பெண்களே அப்படித்தானா அல்லது சிறுவயது முதல் பெற்றோர் ஊட்டி வளர்க்கிறார்களா? எனது பன்னெடுங்கால (ஒரு நாலைந்து வருடம்தானுங்க) பார்வையிலிருந்து இந்தக் கேள்வி எனக்குள் குடைகிறது. வேறொன்றுமில்லை நெரிசல் மிகுந்த வீதியின் மஞ்சள் கடவையை கடக்கும்போது அநேகமான தரம் அவதானித்திருக்கிறேன் கூட்டமாகக் கடக்கும்போது பெண்கள் எப்போதும் இடது கைப் பக்கம் ஓடிவந்து நிற்பார்கள். பாதி வீதியைக் கடந்தவுடன் வலது பக்கம் இயல்பாகவே மாறுவார்கள். எப்படி அநேகமான பெண்கள் இப்படி இசைவாக்கமடைகிறார்கள் என அதிசயித்திருக்கிறேன். விளக்கத்திற்காக பாறைபோல உறுதியான ஆண்களின் பாதையை நீலத்திலும் இதயம் போன்ற மென்மையான பெண்களின் பாதையை சிவப்பிலும் குறித்திருக்கிறேன். நீங்களும் மஞ்சள் கடவையைக் கடக்கும் போது ஒருமுறை அவதானித்துப் பாருங்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக இன்னொரு பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் கம்பனியிலோ அல்லது நெற்கபேயிலோ ஜிமெயில் பாவித்துவிட்டு லாக்அவுட் பண்ணாது வந்துவிட்டீர்களா. உடனடியாக எங்காவது அருகில் உள்ள இணையத்தொடர்ப்புக்குச் சென்று உங்கள் ஜிமெயிலுக்குச் சென்று கம்பனியிலோ அல்லது நெற்கபேயிலோ திறந்து வைத்துவிட்டு வந்த அக்கவுண்டை லாக்அவுட் பண்ணமுடியும். மேலும் உங்களது ஜிமெயில் வேறு யாராலாவது பயன்படுத்தப்படுகிறதா எனவும் உறுதிசெய்துகொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்காக இங்கே செல்லுங்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சுஜாதா எங்கோ சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழில் புணர்ச்சி விதிகளின் படி இந்த இருவேறு புணர்ச்சிகளையும் எவ்வாறு விளங்கப்படுத்துவது.
தங்கம் + காசு = தங்கக்காசு
சங்கம் + காலம் = சங்ககாலம்
முன்னையது திரிதல் விகாரப் புணர்ச்சியாக இருக்க, பின்னயது கெடுதல் விகாரப் புணர்ச்சியாக உள்ளது. ஆனால்
வருத்தப்படா வாலிபர் சங்கம் + காதல் = வருத்தப்படா வாலிபர் சங்கக்காதல்
என திரிதல் விகாரப் புணர்ச்சியாகத்தான் வரும். யாராவது தமிழ் வல்லுநர்கள் இதைத் தெளிவித்தால் நலமே.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மதுவதனன் மௌ.
11 பின்னூட்டங்கள்.
///வருத்தப்படா வாலிபர் சங்கம் + காதல் = வருத்தப்படா வாலிபர் சங்கக்காதல்///
?????? :)
// பாறைபோல உறுதியான ஆண்களின் பாதையை நீலத்திலும் இதயம் போன்ற மென்மையான பெண்களின் பாதையை சிவப்பிலும் குறித்திருக்கிறேன். //
திருத்தம்...
பெண்கள் எப்படி போறாங்கன்னுல்லாம் கவனிக்காம போற ஆண்களின் பாதையை நீலத்திலும், இதயம் போன்ற மென்மையான பெண்களின் பாதையை சிவப்பிலும், பெண்களை மட்டுமே பாத்துகிட்டு ப்பபரக்கான்னு கடக்கும் ஆண்களின் பாதையை மஞ்சளிலும் குறித்திருக்கிறேன்.
ஜிமெயில் தகவலுக்கு நன்றி....
"பெண்கள் மற்றும் புணர்ச்சி" என்னவோ வித்தியாசமா எழுதி இருக்கிறியள் எண்டு நினைச்சன்.
இந்த புணர்ச்சி விதி பற்றி முந்தி எங்கேயோ பின்னூட்டத்தில விளக்கினதா நினைவு.
வருமொழியில் இருக்கும் இரண்டாம் எழுத்து வல்லினமாயும் இடையினமாயும் இருத்தலே வித்தியாசமான இந்த புணர்ச்சிகளுக்கு காரணம். வதியை முழுக்க எழுதிறதெண்டா முழுப்பதிவு தான் போட வேணும்.
பென்களோட செக்காலிஜியையே நீங்க புரிஞ்சிக்கலியே.
நானு நிறய தரம் கவனிச்சிருக்கேன்.
அது ஏன்னா, முதல்ல அடிபடறது ஆம்பிளயாயிருந்தா இவங்க தப்பிச்சுடுவாங்க. வாகனம் வாற பக்கத்தையும் பொண்ணுங்க சடனா மாறும் திசையையும் கவனிங்க,
அத்துடன் நம்ம பக்கம் வர பொண்ணு நல்லாருக்கேனு திரும்பினா, அடுத்து ஆஸ்பத்திரிலதா கண்ணுமுளிக்கலாம்.
ஹாஹா
சுபாஷ்
hisubash.wordpress.com
படங்களும், செய்திகளுமாய், இடுகைகள் அருமை, வாழ்த்துக்கள்!
:)) :)) :))
//கடவையை //
கடவை என்றால்??
//ஜி said...
கடவை என்றால்??//
கடப்பதற்கான பாதை எனப் பொருள்படும்..
yellow cross = மஞ்சள் கடவை
எளிமையாக பல செய்திகள் . அருமையான வலை தளம். அப்பப்ப வர்றேன்.
கடவை போன்ற சொற்கள், புணர்ச்சி விகுதி போன்ற உரையாடல்கள் ஒரு எளிமையான பதிவரிடம் இருந்து வெளிப்படுவது என்னை வியப்பூட்டுகிறது. இது போன்ற சொற்களை தொகுத்துப் பதிங்களேன். என்னைப் போன்ற மாணவர்களுக்கு உதவியாய் இருக்கும்.
முகவை மைந்தன்,
அறிந்தது புரிந்தவைகளை ஏதோ எழுதுகிறேன். அவ்வப்போது தமிழ் பற்றியும் பதிகின்றேன். உங்களது பின்னூட்டங்களே எனக்கு ஊக்கி.
நன்றி..முயற்சிக்கிறேன்.
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ