நா

உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா நிலையில் ரேடியோ வேலைசெய்யாது.

அதற்குரிய மாற்று வழி கீழே வழங்கப்பட்டுள்ளது.

1. உபுண்டு இயங்குதளத்தில் Rythembox Music Player திறவுங்கள்


2. அதில் புதிய இணையத்தள  ரேடியோ ஒன்றினைத் திறவுங்கள்

  


3. வரும் பெட்டியில் http://vettrifm.net:8140 என்பதைத் தட்டச்சி add பொத்தானை அழுத்திவிடுங்கள்


பின்னர் Rythembox Music Player இல் Radio பகுதிக்குச் சென்று நீங்கள் சேர்த்துக்கொண்ட சுட்டியைப் பாருங்கள். அதன் மேல் இரட்டைச்சொடுக்குங்கள். இப்போது வெற்றி உங்கள் காதுகளில்...


Vettr FM : http://vettrifm.net:8140
Shakthi FM : http://www.priyan.ca:8000

UPDATE :  தற்போது  வெற்றி Fm இற்காக இந்தச் சுட்டியை பயன்படுத்துங்கள் http://76.73.21.74:8140

மேலுள்ள சுட்டிகள் எதிர்காலத்தில் மாறுபடலாம். இன்றைய தேதியில் இவை வேலை செய்கின்றன.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
- CowboyMathu

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

10 பின்னூட்டங்கள்.

யோ வொய்ஸ் (யோகா) January 13, 2011 at 6:54 PM

உபுண்டு பற்றிய சில சந்தேகங்கள் உள்ளன. உங்களிடம் தீர்த்து கொள்ளலாமா?

நான் உபுண்டுவிற்கு ரொம்ப புதியவன்...

ஆதிரை January 13, 2011 at 6:56 PM

ஆஹா...

நன்றி!!! நன்றி!!!

யோ வொய்ஸ் (யோகா) January 13, 2011 at 7:08 PM

its working thanks madhu

பனித்துளி சங்கர் January 13, 2011 at 7:18 PM

தகவலுடன் தந்த விளக்கத்திற்கு நன்றி

K. Sethu | கா. சேது January 13, 2011 at 8:54 PM

பயன்மிக்கத் தகவல். நன்றி.

கா. சேது

கன்கொன் || Kangon January 13, 2011 at 9:45 PM

எதிர்காலத்தில தேவைப்படலாம், ஞாபகம் வச்சிருக்கிறன். :-))))

ஷஹன்ஷா January 13, 2011 at 9:52 PM

புதிய தகவல்...புதிய விடயம்...புதியவனுக்காக....

அருமை..

பதிவுலகு பற்றிய சந்தேகங்கள் பற்றிய மின்மடல் அனுப்பியுள்ளேன்....

ARV Loshan January 13, 2011 at 10:25 PM

நல்ல பகிர்வு நன்றி..
ஆனால் எமது உத்தியோகபூர்வ இணையத்தளம்
www.vettri.lk

Mathuvathanan Mounasamy / cowboymathu January 13, 2011 at 11:33 PM

யோ,

அரிவாளோட நிண்டு தீர்த்துக்கொள்ளலாமா எண்டு கேக்குறியள். சரி சரி கேளுங்கோ. ஒரளவு தெரியும். சொல்லித்தருவேன்.

வாடா ஆதிரை,
நானும் எதேச்சையாத்தான் கண்டுபிடிச்சது.

வாங்கோ பனித்துளி,
மேலதிகமா சில விளக்கங்கள் சேர்த்திருக்கிறேன்.

சேது,
நன்றி.

கங்கு,
உபுண்டுக்கு மாறப்போறீங்களா. வாங்கோ வாங்கோ.

ஜனகன்,
உங்கள் மடலுக்கு பதிலிறுத்தேன்.

லோசன் அண்ணன்,
பயப்படாதேங்கோ. இதில் பகிர்ந்துள்ள சுட்டிகளை நான் உருவாக்கேல. அதுவாத்தான் கிடக்குது. :D :D

Nimal January 14, 2011 at 8:28 AM

இது அலுவலகத்தில றேடியோ கேட்கிறதுக்கான ஒரு முயற்சி போல தெரியுது... :-)

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ