பதிவர் சந்திப்பு
இந்த முறையும் பதிவர் சந்திப்பு மிக நேர்த்தியான முறையில நடாத்தப்பட்டிருக்கிறது. கடந்ததை விட சந்தித்தத அனைவருக்குமிடையில் ஏதோ ஓர் ஒற்றுமை சம்மந்தப்பட்ட பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தெரிகிறது. ஆனாலும் சந்திப்பின் இறுதியில் பதிவர்கள் தமக்குள் கலந்துரையாடவென தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் பதிவர்கள் அவ்வளவாக அளவளாவவில்லை. செய்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். அடுத்த அதிகார மையம் இதனைக் கவனிக்குமா?
காவற்துறையும் கூட்டங்களும்
பதிவர் சந்திப்பு நடந்துகொண்டிருந்த வேளை காவற்துறை வந்திருந்து. சிஐடியும் வந்திருந்தது. நிச்சயமாக யாரோ ஒருவர் எமது சந்திப்புக் குறித்து அவர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். வந்தவர்கள் தமிழ் ஆக்கள் சந்தித்துக் கதைப்பதில் கூட ஆர்வம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சந்தேகப்பட்டுக் கேட்டது 'பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்துக் கதைக்கிறீர்களா' என்பதே. சிவப்புத் துண்டு பக்காவாத்தான் அசையுது.
மேலதிக வாசிப்புக்கு http://aiasuhail.blogspot.com/2010/12/blog-post_22.html
மேலதிக வாசிப்புக்கு http://aiasuhail.blogspot.com/2010/12/blog-post_22.html
வெற்றி TV
இலங்கையில் ஒளிபரப்பாகும் வெற்றி TV இற்கு என்ன நடந்தது. ஆரம்பத்தில் TBO நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது தனியே சினிமா பாடல்களும் படங்களுமாக மட்டும் ஒளிபரப்புகிறார்கள். அதுவும் ஒவ்வொரு நாளும் அதே பாடல்கள்.
இஸ்லாம் - கிறிஸ்தவம்
இணையத்தில் உலவும்போது சுவாரசியமாக இருந்தது. மேலதிகமாக வாசிக்கவில்லை. இஸ்லாம் - கிறிஸ்தவம் - யூத மதஙகள் மூன்றும் பல ஒரே இயல்புகளைக் கொண்டிருக்குதாம். இஸ்லாம் - கிறிஸ்தவ மதப் பெயர்களின் ஒற்றுமையைப் பாருங்கள்
இப்ராகிம் - ஏப்ரகாம்
பாத்திமா - பற்றிமா
ஈசா - ஜீசஸ்
மூசா - மோசஸ்
தாவூத் - டேவிட்
யூசுப் - ஜோசப்
மேலதிகமாக வாசிக்கவேண்டும்.
இப்ராகிம் - ஏப்ரகாம்
பாத்திமா - பற்றிமா
ஈசா - ஜீசஸ்
மூசா - மோசஸ்
தாவூத் - டேவிட்
யூசுப் - ஜோசப்
மேலதிகமாக வாசிக்கவேண்டும்.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu
15 பின்னூட்டங்கள்.
This comment has been removed by the author.
பதிவர் சந்திப்பு: ஆமாம். படமெடுக்க தொடங்கியதன்பிறகு அளவளாவுவதை மறந்துவிட்டோம். ;-)
காவல்துறை: ஹி ஹி... எனக்கு உந்த விசயம் பிறகு தான் தெரியும்.
நாட்டின்ர காவல்துறை வாழ்க.
வெற்றி: :D
நான் வெற்றி வானொலி தான் கேக்கிறனான். ;-)
மதங்கள்: உங்கள் பேஸ்புக் ஸ்ரேற்றஸில் பார்த்தேன்.
பெயர்களில் மட்டுமா மதங்கள் ஒற்றுமை? ;-)
என்ன சின்னனாக் கிடக்குது, பதிவு? :P
This comment has been removed by the author.
ஜஸ்டு மிஸ் ஆகிடிச்சு.. ;)
உங்கள் இரண்டாவது விடயம் தான் சிந்திக்க வைக்கிறது..
சின்மயன், எங்கயோ போட வேண்டிய பின்னூட்டத்த இங்கே போட்டுட்டீங்கள் போல ஹீ ஹீ..
கங்கோன்,
வாசிக்கிறாக்களும் இலகுவா இருக்கட்டுமே என்று சின்னனாப் பதிவு. :)
அதுவும் பதிவர் சந்திப்பு முடிந்து அதைப் பற்றி சின்னனாகவாவது எழுதாட்டி...
ஓம் சின்மயன்,
அதன் பின்னரான அரசியல் சிக்கலுக்குரியது. நீண்ட கால இலக்குக் கொண்டது.
நேரமாகிவிட்டதால் பலர் கிளம்பத்தொடங்கிவிட்டார்கள். இருந்தவர்களோடு ஓரளவு உரையாடக் கிடைத்தது. இரண்டாவது விடயம்தான் சிந்திக்க வைக்கிறது
பதிவர் சந்திப்பு - சந்திப்பிற்கு வராதது கவலைதான் என்றாலும், கிரிக்கட் போட்டியன்று உங்களை சந்தித்தது மகிழ்ச்சியே
காவற்துறையும் கூட்டங்களும் - கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது, எம்மை கவனிக்கிறார்கள்.
வெற்றி TV - எங்களுக்கு வெற்றி தொலைகாட்சி ஒளிபரப்பு இல்லை, வெற்றி வானொலி மட்டும்தான், அதுவும் இப்ப கொஞ்ச நாளா இல்லை, ஏனென்று தெரியவில்லை.
இஸ்லாம் - கிறிஸ்தவம்-
இனி வாசிக்க வேண்டும்
அருமை மது அருமை.. இவற்றுக்கு என்னிடம் பதிலில்லை...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)
சிலபேர் அரசாங்கத்தை உணர்ச்சி வசப்பட்டு விமர்சித்தாலும், ஐயா... பேசும்போது இறுதியாக அரசாங்கத்திற்கு சாதகமாக ஒரு பிட்டு போட்டது ஏன் என்று இப்ப புரியுதில்லை???? நாம ரொம்ப அலேட்டப்பா..
புதிய அதிகார மையத்தின் தலைவர் நீருஜாவின் திறமையைச் சோதிக்கவே காவல்துறை வந்ததாக நினைக்கின்றேன்.
பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளமுடியவில்லை என்ற கவலையுடன் நேர வித்தியாசத்தால் நேரலையையும் தப்பவிட்டுவிட்டேன்.
மதுயிசம் இல்லாத நாவசைவு
//அவர்கள் சந்தேகப்பட்டுக் கேட்டது 'பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்துக் கதைக்கிறீர்களா' என்பதே.//
ஆஹா அந்தளவுக்குப் போச்சா....?
பதிவர் சந்திப்பு - ம்...! முன்னைய கலந்துரையாடல் தொகுப்புகள் சற்றே கூடுதலான நேரத்தை எடுத்துக்கொண்டன.
காவற்துறையும் கூட்டங்களும் - ஹிஹி! கோபி முதலில் வந்து என்னிடம் தான் சொன்னார். நான் ஒரு மாதிரி லோசன் அண்ணாவிடம் விசயத்தை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிட்டன் ;)
வெற்றி TV - அப்படியா, முன்னர் அடிக்கடி பார்க்க கிடைத்தது. இப்போது ஆணி புடுங்க நிறையவே கிடைப்பதால் தொலைக்காட்சி பக்கம் போவதே கிடையாது.
இஸ்லாம் - கிறிஸ்தவம் - முகப்புத்தகத்தில் பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில், வெவ்வேறு காலப்பகுதியில் தோன்றிய இரு மதங்கள் தானே.
ப.ச - ம்ம்.. ஆனால் நான் ஓரளவுக்குக் கிடைத்தவர்களுடன் பேசிக் கொண்டேன்..
கா.து - ம்ம்.. பதிவிலும் சொல்லியுள்ளேன்.
வெற்றி - சில மாற்றங்கள் நடைபெறுகின்றன. புது வருடத்திலிருந்து ஒலி,ஒளி இரண்டுமே புதிய,நல்ல மாற்றங்களுடன் வரும்.
(ஒரு மின்னஞ்சலிலேயே கேட்டிருக்கலாமே?)
மதம் - ம்ம்ம் Facebook status பார்த்தேன்
வாங்கோ சுபாங்கு, யோ, சுடுசோறு, ஜனா அண்ணா, மாமா, சுஹைல், இன்னைநாள் அதிகாரபீடத்தலைவர் நீருஜா, முன்னைநாள் அதிகாரபீடத்தலைவர் லோஷன்.
நன்றி அனைவருக்கும்.
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ