எல்லோருக்கும் இந்தப் பிரச்சினை வரும் எண்டில்லை. ஆனால் வந்தால் என்ன செய்யிறது? எங்கேயோ ஒரு சந்தர்ப்பத்தில உங்களுக்கும் உதவும் எண்டு சொல்லி வைக்கிறன். அல்லது இந்தத் தீர்வை வேற ஒரு சந்தர்ப்பத்தில நீங்கள் பாவிக்கக்கூடியமாதிரியும் இருக்கும்.
என்னெண்டா அண்டைக்கு வேலைத்தளத்தில் Gmail இல் Buzz ஐப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு புதிய பஸ் வந்தது. கீழே சாடை மாடையாப் போட்டிருக்கிறன். சொடுக்கிப் பாருங்கோ.
அந்த மேலே உள்ள பஸ் NSFW. அப்ப வீட்டில வச்சுப் பார்த்துக்கொண்டே இருக்கலாமோ எண்டெல்லாம் கேக்கக்கூடாது.
பார்த்துக்கொண்டிருந்தது வேலைத்தளத்தில். பக்கத்ததில், பின்னால எல்லாம் வேலை செய்யிறாக்கள் இருக்கினம். பொம்புளைப் பிள்ளைகளும் இருக்கினம். படாரெண்டு கீழே ஸ்குரோல் செய்திட்டன். (மேசைக்குக் கீழே குரோள் செய்யேல). அதையும் சொடுக்கிப் பாருங்கோ கீழே.
கொடுமை. Gmail காரன்கள் இன்பொக்ஸூக்குத் திருப்பிப் போகவோ அல்லது Buzz இல் இருந்து வெளியில வரவோ ஒரு வழியும் வைக்கேல. மேல ஸ்குரோல் செய்துதான் போகவேணும். மேல ஸ்குரோல் செய்தால் ஹீ ஹீ.
என்ன செய்யலாம்? உடனே நான் செய்தது. மேல Address Bar இல் உள்ள buzz என்பதை inbox என்று மாற்றிவிட்டு Enter செய்ததுதான். :)
https://mail.google.com/mail/u/0/?hl=en&shva=1#buzz இனை
https://mail.google.com/mail/u/0/?hl=en&shva=1#inbox என மாற்றிவிட்டு Enter செய்தேன்.
உங்களுக்கும் எங்கேயாவது உதவும். சும்மா குறிச்சு வச்சுக்கொள்ளுங்கோ.
பி.கு : அசோக்பரனின் பெயரில் சொடுக்கியிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
inbox ற்குப்பதிலாக mbox என்றுபோட்டிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
பிறகுதான் பார்த்தேன் gmail shortcut 'g then i' இனைப் பாவித்திருந்தாலும் நேரடியாக இன்பொக்சுக்குப் போயிருப்பன்.
பதிவில போட்டுப் பப்ளிக் ஆக்கியிருக்கிற பஸ்ஸை வேலைத்தளத்தில மட்டும் பாக்கேலாமப் போச்சோ உனக்கு, என்று கேட்பவர்களுக்கு - அது ஒரு அசையும் படம். படத்தைப் பார்த்தால் கொஞ்சநேரம் அசையாமல் நிப்பியள் :D
பிரியமுடன்,
மதுவதனன் மௌனசாமி - cowboymathu
15 பின்னூட்டங்கள்.
அட!, பஸ்ஸில் பிரச்சினை என்று தலைப்பைப் பார்த்தவுடன் பஸ்ஸில சீட் இருந்தும் நின்றுகொண்டு வந்த கதை ஞாபகம் வந்து, அவங்கள் இந்தமுறை கையைப்பிடிச்சு இழுத்து இருத்திட்டாங்களோ என்று நினைச்சுட்டன். இது அது இல்லை ;-)
NSFW, OWC எல்லாம் போட்டால் பிரச்சினை இல்லை, இல்லையா மது அண்ணே?
நானும் உதே பஸ்ஸால அப்பாட்ட மாட்டுப்படப் பாத்தனான். ;-)
கொடுமை கொடுமை எண்டு ஒரேயடியா scroll பண்ணீற்றுப் போய் ஒரு இடத்த விட்டா அதில இத விட மோசமா ஒரு jpeg படம்.
ஏதோ கஷ்ரப்பட்டு சமாளிச்சிற்றன்.
தகவலுக்கு நன்றிங்ணோவ்....
எனக்கும் உதே பிரச்சினைதான் நடந்தது. நான் வேற ஒரு buzz புரொபைலக் கிளிக் பண்ணி பிறகு Inboxக்கு வந்தனான்..ஹிஹி
மகாஜனங்களே மது அண்ணாவும் பதிவர்தான் நம்புங்கோ..:P
தகவலுக்காக,
page up, page down பட்டன்களை உபயோகித்துப்பாருங்கள். அது கீழே/மேலே செல்ல உதவும்.
ஒரேடியாக கடைசிக்குச் செல்லவேண்டுமெனில் END, கீழே இருந்து ஒரே அமுக்கில் மேலே செல்ல வேண்டுமெனில் HOME பட்டன்களை உபயோகிக்கவும்.
ஹி ஹி ஹி...
ஆனால் இப்படிப்பட்ட நேரங்களில் பரபரப்பாகி இதெல்லாம் மறந்து திண்டாடுவேன்.
:)
I will just click on X-close on the right top corne
தேவையான தகவல்தான். நம்மளுக்கும் இந்தப்பிரச்சினை வரலாம். பகிர்வுக்கு நன்றி.
பதிவர் சந்திப்பு நடக்கப்போற நேரத்தில் மதுவும் பதிவர்தான் என்பதை நிருபிக்கத்தான் இந்தப்பதிவு போல..
சுபாங்கன் :: நானும் அதே எண்ணத்தோடதான் வந்தேன்.
பவன்: ம்ம்
ஜனா அண்ண: உங்களுக்குமா??
தகவலுக்கு நன்றி மது
சந்திப்போம்
அண்ணே, Browser இல இருக்குற Back Button ஐ அமுக்குங்கோ.. :)
//(மேசைக்குக் கீழே குரோள் செய்யேல)//
அலுவலகம் எண்டதாலயா இருக்கும் ;) (பேய்ச்சிரிப்பு)
இப்படியும் இணையத்தில படங்கள் இருக்குதோ?
சுபாங்கு,
இப்போதெல்லாம் அந்த அருமையான பேருந்துப் பயணத் தருணங்களை இழந்து நிக்கிறன். உந்துருளியில் போய்வாறதால பேருந்துக்கதைகளுக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போட்டுது.
Buzz இல் NSFW, OWC போடுவதில் அர்த்தமில்லை என்ன :)
==============================
கங்கு
நல்லவழி g+i விசைகளை அழுத்துவதுதான்
==============================
என்பவன்
இப்பிடி பதிவர் சந்திப்பு வாற நேரங்களிலதான் பதிவும் வருது. இதுக்காண்டியே மாதத்துக்கு இரண்டு,மூண்டு சந்திப்பு வச்சா நல்லாயிருக்கும் :D
==============================
பெஸ்கி வாங்கோ,
தகவல் நல்லாயிருக்கு.
ஆனால் Page Up இனை அழுத்திவிட்டால் திருப்பியும் அந்தப்படத்துக்குத்தானே போகும் :(
நான் Buzz இனை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. :D
================================
வாங்கோ ராம்ஜீ,
Browser இனையே மூடுமளவுக்கு இது பிரச்சினைஇல்லைத்தானே. :).
ஆக்க கொடுமை எண்டா, Browser என்ன கணினியையே மூடிடுவோமில்ல. :D
(நானும் உங்கள் பின்னூட்ட ரசிகர்களில் ஒருத்தனாக்கும் :D)
==============================
வாங்கோ ஜனா அண்ணன்,
பொது இடத்தில் இணையம் பாவிச்சா வாற பிரச்சினைதான். ஞாபகம் வச்சுக்கொள்ளுங்கோ.
==============================
வாய்யா சிதறல்கள் ரமேஷ்,
சந்திப்போம்.
தங்கச்சி அக்கா வாங்கோ,
ஹீ ஹீ.. சிம்பிளான தீர்விருக்க ஏதேதோ எல்லாம் முயன்றிருக்கிறன்.
எண்டாலும் ஏன் உந்த Back பொத்தான் பாவிக்கேல எண்டது ஒரு விடயம்.
Browser களில் Tab என்ற விடயம் வந்தபின் தேவையான சுட்டிகளை புதுப்புது Tab களில் திறப்பதால் எனக்கு உந்த Back பொத்தானின் தேவை எப்போதும் இருப்பதில்லை. அல்லது அதைப்பற்றிய பிரக்ஞை இருப்பதில்லை. ஆனாலும் நீங்கள் சொன்னது சிம்பிள் தீர்வு :D
=========================
மயூரன் அண்ணா,
ஹீ ஹீ.. Buzz இல் இருந்ததப் போல உண்மையா இருந்தாலாவது குரோள் செய்வதில அர்த்தமிருக்கும் என்ன LOLZ.
========================
வாங்கோ பச்சப்புள்ளை அரிவாள் யோ,
விட்டா நூடுல்ஸ் சாப்பிடதுக்கா?
அரிவாள் வெட்டுமா? எண்டெல்லாம் கேப்பியள் போல. :D
என்ன குஞ்சு உங்கடை வழக்கமான கதை என நினைத்து ஆவலுடன் நித்திரையால் எழும்பி வாசித்தால் இப்படிக் காலைவாரிவிட்டீர்களே. NSFW என்றால் என்ன? நானும் உப்படியான பஸ்சுகளுக்கு போவதில்லை.
ஆஹா தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன் . நானும் முயற்சித்தேன் இதை ஆனால் சரியா வரலையே !?
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ