நா

நியாபகம் ≠ ஞாபகம்

நான்கைந்து பதிவர்கள் நியாபகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். ஐயனார் அய்யனாராவதற்கும், ஔவையார் அவ்வையாராவதற்கும் ஒலிக்குறிப்பு ஒற்றுமையை காரணம் காட்டலாம் பிழையானதெனினும்கூட. ஞாபகம் எவ்வாறையா (எவ்வாறய்யா அல்ல) நியாபகம் ஆகிறது. உங்களது நீண்டகாலப் பழக்கம் நியாபகம் என்ற இல்லாத; தவறான சொல்லை ஞாபகம் என மாற்றக் கஷ்டப்படுத்தலாம். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கும் அவ்வாறே சொல்லிக் கொடுக்காதீர்கள்.

A for Apple

இந்தத் தலையங்கத்தில் நிறையப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நானும் மணியால் இந்தப் விளையாட்டுக்கு அழைக்கப்பட்ட பின்னர்தான் அது என்ன என்று ஆராயவிழைந்தேன்.

பின்னோக்கிப் பின்னோக்கிச் சென்று விளையாட்டின் ஆரம்பத்தைப் பிடிப்போமென்றால் முடியவில்லை. யாராவது இந்த A for Apple இன் ஆரம்பத்தைச் சொன்னால் நலம். எப்படி இந்த உபயோகமான விளையாட்டு ஆரம்பித்தது இப்போது எப்படி மாறியிருக்கிறது என அறிய அவா, அவ்வளவுதான். இரண்டு மூன்று நாட்களில் நானும் பங்குகொள்கிறேன்.

இந்த நல்ல விளையாட்டை நினைக்க ஆங்கிலப் பகிடி ஒன்று நினைவுக்கு வருகிறது.


Customer care இற்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது...
"உங்களது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் சொல்லுங்கள்"
"பெயர்...Appappa.."
"விளங்கவில்லை..."
"Appappa...a for apple, p for pineapple, p for pineapple,
a for apple, p for pine.. "
"ஐய..மொத்தமா எத்தனை ஆப்பிள், எத்தனை பைனாப்பிள்
என்று சொல்ல முடியுமா?"
- ரீடர்ஸ் டைஜஸட் உபயம்

காலுறை நாத்தம்

நாற்றம் என்பதுதான் எழுத்துவழக்காக இருப்பினும் நாத்தம் எனும் பேச்சுவழக்குக்கு வீச்சு அதிகம்தான் (நியாபகம் என்பது பேச்சு வழக்கல்ல). நாற்றம் பிடித்தவனே என்பதை விட நாத்தம் புடிச்சவனே என்பதில் effect இருக்கிறது.

சரி, இப்ப விடயம் என்னவென்றால் எங்கட பாதங்களில வழமையாக குஜாலா இருந்துகொண்டிருக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் நாங்கள் காலறையைப் போட்டால் வாற ஈரப்பதம் கண்டால் கூட்டமாச் சேந்து கும்மி அடிச்சு (எங்கட வலைப்பதிவர்கள் அடிக்கிறத விடக் கம்மிதான்) துர்நாற்றமுடைய சல்போரஸ் விளைவொன்றை வெளியேற்றுவார்கள் (says Doris J. Day, M.D., an assistant professor of dermatology at New York University).

இதை நீக்க என்ன செய்யலாம்... காட்டன் (cotton ) காலுறைகளையும், மூச்சுவிடக்கூடிய சப்பாத்துக்களையும் பாவியுங்கள் என்கிறார் அவர். அதாவது அணியும் சப்பாத்து காற்றை உள்வாங்கக் கூடிய பதார்த்தங்களால் (தோல் மற்றும் துணிவகை) ஆனதாக இருக்கவேண்டும். காலுறையை அணியும் முன் ஈரப்பதனுறிஞ்சும் பவுடர்களை பாதத்திற்குப் போட்டுக்கொள்ளலாம். இந்த நாத்தப் பிரச்சினை அதிகமாக உள்ளவர்கள் வாரத்துக்கு மூன்று இரவுகளில் தேயிலை ஊறிய நீரில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும். தேயிலையிலுள்ள டனிக் அமிலம் (Tannic acid) காலின் துர்நாற்றத்தைப் போக்கும். இதுக்கு மேலயும் பிரச்சினை எனின் வைத்தியர் ஒருவருடன் கலந்தாலோசிப்பதே சிறப்பு.


நாற்றம் என்பது உண்மையில் வாசத்தினை குறிக்கும் சொல். அந்தப் பூவின் நாற்றம் என்னை கவர்ந்திழுத்தது போன்ற வசனங்கள் தமிழில் இயல்பு. நாற்றத்திற்கு எதிர்ச்சொல் துர்நாற்றம். அவள் நாத்தம் புடிச்சவள் என்பதன் நிஜ அர்த்தம், அவளுக்கருகில் போனாலே வாசம் வீசும் என்பதுதான். ஆனா நாங்கள் சிறிது சிறிதாக அர்த்தத்தை மாற்றிவிட்டோம்.



மதுவதனன் மௌ.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

12 பின்னூட்டங்கள்.

இப்போது கூகிளிட்டு பார்த்ததில் நானும் இருமுறை பயன்படுத்தி இருக்கிறேன். ஞாபகமாக குறித்துக்கொள்கிறேன்..

பழமைபேசி August 29, 2008 at 11:25 PM

மது, நீங்க எழுதிய பகிடி நல்லா இருக்கு... கொக்கியில மாட்டுனதுக்கு ஒரு இரசீது, அதுவும் மேலதிகத் தகவல் குடுத்து அசத்தி இருக்குறீங்க.... நன்றி!

http://urupudaathathu.blogspot.com/ August 30, 2008 at 12:24 AM

கொக்கியில மாட்டுனதுக்கு ஒரு வாழ்த்து ..
ஆங்கில பகிடி ஜூபெர்..

Mathuvathanan Mounasamy / cowboymathu August 30, 2008 at 11:08 AM

முத்துலெட்சுமி-கயல்விழி வாங்கோ,
நல்லது...வேறுயாரும் அவ்வாறு பயன்படுத்தினாலும் அவர்களுக்கு சுட்டிக்காட்டத் தவறாதேங்கோ..

மதுவதனன் மௌ.

Mathuvathanan Mounasamy / cowboymathu August 30, 2008 at 11:10 AM

மணி வாங்கோ...

பகிடி சிரிக்கக்கூடியதா இருந்தாச் சரிங்க :))))

கொக்கியை அடுத்தபதிவில மூன்று பேருக்கு மாட்டிடுவோம்..;-))

Mathuvathanan Mounasamy / cowboymathu August 30, 2008 at 11:51 AM

ரவி,

சுட்டிக்கு நன்றி.

பிரச்சினை என்னண்டால்...நான் என்ர பயர்பாக்ஸில் அது மூடும்போது clear private data இனை setting ஆக குடுத்திருக்கிறன். கம்பனி பயர்பாக்ஸில்தான் முயற்சிக்கவேணும்.

Mathuvathanan Mounasamy / cowboymathu August 30, 2008 at 11:53 AM

உருப்புடாதது வாஙகோ,

ஆரம்பத்துல "நாங்க பதிவ வாசிக்கமாட்டோம் பின்னூட்டம் மட்டும் போடுவோம்" என்ற உங்கள் வியத்தகு கொள்கையைக் கண்டு நிறைய சிரித்திருக்கிறேன். இப்போ பதிவெல்லாம் வாசிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல...:))

ISR Selvakumar August 30, 2008 at 12:29 PM

//
"உங்களது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் சொல்லுங்கள்"
"பெயர்...Appappa.."
"விளங்கவில்லை..."
"Appappa...a for apple, p for pineapple, p for pineapple,
a for apple, p for pine.. "
"ஐய..மொத்தமா எத்தனை ஆப்பிள், எத்தனை பைனாப்பிள்
என்று சொல்ல முடியுமா?"
- ரீடர்ஸ் டைஜஸட் உபயம்
//
உபயம் ரீடர்ஸ் டைஜஸ்ட்ஆக இருந்தாலும் எடுத்துப் பயன்படுத்திய இடம் அருமை.
நான் என் மாணவர்களுக்கு இதைச் சொல்வேன்.
நன்றி!

http://urupudaathathu.blogspot.com/ August 30, 2008 at 3:06 PM

யாருங்க சொன்னது நான் பதிவ வாசிப்பேன்னு ..
இப்பவும் என்னுடைய முடிவில் மாற்றம் இல்லை.. மாற்றம் இல்லை என்பதை தாழ்மையுடன் சொல்லி கொல்கிறேன்.. சாரி கொள்கிறேன்

பழமைபேசி September 5, 2008 at 8:09 PM

சகபதிவர் நண்பர் மதுவை சில நாட்களாகக் காணவில்லை. தினம் ஒரு பதிவு பதித்து விட்டு காத்திருக்கிறேன். நண்பரைக் கண்டோர் தகவல் தர வேண்டுகிறேன்.

Mathuvathanan Mounasamy / cowboymathu September 5, 2008 at 8:17 PM

இருக்கிறேன்...கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. நேரம் ஒதுக்க முடியவில்லை. மீண்டு(ம்) வர சிறிது நாளாகும் போல் தெரிகிறது. வருகிறேன்.

நன்றி மணி,...:-))

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ