நா

டாக்டர் என்றால் டாக்டர்தான்
வேட்டைக்காரன் வர முன்னர் இதை நான் சொல்லியே ஆகவேண்டும்.

நானும் எனது நண்பர்கள் இருவரும் அமிர்தா உணவகத்திற்கு சென்று பூரி அருந்திக்கொண்டிருந்தோம் (உணவு அருந்துதல் என்று சொல்வார்களே, பூரியும் உணவுதானே). அன்று வெள்ளிக் கிழமை பக்கத்தில் கோயில் வேறு என்பதாலும் அமிர்தா ஒரு மரக்கறி உணவகம் என்பதாலும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்று பலர் வந்திருந்தார்கள்.

எனது நண்பர்களில் ஒருவன் படத்தில் உள்ளவாறு தலைமயிரை அழகாக வைத்திருந்தான்.
வந்திருந்த தெரிந்த பையன் ஒருத்தன், அவனுடைய அலப்பறை தாங்காமல் தூரத்திலேயே அவனைக்கண்டு ஓடி ஒளிப்பவர்கள் ஏராளம், தனது அலப்பறையை இங்கேயும் ஆரம்பித்துவிட்டான்.

எனது நண்பனைப் பார்த்து "டேய் இவனப் பார்றா... வில்லு வடிவேலு மாதிரி இருக்கிறான்...ஹா ஹா" என்று தன்னுடன் வந்திருந்தவர்களுடன் ஆரம்பித்துவிட்டான் அலப்பறையை. எனது நண்பனுக்கு முகம் கொஞ்சம் ஒரு மாதிரிப் போய்விட்டது. எனக்கும் கடுப்பாகிவிட்டது. மனதில் பட்டென்று உதித்தது. அந்தப் பையனைப் பார்த்து

"டேய் இவனப் பார்றா... வில்லு விஜய் மாதிரி இருக்கிறான்... ஹா ஹா" என்றேன். பிறகென்ன அவனுடன் வந்தவர்களும் சேர்ந்து சிரித்து பக்கத்தி்ல் இருந்த இரண்டு மூன்று மேசை ஆட்களே சிறிது நேரம் சிரித்துக் கொண்டிருந்தனர். அவனுடைய முகம் போன போக்கைப் பார்த்திருக்கவேணும். அவன் அண்டைக்கு அதுக்குப் பிறகு ஏதும் கதைக்கவில்லை.

(டாக்டர் விஜய் பவர் அப்படி...)

மூஞ்சிப்புத்தக மொக்கைகள்
நேற்று எனது பால்ய நண்பன் ஒருத்தனின் பிறந்தநாள். பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம் வரை என்னுடன் ஒன்றாகப் படித்தவன் அவன். உயர்தரம் (A/L) அரைவாசி வரைக்கும் எனக்கு பள்ளிக்கூடம் போக சைக்கிள் இருக்கவில்லை. அதுவரை கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களாய் என்னை எனது வீடு வந்து தன்னுடைய சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போறவன் அவன். ஒண்டாத்தான் ரியூசனுக்குப் போறனாங்கள். இரண்டு பேரும் ஒரே உயரம். வகுப்பிலயும் வரிசைப்படி விட்டு இருத்திறதால நானும் அவனும் பக்கதத்தில பக்கத்திலதான் இருக்கிறானாங்கள்.


செத்துப் போட்டான் நாலைஞ்சு மாசத்துக்கு முதல்.

அவனது உடல் கூட எரிக்கப்பட்டதா, புதைக்கப்பட்டதா எண்டு தெரியேல.

மூஞ்சிப் புத்தகக்காரன் (Facebook) முந்தநாளில் இருந்து வந்து அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவி எண்டு மொக்கை போடுறான். போய்ப் பார்த்தா கவலையாக் கிடந்தது. மூஞ்சிப் புத்தகத்தில செத்தாக்களின்ர விபரம் பற்றி அவங்களுக்குத் தெரிவிச்சா அஞ்சலிக்காக மட்டும் அவர்களது பக்கத்தைத் திறந்துவிட்டு மற்ற விடயங்களை, இப்படி வாழ்த்துத் தெரிவி போன்ற விபரீதங்களை நிறுத்திவைக்கிறார்களாம். இதுபற்றி ஆதிரை எழுதியிருக்கிறார். போய்ப் பாருங்கோ. இறப்புக்குப் பின் Facebook http://kadaleri.blogspot.com/2009/11/facebook.html

இறப்பை அறிவிக்க காரணத்தைச் சுட்டவேணுமாம். என்ன செய்யிறதெண்டு தெரியேல. :(

கூகுள் பரிசோதனைக்கூடத்தின் கடுகு ஒன்று
ஆர்ப்பாட்டமே இல்லாம வந்த கூகுளின் பாஸ்ற்பிளிபை எத்தனை பேர் பாவிக்கின்றீர்கள். மிக மிக எளிமையான, அருமையான கூகுளின் தயாரிப்புகளில் ஒன்று.

http://fastflip.googlelabs.com/


நீங்கள் ஏலவே அதனைப் பாவிக்கின்றவராக இருப்பின் உங்கள் நாளாந்தப் பார்வைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பாவிக்க ஆரம்பிக்கவில்லையா சென்று பாருங்கள். குறித்த சொல்லைத் தட்டச்சி தேவையானவற்றைப் மட்டும் நுனிப்புல் மேய்ந்து தேவையெனின் மேலும் அடிப்புல் பார்க்கலாம். நேரத்தை நிர்வகித்து செய்திகள், தகவல்களைப் பார்க்க அருமையான தளம் இது.

(FastFlip - Simply Superb)

நோக்கியா - வெடிக்குமா
நீங்கள் நோக்கியா charger பாவிக்கிறவரா? குறித்த காலப்பகுதியில் விற்கப்பட்ட charger கள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவாறு இருக்குதாம். நோக்கியாவே சொல்லுது. இங்க போய்ப் பாருங்கோ...

http://chargerexchange.nokia.com/chargerexchange/en/

தங்களுக்கு இவ்வகைச் charger களால் ஏதாவது ஆபத்து ஏற்பட முன்னர் கொண்டுபோய் மாத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு வேண்டாதவரிடம் மாத்திக் கொல்லுங்கள்.


(ஏற்கனவே வெடிக்கிற செல்பேசிகளைச் செய்து இந்தியாவுக்கு விட்டு, இந்தியா வல்லரசா மாறுவதை தடுக்க சைனாக்காரன் முயலுறான் எண்டு ஏதோ ஒரு வலைப்பதிவில வாசிச்சனான்... :-) )

Charger க்கு என்ன தமிழ் வார்த்தை?


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

7 பின்னூட்டங்கள்.

Unknown November 15, 2009 at 8:32 PM

//"டேய் இவனப் பார்றா... வில்லு விஜய் மாதிரி இருக்கிறான்... ஹா ஹா"//

ஹா ஹா.... டொக்ரர் விஜய் rocks...

Google fast flip பற்றிய தகவலுக்கு நன்றி... இப்போது தான் அறிகிறேன்...

charger என்றால் மின்னேற்றி என்று சொல்லலாமா?

Atchuthan Srirangan November 16, 2009 at 12:18 AM

//இறப்பை அறிவிக்க காரணத்தைச் சுட்டவேணுமாம். என்ன செய்யிறதெண்டு தெரியேல. :(//

இன்று செத்தால் நாளை பால்

யோ வொய்ஸ் (யோகா) November 16, 2009 at 11:30 AM

தளத்தை அழகாக வடிவமைத்துள்ளீர்கள். கலந்து கட்டி கொடுத்துள்ளீர்கள்.

சார்ஜரை தமிழில் ”கல மின் வழங்கி” என கூறலாமா? பெயர் நீளம் அதிகமோ?

ARV Loshan November 16, 2009 at 11:46 AM

ஹா ஹா ஹா.. அது சரி உங்கள் சிகை அலங்காரம் பற்றி யாரும் எதுவும் இதுவரை சொன்னதில்லையா? ;)

// மாத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு வேண்டாதவரிடம் மாத்திக் கொல்லுங்கள்.


(ஏற்கனவே வெடிக்கிற செல்பேசிகளைச் செய்து இந்தியாவுக்கு விட்டு, இந்தியா வல்லரசா மாறுவதை தடுக்க சைனாக்காரன் முயலுறான் எண்டு ஏதோ ஒரு வலைப்பதிவில வாசிச்சனான்... :-) )
//

பயங்கரமாய் ரசிச்சேன்.. :)

மின் கல வழங்கி சரி தான் என நினைக்கிறேன்,. யோ சொன்னது சரி..

Google Fastflip நாங்களும் பார்க்கிரமில்ல.. ;)

Unknown November 16, 2009 at 2:16 PM

charger - மின்கல அடுக்கு என்பது சரி என்று நினைக்கிறேன்

Unknown November 16, 2009 at 2:18 PM

charger - போர்குதிரை

Ref : http://www.google.com/dictionary?aq=f&langpair=en|ta&q=charger&hl=en

Mathuvathanan Mounasamy / cowboymathu November 16, 2009 at 2:42 PM

@கோபி,

மின்னேற்றி பொருத்தமா இருக்கிறமாதிரி இருக்கு. நன்றி

@Atchu

இன்று செத்தா நாளை பால்.. கூட சிலருக்குத்தான் பொருந்தும்.. செத்தா மண்கூட இல்லாம் எத்தினையோ பேர்.. அவர்களில் அவனும் ஒருத்தன் :(

@யோ

நன்றி... தளம் வடிவாக்க கொஞ்சம் மினக்கட்டனான்.

கல மின் வழங்கி.. மின்கலத்தை குறித்து நிற்பதுபோல் தெரிகிறது...

@Loshan

நன்றி ரசிச்சதுக்கு :))

நீங்கள் கூகுளின் ரசிகன்... என்னைப்போல.. நீங்களாவது அதன் தயாரிப்புகளை விட்டுவைக்கிறது..

@Sri

ஹீ ஹீ.. போர்க்குதிரையா... கூகுள் அகராதி ரொம்ப அகராதி பிடிச்சுப்போய்க் கிடக்குது..

மின்கலவடுக்கு சின்னவயசில படிச்சது. அது இதற்குப் பொருந்தாது. சிறி

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ