நா

நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு, வெள்ளவத்தை, தேசிய கலை இலக்கியப் பேரவையில் இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு நிகழவிருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இல்லாவிடின் படத்தைச் சொடுக்கி விபரம் அறிக.


சந்திப்பிற்கு வரும் பதிவர்கள் அமைப்புக்குழுவின் உறுப்பினராகிய கங்கோன் கோபியைப் பற்றித் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

1. கங்கோன் ஒரு கொள்கை வீரன் - இவர் வலையுலகிற்கு kanagagopi(at)gmail.com என்ற முகவரியூடுதான் அறிமுகம் எனினும், அனாயதேயமாக பின்னூட்டம் போடக்கூடாது என்ற கொள்கையால் bloggergopi(at)gmail.com என்ற முகவரியைப் பாவித்துத்தான் வேறு பெயரில் பின்னூட்டமிடுவார்.

2. கங்கோன் ஒரு கிரிக்கட் புலி - ஆளைப்பார்த்தா கிரிக்கட்டுக்கு அம்பயராத்தான் நிக்கமுடியும் என்று யோசித்தா அது உங்கட தப்பு. அண்ணன் மூன்று நான்கு நாளைக்கொருமுறை கிரிக்கட்டில 61, 61 ரண்களாக விளாசித்தள்ளுவார்.

3. கங்கோன் ஒரு மாய மனிதன் - ஆகா இவராவது மாயமாக ஆவதாவது. இவருக்குப் பின்னால ஆயிரம்பேர் மாயமாகலாம் என்கிறீர்களா? ம்ஹீம்... அண்ணன் பிரத்தியேக காரணங்களுக்காக Invisible ஆகத்தான் இருப்பார்.

4. கங்கோன் ஒரு பாரம்பரியக் காவலன் - அன்றைய காலங்களில் பிரியமானவருக்கு ( ஆரம்பத்தில் ) கடிதம் எழுதுவதும் கசக்கி எறிவதுமாக எத்தனையோ தாள்களை வீணாக்குவார்கள். அவ்வாறே இணையத்தையும் பாரம்பரியம் மாறாது அஞ்சல் எழுதுவதும் அதை Draft இல் போடுவதுமாய் இருப்பார்.

5. கங்கோன் ஒரு ஆங்கிலக் கனவான் - ஆங்கிலத்தில் ஏலவே விண்ணன் என்றாலும் இன்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள், கடிதங்கள், போட்டிகள், பயிற்சிகள் என்று ஏதாவது செய்துகொண்டே இருப்பார். அவருடைய விருப்பமான ஆங்கிலத் தளம் http://www.parapal-online.co.uk/eap.htm

6. கங்கோன் ஒரு பெரீய்ய ரூவீற்றர் - என்னதான் ருவிற்றர் இருந்தாலும் நான் BigTweet தான் பாவிப்பேன் என்று அடம் பிடிக்கும் அண்ணல் இவர்.

7. கங்கோன் ஒரு சமூக விலங்கு - சமூகத்தோட ஒன்றி வாழவேண்டும் என்ற வெறியால் twitter, gmail, chat, blogger, sms (www.smsgupshup.com) என்று எல்லாவற்றையும் ஒருசேரப் பாவித்து மூழ்கி முத்தெடுப்பவர்.

8. கங்கோன் ஒரு அநாமதேய ஆப்பாளர் - யாராவது அவரது வலைப்பதில் அநாமதேயமாக பின்னூட்டம் போட்டால் அவ்வளவுதான். IP tracer ஐ வைத்து அடுத்த நிமிடமே ஆப்படிப்பார்.

9 கங்கோன் ஒரு SLS தரமுடையவர் - தனது status கள் google chat ல் வேறாகவும், facebook இல் வேறாகவும் மற்றும் இதர தொடர்புகளில் வேறாகவும் இருக்கக்கூடாது என்பதற்காக Hellotxt இனைப் பாவித்து தனது தரத்தை சமநிலையில் வைத்திரு்ப்பார்.


படம் சொடுக்கி விபரம் அறிக

பிற்குறிப்பு 1 : Bavan, சந்துரு நீங்கள் எப்ப chat இனை விட்டுப் போறீங்களோ அப்பதான் கங்கோன் Visible இற்கு வருவார்.

பிற்குறிப்பு 2 : கங்கோன் பற்றி உங்களால மேலும் ஏதாவது எழுத முடியுமெண்டா பின்னூட்டத்தில் குதற இடமளிக்கப்படுகிறது. ஆனாலும் பார்த்துச் செய்யுங்கோ.

பிற்குறிப்பு 3 : இவ்வகையான சுபாங்கத்தனமான பதிவொன்றை சுபாங்கனும் தனது வலைப்பதிவில் இட்டுள்ளார்.

பிற்குறிப்பு 4 : இது நானாக எடுத்தது அல்ல அண்ணன்தான் தந்தவர் http://yfrog.com/enevidence1j

வேற என்ன, கலக்குங்கோ கலங்குஙகோ.. அப்படியே பதிவர் சந்திப்பிலும் கலக்குவம்.

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

14 பின்னூட்டங்கள்.

Admin December 12, 2009 at 4:20 AM

கங்கோன் வாழ்க.. அவன் கும்மி கட்சி வாழ்க...

KANA VARO December 12, 2009 at 6:11 AM

இப்பவே கண்ணைக்கட்டுதே…

Subankan December 12, 2009 at 7:43 AM

இந்தப்படத்தை வச்சு இவ்வளவு ஆராய்ச்சி பண்ணிட்டீங்களா? கங்கோன், கொஞ்சம் கவனம் தேவையடா

Bavan December 12, 2009 at 7:44 AM

காங்கோன் வாழ்க...:p

//Bavan, சந்துரு நீங்கள் எப்ப chat இனை விட்டுப் போறீங்களோ அப்பதான் கங்கோன் Visible இற்கு வருவார்.//

எல்லாம் ஒரு பொதுநல நோக்கம் அண்ணா..
காங்கோன் ருவிட்டரில அடிக்கிற கும்மியே தாங்க முடியல இதில Gmailல Visibleக்கு வந்தா அவ்வளவுதான்...ஹிஹி

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார் காங்கோன் ரொம்ப நல்லவர்...அவ்வ்

வந்தியத்தேவன் December 12, 2009 at 7:57 AM

அன்புத் தம்பி கங்கோன் பற்றிய செய்திகளுக்கு நன்றிகள் மது. அது சரி அவரின் ஜீமெயில் ஸ்கிறீஸ் ஷொட் எப்படிக் கிடைத்தது? ஹக் பண்ணினீர்களோ?

Unknown December 12, 2009 at 8:17 AM

ஆகா... நானாத் தான் ஆப்புக்கு மேல ஏறி இருந்தனோ?

அனுபவம் படிப்பிச்சிற்றுது...

bloggergopi எண்ட முகவரிய நான் பாவிக்கிறேலயப்பா.... வதந்தியக் கிளப்பாதயுங்கோ.
வலையுலகிற்கு bloggergopi அ பாவிப்பம் எண்டு யோசிச்சுத் தான் 1 மாசத்துக்கு முதல் தொடங்கினன், எண்டாலும் kanagagopi ஐ விடமுடியவில்லை எண்டதால அப்பிடியே இருக்குது....

கிறிக்கெற் பற்றி பதிவே போட்டிருக்கிறதால கருத்தேதும் இல்ல...

மாயமா இருக்கக்காரணம் அண்ணன்மார் வந்து என்னக் கும்மக்கூடாது எண்டு.
எப்பயுமே இப்பிடித் தான் இருப்பன்.
தேவையெண்டா 'r u online?' எண்டு அடிச்சுப்பாருங்கோ நிண்டா பதிலளிப்பன்....

draft இல கடிதமேதும் இல்ல...
எழுத ஆக்களும் இல்ர. :(

ஆங்கிலம்...! அது சும்மா அறிவு வளர்ச்சிக்கு...

big tweet பெருசாப் பாவிக்கிறேல...
big tweet பொத்தானைக் கழற்றிடோணும்...

சமூக விலங்கா?
எ.கொ.சேர் இது...
நான் ருவிற்றர் தான்... smsgupshup வாசிக்கிறது மட்டும்....

அநாமதேய ஆப்பாளரா?
விளங்கீரும். அண்டைக்கு பெயரிலி வந்து அடிச்ச ஆப்பில இருந்து இன்னும் வெளியவே வர முடியேல...

hellotxt ஆ... ஆகா...
அது ருவிற்றருக்கு மட்டும்...

//பிற்குறிப்பு 1 : Bavan, சந்துரு நீங்கள் எப்ப chat இனை விட்டுப் போறீங்களோ அப்பதான் கங்கோன் Visible இற்கு வருவார்.//

இதுக்குப் பேர் தான் நிஜ ஆப்பு...
நான் எப்பயுமே இப்பிடித் தான் இருப்பன். நண்பர்களிடையே குண்டு வைக்கப்படாது.

ஒரு screen shot இல இவ்வளவு விசயம் இருக்கா?

பாடம் படிப்பிச்சதற்கு நன்றி.

****
ஆனா நிறையவே இரசிச்சேன்...

நல்லா இருக்கு....

Unknown December 12, 2009 at 8:18 AM

'யாருமே ஆப்பு வைக்கிறதில்ல... ஆப்பு அங்கங்கே இருக்கும்... நாங்களாத் தான் மேல போய் இருக்கிறம்' எண்டதி்ன்ர அர்த்தம் இதுதானோ?

புல்லட் December 12, 2009 at 9:26 AM

ஹாஹாஹா! கங்கோன் சமூக விலாங்கு.. ஹையோ ஹையோ! என்னால சிரிச்சு முடியல.. நகைச்சுவையான பதிவு மது.. அத்துடன் அழகான டெம்ப்லேட் வடிவமைப்பும் கூட..நீங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை தெரிகிறது.. வாழ்த்துக்கள்..

கங்கோன் தயாராகு.. வந்திக்கு அடுத்து நீதான் போல...

Unknown December 12, 2009 at 9:28 AM

//கங்கோன் தயாராகு.. வந்திக்கு அடுத்து நீதான் போல... //

என்னாது?
அடுத்ததா?
நான் பதிவுலகத்தில இருந்து ஓய்வு....
ஹி ஹி....


//ஹாஹாஹா! கங்கோன் சமூக விலாங்கு.. ஹையோ ஹையோ! என்னால சிரிச்சு முடியல..//

இருக்கும் இருக்கும்... ஹி ஹி...

Mathuvathanan Mounasamy / cowboymathu December 12, 2009 at 11:14 AM

வருக கும்மிச் சிறுத்தைகளா..

@சந்துரு,
கும்மிக் கட்சியா?.. நிச்சயமா கடல்கடந்த ஆதரவுகூட இருக்கும்

@VARO
நானும் மொக்கை போடுவம் எண்டு முயன்று பார்த்தேன்.. ஹீ ஹீ..

@சுபாங்கன்,
[[ கங்கோன், கொஞ்சம் கவனம் தேவையடா]]
அது.. இந்தவிடயம் விளங்கினாச்சரி.. :))

@Bavan,
ஹீ ஹீ.. கங்கோன் Visible இற்கு வந்தா மற்றவங்கள் மாயாமாகிடுவாங்கள்..அதுதானே..

@வந்தி
ஹக் இல்லைப்பா... கங்கோனே போய் உட்கார்ந்து கொண்டது.. :)

@கங்கோன்
செல்பேசியில, இணைய உரையாடல்ல, ஏன் நேரில சொல்றது கூட அவ்வளவு விளங்காது.. அனுபவம்தான் நல்ல ஆசான்.. ஹீ ஹீ.. இனி ஒரு முறை Screen Shot எடுக்கேக்க எதை எதையெல்லாம் Blur செய்யவேண்டும் எண்டு மறக்கமாட்டீங்கள்தானே..

இன்னும் ஆராய்வம் எண்டு பாத்தன்.. கூப்பிட்டு விஜய்க்கு குடுத்தமாதிரி எனக்கும் டாக்டர் பட்டம் தந்துடுவாங்களோ எண்டு பயந்து குறைச்சிட்டன்

ஆப்பு.. ஆப்பு.. அது அங்கங்க இருக்கும்.. எல்லாம் நாங்கள்தான்.. ஹீ ஹீ..

@புல்லட்,
நன்றிப்பா... வந்தி என்ன ஓய்வுக்கு விண்ணப்பித்திருக்கிறாரா..? இரண்டு பேரும் இருக்கலாம்தானே.. உங்கட Capacity க்கு எத்தினை பேர் வந்தாலும் தாக்குவீங்கள்தானே.. ஜிம்பாடி புல்லட்..

@கங்கோன்,
என்னாது ஓய்வா?.. முதல்ல விண்ணப்பிக்க வேணும்.. நாங்கள் அனுமதிச்சாத்தானே விண்ணப்பத்தை.. ஹீ ஹீ..

Unknown December 12, 2009 at 11:17 AM

//இனி ஒரு முறை Screen Shot எடுக்கேக்க எதை எதையெல்லாம் Blur செய்யவேண்டும் எண்டு மறக்கமாட்டீங்கள்தானே..//

உது பரவாயில்ல... இன்னொரு screen shot எடுத்தன்... அது inbox... அத imageshack இல தரவேற்றிற்றுப் பிறகு தான் அழிச்சன்... நல்ல காலம்.... :)

தர்ஷன் December 12, 2009 at 7:13 PM

என்ன கோபி இப்படி வாரி விட்டார்கள்

ARV Loshan December 12, 2009 at 7:22 PM

ஹா ஹா ஹா.. எங்கு பார்த்தாலும் ஒரே ரத்த வாடையா இருக்கே..

//இவ்வகையான சுபாங்கத்தனமான பதிவொன்றை//
இதுக்கெல்லாம் இது தான் பேரோ?? நல்ல இருக்கு..

மது கை கொடுங்கள். உங்கள் பாணி கலக்குது..

கங்கோன் ஒரு சமூக விலங்கு//
ஆஹா.. இப்படியொரு பின்நவீனத்துவ வர்ணனை எங்கணும் கேட்டறியேன்..

ஒரு ஹக்கரிடம் ஸ்க்ரீன் சொட்டை அனுப்பி தனக்கான ஆப்பை தானே செருகிக் கொண்ட கோபி சொ.செ.சூ கழகத்தில் வாந்தியால் வரவேற்கப்படுகிறார்.. ;)

டிவி பாணியில் சொல்வதானால்..

கங்கோன் ஒரு வலையுலக கிங் கொங்

ஆஹா!!! ஆஹா!!! ஒருபக்கம் புல்லட் அண்ணா..... இன்னுமொருபக்கம் கங்கோன் கோபி அண்ணாவின்ர தலையை உருட்டுறீங்களேப்பா!!! கோபி அண்ணா நீங்களும் பதிலுக்கு உருட்டுங்க...ஹி..ஹி...ஹி..ஹி...

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ