"என்ன நீங்கள், இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே கொஞ்சம் கூடநேரம் படுக்கவிடமாட்டீங்களா?"
மெத்தையில் படுத்தபடி கேட்டவளை நினைக்க கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. பின்னே என்ன, அதிகாலை ஐந்துமணிக்கே எழும்பி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட ஏழு மணிக்கு வெளியில் செல்லவேண்டிய தேவை இருந்ததால் வீட்டைச் சுத்தப்படுத்தி, ஃபிரிஜ்ஜில் இரவே ஊறப்போட்டிருந்த மாவில் எனக்கும் அவளுக்கும் போதுமான தோசை சுட்டு, சின்னதாய் ஒரு சாம்பாரும் செய்துவிட்டு இறுதியில காப்பி போட்டுக்கொண்டுவந்து அவளை எழுப்பினால் இப்படிச் சொல்கிறாள்.
ஆணாக நான் இவ்வளவு வேலைகளும் செய்கிறேனே ஒத்தாசைக்கு ஒரு உதவிகூடச் செய்யக் கூடாதா என மனம் நினைத்தாலும், அவள் வந்த காலத்திலிருந்து அப்படித்தான், நானும் நன்றாக இடம் கொடுத்துவிட்டேன். ஐந்து வருடம் காத்திருந்து காதலித்த முகம், அவள் என்ன சொன்னாலும் அவளது முகம் என்னை கீழ்ப்படிய வைத்துவிடுகிறதே. அவள் மேலுள்ள பாசம் வேறு அவளைக் கஷ்டப்படுத்த விடமாட்டேன் என்கிறது.
ஞாயிற்றுக்கிழமை எண்டாலே வழமையா இப்படித்தான். மெத்தையை விட்டு எழும்ப ரொம்ப நேரமாகிவிடும்.
"காப்பி போட்டுக்கொண்டந்து வைத்திருக்கிறேன், குடிச்சிட்டுப் படு"
"ஹையா...என்ர செல்ல அப்பா, ரொம்ப தாங்க்ஸ்"
என் செல்ல மகள் வைஷ்ணவியின் இந்தக் கெஞ்சல்களிலேயே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து வருடம் காத்திருந்து காதலித்து கரம்பிடித்த என் அன்பு மனைவி அபர்ணா தனது அழகிய முகச் சாயலிலேயே ஒரு குழந்தையைத் தந்துவிட்டு அன்றே உலகைவிட்டுப் போய் ஏழு வருடங்கள் ஆகிவிட்டன்.
அன்றிலிருந்து வைஷூ குட்டியே எனது வாழ்க்கை; அவளது செல்லக் கெஞ்சல்களே எனது சக்தி; உடல் களைப்பில் மனம் என்னதான் நினைத்தாலும் அவளுக்குக் கடமை செய்வதிலேயே எனக்குச் சந்தோசம்.
"அப்பா, காப்பி இண்டைக்கும் நல்ல டேஸ்ட், இன்னும் கொஞ்ச நாளில அப்பாவுக்கு இந்த வைஷூ காப்பி போட்டுத்தருமாம்"
நான் ஒன்றும் சொல்லவில்லை, குண்டுக் கன்னங்களைக் கிள்ளிவிட்டு புன்னகைத்தேன்.
பி.கு : அன்று ஞாயிற்றுக் கிழமை ஏழு மணிக்கு வெளியில் போகவேண்டியதேவையாலும் மேட்டர் கொஞ்சம் சீரியஸா இருந்ததாலயும் கொஞ்சம் சலிப்பு வந்திருந்தது.
- மதுவதனன் மௌ. -
16 பின்னூட்டங்கள்.
குட்டிக் கதை எழுதுவம் எண்டு இப்போதான் ஆரம்பிச்சிருக்கிறன். பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்க. இல்லாட்டி விட்டுடுவோம். :-)
மதுவதனன் மௌ.
நல்லா இருக்கு...
தொடர்ந்து எழுதுங்க...
வாழ்த்துகள்...!!!
(பின்னூட்டம் போட்டு ஒரு எழுத்தாளர உருவாக்குவம் :D)
குட்டிக் குட்டிக் கதையாத் தொடர்ந்து எழுதுங்க..
நல்லாயிருந்திச்சு..
அருமை :)
இயல்பாக சொல்லத் தெரிந்தவருக்கு, நிறைய எழுத என்னத் தடை?..
வாழ்த்துக்கள்.
seemachu, ramya ramani வருகைக்கு நன்றி.
ஜீவி வாழ்த்துக்களுக்கு நன்றி
Kadhai nalla vanthu irukku.oru pakka kadhai maathiri. muyarchchi thodarungal
வாங்கோ மது,
நன்றி
முயலுவோம்.
மதுவதனன் மௌ.
வாழ்த்துக்கள் மதுவதன் கதை படிக்க சுவாரசியமா இருக்கு ஆனாலும் ... சாயல்... நோக்கம்... ம்ம்ம்... யோசிக்கோனும்......
எஸ்.சத்யன்
nalla kadhai :)
வாங்கோ எஸ்.சத்யன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
இறுதியில என்ன சொல்ல வாறீங்கள் எண்டு விளங்கவில்லை...;-)
வாங்கோ அநாமதேயம்,
பிடிச்சிருந்தா சரி :-))
மது,
நல்லா இருக்கு குட்டிக்கதை. நீங்கள் நிறைய எழுதலாமே.
அனுஜன்யா
அனுஜன்யா வாங்கோ,
எழுதவேணுமெண்டு விருப்பமாயிருக்கு நேரம்தான்..:-((((
அய்யா!!அருமையான திருப்பம்..வரவேற்கத்தக்கது....கதை எப்படி எழுதுவது..எனக்கும் ஆர்வமாக இருக்கிறது...சொல்ல்ய்ங்க அண்ணே!!!
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ