் நிறைவாக்க ஆராய்கிறார்கள் போலும்.
முடிவெதுவும் எட்டப்படாத நிலையி்ல் மீண்டும் தமிழ்99க்கே வரவேண்டியவர்களாயிருப்பார்கள் அவர்கள்.
ஆராய்ச்சிகள் பிழையானதோ சரியானதோ எந்தவகை முடிவைத் தந்தாலும் பயன் உளதே.
உங்கள் மறுமொழிக்கு நன்றி
//அவர்கள் கூறுவது சிந்தனைக்கும் தட்டச்சலுக்குமிடையான வேறுபாடு.//
இது தான் எனக்கு புரியவில்லை
//சாதாரணமாக எழுதுவதுவதிலிருந்து தமிழ்99 தட்டச்சல் வேறுபடுவதால் ஏற்றுக்கொள்ளக்கூடாது//
சாதாரணமாக எழுதுவதுவதிலிருந்து தமிழ்99 தட்டச்சல் வேறுபடவில்லையே....... ???
நீங்கள் அளித்த உதாரணம் சரியல்ல என்று விளக்கி விட்டேனே
வேறு எதாவது நடைமுறை சிரமங்கள் இருக்கிறது என்றால் தெரிவிக்கவும் :) :)
வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.
ta-IN, ta-LK என்று இருப்பது பெரிய பிரச்சினையா தோணல. இரண்டு ஊர்களுக்கும் தனித்துவமான சொற்கள், எழுத்துக்கூட்டல், எழுத்து நடை உண்டு. அந்தந்த ஊருக்கு ஏற்ற மாதிரி மொழிபெயர்ப்பது வரவேற்க்கத்தக்கதே.
**
தமிழ்99 பழகும்போதும் சரி பழகிய பின்னும் சரி, வல்லுநர் குழு நினைப்பது போல் எழுத்துகளைப் பிய்த்து பிய்த்து யாரும் மனதில் நினைப்பது இல்லை. இது என் அனுபவம். பயின்று பார்க்காதவர்கள், இப்படி தோணுமோ என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். பயின்றவர் யாரும் இந்தக் குறையைச் சொன்னதில்லை. தமிழ்99 முறையில் தமிழை எழுதும் போது மனதில் தமிழ் ஓசைகளாகத் தான் நினைவு ஓடுமே தவிர தனித்தனி உயிர் மெய் எழுத்துகளாக ஓடாது. இது ஏன் என்று புரியவில்லை. ஆனால், மனித மூளையின் விந்தை :)
இலங்கையில் உள்ள தயக்கத்துக்கு இரண்டு காரணங்கள் புரிந்து கொள்ளத்தக்கது:
1. நிறைய பேர் காலம் காலமாக பாமினி தட்டச்சு முறைக்குப் பழகி இருக்கிறார்கள். அதனால், பெருமளவில் அனைத்து மட்டத்திலும் மாற்றத் தயங்கலாம்.
2. தமிழ் எழுத்து இலக்கண அடிப்படை தெரியா கா = க+ஆ என்று பிரித்துப் பார்க்கத் தெரியா சிறு குழந்தைகளுக்கு இது இலகுவாக இருக்கிறதா என்று தெரியவில்லை. வல்லுநர் குழு இதை வேண்டுமானால் கண்டிப்பாக ஆயலாம்.
கா என்பதை க + ா என்றும் கி என்பதை க + ி என்றும் நினைப்பதை விட
கா என்பதை க + ஆ என்றும் கி என்பதை க + இ என்றும் நினைப்பது எளிது தான்
This comment has been removed by the author.
பாமினி, தமிழ் 99 எது என்றால் தமிழ் 99 என்று முழு உரிமையுடன் சொல்லுவேன். ஏனென்றால் பாமினி தட்டச்சில் 1 வருடத்திற்கும் மேலாக அச்சுப்பதிப்பு துறையில் வேலை செய்த காலங்களில் பல்வேறு புத்தகங்களை தட்டச்சிய அனுபவம் உண்டு. இப்போது தமிழ் 99 தட்டச்சில் வலைப்பதிவுகளில் தட்டச்சிவருகிறேன். எனது அனுபவப்படி பாமினி எந்தவிதத்திலும் தமிழ் 99 ஐவிட சிறப்பானது என்று சொல்வதற்கில்லை.
ரவி சொன்ன மாதிரி "நிறைய பேர் காலம் காலமாக பாமினி தட்டச்சு முறைக்குப் பழகி இருக்கிறார்கள். அதனால், பெருமளவில் அனைத்து மட்டத்திலும் மாற்றத் தயங்கலாம்." என்பது மட்டுமே ஒரே காரணமாக இருக்க முடியும்.
இலங்கையும் ஒருகட்டத்தில் தமிழ் 99 முறையை ஏற்றுக்கொள்ளும் நிலை இருந்திருக்கிறது. ஆனாலும் ஏற்றுக்கொள்ளல்(acceptance) மற்றும் பயிற்ச்சியின்மை(training) போன்ற காரணங்களால் ரெங்கநாதன் (இதுதான் பாமினியின் இலங்கை பெயர், பாமினின்ட அப்பாவா இருக்குமோ.. ;) ) தட்டச்சுமுறையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
பார்க்க:
1. Keyboards for Indic Languages - Slides 28-33
2. Keyboards for Indic Languages, Gihan V Dias, G Balachandran - 7.3 Tamil Keyboard Layouts
அவர்களின் “குறை”கள்
//1. Text is typed differently from how it is written.
2. The key placements are totally different form the typewriter layout. Although it may be more efficient, the
new scheme is unfamiliar and thus hard to use.
3. The lack of vowel symbols printed con the keyboard is dis-concerting.//
1. முதல் விஷயம் எனக்கு புரியவில்லை. ஒரு வேளை - வேளை என்பதை வ+ஏ ள+ஐ என்று அடிப்பதை கூறுகிறார்களா என்று தெரியவில்லை
2. இது நகைச்சுவை - Although it may be more efficient என்று கூறிவிட்டு unfamiliar அதனால் hard to use என்பது நகைச்சுவை.
more efficient என்றாலே easy to use தானே
3. இதுவும் நகைச்சுவைதான்.
--
யாரோ அறிமுகப்படுத்தியதை (அது மிகச்சிறந்ததாக இருந்தாலும்) ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று (சிறு பிள்ளைத்தனமான) மனநிலையே வெளிப்படுகிறது எனபது வருத்தமளிக்கும் விஷயம்
--
அந்த காலத்தில் தட்டச்சு பழகியவர்களின் விருப்பத்திற்காக வளரும் தலைமுறையை பின்னோக்க்கி இழுத்து செல்வது சரிதானா ??
@அனானி....
//அந்த காலத்தில் தட்டச்சு பழகியவர்களின் விருப்பத்திற்காக வளரும் தலைமுறையை பின்னோக்க்கி இழுத்து செல்வது சரிதானா ??//
இத நாங்க சொன்னா தாங்கதான் "வல்லுனர்கள்" என்பார்கள்.
என்ன செய்ய..!!
இந்த "கொடுமையையும்" பாருங்கோ...!! "The proposed standard is consistent with the Unicode standard. It comprises a coding for the Tamil character set consistent with the latest version of the Unicode standard, a keyboard layout for Tamil based on the Renganathan layout, and code sequences and keying-on sequences."
முதலில் கூறியது தான்
இல்லாத ஒரு குறையை இருப்பதாக கூறிக்கொண்டு ஆராய்வது “எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் அரசாங்கங்கள் அமைக்கும் விசாரனை கமிஷன் அல்லது கருத்து கேட்கும் கூட்டம்” போன்றது என்பது என் கருத்து.
குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறனைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தக் காலக் குழந்தைகள் கருவிகளை ஆள்வதில் கூடுதல் திறன் பெற்றிருக்கிறார்கள்.
செல்பேசியில் உள்ள 9 விசைகளை மட்டும் கொண்டு, ஆங்கில அகரமுதலி உதவியுடன், மிக இலகுவாக குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள் என்பதைக் கவனிக்கலாம். இதை ஒப்பிடுகையில், தமிழ்99ஐப் புரிந்து கொள்வது இலகுவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நல்ல கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றிகள். விமர்சனங்கள் என்றும் நல்லவையே.
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ