நா

பாலியல் வல்லுறவும் ஆண்களும் (மூன்று)

நம்பிக்கை ஐந்து : கர்ப்பம் தரிக்கும் அபாயம் இருப்பதைத் தவிர, பெண்களைப்போல ஆண்கள் தங்கள் மீதான பாலியல் வல்லுறவில் பாதிக்கப்படுவதில்லை.விளக்கம் : பால் ரீதியான பாதிப்பாக பெண்கள் கர்ப்பம் தரித்தலை தவர்த்து, ஆண்களும் தங்கள் மீதான பாலியல் வல்லுறவின்போது பலவழிகளில் பாதிக்கப்படுகிறார்கள். சிலவேளைகளில் பெண்ணிலும் அதிகமாக.

ஆணொருவர் ஆணை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கும்போது மிக அதிகமான வன்முறை பாவிக்கப்படுகிறது. பெண்கள் மீதானதைப் போலன்றி ஆண்கள் மீதானதில் ஆயுதங்களும் பாவிக்கபடுகின்றன. அதிக இடங்களில் பலர் சேர்ந்து ஒரு ஆணை வல்லுறவுக்காளாக்குவது அதீத பாதிப்பை ஏற்படுத்துகின்றது பல வேளைகளில் அது தற்கொலைக்கான முடிவையும் தந்துவிடுகிறது.

ஆண்கள் மீதான வல்லுறவு அதிகமாக குதவழியினூடானதாக இருப்பதால் விளைவாக குதவழி உட்கிழிவு அல்லது காயம் ஏற்படுகிறது. இது எச்.ஐ.வி தொற்றுக்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் Rape trauma syndrome என்படும் வல்லுறவின் பின்னான அவரைச் சுற்றியிருப்பவர்களையும் தொடர்ந்து கவலையிலாழ்த்தும் விளைவுக்கு உள்ளாக நேரிடுகிறது. Rape trauma syndrome http://en.wikipedia.org/wiki/Rape_trauma_syndrome ஆனது ஆண் பெண் இருவருக்குமே பொதுவான விளைவுகளையே தருகின்றது. இது பற்றிப் பிறிதொரு பதிவில் பார்ப்போம்.

தொடர்ந்து செல்லும் விளக்கங்களுக்கிடையில் அனுபவம் ஒன்றையும் பார்த்துவிடுவோம்.

எனது நண்பரொருவன் என்னிலும் ஆறேழு வயது கூடியவர், அவர் தனது பதின்ம வயதில் இருக்கும்போது காவற்துறையினரால் புலிச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் சிறையிலிருந்தவர். அதன்போது அவர் முதன்முறை சிறையிலிந்த சிலரால் வல்லுறவுக்காளாகியிருக்கிறார். இரண்டாம் முறையும் காவலாளியிடம் பணம் கொடுத்துவிட்டு இவரது சிறைக்கூண்டுக்குள் வெளி நபர் ஒருத்தர் வரும்போது இவர் வேண்டுமென்று அணிந்திருந்த காற்சட்டையுடன் மலம் கழித்துவிட்டார். வந்தவர் இவரை நையப்புடைத்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார். (அவர் இப்போது என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் இப்பதிவுக்குத் தேவையில்லாததாகையால் தேவைப்படும்போது இன்னொரு தருணத்தில் கதைக்கிறேன். ). அதாவது ஆண்கள் மீதான ஆண்களின் வல்லுறவானது அதிகமாக குதவழியை நோக்கியதாகவே இருக்கிறது.


ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவானது சிறைக்கூடங்கள், இராணுவக் கட்டமைப்புக்கள், விடுதிகள் போன்ற இடங்களில் அதிகரித்த நிலையில் உள்ளன.

சரி அடுத்த நம்பிக்கையையும் அதற்கான விளக்கத்தையும், இருந்தால்
அதுசம்மந்தப்பட்ட அனுபவங்களையும் இன்னொரு பதிவில் பதிகிறேன்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

8 பின்னூட்டங்கள்.

கனககோபி November 11, 2009 at 4:30 PM

hyperlink எழுத்துக்களை வேறு வர்ணத்தில் மாற்றலாமே?

Real men don't rape என்பது உண்மை...

மற்றும்படி, சமூகத்தில் பெரிதாக கதைக்கப்படாத விடயத்தை தொடர்ந்து வெளிப்படையாக பதிவிடுவதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

வேந்தன் November 11, 2009 at 4:30 PM

முதல் பாகங்களின் தொடுப்பை பதிவின் ஆரம்பத்தில் கொடுத்தால் நல்லாயிருக்கும்...

யோ வொய்ஸ் (யோகா) November 11, 2009 at 4:49 PM

யாரும் எழுதா பொருளை எழுத துணிந்ததற்கு வாழ்த்துக்கள்.

தொடருங்கள்

நிமல்-NiMaL November 11, 2009 at 7:12 PM

நல்ல பயனுள்ள பதிவு...

பதிவெழுத லீவு போட்டு வீட்ட நிக்கிற ஒரு ஆள் நீங்க தான் ;)

மதுவதனன் மௌ. / cowboymathu November 11, 2009 at 7:49 PM

@கனககோபி,

சரி அடுத்த இடுகைகளில் கவனித்துப் போடுகிறேன். :)

@வேந்தன்
தமிழ்மணம் போன்று திரட்டிகளில் முதலில் போடும் சில வாக்கியங்களையே காட்டுவதால் அவற்றைக் கடைசியில் போட்டுவி்ட்டேன். ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பார்கள்தானே என்று. உங்கள் கருத்துக்கு நன்றி வேந்தன்.

மதுவதனன் மௌ. / cowboymathu November 11, 2009 at 8:41 PM

@யோ,

நன்றி.. தொடர்ந்து இடைக்கிடைதான் எழுத முடியும். என்மேலான பார்வையையும் பார்த்துக்கொள்ளத்தானே வேண்டும் :))

@நிமல்,
யோவ்... பதிவுகள் ஏலவே எழுதிவைத்திருக்கிறன். லீவுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லைங்கோ.. :D

ஆதிரை November 11, 2009 at 9:26 PM

தொடரும் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

இந்த வகைப் பதிவுகளால் உங்களுக்கு நல்ல இன்கமிங் என்று கதை வருகுது.

இன்கமிங் தொலைபேசி அழைப்புக்கள்... :P

கார்த்தி November 15, 2009 at 2:31 AM

இந்த 3வது பாகம் எப்ப வரும் என்று பாத்துக்கொண்டு இருந்தோம். ஒரு மாதிரி வந்திட்டுது. சும்மா அரைச்ச மாவையே அரைக்கும் எங்கள் போன்ற பதிவரிலிருந்து வேறுபடுகின்றீர்கள் நீங்கள். இன்றிலிருந்து உங்களையும் தொடர்கின்றேன்..
பதிவுகள் தொடர்ந்து களைகட்டட்டும்..
பயனுள்ள பதிவு... பட்(But) என்னெண்டாலும் "A" grade தான் கொடுப்பம். :)

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ