தேவையான பொருட்கள் :-
உழுத்தம் பருப்பு 100 கிராம்
தே.எண் or ம.க.எண் 1/2 போத்தல்
உப்பு 1 மே கரண்டி
காலிமிரிஸ் 3 தே.கரண்டி
பெ,சீரகம் 1 தே.கரண்டி
கறிவேப்பிலை 15 நெட்டி
உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ள வேண்டும். மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேர்க்கவேண்டும். கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு உழுத்தம் பருப்பைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கலக்க வேண்டும். ரொட்டிப் பதம் வரும்வரை அடித்துக் குழைக்கவேண்டும். அதன்பின்பு லட்டு உருண்டையளவு உருட்டி ஒரு தட்டில் போடுங்கள். பிளாஸ்ரிக் மூடி (வடையளவு) ஒன்றை எடுத்து அதன் மேல் துளி எண்ணை பூசி உருண்டையை வைத்து இரு கைப் பெருவிரல்களால் தட்டையாகச் செய்யவேண்டும். செய்யும்போது வலது பெருவிரலால் எண்ணையில் தொட்டு உருண்டை மேல் தொட்டுவிட்டுத் தட்டையாக்கினால் சுகமாகத் தட்டுப்படும். தட்டியதை ஓர் தட்டில் ஒன்றுடன் ஒன்று முட்டாமல் வைக்கவேண்டும். முழுவதும் செய்த பின்பு தாச்சியில் எண்ணையை விட்டு மொறுகல் நிலை வரும்வரை பொரித்து எடுக்கவும். (சாமான்கள் போடும் போத்தல்களின் மூடி நல்லது) உப்பு, உறைப்பு போதாது விட்டால் அடுத்த தடவை செய்யும்போது கூடுதலாகச் சேர்க்கலாம். தந்த அளவில் அரைவாசியையும் முதலில் செய்யலாம். உப்பு மேசைக்கரண்டியால் மிகவும் கும்பலாக எடுக்கவேண்டாம்.
நன்றி.
அண்ணா வடை சுடுகிறார்.
இந்த வடை சுடும் முறையை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது சந்தோசமும், சிரிப்பும் வரும்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu
14 பின்னூட்டங்கள்.
Super....
பருத்தித்துறை வடை...எனிடைம் பேவரிட்....
சென்னையில்க்கூட, சிலோன் தட்டைவடை என்று இப்போது சக்கை போடு போடுது!
அங்கே குறிப்பாக கிடைக்கும் இடம் கொட்டிவாக்கம் சிக்னல் கோணர்ல இருக்கிற கடையில்.
உண்மையிலேயே இரண்டாவது பதிவர் சந்திப்பின் அந்த வடை அருமையாக இருந்தது. வடை சுடும் படங்களையும் இணைத்திருக்கலாம். நாங்கள் மட்டும் பார்த்தால் போதுமா? ;-)
செஞ்சு பாத்திட்டு சொல்லுறன்.
ஒரு குழப்பம்: கண்டிப்பாக கையால தான் கலாக்க வேணுமா? ஏற்கனவே அன்னாசிச்சாறு எஃபெக்ட் தீரல?
வுவும்ம்.. என்னோட விருப்பமான தீன்பண்டம். வீட்டில் சுட்டால் அரைவாசியை சாப்பிட்டுமுடிப்பது நான்தான். அதன் மொருமொரு சுவையே தனிதான்.
சுபாங்கு, வேண்டுகையை ஏற்று அண்ணா வடை சுடும் படத்தை சேர்த்திருக்கிறேன்.
என்ன திடீரென்று சமையல் குறிப்பு?
ஓ, காலம் நெருங்கிவிட்டது தானே... :P
இரண்டாவது பதிவர் சந்திப்புக்கு சுட் வடை அருமையாக இருந்தது, பலரும் பாராட்டியிருந்தார்கள்.
நான் bookmark செய்துகொள்கிறேன், அம்மா இல்லாத ஒரு நாளில் முயற்சிப்போம். ;-)
// ஒரு குழப்பம்: கண்டிப்பாக கையால தான் கலாக்க வேணுமா? ஏற்கனவே அன்னாசிச்சாறு எஃபெக்ட் தீரல? //
இப்ப சொல்லுவீங்க தானே இன்னைநாள் அதிகாரபீடத்தலைவர் அவர்களே?
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே அன்று வடை ருசித்தது ஞாபகம் வருதே..
செய்து பார்க்க வேண்டும், பின் விளைவுகளுக்கு யார் பொறுபேற்பது?
// பின் விளைவுகளுக்கு யார் பொறுபேற்பது? //
வைத்தியர். :-)
அட சே வடபோச்சே!!!
நீங்கள் சுட்டதென்று தெரிந்திருந்தால் இந்தமுறையும் உங்களுக்கு ஓடர் தந்திருப்போமே...
ஆனாலும் கடந்தமுறை வடை நல்ல சுவையாக இருந்தது
சுவையாக இருந்தது..
நிரூஜா அண்ணே,
இந்த விசியம் முதலே தெரிஞ்சிருந்தா, மது அண்ணன்மாரைப் பிடிச்சு வடை சுட்டிருக்கலாம்.. வட போச்சே..:P
சுவையான விடயம் பற்றிச்
சுவையான பதிவு.
பருத்தித்துறை வடை என்றால் சும்மாவா?
எனது Facebook ல் பகிர்ந்து கொள்கிறேன்.
ம்ம்ம் நல்லாத்தான் பருத்துறை வடை சுட்டிருக்கிறியள் போங்கோ
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ