கார்க்கி ஒரு விஜய் ரசிகர். அனைவருக்கும் தெரியும். அவர் அண்மையில் அஜித்தின் அசல் படப் பாடல்களைப் பற்றி அலசியிருந்தார். சிறப்பாகவும் சொல்லியிருந்தார். படம் ஹிட்டாகவும் வாழ்த்தியிருந்தார்
அதிலொரு பின்னூட்டம்..
//படம் ஹிட்டாக வாழ்த்துகள்.//
இதுதாங்க விஜய் ரசிகரின் பெருந்தன்மை என்பது!
இந்தப் பின்னூட்டம். பார்ப்பதற்கு நல்லது போல இருந்தாலும் உண்மையாக யோசித்துப் பாருங்கள். கார்க்கி என்ற மனிதனின் நல்ல இயல்பான வாழ்த்தும் தன்மையை மறுத்து ஏதோ விஜயை பின்பற்றுவதால் வந்த இயல்பு போன்றதொரு தவறான கருத்தைத் தொனிக்கிறது.
பாராட்டவேண்டிய இயற்கையான ஒரு மனிதனின் தன்மையை ஏன் தனித்தன்மையாக்கி கேவலப்படுத்தவேண்டும்.
----------------------------------------------------------------------------
புல்லட் அண்மையில் அரசியலைப் பற்றி அலசியிருந்தார். இலங்கையின் தேர்தல் பற்றி சூடாக கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
அதிலொரு பின்னூட்டம்...
தமிழர்கள் என்றாவது ஒற்றுமையாக இருந்துள்ளார்களா? மூவேந்தர் காலஎவன் எப்ப ஒற்றுமையாக இருக்கிறான். சிங்களவனை எடுத்தாலும் கண்டிச் சிங்களவன், கரையோரச் சிங்களவன், கொழும்புச் சிங்களவன், காலிச் சிங்களவன், வெளிநாட்டுச் சிங்களவன் போன்று பல பாகுபாடு இருக்கையா.
மெல்லாம் ஒருவரோடுஒருவர் மோதிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் ஒற்றுமை
யானது ஒரு கறைபடிந்த நிகழ்ச்சியான பாரிமகளைக்கற்பழிக்கும் முயற்சியில்
மட்டுமே.தமிழன் ஒரு பாபப்பட்ட சமுதாயம்.இவ்வளவு அழிவின் பின்புகூட
ஈழத்தமிழரிடம் ஒற்றுமை ஏற்படவில்லை.இன்றும் யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு,
வெளிநாட்டான்,கொழும்புக்காரன் என்ற பாகுபாடு புரையோடிப்போய்யுள்ளது.
எப்போது இந்நிலை மாறும்.என்னசெய்தால் மாறும் யாராவது சொல்வீர்களா?
அமெரிக்கனை எடுத்தாலும் மெக்ஸிகன், நியூயோர்க்காரன், டெக்ஸாஸ் காரன் என்று பாகுபாடு இருக்கு.
இந்தியாவை எடுத்தாலும் மாநிலங்கள், நகரம், கிராமம் எண்டு பாகுபாடு இருக்கு.
இதொண்டும் தமிழனுக்க மட்டும் இருக்கிறதில்லையையா. உலகத்தில எல்லா உயிரினங்களுக்குள்ளயும் இருக்கிற இயற்கையான தன்மை. வீட்டில சகோரங்களுக்கிடையில வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து வீடுகளுக்கிடையில வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து பிளாட்டுகளுக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்துத் தெருவுக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து ஏரியாவுக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து ஊருக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, பக்கத்து நகரத்துக்குள்ள வாற வேறுபாட்டில இருந்து, ஜாதி, இனம், மதம், இடம், பள்ளிக்கூடம், வேலைத்தளம் என்று ஏதோ ஒரு விதத்தில குழுவாகும்போது ஏற்படுகிற எல்லாருக்குமான இயல்பு. இதுல தமிழன் மட்டும் தனிய நிண்டு ஒண்டும் புடுங்கவில்லையையா.
பொதுவான இயற்கையான தன்மையை ஏன் தமிழனுக்கு மட்டும் போட்டு நீங்களும் கேவலமாகி, மற்றாக்களையும் கேவலமாக்குகின்றீர்கள்.
-------------------------------------------------------------------------------
இது ஒரு இடமும் வரவில்லை. பொதுவாகக் கதைக்கிறேன். மேல நான் கூறிய இரண்டு பிரச்சினைகளுக்கும் கீழே சொல்லப்போற பிரச்சினைக்கும் சம்மந்தம் இருக்கோ எண்டு பாருங்கோ.
இயற்கையின் படி மனிதன் வாழுறான். இயற்கையை மீறி சில இடங்களில போறான். ஒவ்வொரு காரியத்துக்கும் காரணத்தை தேடும் ஆற்றல் மனிதனிட்ட இருக்குது. அதனாலதான் விஞ்ஞானம் வந்தது. மற்றவனுக்கு அடிக்காதே என்று காரணத்தோட சொல்லக்கூடிய தன்மை மனிதனுக்கு இருக்கு. எந்தெந்த இடத்தில பொய் சொல்லக்கூடாது... அல்லது எந்த வயதில பொய் சொல்லக்கூடாது என்று காரணத்தோட சொல்லுற ஆற்றல் மனிதனுக்கு இருக்கு. அதாவது மதங்கள் அல்லது கடவுளர் சொல்லுகின்ற நல்வழிகளை காரணத்தோடு சொல்லக்கூடிய அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை மனிதனுக்கு இருக்கு. ஒரளவு படிப்பறிவு அல்லது அனுபவ அறிவு வேணும் என்பது இயற்கை.
இப்படியான பொதுப்படையான, மனிதனால் காரணங்களோடு சொல்லக்கூடிய அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை மதம் அல்லது கடவுள் எனும் பெயர் கொண்டு சொல்லிவிட்டு அதுதான் மனிதனை நல்வழிப்படுத்துது என்று சொல்வது எவ்வளவு கேணைத்தனமானது.
பிற்குறிப்பு : ரிஷான் ஷெரிப்பின் இந்த பதிவையும் புல்லட்டின் பதிவையும் கார்க்கியின் பதிவையும் வாசிச்சு வந்த உணர்வின் கலவைதான் இந்தப் பதிவு.
20 பின்னூட்டங்கள்.
அற்புதமான கருத்து மது.. உண்மைதான்.. பாகுபாடு பார்ப்பது எல்லா மனிதருக்குமு்ள்ள ஒரு பொதுவான குணமெனலாம்.. இவர்கள் சும்மா அதை தம்மேல் மட்டும் ஹைலைட் பண்ணுகிறார்கள்.. மிகச்சிறந் த ஒரு கருத்து
கலக்கலாய் எழுதியிருக்கிறீர்கள் மது.
எழுதிய சகலதும் உண்மை
என்ன பின்னூட்டம் போடுறதுன்னு நான் இங்க யோசிச்சிகிட்டு இருக்கேன்!!
முதலாவது... ஹி ஹி... இதை அஜித் இரசிகர் ஒருவர் சரி போனாப் போகட்டும், சுறா வெற்றி பெற வாழ்த்துக்கள் எண்டு பதிவிட்டிருந்தா இன்னொரு அஜித் இரசிகர் வந்து 'இதுதாங்க அஜித் இரசிகரின் பெருந்தன்மை என்பது!' என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார்.
இல்லை என்கிறீர்களா?
நான் விஜய் இரசிகன், நான் அஜித் இரசிகன் அவர்கள் மட்டும் தான் சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.
பாகுபாடு எல்லோரிடமும் உள்ளது என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் அண்ணா.
ஆனால் சிங்களவர்கள் அந்தப் பிழையைச் செய்வதால் நாமும் அந்தப் பிழையைச் செய்யலாம் என்று நாம் ஏன் எங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்?
நாம் ஏன் எம்மை அந்த தாழ்வு நிலையிலிருந்து மேலே கொண்டுவர முயற்சிக்கக் கூடாது.
மற்றையது மற்றைய இனத்தவரை விட எங்களிடம், அதாவது தமிழரிடம், இந்தப் பாகுபாட்டுக் குணம் அதிகமாகவே இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
//இப்படியான பொதுப்படையான, மனிதனால் காரணங்களோடு சொல்லக்கூடிய அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை மதம் அல்லது கடவுள் எனும் பெயர் கொண்டு சொல்லிவிட்டு அதுதான் மனிதனை நல்வழிப்படுத்துது என்று சொல்வது எவ்வளவு கேணைத்தனமானது.//
அனைவரும் இதைச் சிந்தித்தால் போதுமானது.
அருமை.
(ஒரு மிகப்பெரிய இலக்கணக் கேள்வி... சந்தேகத்தைத் தீர்க்கவும்.
கேணை என்பது சரியா, கேனை என்பது சரியா? இரண்டாவது தான் கூடுதலாகச் சரி என்று நம்புகிறேன். பிழையெனில் விளங்கப்படுத்தினால் எதிர்காலத்தில் நான் பிழைகளை விடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். ;) )
வாய்யா புல்லட்,
கிட்டத்தட்ட எல்லா நாட்டுக்காரர்களும் நாடுகள் சம்மந்தப்பட்ட ஜோக் அடிக்கும்போது தங்கள் நாட்டை கேலிக்குரியதாக்குவது போலத்தான் இதுவும்.
---------------------------
வாப்பா யோகா,
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை என்று நீதிமன்றத்தில கேட்டாலும் சொல்லுவீங்கள் போல.. ஹீ ஹீ..
---------------------------
வாங்கோ கலை,
இந்தப் பின்னூட்டமே வித்தியாசமா இருக்குதே. இதையும் ரெம்ப்லேற் பின்னூட்டம் ஆக்கிவிடுவமா? :)
---------------------------
பின்னூட்டப் புயல், டுவிட்டர் சூறாவளி கோபி வருக வருக,
பாகுபாட்டுக்குணம் பிழையென்றில்லை. திருத்தப்படவேண்டிய ஒரு இயல்பு. தமிழனிடம் அதிகமாக இருக்கிறதென்பதில் சிறிது உடன்படுகின்றேன். அதற்குக் காரணம் தற்போதைய சூழலும், இயல்பும், நிலையும்தான் என நம்புகின்றேன்.
தமிழனை மொழிவாரியாக பிரித்தோம் எனின், இங்கிலீசுக்காரனிடம் இதைவிட அதிகமாகவே பாகுபாடு இருக்கிறதென்பேன். உதாரணத்திற்கு UK, America இங்கிலீசுக்காரர்களை எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா இடத்திலும் பாகுபாடு. தெலுங்குக்காரர்களை எடுத்துக் கொள்ளுங்கள். பிரிகின்ற அளவுக்கு பாகுபாடு.
என்னைப் பொறுத்தளவில் கூடக் குறைய என்பதை விட திருந்தவேண்டிய பொதுவான இயல்பு இது.
இலக்கணக் கேள்வி. கேணை அல்லது கேனை என்பது தமி்ழ்வார்த்தையா தெரியவில்லை. பேச்சுத்தழில் உண்டு. இந்தியாவில் இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் கேணையன், கேனைப்பயல் என்று இரண்டும் பாவனையில் உண்டு.
உண்மைதான். தான் இருக்கும் நிலையிலிருந்து சிறிது வித்தியாசமான நிலையில் இருக்கும் ஒருவரைப் பார்க்கும்போது ஒப்பிட்டுப் பாகுபாடு பார்ப்பதென்பது மனிதரிடம் மட்டுமல்ல, விலங்குகளின் நடவடிக்கையைத் தெளிவாகப் பார்த்தால் அவற்றிடமும் காணப்படுவதை அவதானிக்கலாம். இதை இயற்கை என்று கருதலாமா? இது ஒரு பொதுத்தன்மையாக இருக்குமோ?
விதிவிலக்குகள் உதாரணங்களாகக் கருதப்பட முடியாதவை இல்லையா?
அண்ணா இது தனித்தன்மையை பொதுத்தன்மையாக்குவதாகத்தானே வரவேணும்? :-)
வாங்கோ சுபாங்கன்,
அதேதான்.. இவையெல்லாம் பொதுத்தன்மைகள். தாங்கள் மட்டும்தான் இப்படி, தமிழன் மட்டும்தான் இப்படி எண்டு ஏன்தான் சொல்லுறாங்களோ..
-----------------------
வாங்கோ இன்ரலியன்ட் றமணன்,
பொதுவான மனிதனின் பாராட்டவேண்டிய இயல்பை விஜயின் இயல்பாக தனித்தன்மையாக்கப்படுகின்றது.
எல்லா மனிதர்களினதும் பொதுவான பாகுபாடு காணும் தன்மையை தமிழனுக்கு மட்டும் எண்டு தனித்தன்மையாக்குவது,
எல்லாராலையும் ஏற்றுக்கொள்ளத்தக்க, காரணத்துடன் கூறக்கூடிய விடயங்களை மதத்தினுள் அல்லது கடவுளினுள் கொணர்ந்து தனித்தன்மையாக்குவது.
இவற்றைத்தான் கூறினேன் பாரதி(யைக்) கண்ட புதுமைத் தம்பியா
சொல்லவேண்டிய.. அல்ல அல்ல ஓங்கி அறையவேண்டிய கருத்தை பதிந்துள்ளீர்கள்..
முதலாவது முட்டாள் தனம்.. இரண்டாவது எம்மினம் என்று உணர்வுமேலீட்டினால் ஏற்படும் கழிவிரக்கம்..
மூன்றாவது - மதம் தேவையில்லாதது.. :)
//இப்படியான பொதுப்படையான, மனிதனால் காரணங்களோடு சொல்லக்கூடிய அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை மதம் அல்லது கடவுள் எனும் பெயர் கொண்டு சொல்லிவிட்டு அதுதான் மனிதனை நல்வழிப்படுத்துது என்று சொல்வது எவ்வளவு கேணைத்தனமானது.
//
well said..
நல்ல பதிவு மது. வேற்றுமைகளும் மாற்று சிந்தனைகளும் மானுடத்தின் வளர்ச்சியின் அடிப்படைகள். அந்த வரலாற்று உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் ஓரணி ஒரே சிந்தனை எனும் மாயவலையை எம்மில் போர்த்திக்கொண்டு எம்மை நாமே சிதைத்து கொண்டதும், எமது நாட்டின் தற்போதைய தலைமைத்துவம் நாட்டை சூரையாடுவதுவும் இந்த ஓரணி ஒரே குரல் எனும் கோசத்தின் படிதான். இனஉணர்வு கூட ஒருவகையில் இனவாதம் தான். ஒரு தனிமனிதனின் இயல்பை அவன் சார்ந்த சமுகத்திற்கு பொதுமைப்படுத்தும் எம்மியல்பு மாற்றப்படக்கூடியதே தவிர மாற்றமுடியாத ஒன்றல்ல. இந்த மாற்றம் எம்மில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்.
பகுதி: ஒன்று.
எல்லா இனங்களிடமும் பாகுபாடு இருக்கிறது. எல்லா நாட்டிலும் பாகுபாடுஇருக்கிறது.அந்தப்பாகுபாடெல்லாம் தங்கள் தங்கள் இனம் சார்ந்து சமுதாயம் சார்ந்து வரும்போது ஒற்றுமையாய்எதிர்கொள்ளுகிறார்கள்.சிங்களவர்களிடம் என்னவேற்றுமை இருந்தாலும் தங்கள் நாடு மொழி என்று வரும் போது ஒற்றுமையாக தமிழர் உரிமையை எதிர்கிறார்கள்.
பகுதி: இரண்டு.
அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தல் வந்
தால் எல்லா அமெரிகரும் ஓர் அணி
யில் திரள்கிறார்கள்.இலங்கைத்தமிழ
னின் இருப்பே கேழ்விக்குறியான போதும் இருப்பைக்காப்பாற்ற ஒன்று
சேரவில்லையே.புலி ஆதரவாளர் புலி
எதிர்பாளர்,கருணா,டக்கிளஸ்,சங்கரி,
கேபி,நெடியவன் எத்தனை பிரிவுகள்.
பகுதி: மூன்று.
எங்கே இருக்கிறது ஒற்றுமை இந்த
ஜதார்த்தைத்தான் நான் எழுதினேன்.
இது கேவலம் என்று தெரிந்தும்
திருந்தவில்லை என்பதே அடுத்த
ஜாதார்த்தம்.உண்மை சுடும்.
வாங்கோ லோஷன்,
உங்கட பின்னூட்டம் நல்லாயிருக்கு.
மூன்றையும் நல்ல வடிவாச் சொல்லியிருக்கிறியள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வாப்பா மானுடன்,
உங்கட பின்னூட்டத்த சிந்தனையாகவே போடலாம் போல..
வாங்கோ தேவேஷ்,
//பகுதி: ஒன்று.
சிங்களவர்களிடம் என்னவேற்றுமை இருந்தாலும் தங்கள் நாடு மொழி என்று வரும் போது ஒற்றுமையாக தமிழர் உரிமையை எதிர்கிறார்கள்.//
அப்படித் தெரிகிறது தேவேஷ். சிங்களவர்கள் 75 வீதம் தமிழர் 12 வீதம். சிங்களவர்களிலும் புலிக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். தமிழர் உரிமை எதிர்ப்பை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
தமிழர்களின் குறைந்த எண்ணிக்கையில் வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது. சிங்களவர்களின் எண்ணிக்கையில் மறைந்து போகிறது. மற்றும்படி எல்லா இடமும் இருக்கிறது.
<>
எங்கையை திரள்கிறார்கள். அது உங்களுக்குத் தெரிவது அப்படி. செய்திகளில் அறிவது. அவர்களிலும் பின்லேடனுக்கு ஆதரவாளர்கள் உண்டு. மேலும் அமெரிக்காவிற்கு வரும் அச்சுறுத்தல் வேறு.. புலி எதிரப்பு அல்லது ஆதரவு வேறு. புலி எதிர்ப்பு என்பது தமிழனுக்கான எதிர்ப்பல்ல. இதிலுள்ள அரசியலுக்கு இன்னும் ஆறேழு பதிவு தேவைப்படும். தேவேஷ் பிரவுகள் எல்லா இடத்திலயும் இருக்கு. நாங்கள் விளங்கிள முறைதான் வேறாயிருக்கு.
இங்கே உங்கள் பெயரைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் என் விமர்சனம் உங்கள் மீதல்ல.. உங்களின் பின்னூட்டம் மீது. உண்மை சுடலாம்.. சாம்பலாகி இல்லாமலும் போகலாம்.. ஆனால் தமிழனுக்க மட்டும்தான் வேற்றுமை இருக்கெண்டு ஏன் எங்களை நாங்களே தாழ்த்தவேணும்..
அதுதான் தேவேஷ்..
மற்றவன் பாகுபாடு காட்டுகிறான் என்பதால் நாங்களும் பாகுபாடு காட்டுவது சரி என்று வாதாடுவது போல் இருக்கிறது உங்கள் ஆக்கம்.. அவன் அம்மணமாக நிக்கிறான் நானும் நிப்பன் என்று சொல்பவர்களைப் பாக்க, I really feel sorry for those morons
உங்களுக்கு ஒப்பிடுவதற்கு போயும் போயும் ஒரு விஜய் ரசிகரும் தமிழர் வழக்கமுமோ கிடைத்தது.. உதை விட தமிழனை யாரும் கேவலமாக்க முடியாது..
ஏன்டா பாகு பாடு காட்டி இன்னும் அழிவுக்கு வழிவகுக்கிறீர்கள் என்று கேட்டால், நான் அப்படித்தான் ஆடுவன் என்பவனைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்ளத்தான் முடியும்.
ஒழிந்து போங்கள்...
ஓரளவு கோபி நியாயமானவன் தான்... " சிங்களவர்கள் அந்தப் பிழையைச் செய்வதால் நாமும் அந்தப் பிழையைச் செய்யலாம் என்று நாம் ஏன் எங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்?" சபாஷ்...
Finally, few morons are BS-ing so much as you. Better luck next time. Shame on you!!??!!
- Mukilini
//கேவலம் என்று தெரிந்தும்
திருந்தவில்லை//
What else you want to prove and you guys are Bullshitting
-Mukilini Vaithiyanathan
The above one is not for you Thevesh. It is for these wastrels
-Mukilini V
//உங்களுக்கு ஒப்பிடுவதற்கு போயும் போயும் ஒரு விஜய் ரசிகரும் தமிழர் வழக்கமுமோ கிடைத்தது.. //
விஜய் படம் புறக்கணிப்பென பிதற்றும் போது விஜய் ரசிகரை பற்றி எழுதுவதில் என்ன தப்பு?
சந்தர்ப்பங்கள் தான் தீர்மானிக்கின்றன.
அநாமதேயங்களாகவே பின்னூட்டங்கள் தொடர்ந்து செல்லும்போல் தெரிகிறது.
என்னவோ,
பெயரிலிகளுக்கு எனது பதிவுகளில் பின்னூட்டத் தெரிவு உண்டு. நீங்கள் உங்கள் கருத்துக்களை வீசிச் செல்லலாம். அநாமதேயங்கள், பெயரிலிகள் தங்களுக்குள் சேறு பூசிக்கொள்ளலாம்.
அவர்களது கருத்துக்களை வாசித்து விளங்க முற்படுகின்றேன். ஆனால் பதிலளிக்க தயங்குகின்றேன் அல்லது வெறுக்கிறேன்.
பெயரிலிகளால் உண்மையானவர்களின் பெயர்கள் எனது பதிலளிப்பால் மாசாவதில் எனக்கு உடன்பாடில்லை.
கமோன்.. போட்டுத்தாக்குங்கள் பெயரிலிகளே.
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ