நிலாக் காதல் என்ற பெயருடன் பதிவர் வந்தியத் தேவன் ஆரம்பித்துவைத்த அஞ்சலோட்டக் கதை இது..
முன்னைய பகுதிகள்..
வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 01
பவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 02
சுபாங்கனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 03
கண்கோனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 04
ஆதிரையால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 05
லோஷனால் எழுதப்பட்ட கதைநிலாக்காதல் 06
< இதே நேரம் வேகமாக பொரல்லை சந்தியை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஹரிஷின் கார்..
'முடியுமான வேகத்தில் வீட்டை அடையவேண்டும்..உடனடியா வீட்டிலிருந்து யாரிடமாவது பேசி சந்தோஷை
எப்படியாவது காப்பாற்றவேண்டும்'
மனதில் அந்த சிந்தனைகளே ஓடிக் கொண்டிருக்க வீதியில் அக்கறை இல்லாமல் வாகனத்தை செலுத்திக்
கொண்டிருந்த ஹரிஷுக்கு திடீரென முன்னால் திரும்பிய லொறியை அவதானிக்கமுடியவில்லை.
டமார்....
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
லாவண்யாவின் செல்பேசி அமைதியாக கிணுகிணுத்தது. அங்கலாய்ப்புடன் எடுத்தாள். ஹரிஷிடமிருந்து அழைப்பு,
"ஹலோ... உங்கட மிஸ்ட்கோல் இதில இருந்தது. நீங்கள்?"
ஆங்கிலத்தில் கதைத்த குரல் சத்தியமாக ஹரிஷுடையதல்ல.
"நான் லாவண்யா... ஹரிஷின் பிரண்ட்... நீங்கள்?"
"ஹரீஷ்...?? ஹரீஷ் ஒரு விபத்தில மாட்டியிருக்கிறார். இப்ப அவரை கொழும்பு பொது மருத்துவமனையில கொண்டுவந்து சேத்திருக்கு. அவரோட அம்மாக்கு அழைப்பெடுத்தோம். தொடர்பு கிடைக்கவில்லை. பற்றரி போட்டபோது கடைசியாக உங்கட அழைப்பு இதில் இருந்தது அதுதான் எடுத்தோம்"
"ஓகே.. நான் அங்கே உடனே வருகிறேன்"
ஸ்ரீ அங்கிளுக்கு ஈனக்குரலில் எடுத்தச்சொன்னதும், இவளேன் இப்படிப் பதறுகிறாள் என்று ஸ்ரீ அங்கிள் யோசித்ததும், அதே காசா அல்லது கூட வருமா என்று டிரைவர் யோசித்ததும்... அவரவருக்கு அவரவர் கவலைகள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சக்தியெல்லாம் வடிந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தான் சந்தோஷ்.
நான்... ஹரிஷ்... லாவண்யா... வீடு... அம்மா... வைஷாலி... என்று அபத்தச் சிந்தனைகளெல்லாம் இறுதியாவதை உணர்ந்தான்.
"ஆ.. மாத்தயாட bag இல லப்டொப் இருக்கா? அதைக் கொண்டுவா" சொன்ன சிஐடி சந்தேஷைப் பார்த்தான்.
லப்டொப்பில் ஏதும் இருக்குதா என்று மீண்டும் அபத்தமாகச் சிந்திக்கத் தலைப்பட்டான், அவர்கள் பிடித்ததுக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை எனத் தெரிந்தும்.
லப்டொப்பைத் திறந்த சிஐடி தவிர மற்ற இருவரும் பார்த்த பார்வைகளே அவர்களுக்கு லப்டொப் அந்நியம் என்று தெரிந்தது. லப்டொப்பையும் தங்களையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டார்கள்.
Hibernate இல் இருந்த லப்டொப் unlock கடவுச்சொல் கேட்டது.
"பாஸ்வேர்டைச் சொல்லு" ஒரு எகத்தாளத்துடன் கேட்டான்.
"சந்தோஷாலி... s, a, n, t, h, o, s, h, a, l, i"
....
"ஓகோ... எல்லாம் திறந்தபடியே இருக்கு. மெயில்.. பேஸ்புக்...ம்ம்ம்... ருவிட்டரும் பாவிக்கிறியோ? இதென்ன தமிழ்மணம், ஏதும் LTTE சைற்றா?"
மற்ற இருவரும் இன்னும் தங்களையும், லப்டொப்பையும் மாறிமாறிப் பார்ப்பதை நிறுத்தவேயில்லை.
bag இனை எடுத்து துழாவிய சிஐடியின் கையில் டயலொக்கின் டொங்கிள் (Internet broadband connection) அகப்பட்டது. சந்தோஷைப் பார்த்து நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான்.
லப்டொப்பில் அடித்து இணைக்க வெளிக்கிட்டவனுக்கு டயலொக் டொங்கிள் வழமைபோலவே விளையாட்டுக் காட்ட ஆரம்பித்தது. அங்கே இங்கே என்று இடத்தை மாற்றி இணைப்பை ஒருவாறு இணைப்பை எடுத்துவிட்டான்.
ஜிமெயிலில் சில சொற்களைப் போட்டுத் தேடிப்பார்த்தான். எதுவுமில்லை. பேஸ்புக்கை மேய்ந்தான். ருவிற்றருக்கு வந்தவன் ஆர்வமானான். சந்தோஷ் வெறுமையாக, எந்தவித பிரக்ஞையுமின்றி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஹரீஷ் இமைகளைப் பிரித்தபோது ஏகப்பட்ட கவலை ரேகைகளை முகத்தில் அப்பியபடி லாவண்யா நின்றிருந்தாள். கைகளை தூக்கும்போது வலி உயிர்போவதை உணர்ந்தான். தலையில் கட்டு.
"ஹரீஷ், சீரியஸ் இல்லை. அசையாம இருங்கோ. அம்மா வந்துகொண்டிருக்கிறா. பிரச்சினை இல்லை"
"சந்தோஷ் எங்கே?" கேட்டபின்தான் லாவண்யாவைப் பார்த்தான். அவனுக்கு என்ன உணர்ச்சியைக் காட்டுவதென்றே புரியவில்லை.
"ஓம்... சந்தோஷின் போன் வேலைசெய்யுதில்லை. நான் அவனுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறன். நீங்க அமைதியா படுங்கோ"
கண்களால் லாவண்யாவை கிட்ட வரச்சொன்ன ஹரீஷ், கிசுகிசுத்தான், "சந்தோஷ் கடத்தப்பட்டுவிட்டான், செய்தி கேக்கேலயா?"
"வாட்" என்றபடி அருகிலிருந்த கதிரையில் பொத்தென்று இருந்தாள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வைஷாலி....
லண்டனில் ருவிட்டிக்கொண்டிருந்தாள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சந்தோஷின் ருவிற்றரில் சிஐடி ஆர்வத்துடன் மூழ்கியிருந்தான்.
"santhosh
@vaishali I wil find n send u once I reached office
3 hours ago via Echofon"
இதுதான் கடைசியாக சந்தாஷ் ருவீற்றியது. ஆனால் லைவ்வாக வைஷாலியின் ரூவீற்கள் வந்துகொண்டிருந்தன.
"vaishali
@santhosh where r u? send me immediately.
1 minutes ago via Web"
Twitter DM களைப் பார்த்தான். சந்தோஷைப் பார்த்துச் சிரித்தான். ஜீமெயில் உரையாடல்களைப் பார்ததான். மீண்டும் சிரித்தான். பேஸ்புக் அஞ்சல்களைப் பார்த்தான், சிரித்தான்.
கடைசியாக திறந்திருந்த பேஸ்புக் உரையாடல்கூட வைஷாலியிடமிருந்து.
"மாத்தயா... லவ்வு கலக்கலாய் இருக்கு.. பாரின் பொண்ணு.. போட்டோ இல்லையா" நக்கலாகக் கேட்டான். சந்தோஷுக்கு சிரிப்பதா அழுவதா புரியவேயில்லை.
திடீரென்று ஏதோ யோசித்தவனாக, லப்டொப்பில் கோப்புக்களை தேடினான் சிஐடி. பின்னர் இருவரிடமும் "இவனில எப்பெப்ப சஸ்பெக்ற் பண்ணினாங்கள், திகதிகளைச் சொல்லுங்கோ"
"போன மாதம் 17, 18 அதோட முந்தநாள்" மேசையிலிருந்த பேப்பர் துண்டொன்றைப் பார்த்துச் சொன்னான் மற்றவன்
அதே நாட்களில், குறித்த நேரங்களில் பேஸ்புக், ஜீமெயில், உரையாடல்கள், ரூவீற்றுக்கள் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்தான். அவனது செய்தி சேகரிப்புகளுடன் அவனுக்கும் வைஷாலிக்குமிடையான சமாச்சாரங்களே அதிகமாக இருந்தன.
நிமிர்ந்து மற்ற இருவரையும் பார்த்த அவன் "பையன்ல விசயம் இல்லைப்போல.. வேலையும் லவ்வுமாய்த்தான் மாத்தயா இருக்கிறார். அந்த திகதிகளில் மாத்தயா பாரின் பொண்ணோட விளையாடிக்கொண்டு இருந்திருக்குது. ரூவீற்ருக்கள் எல்லாம் Echofon இற்கூடாகத்தான் மாத்தயா செய்திருக்கு. லப்டொப்பிலயும் பெரிசா ஒண்டுமில்ல. பையனிலயும் விசயமில்லைப்போல.. சும்மா இரண்டு தட்டுத் தட்டிப்போட்டு ஒரு மணித்தியாலத்தால கொண்டுபோய் அந்த இடத்தில விட்டுட்டு வாங்கோ.. வார்ணிங்க் பண்ணிட்டு விடுங்கோ" என்றவன் சந்தோஷின் ருவிற்றரைப் பார்த்துவிட்டு கடைக்கண்ணால் அவனைப் பார்த்துச் சிரித்தான்.
Echofon இல் தட்டச்சினான்.
"@vaishali I LOVE YOU MY DEAR VASHU KUTTI" send இனை அழுத்திவிட்டு சந்தோஷைப் பார்த்துச் சிரித்தான்.
சந்தோஷுக்கு என்ன நடக்குதெண்டு புரியவில்லை. லப்டொப்பில் என்னத்தைச் செய்கிறானே என்று கவலைப்படும் நிலையிலும் அவன் இல்லை.
சிறிது நேரத்தில் வந்த Twitter DM இனை திறந்தான் சிஐடி.
"vaishali Wot happnd2U santhosh.Thtz a public tweet.Plz rmov it.My acca's too in it.Plzzz :("
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பின்னர் சந்தோஷ் வீடு வந்து சேர்ந்ததும், லாவண்யா தொடர்பு கொண்டதும், சந்தோஷ் மருத்துவமனைக்கு வர முயற்சித்ததும், ஹரீஷ் வரவேண்டாம் வீட்டிலேயே இரு என்றதும், லாவண்யாக்கும் ஹரீஸுக்குமிடையான அரும்புக் காதல் மருத்துவமனையிலேயே மலர்ந்ததும் (யோவ்.. ஹரீஸ் உடம்பெல்லாம் காயங்களோட இருக்கிறான். அவனால் இப்போதைக்கு ஒன்றும் அசைக்க இயலாது. ஜஸ்ட லவ்தான்)
என்று நட்பு, காதல், சென்ரிமென்ட், புரிந்துணர்வு எல்லாம் கைகோத்துக் கலகலத்தது. சந்தோஷின் ருவிட்டர் கதைகேட்டு ஹரீஸும் லாவண்யாவும் லவீற்ற (love + tweet) ஆரம்பித்ததும் வேறு கதை.
- சுபம் -
மதுவதனன் மௌ | cowboymathu
(எல்லாம் இப்போதைக்குச் சுபமாக இருந்தாலும், இன்னும் நான்கு மாதங்களில் வைஷாலி லண்டனிலேயே இன்னொரு பையனை லவ்வப் போவதையும், சந்தேஷுக்கு டாடா காட்டப்போவதையும், ஹரீஸும் லாவண்யாவும் அதனால்
படும் சங்கடங்களையும் நேரமிருந்தால் பினனர் எழுதுகிறேன்.)

ஏனிந்த ஸ்ரியரிங்க் இவ்வளவு பெரிதாய் என் கண்முன்னே என்று அபத்தமாய் யோசிக்கும் முன்னே கறுப்பு நிறமாய் எங்கோ தூக்கி வீசப்பட்டான். கிரீச்சிட்ட வாகனங்கள் பின்னே சாவகாசமாய் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்தன. திரும்பிய லொறி சிறிது தூரம் தள்ளி ஓய்ந்து நின்றது. தூரத்துப் காவற்துறை
அதிகாரி ஒருவர் பாய்ந்து வந்தார். பின்னைய வாகனங்களில் இருந்தவர்கள் இறங்கிவந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர் அல்லது வேதனையைக் கொட்டஆரம்பித்தனர். அதன் பின்னைய வாகனங்கள் விபத்துப் பற்றிய பிரக்ஞையின்றி குறுக்கு வழியால் நகர ஆரம்பித்திருந்தன.ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

7 பின்னூட்டங்கள்.
Aaka, nice nice :)
கதைய நல்லா முடிச்சிற்றீங்கள்...
சுபமா முடிச்சதுக்கு நன்றி. ;-)
vaishali எண்டு ருவிற்றர் id இருக்குது உண்மையாவே. :D
protected account with no followers and following 0 people. :D
// இன்னும் நான்கு மாதங்களில் வைஷாலி லண்டனிலேயே இன்னொரு பையனை லவ்வப் போவதையும், சந்தாஷுக்கு டாடா காட்டியதையும், ஹரீஸும் லாவண்யாவும் அதனால்
படும் சங்கடங்களையும் நேரமிருந்தால் பினனர் எழுதுகிறேன் //
அவ்வ்வ்வ்வ்வ்....
ஏனிந்தக் கொலைவெறி.....
ஆஹா.. கலக்கல்ஸ்..:D
//யோவ்.. ஹரீஸ் உடம்பெல்லாம் காயங்களோட இருக்கிறான். அவனால் இப்போதைக்கு ஒன்றும் அசைக்க இயலாது. ஜஸ்ட லவ்தான்)//
அவ்வ்வ்..:P
//சந்தாஷுக்கு டாடா காட்டியதையும், ஹரீஸும் லாவண்யாவும் அதனால்
படும் சங்கடங்களையும் நேரமிருந்தால் பினனர் எழுதுகிறேன்//
ஐயகோ.. மறுபடியும் முதல்ல இருந்தாஆஆஆ...:P
//சந்தாஷுக்கு டாடா காட்டியதையும், ஹரீஸும் லாவண்யாவும் அதனால்
படும் சங்கடங்களையும் நேரமிருந்தால் பினனர் எழுதுகிறேன்//
:-(
Mathu is always mathu. You show it...............
அண்ணா கதை சுபமாக முடித்து விட்டிங்க போல!!!
// லாவண்யாக்கும்
ஹரீஸுக்குமிடையான அரும்புக் காதல் மருத்துவமனையிலேயே மலர்ந்ததும் (யோவ்.. ஹரீஸ் உடம்பெல்லாம் காயங்களோட இருக்கிறான். அவனால் இப்போதைக்கு ஒன்றும் அசைக்க இயலாது. ஜஸ்ட லவ்தான்)//
இதில் ஏதும் மதுயிசம் இல்லையே???
கலக்கலோ கலக்கல்!
ம்ம்ம் கதை போன போக்கைப்பார்த்து நானும் சோகமாக முடியும் என நினைத்தால் மது நல்ல முடிவுதான் எழுதியிருக்கின்றார். தொழில்நுட்பத்தைப் புகுத்தியமது ஏனோ மதுயிசத்தை புகுத்த மறந்திட்டார்.
எழுத்து நடை அருமையாக இருக்கின்றது. வேறை அனுபவக் கதைகளையும் எதிர்பார்க்கின்றேன்.
அருமையாக இருக்கிறது...
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ