நா


டயலொக் கிட்ஸ் (Dialog Kidz)
இலங்கையில் டயலொக் ரெலிகொம் நிறுவனம் தற்போது புதிய செல்பேசி இணைப்புவகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் Dialog Kidz. இது சிறுவர்களுக்கானது ஏனெனில் இணைப்பு வயதுவந்தவர்களின் குறிப்பாகப் பெற்றோரின் பெயரில்தான் இருக்கமுடியும் என்பதுடன் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் அழைப்புக்களுக்கான தொலைபேசி இலக்கங்கள் இணைப்பின் சொந்தக்காரரால் மட்டுப்படுத்தப்பட முடியும் அத்துடன் அவ்விணைப்புக்கு வரும் குறுந்தகவல்கள் அனைத்தையும் இணைப்பின் சொந்தக்காரர் அதாவது பெற்றோர் தமது செல்பேசியூடாகப் பெறமுடியும்.

ஒருவகையில் தடுமாறும் வயதில் செல்பேசிகளால் திசைமாறும் சிறுவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க பெற்றோருக்கு வழிவகை செய்யதால் டயலொக்கிற்கு நன்றி கூறலாம்.

ஆண்கள் தங்கள் காதலிகளுக்கு (ஆண்கள் பன்மையாகையால் காதலிகள் எனப் பன்மை வரவேண்டியதாயிற்று) இந்த இணைப்பை வாங்கிக் கொடுத்தால் என்ன என இப்போது சிந்திக்கத் தலைப்பட்டிப்பார்கள்


குசேலப்பிரபு
குசேலன் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை (பொறாமைத்தீ கொழுந்துவிட்டெரிவது தெரிகிறது). ஒரு சில காட்சிகளை யூடியூப் பார்க்க வழிவகை செய்தது. பிதுங்கி வழியும் பிரபுவைப் பார்க்க பாவமாக இருந்தது. விரலுக்கேத்த வீக்கம் இருக்கவேணும்.

பில்லா (புதியது) திரைப்படம் நான் மிகவும் இரசித்துப் பார்த்த படங்களில் ஒன்று. பழைய பில்லா, பழைய டொன், புதிய டொன் என ஒன்றையும் நான் முதலில் பார்த்திருக்கவில்லை. அத்துடன் ரகுமான் பில்லாவி்ல் வில்லன் என்பது அவர் படத்தில் வெளிப்பட்ட பின்னர்தான் தெரியும். ஆகவே ஆங்கிலப் படமொன்றைப் பார்த்த திருப்தி.

அதைவிட இப்போது அதிக திருப்தி பில்லாவில் பிரபு மண்டையைப் போட்டதுதான். இல்லாவிடின் பில்லா 2 இல் வந்து தானும் பிதுங்கி எங்களையும் விழிபிதுங்க வைத்திருப்பார்.


வேர்ட் 2007ஐ பார்ப்பது எப்படி?
நீங்கள் ஏதாவதொரு இடத்தில் பாவிக்கும் கணிணியில் இணைய இணைப்பும் இல்லை வேர்ட 2007 உம் இல்லை. ஆனால் வேர்ட் 2007 கோப்பொன்றை எவ்வாறு பார்வையிடுவது. இதோ அதற்கான வழி.

1. கோப்பின் extensionஐ zip என மாற்றுங்கள். அதாவது கோப்பு hello.docx இனை hello.zip என மாற்றுங்கள்.
2. Winzip, Winrar அல்லது உகந்த மென்பொருள் கொண்டு unzip (extract) செய்யுங்கள்.
3. extract செய்ய folder இனுள் word எனும் folder இருக்கும். அதனுள் document.xml எனும் கோப்பிருக்கும். அதனை document.html என மாற்றுங்கள். இப்போது அதனை பயர்பாக்ஸிலோ அல்லது வேறு உலாவியிலோ திறந்து பார்த்து ஆரம்ப வேர்ட் 2007 கோப்பின் உள்ளடக்கங்களைப் பாருங்கள்.கோப்புக்கள் பற்றிய விளக்கப் படம்


வேர்ட கோப்பில் படங்கள் ஏதாவது இருந்திருந்தால் அவை media எனும் folder இனுள் இருக்கும்.


folder, unzip மற்றும் extension என்பவற்றுக்குரிய இந்தப் பதிவிற்குப் பொருந்தக்கூடிய வகையிலான ஆங்கிலச் சொற்கள் தெரிந்தவர்களை தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

மதுவதனன் மௌ.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

9 பின்னூட்டங்கள்.

Nimal August 25, 2008 at 10:24 PM

//ஆண்கள் தங்கள் காதலிகளுக்கு (ஆண்கள் பன்மையாகையால் காதலிகள் எனப் பன்மை வரவேண்டியதாயிற்று) இந்த இணைப்பை வாங்கிக் கொடுத்தால் என்ன என இப்போது சிந்திக்கத் தலைப்பட்டிப்பார்கள்//
இது உங்கட சொந்த கருத்தோ? இல்ல மற்றயவை சொன்னதோ... :)

//வேர்ட் 2007ஐ பார்ப்பது எப்படி?//
மிகவும் பயனுள்ள தகவல்..!

//பிதுங்கி வழியும் பிரபுவைப் பார்க்க பாவமாக இருந்தது.//
:))

Mathuvathanan Mounasamy / cowboymathu August 26, 2008 at 6:47 PM

என்ர சொந்தக் கருத்துக்கு எனக்கு யாருமே இல்ல நிமல்.

வருகைக்கு நன்றி.

பகீ August 28, 2008 at 12:31 AM

//வேர்ட் 2007ஐ பார்ப்பது எப்படி?//
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.

folder - கோப்புறை

ஜியா August 28, 2008 at 2:00 AM

folder - கோப்புறை நல்லா இருக்கு :)))
unzip - உரித்தல்??
extension - நீட்சி

Mathuvathanan Mounasamy / cowboymathu August 28, 2008 at 5:42 PM

ஆகா folder = கோப்புறை என்பது நன்றாக உள்ளது..

நன்றி பகீ.

Mathuvathanan Mounasamy / cowboymathu August 28, 2008 at 5:44 PM

ஜீ...

extension = நீட்சி சரியாக அமைகிறது...

unzip = உரித்தல் என்பதற்கு உங்களைப் போலவே எனக்கும் நிறைய கேள்விக் குறிகள்...

நன்றி

Ketha September 7, 2008 at 1:00 AM

unzip-அவிழ்த்தல் சரியாயிருக்குமோ?

Mathuvathanan Mounasamy / cowboymathu September 8, 2008 at 6:51 PM

வாங்கோ மானுடன்,

அவிழ்த்தல் என்பது ஓரளவு பொருந்துகிறதுதான். வேறு நல்ல சொல்லேதும் காணும் வரை இதையே பயன்படுத்தலாம் போல் தெரிகிறது.

நன்றி

Think Why Not December 31, 2008 at 1:56 PM

//ஆண்கள் தங்கள் காதலிகளுக்கு (ஆண்கள் பன்மையாகையால் காதலிகள் எனப் பன்மை வரவேண்டியதாயிற்று) இந்த இணைப்பை வாங்கிக் கொடுத்தால் என்ன என இப்போது சிந்திக்கத் தலைப்பட்டிப்பார்கள்//

மது அண்ணா, இதை இன்னும் பெண்ணியவாதிகள் யாரும் பார்க்கவில்லை போலும்...

இல்லாவிட்டால் உங்கள் வருகைப்பொதி(inbox)இந்நேரம் கறுப்பு அஞ்சல்களால் நிரம்பியிருக்கும்....

ஆண்களைவிட பெண்களுக்கு(ESPECIALLY FOR WIVES) சில நேரம் பயனுள்ளதாயிருக்கலாம்...

இப்படியெல்லாம் சொல்ல எங்கிருந்து கிளம்புறீங்களோ..? By the way I heard Dialog Kidz was not that much successful as they thought... If dialog knew ur suggestion....

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ