நீண்டகாலம் வலையுலகைவிட்டு தள்ளியிருந்ததாலோ என்னவோ எழதுவதற்குக்கூட முடியவில்லை. வார்த்தைகள் கோர்வையாக மறுக்கின்றன. நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்த என்னுடைய வலையுலகம் வேலைப் பளு காரணமாக சிறிது காலம் விட்டு நீங்கிச்சென்று இருந்தது. இப்போது புதிய மாற்றங்களுடன் சென்றுகொண்டிருக்கிறதை உணர முடிகிறது.
என்னதான் மாற்றங்கள் வந்தாலும் தெருச்சண்டைகளையும் டவுசர் அவிழ்த்தல்களையும் பாரம்பரியங்கள் ஆக்கியே தீருவோம் என்ற குரல்கள் இன்னமும் ஒலிப்பது மனத்தை நெருடுகிறது.
இன்றைக்கு ஏன் எனக்கு எழுதவேண்டுமெனத் தோன்றியது? எழுதியே ஆகவேண்டுமென ஒரு அவா; வெறி; ஆதங்கம்; மனக்கிடக்கை. வேறொன்றுமில்லை, ஜதராபாத்தில் நடந்த ஆசிட் சம்பவம்தான்.
விபரத்துக்கு இங்கே செல்லுங்கள்
http://cenimafun.blogspot.com/2008/12/3_12.html
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=7020&cls=&ncat=IN
வாசித்தபோது ஒருவித உணர்ச்சிக் குவியல் (குவியலின் அடிப்பாகம் வெறியில்தான் நிற்கிறது. இது ஒன்றும் அவங்களுக்கு வந்த வெறியல்ல) வந்து இப்போது எழுத்திக்கொண்டிருக்கும்வரை விட்டுவிலகமாட்டேன் என்கிறது.
ஆசிட் ஊற்றப்பட்ட்ட இருபெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்றபோது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அதில் ஒரு பெண்ணின் பார்வை முற்றாகப் போய்விட்டது என வாசித்தபோது ஏன் அந்தப் பெண் தப்பவேண்டும் என அடிமனம் கலங்குகிறது (தப்பாக எடுக்காதீர்கள்)
என்னைப் பொறுத்தவரையில் பெண்கள் மீதான் வன்புணர்ச்சியை விட இந்தவகை கொடுமைகள் எத்தனையோ மடங்கு கொடூரமானது. வன்புணர்ச்சிக்காளாக்கப்பட்ட பெண் காலத்தால் மீண்டுவர சாத்தியம் உளது. ஆனால இந்தப் பெண்கள் என்ன செய்வார்கள். கனத்துப் போகிறது மனம்.
பதிவை நீட்டவில்லை. இறுதியாக ஒரே ஒரு வசனம்.
ஆசிட் ஊற்றியவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவற்றுறையினருக்கு எனது சல்யூட்.
நான்கைந்து பதிவர்கள் நியாபகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். ஐயனார் அய்யனாராவதற்கும், ஔவையார் அவ்வையாராவதற்கும் ஒலிக்குறிப்பு ஒற்றுமையை காரணம் காட்டலாம் பிழையானதெனினும்கூட. ஞாபகம் எவ்வாறையா (எவ்வாறய்யா அல்ல) நியாபகம் ஆகிறது. உங்களது நீண்டகாலப் பழக்கம் நியாபகம் என்ற இல்லாத; தவறான சொல்லை ஞாபகம் என மாற்றக் கஷ்டப்படுத்தலாம். ஆனால் உங்கள் குழந்தைகளுக்கும் அவ்வாறே சொல்லிக் கொடுக்காதீர்கள்.
இந்தத் தலையங்கத்தில் நிறையப் பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நானும் மணியால் இந்தப் விளையாட்டுக்கு அழைக்கப்பட்ட பின்னர்தான் அது என்ன என்று ஆராயவிழைந்தேன்.
பின்னோக்கிப் பின்னோக்கிச் சென்று விளையாட்டின் ஆரம்பத்தைப் பிடிப்போமென்றால் முடியவில்லை. யாராவது இந்த A for Apple இன் ஆரம்பத்தைச் சொன்னால் நலம். எப்படி இந்த உபயோகமான விளையாட்டு ஆரம்பித்தது இப்போது எப்படி மாறியிருக்கிறது என அறிய அவா, அவ்வளவுதான். இரண்டு மூன்று நாட்களில் நானும் பங்குகொள்கிறேன்.
இந்த நல்ல விளையாட்டை நினைக்க ஆங்கிலப் பகிடி ஒன்று நினைவுக்கு வருகிறது.
Customer care இற்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது...
"உங்களது பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் சொல்லுங்கள்"
"பெயர்...Appappa.."
"விளங்கவில்லை..."
"Appappa...a for apple, p for pineapple, p for pineapple,
a for apple, p for pine.. "
"ஐய..மொத்தமா எத்தனை ஆப்பிள், எத்தனை பைனாப்பிள்
என்று சொல்ல முடியுமா?"
- ரீடர்ஸ் டைஜஸட் உபயம்
நாற்றம் என்பதுதான் எழுத்துவழக்காக இருப்பினும் நாத்தம் எனும் பேச்சுவழக்குக்கு வீச்சு அதிகம்தான் (நியாபகம் என்பது பேச்சு வழக்கல்ல). நாற்றம் பிடித்தவனே என்பதை விட நாத்தம் புடிச்சவனே என்பதில் effect இருக்கிறது.
சரி, இப்ப விடயம் என்னவென்றால் எங்கட பாதங்களில வழமையாக குஜாலா இருந்துகொண்டிருக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் நாங்கள் காலறையைப் போட்டால் வாற ஈரப்பதம் கண்டால் கூட்டமாச் சேந்து கும்மி அடிச்சு (எங்கட வலைப்பதிவர்கள் அடிக்கிறத விடக் கம்மிதான்) துர்நாற்றமுடைய சல்போரஸ் விளைவொன்றை வெளியேற்றுவார்கள் (says Doris J. Day, M.D., an assistant professor of dermatology at New York University).
இதை நீக்க என்ன செய்யலாம்... காட்டன் (cotton ) காலுறைகளையும், மூச்சுவிடக்கூடிய சப்பாத்துக்களையும் பாவியுங்கள் என்கிறார் அவர். அதாவது அணியும் சப்பாத்து காற்றை உள்வாங்கக் கூடிய பதார்த்தங்களால் (தோல் மற்றும் துணிவகை) ஆனதாக இருக்கவேண்டும். காலுறையை அணியும் முன் ஈரப்பதனுறிஞ்சும் பவுடர்களை பாதத்திற்குப் போட்டுக்கொள்ளலாம். இந்த நாத்தப் பிரச்சினை அதிகமாக உள்ளவர்கள் வாரத்துக்கு மூன்று இரவுகளில் தேயிலை ஊறிய நீரில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைக்கவேண்டும். தேயிலையிலுள்ள டனிக் அமிலம் (Tannic acid) காலின் துர்நாற்றத்தைப் போக்கும். இதுக்கு மேலயும் பிரச்சினை எனின் வைத்தியர் ஒருவருடன் கலந்தாலோசிப்பதே சிறப்பு.
நாற்றம் என்பது உண்மையில் வாசத்தினை குறிக்கும் சொல். அந்தப் பூவின் நாற்றம் என்னை கவர்ந்திழுத்தது போன்ற வசனங்கள் தமிழில் இயல்பு. நாற்றத்திற்கு எதிர்ச்சொல் துர்நாற்றம். அவள் நாத்தம் புடிச்சவள் என்பதன் நிஜ அர்த்தம், அவளுக்கருகில் போனாலே வாசம் வீசும் என்பதுதான். ஆனா நாங்கள் சிறிது சிறிதாக அர்த்தத்தை மாற்றிவிட்டோம்.
மதுவதனன் மௌ.
டயலொக் கிட்ஸ் (Dialog Kidz)
ஒருவகையில் தடுமாறும் வயதில் செல்பேசிகளால் திசைமாறும் சிறுவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க பெற்றோருக்கு வழிவகை செய்யதால் டயலொக்கிற்கு நன்றி கூறலாம்.
ஆண்கள் தங்கள் காதலிகளுக்கு (ஆண்கள் பன்மையாகையால் காதலிகள் எனப் பன்மை வரவேண்டியதாயிற்று) இந்த இணைப்பை வாங்கிக் கொடுத்தால் என்ன என இப்போது சிந்திக்கத் தலைப்பட்டிப்பார்கள்
குசேலப்பிரபு
பில்லா (புதியது) திரைப்படம் நான் மிகவும் இரசித்துப் பார்த்த படங்களில் ஒன்று. பழைய பில்லா, பழைய டொன், புதிய டொன் என ஒன்றையும் நான் முதலில் பார்த்திருக்கவில்லை. அத்துடன் ரகுமான் பில்லாவி்ல் வில்லன் என்பது அவர் படத்தில் வெளிப்பட்ட பின்னர்தான் தெரியும். ஆகவே ஆங்கிலப் படமொன்றைப் பார்த்த திருப்தி.
அதைவிட இப்போது அதிக திருப்தி பில்லாவில் பிரபு மண்டையைப் போட்டதுதான். இல்லாவிடின் பில்லா 2 இல் வந்து தானும் பிதுங்கி எங்களையும் விழிபிதுங்க வைத்திருப்பார்.
வேர்ட் 2007ஐ பார்ப்பது எப்படி?
1. கோப்பின் extensionஐ zip என மாற்றுங்கள். அதாவது கோப்பு hello.docx இனை hello.zip என மாற்றுங்கள்.
2. Winzip, Winrar அல்லது உகந்த மென்பொருள் கொண்டு unzip (extract) செய்யுங்கள்.
3. extract செய்ய folder இனுள் word எனும் folder இருக்கும். அதனுள் document.xml எனும் கோப்பிருக்கும். அதனை document.html என மாற்றுங்கள். இப்போது அதனை பயர்பாக்ஸிலோ அல்லது வேறு உலாவியிலோ திறந்து பார்த்து ஆரம்ப வேர்ட் 2007 கோப்பின் உள்ளடக்கங்களைப் பாருங்கள். |
வேர்ட கோப்பில் படங்கள் ஏதாவது இருந்திருந்தால் அவை media எனும் folder இனுள் இருக்கும்.
folder, unzip மற்றும் extension என்பவற்றுக்குரிய இந்தப் பதிவிற்குப் பொருந்தக்கூடிய வகையிலான ஆங்கிலச் சொற்கள் தெரிந்தவர்களை தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
மதுவதனன் மௌ.
பெண்களே அப்படித்தானா அல்லது சிறுவயது முதல் பெற்றோர் ஊட்டி வளர்க்கிறார்களா? எனது பன்னெடுங்கால (ஒரு நாலைந்து வருடம்தானுங்க) பார்வையிலிருந்து இந்தக் கேள்வி எனக்குள் குடைகிறது. வேறொன்றுமில்லை நெரிசல் மிகுந்த வீதியின் மஞ்சள் கடவையை கடக்கும்போது அநேகமான தரம் அவதானித்திருக்கிறேன் கூட்டமாகக் கடக்கும்போது பெண்கள் எப்போதும் இடது கைப் பக்கம் ஓடிவந்து நிற்பார்கள். பாதி வீதியைக் கடந்தவுடன் வலது பக்கம் இயல்பாகவே மாறுவார்கள். எப்படி அநேகமான பெண்கள் இப்படி இசைவாக்கமடைகிறார்கள் என அதிசயித்திருக்கிறேன். விளக்கத்திற்காக பாறைபோல உறுதியான ஆண்களின் பாதையை நீலத்திலும் இதயம் போன்ற மென்மையான பெண்களின் பாதையை சிவப்பிலும் குறித்திருக்கிறேன். நீங்களும் மஞ்சள் கடவையைக் கடக்கும் போது ஒருமுறை அவதானித்துப் பாருங்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக இன்னொரு பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் கம்பனியிலோ அல்லது நெற்கபேயிலோ ஜிமெயில் பாவித்துவிட்டு லாக்அவுட் பண்ணாது வந்துவிட்டீர்களா. உடனடியாக எங்காவது அருகில் உள்ள இணையத்தொடர்ப்புக்குச் சென்று உங்கள் ஜிமெயிலுக்குச் சென்று கம்பனியிலோ அல்லது நெற்கபேயிலோ திறந்து வைத்துவிட்டு வந்த அக்கவுண்டை லாக்அவுட் பண்ணமுடியும். மேலும் உங்களது ஜிமெயில் வேறு யாராலாவது பயன்படுத்தப்படுகிறதா எனவும் உறுதிசெய்துகொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்காக இங்கே செல்லுங்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
சுஜாதா எங்கோ சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழில் புணர்ச்சி விதிகளின் படி இந்த இருவேறு புணர்ச்சிகளையும் எவ்வாறு விளங்கப்படுத்துவது.
தங்கம் + காசு = தங்கக்காசு
சங்கம் + காலம் = சங்ககாலம்
முன்னையது திரிதல் விகாரப் புணர்ச்சியாக இருக்க, பின்னயது கெடுதல் விகாரப் புணர்ச்சியாக உள்ளது. ஆனால்
வருத்தப்படா வாலிபர் சங்கம் + காதல் = வருத்தப்படா வாலிபர் சங்கக்காதல்
என திரிதல் விகாரப் புணர்ச்சியாகத்தான் வரும். யாராவது தமிழ் வல்லுநர்கள் இதைத் தெளிவித்தால் நலமே.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மதுவதனன் மௌ.
ரீடர்ஸ் டைஜஸ்ட் என்பது நீண்ட காலமாக வெறும் கனவாகவே என்னுடன் இருந்து வந்துள்ளது. மாதா மாதம் எனது குடும்பம் அனுப்பும் காசில் முந்நூறு ரூபாவுக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்குவதென்பது இயலாத விடயமாகவே இருந்தது. இப்போது வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன். முதல் மாதச் சம்பளத்திலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் வாங்கிவிட்டேன்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஜூலை மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் அருமையான ஒரு கட்டுரை. "The Power of Sleep" என்று துறை போந்த வல்லுநர்களால் ஆராயந்து பெற்ற முடிவுகளைக் கொண்டு முறையான நித்திரை எப்படி ஒருவனை(ளை) கவர்ச்சியாக, உடல் வாகாக மற்றும் உறுதியாக வைத்திருக்கும் என சொல்லியிருக்கிறார்கள். இரவில படுக்கைக்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னரே சாப்பிடுங்கள் அதுவும் சோற்றைச் சாப்பிடுங்கள் என்று கூறுயிருக்கிறார்கள் (இன்னும் என்னென்னவெல்லாம் கூறியிருக்கிறார்கள் என்று எழுதினால் காப்பிரைட் சட்டம் என்மீது பாயலாம்). நல்லதொரு கட்டுரை. வேலை முடிந்து அந்தத் தூக்கம் பற்றிய கட்டுரையை நான் வாசிக்கும்போது நேரம் நடுநிசி தாண்டி இரண்டுமணியாகிக்கொண்டிருந்தது.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
விமர்சனங்கள் கூறுவதிலிருந்து படத்தின் பின்னே கிடக்கும் அந்த உண்மை புரிந்துவிட்டது. குசேலன் நட்பின் வீரியத்தைக் காட்டும் படம். பசுபதி - ரஜினி நட்பல்ல; கமல் - ரஜினி நட்பு. ஒரு சினிமாவுக்குப் பின்னால் நிஜ நட்பொன்றின் வலிமை கண்டு சிலாகித்தேன். ரஜினி தனது கமலுடனான நட்பைப் பாராட்டும் முகமாக; தசாவதாரம் 100 நாட்கள் கடந்தும் ஓடவேண்டும் என்பதற்காகவும், குசேலன் தசாவதாரத்தின் வரப்போகும் நாட்களின் வசூலை எந்தவித்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவும் மிகவும் சிரத்தையுடன் குசேலனை ஒழுங்குபடுத்தியிருக்கிறார். ரஜினியின் மகோன்னத மனத்திற்காக தசாவதாரம் இன்னொரு முறை பார்க்கப் போகிறேன்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
தமிழ்99 வடிவம் இலங்கை தமிழ் வல்லுனர்களால் ஆராய்ச்சிக்குட்டபடுத்தப்பட்டுள்ளது. நாங்கள் சாதாரணமாக எழுதுவதுவதிலிருந்து தமிழ்99 தட்டச்சல் வேறுபடுவதால் ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஆரம்பக் கருத்துக்கள் வந்துள்ளன. உதாரணமாக "நான் தமிழ்99 முறையிலேயே தட்டச்சுகிறன்" என ஊற்றுப் பேனாவொன்றால் ஒரு தாளில் எழுதவேண்டியதை " நஆனஃ தமஇழஃ99 மஉறஐயஇலஏயஏ தடடசசஉகஇறஏனஃ" எனத் தட்டச்சவேண்டியுள்ளதென்பதே அவர்கள் வாதம். நாம் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் வேறுபாடென்கிறார்கள். மேலும் சீன மற்றும் ஜப்பானிய எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சுகிறார்கள் என ஆராயவிருக்கிறார்கள். நல்ல முடிவுகள் வந்தால் மாறுவோம்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வால்ட் டிஸ்னி-பிக்ஸாரின் கலக்கும் அனிமேஷன் குறும்படம் ஒன்றை பிரேம்குமாரின் வலைப்பூவி்ல் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அருமையான படம். தரவிறக்கி வைத்துள்ளேன். பார்க்காதவர்கள் மறக்காமல் ஒரு முறை பார்த்துச் செல்லுங்கள் இங்கே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மதுவதனன் மௌ.
இலங்கையில சார்க் மாநாடு என்றுமில்லாத எடுபிடிகளோட நடக்குது. இன்று காலையில் பேரூந்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். சார்க் மாநாடுக்கு கலந்து கொள்ள வந்த ஒருவர் ஷாப்பிங்குக்கு வந்ததால் கொழும்பு கல்கிஸ்ஸவில் வைத்து அனைத்து வாகனங்களையும் நிறுத்திவிட்டார்கள். நடந்து செல்ல அனுமதிக்கிறார்களாம் என யாரோ ஒருவர் அலம்பக் கேட்டு 26 ரூபா டிக்கட் எடுத்திருந்த பேரூந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால் வாகனங்களை மறித்த இடத்தில் எங்களையும் மறித்துவிட்டார்கள். வாகனங்களை அனுமதித்த பின் ஏதோ ஒரு பேரூந்தில் ஏறிக்கொண்டேன். பின்னர் தான் பார்த்தேன். அதே பேரூந்து, அதே நடத்துனர். வேறென்ன மேலும் 17 ரூபாவுக்கு அழவேண்டியதாகிவிட்டது.
கொழும்பில் டிஜிட்டல் பிரின்டிங்க் கடையின் முகப்பில் இரண்டு இஷான் சர்மா உயர விளம்பரம் ஒன்று மாட்டியிருந்தார்கள். ஒரு வெண்தோல் நங்கை பீச் மணலில் சிக்கன உடையில் காட்டவேண்டிய பாகங்களை ஆர்வமூட்டக்கூடிய வகையில் காட்டிக்கொண்டு தொடையில் பட்டிருக்கும் மணல் தெரியுமளவுக்கு இருந்தாள் (பிரின்டிங்க் குவாலிட்டி), நங்கையின் கைகளுக்கு இடையால் ஒரு வாசகம்..24 our service. படத்தைப் பார்த்துட்டு இது பிரின்டிங்க் கடையா இல்ல, 24 மணித்தியாலமும் இப்படியான பெண்கள் இருக்கும் கடையா என்று யோசிக்கவேண்டியிருக்கு.
மன்னிப்புக் கேட்டல் என்ற மகோன்னதமான விடயம் ரஜினியின் அறிக்கையிலிருந்த இறுதி வசனத்தால் பாழாக்கப்பட்டிருப்பதுடன் தமிழ்நாட்டில் குறிப்பிட்டளவு சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது. குசேலன் படத்தை கொழும்பில் வெளியிட விடமாட்டோம் என்று மகிந்த அரசாங்கம் அறிவித்தால் இலங்கை இராணுவம் தமிழக மக்களை கடலில் சுட்டுக் கொல்வது சரியானதே என்று ரஜினி வாய்ஸ் விடுவாரெனத் தோன்றுகிறது. அவதார புருஷர்கள் என்று யாரும் இல்லை என உணர தமிழர்களுக்கு இன்னும் காரணம் தேவைப்படுகிறது.
குசேலன் கொழும்பில் இன்று ஆகஸட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு ஒத்துவராத மாதம். அதனால்தான் சர்ச்சையில் சிக்கியுள்ளாரோ தெரியவில்லை. லக்கியின் குசேலன் விமர்சனம் பார்த்தேன். கதையைச் சொல்லாத நல்ல விமர்சனம் (ஒருவேளை கதை இல்லையோ). அவரோட விமர்சனத்தில இது இருந்தது..."குருவி எடுத்தவர்களை கோயில் கட்டி கும்பிடலாம்!".
மதுவதனன் மௌ.
"என்ன நீங்கள், இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே கொஞ்சம் கூடநேரம் படுக்கவிடமாட்டீங்களா?"
மெத்தையில் படுத்தபடி கேட்டவளை நினைக்க கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. பின்னே என்ன, அதிகாலை ஐந்துமணிக்கே எழும்பி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட ஏழு மணிக்கு வெளியில் செல்லவேண்டிய தேவை இருந்ததால் வீட்டைச் சுத்தப்படுத்தி, ஃபிரிஜ்ஜில் இரவே ஊறப்போட்டிருந்த மாவில் எனக்கும் அவளுக்கும் போதுமான தோசை சுட்டு, சின்னதாய் ஒரு சாம்பாரும் செய்துவிட்டு இறுதியில காப்பி போட்டுக்கொண்டுவந்து அவளை எழுப்பினால் இப்படிச் சொல்கிறாள்.
ஆணாக நான் இவ்வளவு வேலைகளும் செய்கிறேனே ஒத்தாசைக்கு ஒரு உதவிகூடச் செய்யக் கூடாதா என மனம் நினைத்தாலும், அவள் வந்த காலத்திலிருந்து அப்படித்தான், நானும் நன்றாக இடம் கொடுத்துவிட்டேன். ஐந்து வருடம் காத்திருந்து காதலித்த முகம், அவள் என்ன சொன்னாலும் அவளது முகம் என்னை கீழ்ப்படிய வைத்துவிடுகிறதே. அவள் மேலுள்ள பாசம் வேறு அவளைக் கஷ்டப்படுத்த விடமாட்டேன் என்கிறது.
ஞாயிற்றுக்கிழமை எண்டாலே வழமையா இப்படித்தான். மெத்தையை விட்டு எழும்ப ரொம்ப நேரமாகிவிடும்.
"காப்பி போட்டுக்கொண்டந்து வைத்திருக்கிறேன், குடிச்சிட்டுப் படு"
"ஹையா...என்ர செல்ல அப்பா, ரொம்ப தாங்க்ஸ்"
என் செல்ல மகள் வைஷ்ணவியின் இந்தக் கெஞ்சல்களிலேயே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து வருடம் காத்திருந்து காதலித்து கரம்பிடித்த என் அன்பு மனைவி அபர்ணா தனது அழகிய முகச் சாயலிலேயே ஒரு குழந்தையைத் தந்துவிட்டு அன்றே உலகைவிட்டுப் போய் ஏழு வருடங்கள் ஆகிவிட்டன்.
அன்றிலிருந்து வைஷூ குட்டியே எனது வாழ்க்கை; அவளது செல்லக் கெஞ்சல்களே எனது சக்தி; உடல் களைப்பில் மனம் என்னதான் நினைத்தாலும் அவளுக்குக் கடமை செய்வதிலேயே எனக்குச் சந்தோசம்.
"அப்பா, காப்பி இண்டைக்கும் நல்ல டேஸ்ட், இன்னும் கொஞ்ச நாளில அப்பாவுக்கு இந்த வைஷூ காப்பி போட்டுத்தருமாம்"
நான் ஒன்றும் சொல்லவில்லை, குண்டுக் கன்னங்களைக் கிள்ளிவிட்டு புன்னகைத்தேன்.
பி.கு : அன்று ஞாயிற்றுக் கிழமை ஏழு மணிக்கு வெளியில் போகவேண்டியதேவையாலும் மேட்டர் கொஞ்சம் சீரியஸா இருந்ததாலயும் கொஞ்சம் சலிப்பு வந்திருந்தது.
- மதுவதனன் மௌ. -
மேட்றிக்ஸ் -4 வருமா வராதா, வந்தா எப்போ வரும் என்று இணையமெங்கும் அலட்டிக்கொண்டிருக்கிறாங்க. 2010 இல வரும் என்று சொல்றாங்க. நீங்க மேட்றிக்ஸ் மூன்று பகுதியும் பார்த்தீர்களா எனக் கேட்டால் அனேகமானோர் ஆமாம் என்பீர்கள். மூன்றிலயும் என்ன நடந்தது என்று விளங்கியதா எனக் கேட்டால் கொஞ்சம் யோசிப்பீர்கள். மூன்றையும் மும்மூன்றுதடவை பாத்துத்தான் எனக்கு விளங்கிச்சு (உன்னைப் போல மற்றவங்களையும் யோசிக்காதடா..பொறம்போக்குன்னு திட்டாதீங்க, பலரோட கதைச்சபின்தான சொல்றேன்)
ஏலியன் என்று படம் எடுத்தாங்கள்; பிரிடேற்றர் என்று படம் எடுத்தாங்கள் பினனர் ஏலியன் Vs பிரிடேற்றர் என்று எடுத்தாங்கள்.
இப்போ பார்த்தால் HULK படத்தின்ர முடிவில IRONMAN ஐ கொண்டு வந்து கதைக்க விட்டிருக்கிறானுகள். 2010 இல HULK ,IRONMAN மற்றும் CAPTAIN AMERICA ஆகியோர் இணைந்து நடிக்கிற படம் ஒன்று வருமென்று ஆருடம் சொல்றானுகள். அதுக்குத்தான் இப்பவே அடிகோலுறானுகள்.
சரி, கீழே பாருங்கோ மேட்றிக்ஸ் நியோவும் ரோபோகொப்பும் சேர்ந்து நடிச்சா எப்படியிருக்கும் என ஒரு சலனப்படம் காட்டுது. இடையில ஸ்ரார்வோர் தாத்தாவும் வாறார்.
- மதுவதனன் மௌ. -
சும்மா கணிதத்தில வித்தை காட்டுவம் எண்டு இங்கே ஒரு பதிவைப் போட அதுக்கு வந்த பின்னூட்டங்களால் ஆடிப் போனேன். 1 = 0.99999.... என்று நான் சொல்ல, இல்லை நீ பொய் சொல்லுறாய், ஏதோ சித்துவிளையாட்டுக் காட்டி நிறுவிப்போட்டாய் (:-)))) என்று பலபேர் பின்னூட்டம்போட வெளிக்கிட்டுப் போடாமல் போனதெல்லாம் எனக்குத் தெரியும்.
சரி. இது கணிதம். அதாவது உண்மை. சொன்ன எனக்கு எல்லோருக்கும் விளங்கத்தக்க வகையில் சொல்லவேண்டிய கடமையும் இருக்குது. கீழே வடிவாச் சொல்லப்போறன் கவனியுங்கோ.
நான் இங்கே சொல்வது 0.99999...என 9 கள் திரும்பத்திரும்ப வரும் எண்ணைத்தான் என்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டும். இதை நான் 0.999' எனக்குறிப்பிடுகிறேன். இது தொடர்ந்து செல்லும் எண் என்பதால் இதனை 10 இனால் பெருக்கினாலும் 9.9999999....என தொடர்ந்து செல்லும் எண்ணே கிடைக்கும். அதாவது 9.999' கிடைக்கும். சரி நிறுவலுக்குப் போவோம்.
நிறுவல் 1: பின்ன முறை நிறுவல்
அல்லது
அல்லது
நிறுவல் 2: சமன்பாட்டு முறை தீர்வு
நிறுவல் 3: கணித ஒழுங்குமுறை
இதில் இறுதியில் 9/9 = 0.999' என வருகிறது. அதாவது 1 = 0.999' ஆகும்.
நிறுவல் 4: எதிர்மறுப்பு முறை (படத்தைச் சொடுக்கிப் பாருங்கோ)
நிறுவல் 5: பெருக்கற்றொடர் முறை
பெருக்கற்றொடர் ஒன்றில் |r| > 1 ஆக இருக்க கீழ்வரும் சமன்பாடு பெறப்படும்.
எனவே இம்முறையி்ல் 0.999' இனை கீழ்வருமாறு எழுதலாம்.
அதாவது 1 = 0.999' ஆகும்.
முடிவு: 1 = 0.999999.... என்பது முடிந்த முடிவு
பி.கு: உண்மையில் நான் இதுபற்றிய எனது முதலாவது பதிவை சும்மாதான் போட்டிருந்தேன். ஆனால் அதற்கு வந்த பின்னூட்டங்களால் தான் அங்கே இஙகே என்று போய் தேடி முடிவைக்காணக் கூடியதாக இருந்தது. ஆகவே பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
மேலதிக தகவல்களுக்காக விக்கிபீடியாவி்ல் இங்கே செல்லுங்கள், யூடியூப்பில் இங்கே செல்லுங்கள்.
- மதுவதனன் மௌ. -
நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த வலைப்பதிவுக்கு வாறீங்க. வாங்கோ. நான் கூடத்தான் வந்து கன காலம் ஆகுது. வந்துட்டீங்கதான். இந்த ஆச்சரியத்தைப் பாத்துட்டுப் போங்கோ.
உங்ளுக்கு பத்தினை ஒன்பதினால் பிரித்தால் வரும் எண்ணைத் தெரியுமல்லவா. அதாவது,
10/9 = 1.11111111111111................................ இப்படியே போய்க்கொண்டிருக்கும். இதனை நாங்கள் 1.111' என்று குறிப்பது வழக்கம்.
உதாரணமாக,
70/9 = 7.777'
இப்போது தொடர்ந்து செல்லும் எண்களைக் குறிக்கத்தெரிந்துவிட்டது.
நான் என்ன சொல்கிறேன் என்றால்...
1 உம் 0.999' உம் சமனானவை என்கிறேன். இல்லையென்கிறீர்களா நீங்கள்?
பாருங்கோ நிறுவிக் காட்டுறன்.
n = 0.999'
10 x n = 10 x 0.999'
10n = 9.999'
10n - n = 9.999' - n
10n - n = 9.999' - 0.999'
9n = 9
n = 1
அதாவது 1 = 0.999'
நம்பக் கஷ்டமாக இருக்கிறதா? ஆனால் உண்மதான் இது. அதாவது
1 = 0.999'
2 = 1.999'
3 = 2.999'
_ _ _ _ _
_ _ _ _ _
நேர்கோடு என்பது ஒரு வட்டம் என்ற உண்மையை எவ்வாறு எங்கள் மனம் நம்ப மறுக்கிறதோ, அதேபோல் இதையும் நம்ப மறுக்கும் எங்கள் மனம்.
பி.கு: இதற்கு வந்த பின்னூட்டங்களால் இலகுவாக இந்த உண்மையை விளங்கத்தக்க வகையில் இரண்டாவது பதிவை இங்கே இட்டிருக்கிறேன்.
- மதுவதனன் மௌ. -
எனக்கு பயங்கர குழப்பம். கீழே இந்த படத்தில இருக்கிறது யார்? சில உதவிக்குறிப்புக்கள் தரமுடியும். முடிஞ்சா யார் என்று சொல்லுங்கோ பார்க்கலாம்.
1. இவர் ஒரு தென்னிந்திய சினிமா நடிகர்.
2. அண்மையில் வெளியான இவரது படம் சக்கை....போடுகிறது.
3. இது அன்ரானியோ பன்ரஸ் அல்ல.
பி.கு: நான் நேற்றுத்தான் குருவி படம் பாத்தனான். தமிழ் வலையுலகம் சொல்லச் சொல்லக் கேக்காமல் போய்ப் பாத்தனான். எனக்கு இதுவும் வேணும்..இன்னமும் வேணும்.
விபத்துக்கள் என்றாலே எதிர்பாராது நடப்பவைதான். சாதாரண விபத்துகளில் இறப்பவர்களும் உண்டு; கொடுமையான விபத்துகளில் தப்பித்துக் கொள்பவர்களும் உண்டு. கீழே உள்ள இரண்டு சலனப் படங்களில் இருவேறு விபத்துச் சம்பவங்கள் காட்டப் படுகின்றன. இரண்டிலும் உயிரிழப்புக்கள் இல்லையாதலால் கொடுமையானாலும் பார்க்க முடியும்.
யூடியூப்பில் உலவும்போது கிடைத்ததைப் பகிர்கிறேன்.
மதுவதனன் மௌ.
நோக்கியா பயனர்களே!
நோக்கியா தொலைபேசியின் சில மாதிரிகளின் மின்கலம் ஆனது குறித்த எண்ணிக்கையான மின்னேற்றத்தின் பின்னர் அது வெடிப்பதாகவோ அல்லது பிழையான வழியில் செயற்படுவதாகவோ நோக்கியா நிறுவனத்தினர் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.
இவ்வகை மின்கலங்கள் குறித்தவொரு நிறுவனத்தால் குறித்த காலப்பகுதியில் நோக்கியா நிறுவனத்திற்காக செயப்பட்டவையாகும். இந்தவகை மின்கலங்களை நீங்கள் வைத்திருந்தால் நோக்கியா நிறுவனம் இலவசமாக மாற்றித்தரச் சம்மதித்திருக்கிறது.
முதலில் நீங்கள் பாவிக்கும் நோக்கியா தொலைபேசி கீழ்வரும் மாதிரிகளில் ஏதுமொன்றா என உறுதிப்படுத்துங்கள்.
Nokia 1100, Nokia 1100c, Nokia 1101, Nokia 1108, Nokia 1110, Nokia 1112, Nokia 1255, Nokia
1315, Nokia 1600, Nokia 2112, Nokia 2118, Nokia 2255, Nokia 2272, Nokia 2275, Nokia 2300,
Nokia 2300c, Nokia 2310, Nokia 2355, Nokia 2600, Nokia 2610, Nokia 2610b, Nokia 2626, Nokia
3100, Nokia 3105, Nokia 3120, Nokia 3125, Nokia 6030, Nokia 6085, Nokia 6086, Nokia 6108,
Nokia 6175i, Nokia 6178i, Nokia 6230, Nokia 6230i, Nokia 6270, Nokia 6600, Nokia 6620, Nokia
6630, Nokia 6631, Nokia 6670, Nokia 6680, Nokia 6681, Nokia 6682, Nokia 6820, Nokia 6822,
Nokia 7610, Nokia N70, Nokia N71, Nokia N72, Nokia N91, Nokia E50, Nokia E60
This product advisory also applies to the following accessories:
Nokia Wireless GPS Module LD-1W,
Nokia Wireless GPS Module LD-3W
மேலும் மின்கலத்தின் மேற்புறத்தில் "Nokia" மற்றும் "BL-5C" எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறதா எனவும் பாருங்கள்.
பின்னர் மின்கலத்தின் பின்புறத்தில் 26 எழுத்துக்களாலான மின்கல அடையாளக்க குறியீடு இருக்கிறதா எனப் பாருங்கள்.பின்னர் அந்த 26 எழுத்துக் குறியீட்டை இந்த நோக்கியாவின் இணைய முகவரிக்குச் சென்று கீழே உள்ள எழுத்து வெளியில் போட்டு உங்கள் மின்கலம் மீளப்பெறுவதற்குத் தகுதியானதா என பரிசோதித்து, அண்மையிலுள்ள நோக்கியா வாடிக்கையாளர் நிலையத்தில் போய் மாற்றிக்கொள்ளுங்கள்
கவிஞர் தமிழ்நதியின் பேட்டி விகடனில் வந்ததும், அப்பேட்டி தமிழ்நதி சொல்லாதவற்றையும் போட்டு பத்திரி்கைத் தர்மத்தை மீறியதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். விகடனை வாசிக்க எல்லோருக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்ககுமோ தெரியவில்லை. இங்கே பேட்டியும் மறுப்பும் உள்ளன. விகடனில் இருந்து நகலெடுத்து இங்கே போட்டிருப்பது எவ்வளது தூரம் சரியானது என தெரியவில்லையாயினும், வலையுலக நண்பர்களுக்காகவே இது. விகடன் இந்த மறுப்பில் கூட தனது வருத்தத்தைத் தெரிவிக்கவில்லை என்பது ஆ.வியில் எனக்குள்ள அன்னியோன்னியத்தைச் சிறிது ஆட்டம் காணத்தான் வைக்கிறது.
இவை ஐந்து படங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. படத்தில்மேல் சொடுக்கிப் பார்ப்பவர்கள் கவனத்திற் கொள்க.
தமிழ்நதியின் பேட்டி
தமிழ்நதியின் மறுப்பு
எங்கட குடும்பத்துக்கு ஒரு கிழமைக்கு சாப்பாட்டுக்கு எவ்வளவு காசு செலவழிக்கறம் என்னென்ன வாங்குறம் எண்டு தெரியும். மற்ற நாடுகளில எப்படி அவங்கள் சாப்பிடுறாங்கள் எண்டு CNN TIME ஆராய்ந்திருக்கிறது. அவற்றைக் கீழ பாருங்கோ.
ஆங்கிலத்திலேயே போட்டால் நல்லாயிருக்கும் போல் தோணிச்சுது. அப்பிடியே போட்டிருக்கறன். இந்தியா இருக்குது. எங்கட இலங்கை இதுக்குள்ள வரேல்ல :(
1. Japan: The Ukita family of Kodaira City
Food expenditure for one week: 37,699 Yen or $317.25
Favorite foods: sashimi, fruit, cake, potato chips
2. Italy: The Manzo family of Sicily
Food expenditure for one week: 214.36 Euros or $260.11
Favorite foods: fish, pasta with ragu, hot dogs, frozen fish sticks
3. Chad: The Aboubakar family of Breidjing Camp
Food expenditure for one week: 685 CFA Francs or $1.23
Favorite foods: soup with fresh sheep meat
4. Kuwait: The Al Haggan family of Kuwait City
Food expenditure for one week: 63.63 dinar or $221.45
Family recipe: Chicken biryani with basmati rice
5. United States: The Revis family of North Carolina
Food expenditure for one week: $341.98
Favorite foods: spaghetti, potatoes, sesame chicken
6. Mexico: The Casales family of Cuernavaca
Food expenditure for one week: 1,862.78 Mexican Pesos or $189.09
Favorite foods: pizza, crab, pasta, chicken
7. China: The Dong family of Beijing
Food expenditure for one week: 1,233.76 Yuan or $155.06
Favorite foods: fried shredded pork with sweet and sour sauce
8. Poland: The Sobczynscy family of Konstancin-Jeziorna
Food expenditure for one week: 582.48 Zlotys or $151.27
Family recipe: Pig's knuckles with carrots, celery and parsnips
9. Egypt: The Ahmed family of Cairo
Food expenditure for one week: 387.85 Egyptian Pounds or $68.53
Family recipe: Okra and mutton
10. Ecuador: The Ayme family of Tingo
Food expenditure for one week: $31.55
Family recipe: Potato soup with cabbage
11. United States: The Caven family of California
Food expenditure for one week: $159.18
Favorite foods: beef stew, berry yogurt sundae, clam chowder, ice cream
12. Mongolia: The Batsuuri family of Ulaanbaatar
Food expenditure for one week: 41,985.85 togrogs or $40.02
Family recipe: Mutton dumplings
13. Great Britain: The Bainton family of Cllingbourne Ducis
Food expenditure for one week: 155.54 British Pounds or $253.15
Favorite foods: avocado, mayonnaise sandwich, prawn cocktail, chocolate fudge cake with cream
14. Bhutan: The Namgay family of Shingkhey Village
Food expenditure for one week: 224.93 ngultrum or $5.03
Family recipe: Mushroom, cheese and pork
15. Germany: The Melander family of Bargteheide
Food expenditure for one week: 375.39 Euros or $500.07
Favorite foods: fried potatoes with onions, bacon and herring, fried noodles with eggs and cheese, pizza, vanilla pudding
16. Australia: The Browns of River View
Food expenditure for one week: 481.14 Australian dollars or US$376.45
Family Recipe: Marge Brown's Quandong (an Australian peach) Pie, Yogurt
17. Guatemala: The Mendozas of Todos Santos
Food expenditure for one week: 573 Quetzales or $75.70
Family Recipe: Turkey Stew and Susana Perez Matias's Sheep Soup
18. Luxembourg: The Kuttan-Kasses of Erpeldange
Food expenditure for one week: 347.64 Euros or $465.84
Favorite Foods: Shrimp pizza, Chicken in wine sauce, Turkish kebabs
19. India: The Patkars of Ujjain
Food expenditure for one week: 1,636.25 rupees or $39.27
Family Recipe: Sangeeta Patkar's Poha (Rice Flakes)
20. United States: The Fernandezes of Texas
Food expenditure for one week: $242.48
Favorite Foods: Shrimp with Alfredo sauce, chicken mole, barbecue ribs, pizza
21. Mali: The Natomos of Kouakourou
Food expenditure for one week: 17,670 francs or $26.39
Family Recipe: Natomo Family Rice Dish
22. Canada: The Melansons of Iqaluit, Nunavut Territory
Food expenditure for one week: US$345
Favorite Foods: narwhal, polar bear, extra cheese stuffed crust pizza, watermelon
23. France: The Le Moines of Montreuil
Food expenditure for one week: 315.17 euros or $419.95
Favorite Foods: Delphine Le Moine's Apricot Tarts, pasta carbonara, Thai food
24. Greenland: The Madsens of Cap Hope
Food expenditure for one week: 1,928.80 Danish krone or $277.12
Favorite Foods: polar bear, narwhal skin, seal stew
25. Turkey: The Celiks of Istanbul
Food expenditure for one week: 198.48 New Turkish liras or $145.88
Favorite Foods: Melahat's Puffed Pastries
நீங்கள் ஒப்பிட்டுப் பாக்குறதுக்கு சுகமா இஞ்சை வரிசைப்படுத்தியிருக்கிறன், பாருங்கோ.
ஒரு கிழமைக்கான உணவுச் செலவு.
- ஜெர்மனி $500.07
- லக்ஸம்பேர்க் $465.84
- பிரான்ஸ் $419.95
- ஆஸ்திரேலியா $376.45
- கனடா $345
- அமெரிக்கா $341.98 கரோலினா
- ஜப்பான் $317.25
- கிரீன்லாந்து $277.12
- இத்தாலி $260.11
- பிரித்தானியா $253.15
- அமெரிக்கா $242.48 டெக்ஸாஸ்
- குவைத் $221.45
- மெக்சிகோ $189.09
- அமெரிக்கா $159.18 கலிபோர்னியா
- சீனா $155.06
- போலந்து $151.27
- துருக்கி $145.88
- கௌதமாலா $75.70
- எகிப்து $68.53
- மொங்கோலியா $40.02
- இந்தியா $39.27
- ஈக்குவடோர் $31.55
- மாலி $26.39
- பூட்டான் $5.03
- சாட் $1.23
இதை உறுதிப்படுத்திப் பாக்கோணுமெண்டா இந்த CNN TIME இணைப்புகளுக்குப் போய்ப் பாருங்கோ.
அறிகுறி: பாதம் குளிர்தல் அல்லது ஈரமாதல்.
நோய்: கிளாஸை பிழையான கோணத்தில் வைத்திருக்கிறீர்கள் (பாதத்தில் மது ஊற்றப் பட்டுக்கொண்டிருக்கிறது).
தீர்வு: திறந்த பகுதி மேல்நோக்கிப் பார்க்கும்வரை கிளாஸை சிறிது சிறிதாக திருப்புங்கள்
அறிகுறி: நீங்கள் பார்க்கும் சுவர் வெளிச்சத்தாலோ அல்லது பல்புகளாலோ நிறைந்திருத்தல்
நோய்: உங்கள் உடல் தரையில் மேல்நோக்கிக் கிடக்கிறது.
தீர்வு: உடலை தரைக்கு 90 பாகைகள் இருக்கக்கூடியவாறு திருப்புங்கள்.
அறிகுறி: பார்ப்பவை எல்லாம் மங்கலாகத் தெரிதல்.
நோய்: நீங்கள் வெற்றுக் கிளாஸினூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
தீர்வு: உடனடியாக கிளாஸை உங்களுக்கு பிடித்த மதுவால் நிரப்புங்கள்.
அறிகுறி: தரை நகர்ந்து கொண்டிருத்தல்.
நோய்: உங்கள் காலைப்பிடித்து யாரோ உங்களை இழைத்துச் செல்லகிறார்கள்.
தீர்வு: குறைந்தது, அவர்கள் எங்கே இழுத்துச் செல்லகிறார்கள் என்றாவது கேளுங்கள்.
அறிகுறி: மற்றவர்கள் கதைக்கும்போதெல்லாம் எதிரொலி(echo)யை கேட்கிறீர்கள்.
நோய்: உங்கள் காதுகளில் வெற்றுக்கிளாஸ்கள் இருக்கிறன.
தீர்வு: நீங்களாகவே முட்டாள்தனமான வேலைகளைச் செய்யவதை நிறுத்துங்கள்.
அறிகுறி: உங்கள் அப்பாவும், சகோதரர்களும் உங்களை பார்த்துச் சிரிக்கிறார்கள்.
நோய்: நீங்கள் வேறு ஒருவருடைய வீட்டில் நிற்கிறீர்கள்.
தீர்வு: உங்களுடை வீட்டிற்குப் போகும் வழியைக் காட்டமுடியுமா என அவர்களிடம் கேளுங்கள்.
அறிகுறி: அறை ஆடுகிறது, எல்லோரும் வெள்ளை நிற உடுப்புகளுடன் இருக்கிறார்கள், இசை திரும்பத் திரும்ப வருகிறது.
நோய்: நீங்கள் ambulance இல் இருக்கிறீர்கள்.
தீர்வு: ஒன்றும் செய்யாதீர்கள், அவர்கள் தங்கள் சேவையைச் செய்ய அனுமதியுங்கள்.