நா

கூகுள் வேவும் கிலேசமும்
கூகுள் சில வேளைகளில் ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுடன் ஆரம்பிக்கும் சில தயாரிப்புகள் தானே தேடாத அளவுக்கு இணையத்தில் முகவரி இழந்து கிடக்கின்றன. உதாரணத்திற்கு Knol (http://knol.google.com) ஐக் குறிப்பிடலாம். கூகுளைக் கன்னா பின்னாவென்று காதலிக்கும் எனக்கு கூகுள் வேவ் கூட சிறிது கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூகுள் வேவ் அடிப்படையி்ல் என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என்பது மில்லியன் டொலர் கேள்வியாக எல்லோர் முன்னும் விழுந்து கிடக்கிறது. வேவ் ஒன்றினைத் தொடங்கிவிட்டு அடுத்து என்ன செய்யவது என்று யோசித்துக் கிடப்பது எல்லோரினதும் வாடிக்கையாகிவிட்டது. என்றாலும் preview வாக இருக்கும் கூகுள் வேவானது முற்றாக எல்லோருக்கும் திறந்து விடப்படும்போது தனக்கென இடத்தைப் பிடிக்கும்போல் தெரிகிறது.

செயலி உருவாக்குநர்களுக்குகாக (Application Developers) திறந்துவிடப்பட்டிருக்கும் வேவ் இப்போது புதிய புதிய செயலிகளால் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வர்த்தக நோக்கிலான நிறுவனங்களின் பார்வையும் வேவின் மேல் அதிகமாக பட ஆரம்பித்துள்ளது. ஆனாலும் மூஞ்சிப்புத்தகம், ஹாய்5, Tagged, மைஸ்பேஸ் என்று மூழ்கி வெளியி்ல் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிடக்கும் மாண்புமிகு மாந்தர்களை எவ்வாறு வேவ் தனக்குள் உள்வாங்கப்போகிறது...!!!
இலங்கையில் இரு இணைய நிகழ்வுகள்
இணைய ஆர்வலர்களுக்கான பயன்தரு நிகழ்வொன்றும், இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்ரடாவது இனிய சந்திப்பும் இம்மாதமோ அல்லது வரும்மாதமோ நிகழவிருக்கிறது. இப்போதைக்கு இத்தகவலை மட்டுமே தரக்கூடியதாக இருந்தாலும் ஒரிரு கிழமைகளில் விபரங்களை வலைப்பதிவுகளில் பெறக்கூடியதாக இருக்கும்.

இலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் குழுமத்தில் சேராத இலங்கைப் பதிவர்கள் இங்கே (http://groups.google.com/group/srilankantamilbloggers) சென்று உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் செய்யவேண்டிய நல்லவைகளை கூட்டாகவும் சேர்ந்து செய்யவோம்.
மூத்தபதிவர் வந்திப் பாலகனின் வாழ்த்துப்பா

அழகிய இலங்கையின் மூத்தபதிவர் (வயதிலல்ல) அழகிய வந்தியத்தேவனின் பிறந்தநாள் இன்று. அவர் நலமோடு என்றும் நன்றாக வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

அவருக்காக ஒரு வாழ்த்துப்பாடல் இதோ...

ரும்காலம் எல்லாம் நலமாக என்று
ந்நாளில் வாழ்த்துவோம் இப்பாலகனை
திரும்பிய திசைகளெல்லாம் இவன் புகழ்
லதரங்க இசையாய் பரவட்டும்
த்திருநாட்டின் மூத்த பதிவனிவன் என்று
தேகம் சிலிர்த்து சேர்ந்து பாடுவோம்
யதொரு தடையாகா வந்திப் பாலகனை
ன்புற வாழ்த்துவோம் இந்தத் திருநாளில்.

(தமிழ்க்கொலைகளை மன்னித்தருள்க)
இந்தியச் சிலந்தி மனிதன்
அண்மையில் ரிஷான் இந்தியாவைச்சேர்ந்த ஜோதிராஜ் பற்றி ஒரு இந்தியச் சிலந்தி மனிதன் (http://rishansharif.blogspot.com/2009/11/blog-post.html) என எழுதியிருந்தார். அவை உண்மைதானா என அறிய முற்பட்டு தேடிய வேளையில் யூரியூப்பில் அவரின் நிறைய சலனங்கள் கிடைத்தன. அவற்றிலொன்று இது. இச்சலனத்தைப் பார்ப்பவர்கள் 0.46 நேரத்தில் அவரைப் பாருங்கள். எவ்வளவு தன்னம்பிக்கை இருந்திருக்கவேண்டும் அவருக்கு.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

11 பின்னூட்டங்கள்.

Subankan November 9, 2009 at 5:55 PM

கூகில் வேவ் எனக்குப் பிடித்திருக்கிறது. கொஞ்சம் நண்பர்கள் சேர்ந்தால் டிவிட்டர் கும்மிகளை அங்கேகூட வைத்துவிடலாம் போலத் தெரிகிறது.

பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வந்தி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

சிலந்தி மனிதன் - வியக்கவைக்கிறார்!

Unknown November 9, 2009 at 5:56 PM

எனக்கும் கூகுல் வேவ் இக்கும் இப்போதைக்கு சம்பந்தமில்லாதபடியா எனக்குத் தெரியாது ஒண்டும்...

சந்திப்பு முயற்சிகளுக்கு ஆலோசனைகள் வரவேற்கப்படத்தக்கன தான்...

//வயதொரு தடையாகா வந்திப் பாலகனை//
ஹா ஹா......

நல்ல கவிதை....

சலனப்படத்திற்கு நன்றிகள்....

Mathuvathanan Mounasamy / cowboymathu November 9, 2009 at 5:56 PM

சுபாங்கன்,

பதிவு போட முன்னர் எப்படியப்பா உங்களால் பின்னூட்டம் இடமுடிகிறது.. :))

யுவகிருஷ்ணா November 9, 2009 at 6:11 PM

அழகிய(?) வந்தியத்தேவனுக்கு பொறந்தநாள் வாழ்த்துகள்!

ARV Loshan November 9, 2009 at 11:58 PM

நல்ல தொகுப்பு மது..

அழகான தலைப்பு.. :) வாழ்த்துக்கள்..

கூகிள் வேவ் எனக்கு பெரிதாக ஈர்ப்பை இன்னும் ஏற்படுத்தவில்லை..ஆனால் உங்களைப் போல நானும் ஒரு கூகிள் காதலன்.. ;) எதிர்காலத்தில் அதிலேயே ட்விட்டர் போல் மூழ்குகிறேனோ தெரியாது..

அடுத்த சந்திப்புக்கு ஆதரவும் வாழ்த்துக்களும் ஒத்துழைப்பும் என்றும் உண்டு.. வெற்றியாக்குவோம்..

வந்திக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்..

சிலந்தி மனிதன் பின்னுகிறார்.. ;)

வந்தியத்தேவன் November 10, 2009 at 12:19 AM

மதுவின் கவிதைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

எனக்கும் இன்னமும் கூகுள் வேவ் பிடிபடவில்லை விரைவில் நீச்சலடிப்பேன்.

அடுத்த சந்திப்பின் கட்டாயம் இப்போது தேவைப்படுகின்றது, மீண்டும் சிறப்பான திட்டமிடல்களுடன் கலக்குவோம்.

Admin November 10, 2009 at 2:08 AM

கூகில் வேவ் பற்றி எனக்கு என்னும் போதியளவான விளக்கமில்லை.

மீண்டும் விரைவில் சிந்திப்போம். என்றும் என் ஆதரவு இருக்கும்.

வந்தி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) November 10, 2009 at 9:08 AM

அழகான விடயங்களின் தொகுப்பு.

கூகுல் வேவ் நானும் இன்னும் அலையடிக்க பயிலுகிறேன். சுபாங்கன் ஒரு முறை என்னுடன் அலையடித்தார்.

வாழ்த்துப்பா எழுதிய உங்ளை மஜா கவிஞராக புல்லட் விளிப்பு

Mathuvathanan Mounasamy / cowboymathu November 10, 2009 at 1:25 PM

@கனககோபி
உங்களுக்கெல்லாம் கூகுள் தன்னைத் தரமாக்கிப்போட்டுத்தான் தரும்போல :))


@யுவகிருஷ்ணா
ருவிற்றரில மிஸ் ஆகி வந்துட்டுது. பரவாயில்லை..


@LOSHAN
நன்றி... இந்தத் தலைப்பு எடுக்க கடுமையா யோசிச்சனான்... படுக்கேக்க... சாப்பிடேக்க... பஸ்ஸில எண்டு கடைசியா இதுதான் எண்டு முடிவெடுத்திட்டன்.. :))


@வந்தியத்தேவன்
வாப்பா வந்தி... வாழ்த்துக்களால் மனம் நிறைந்து இருப்பீங்கள்..


@சந்ரு
கொஞ்சக் காலத்தில் எல்லாரும் சேர்ந்து அலையடிப்போம்.. :D



@யோ வாய்ஸ் (யோகா)
இதெல்லாம் மஜா கவிதை இல்லைப்பா... அதுக்கு நீங்கள் என்னோட கம்பஸில இருந்திருக்கவேணும்... ஹீ ஹீ புல்லட்டிட்ட கேளுங்கோ..

ISR Selvakumar November 11, 2009 at 10:19 AM

கூகுள்வேவ் தற்போது மெருகேறியிருக்கிறது.
இங்கே வந்து எனக்கு உங்கள் குரலிலேயே வாழ்த்து சொல்லலாம். அதை இமெயில்போல அட்டாச் செய்யாமல் எல்லோரும் கேட்கலாம். நானும் பதிலுக்கு உங்களை என்னுடைய குரலிலேயே வரவேற்கலாம்.

ஒரே ரெக்கார்டர், 100 பேர் இருந்தால் அனைவரும் ரெக்கார்ட் செய்யலாம், கேட்கலாம், பகிரலாம்
http://tinyurl.com/yly8dsc

==============
இந்த சுட்டிக்கு வந்தால் என்னுடன் இருக்கும் 200 பேருடன் சுடோக்கு விளையாடலாம்

http://tinyurl.com/yfdtv6l

Mathuvathanan Mounasamy / cowboymathu November 11, 2009 at 1:18 PM

செல்வக்குமார்,

குரலைக்கேட்கக் கூடியாத இருக்கிறது என்பது புதிய விடயமெனக்கு. உங்களது சுட்டிக்குச் சென்றிருந்தேன். நான் அந்த வேவின் பங்காளர் இல்லை எனச் சொல்கிறது :((

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ