கடந்த 17 மாதங்களாக அவளை நான் அறிந்திருக்கிறேன். அல்லது அறிந்து கொண்டுருக்கிறேன். நானல்ல அவளை ஒரு முறை பார்க்கும் எவரும் அல்லது எவனும் அறிய ஆரம்பிப்பார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமூட்டக்கூடிய விடயமில்லை.
நாளொரு கலரும் பொழுதொரு ஸ்டைலுமாக உடையணிவாள். அந்தந்தக் கலருக்கேற்ற பாதணிகளோ பலவிதம். எல்லாக் கலரையும் கலந்து ஊத்தின மாதிரி ஒரு செருப்பு வச்சிருக்கிறன். எந்தக் கலர் உடுப்புப் போட்டாலும் பொருந்தும் எனக்கு.
பனியன் போட்டு சேட்டும் போட்டு பரவசமா பார்த்து நடக்கிறவன் நான். பனியன் மட்டுமே போட்டு (யோவ்.. மேலாடையை பற்றி மட்டும்தான் கதைக்கிறேன்) பார்த்தாலே பரவசமா நடக்குறவள் அவள்.
ஐந்தாறு நாளுக்கொருக்கா, ஐந்தாறு மயிரை வெட்டிச் சேப் ஆக்க ஐநூறு கொடுப்பாள் அவள். ஸ்றெயிற் பண்ணின மயிராம் அது. மண்ணாங்கட்டி சேப்பிங்கும் மயிரில் ஸ்றெயிற்றிங்கும். மாதத்துக்கு அரை முறை (இரண்டு மாதத்துக்கு ஒரு முறை.. ஹீ ஹீ) மண்டை தெரிய வெட்டுவன் நான்.
தொலைவெண்டாலும் தொங்கிக்கொண்டு பஸ்ஸில போவேன். காரில் போய்ப் போய் போரடிக்குதாம் என்று பஸ்ஸில போவதற்கு விருப்பப்படுவாள். பஸ் பிழைச்சா கொண்டக்ரரிட்ட காசு வேண்டிக்கொண்டு அடுத்த பஸ் எனக்கு. கார் பிழைச்சா பக்கத்தில விட்டுட்டு கப் (Cab) பில போவது அவளுக்கு.
அவள் போடுறது Triumph உயர்தர உள்ளாடைகள். நான் போடுறது என்ன பிராண்ட் எண்டே எனக்குத் தெரியாது. அவளுக்கும் கூடத்தான்.
சரி இந்தளவுக்கு எப்படி ஒப்பிட முடியுது எண்டு யோசிக்கிறீங்களா? சிம்பிள்.. நாளையிண்டையோட நானும் அவளும் லவ்வ ஆரம்பிச்சு சரியாக 17 மாதங்கள் ஆகப்போகுது. நான் போன பஸ்ஸும் அவளின்ர காரும் அக்சிடன்ற் ஆக, மயங்கிக் கிடந்த அவளை இழுத்து வெளியில போட்டுட்டு அவளின்ர ICE இலக்கத்திற்கு போன் பண்ணினதுதான் நான் செய்தது. பிச்சை boy எண்டாலும் பாக்க டீசண்டாத்தான் இருப்பன். இன்று வரை லவ்விக்கொண்டிருக்கிறோம்.
கதையின் நீதி : எல்லாக் காதல்களுமே கல்யாணத்தில் முடியுமென்றில்லை.
பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu
14 பின்னூட்டங்கள்.
//எந்தக் கலர் உடுப்புப் போட்டாலும் பொருந்தும் எனக்கு. //
அத நாங்கள் சொல்றது பொருத்தமாக இருக்கும் எண்டு நம்புகிறேன்...
அவரவர் தனக்குத் தானே சொல்லப்படாது... ;)
//மாதத்துக்கு அரை முறை (இரண்டு மாதத்துக்கு ஒரு முறை.. ஹீ ஹீ) மண்டை தெரிய வெட்டுவன் நான்.//
கணக்கில புலியா இருப்பீங்க போல?
எப்பிடி உங்களால மட்டும்?
//அவள் போடுறது Triumph உயர்தர உள்ளாடைகள்.//
இது தனிப்பட்ட ரீதியில் வேறு யாரையும் மனதில் வைத்து சொல்லப்படவில்லைத்தானே?
புல்லட் அண்ணா கேக்கச் சொன்னார். ;)
//நாளையிண்டையோட நானும் அவளும் லவ்வ ஆரம்பிச்சு சரியாக 17 மாதங்கள் ஆகப்போகுது.//
வாழ்த்துக்கள் அல்லது அனுதாபங்கள். ;)
// பிச்சை boy எண்டாலும் பாக்க டீசண்டாத்தான் இருப்பன்.//
திரும்பவும் சொல்றன், இத நாங்க தான் சொல்லோணும். :P
//இன்று வரை லவ்விக்கொண்டிருக்கிறோம்.//
நல்ல விசயம்... வாழ்த்துக்கள்... :)
//கதையின் நீதி : எல்லாக் காதல்களுமே கல்யாணத்தில் முடியுமென்றில்லை.//
மதுயிஸம் மதுயிஸம் எண்டு இதத் தானா சொல்றவங்கள்...
என்னா கொலைவெறி....
;-D
இந்த கதை/அனுபவம்/கொன்பியூசன் மற்றும் உங்கள் பிறந்த நாளும் ஒரே நாளில் வருவதில் ஏதாவது உள்குத்து வெளிக்குத்து நடுக்குத்து இருக்கிறதா...
மற்றப்படி :-)
//மாதத்துக்கு அரை முறை (இரண்டு மாதத்துக்கு ஒரு முறை.. ஹீ ஹீ) மண்டை தெரிய வெட்டுவன் நான்.//
கணிதத்தின் தந்தையே...வாழ்க.
//// பிச்சை boy எண்டாலும் பாக்க டீசண்டாத்தான் இருப்பன்.//
திரும்பவும் சொல்றன், இத நாங்க தான் சொல்லோணும். :P//
அதே..அதே..
//கதையின் நீதி : எல்லாக் காதல்களுமே கல்யாணத்தில் முடியுமென்றில்லை.//
கதையின் நீதியா?. காதலின் நீதியா?..ஹீஹீ
வாழ்த்துக்கள்.. ஆனா பாவம் அந்தப்பிள்ளை.. :-D
சரி சரி இப்பிடி எவிடென்சையெல்லாம் எழுதி வச்சா பின்னடிக்கு உண்மையில கலியாணம் எண்டு வரும்போது சீதனம் குறையுமே? இல்லை நானே இப்ப ஒரு ப்றின்ட் ஸ்கிரீன் எடுத்து வச்சிருக்கிறன்.. இப்பிடி எத்தினை பேர் செய்வாங்கள்? ;-)
ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்
// மாதத்துக்கு அரை முறை (இரண்டு மாதத்துக்கு ஒரு முறை.. ஹீ ஹீ) மண்டை தெரிய வெட்டுவன் நான்.//
எனது ஸ்டைலை(?) கிண்டல் பண்ணின உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//நான் போடுறது என்ன பிராண்ட் எண்டே எனக்குத் தெரியாது அவளுக்கும் கூடத்தான்//
அவளுக்கு எதுக்கு அது தெரியணும்? #சந்தேகம்
//கதையின் நீதி : எல்லாக் காதல்களுமே கல்யாணத்தில் முடியுமென்றில்லை.
//
அப்ப இதைத்தான் நீதிக்கதை எண்டுறதா?
இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும், காதலித்தநாள் அனுதாபங்களும்
இலங்கையின் முன்னிலை டுவீட்டுனர் கங்கோன் போல அண்ணல் சுபாங்கனும் பின்னூட்டங்களில #tag பாவிக்கிறார் போல... :)
கதையோ உண்மைச் சம்பவமோ நல்லாயிருக்கின்றது. காதலுக்கு கண்ணில்லை என்பது இதைத்தான். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்க்கு சிறந்த உதாரணம் Triumph ஆடைகள் தான் நான் விலையைச் சொன்னேன்.
நிமலனின் கங்கோன் பற்றிய கொமெண்ட் சூப்பர்.
புல்லட் ஏன் இந்தக் கொலைவெறி.
// நிமல்-NiMaL said...
இலங்கையின் முன்னிலை டுவீட்டுனர் கங்கோன் போல அண்ணல் சுபாங்கனும் பின்னூட்டங்களில #tag பாவிக்கிறார் போல... :) //
ஐயோ எனக்கு வெக்கமா இருக்கு...
என்னப் புகழாதயுங்கோ.....
அனுபவம் அருமை...
வாங்கோ கோபி,
<>
ஐயகோ.. என்ர வலைப்பதிவுகள் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லையோ.. நீங்களாச்சு, புல்லட்டாச்சு, மானுடனாச்சு.. ஏனையா நான் இதுக்குள்ள :))
நான் யதார்த்தங்களைச் சொன்னா மதுஇஸம் எண்டு சொல்லுறாங்கள்.. என்ன செய்யிறது.. :((
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வாங்கோ அஷோக்,
கடுமையான பெரதேனிய லெக்சர்களுக்கிடையில என்ர கதை சின்னதா சிரிப்பு வரவழைச்சிருக்குது போல.. சந்தோசம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வாப்பா கேடயக்குறிப்பு புகழ் நிமல்,
ஒரு குத்துமில்லை... சும்மா குதிரையைப் பறக்கவிட்டனான்.. அவ்வளவுதான்.
வாங்கோ பவன்,
ஹீ ஹீ.. விட்டா கணிதத்தின் தந்தை எண்டு பேஸ்புக் குழு தொடங்கிடுவீங்கள் போல..
<>
ஆகா... நிரம்ப அனுபவங்கள் இருக்கோ..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வாப்பா புல்லட்,
<>
உதெல்லாம் பழைய காலம். இந்தக் காலப் பிள்ளைகள் இவனுக்குத்தான் விசயம் தெரியும்போல.. சீதனம் குடுத்தாலும் வீணாப்போகாது எண்டு யோசிக்குங்கள்.. ஹீ ஹீ..
வாப்பா சுபாங்கன்,
<>
நீங்கள் நைக்கி சூ போட்டிருந்தால், மற்றவன் என்ன பிராண்ட சூ போட்டிருக்கிறான் எண்டு பாப்பியள். அதாவது பிராண்டட் பொருட்களைப் பாவிப்பவர்கள் மற்றவர்கள் என்ன பிராண்ட் பாவிக்கிறார்கள் எண்டு பார்ப்பார்கள்.
அவள் Triumph பிராண்ட போடுறவள் எண்டா நான் என்ன போடுறன் எண்டு பாப்பாளய்யா.. ஏனெண்டால் நானும் அவளும் லவ்வுறம்..
ம்ஹீம்..சுபாங்கன் நீங்கள் பபா சங்கமா.. இந்தளவுக்கு விளக்கப்படுத்தவேண்டிக்கிடக்குது... :))
நிமல்,,, இதுதான் நாங்கள் டெக்னாலொஜியின் உச்சத்தில் நிக்கிறதுக்கு ஆதாரம்,
டுவிட்டர் சாட்டிங்க ஆனதும், வலைப்பதிவுக்களுக்குள்ள டுவிட்டரை கொண்டந்ததும்.. :)
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வந்தி,
<>
மதுவுக்கேவா.. சரி சரி.. கடுகுகளை வடிவாப் பாத்து வையுங்கோ.. எம்சி பக்கம் அடிக்கடி போறதா தகவல்.. கடுகுகள் தேவைப்படும் காலம் நெருக்கிட்டுதுதானே.. :))
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கங்கோன்,
டுவிட்டரால பிரச்சாரம் செய்ய, MR உம் SF உம் உங்களை அணுகியிருக்கிறதா தகவல்.. உண்மையோ.. :))
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வாப்பா யோ...
பின்னூட்டங்களோட மட்டுமா.. பதிவுகளையும் இடுங்கோ.. வேலைப் பளுவோ..
நீங்களும் பின்னூட்டமிடுங்கோ