நா

கொலைக் காற்று - 04


கொலைக்காற்று - 01  தரங்கம் - சுபாங்கன்

கொலைக்காற்று - 02  எரியாத சுவடிகள் - பவன்
கொலைக்காற்று - 03  சதீஸ் இன் பார்வை - சதீஸ்

********************************************************

கௌதம் அரண்டு படுத்துக்கொண்டான். தலையை லேசாகத் திருப்பி கௌதமை கலக்கத்துடன் பார்த்தாள் வர்ஷா. ஜன்னலூடான நிலா வெளிச்சத்தில் கண் திறந்திருக்கிறானா, மூடியிருக்கிறானா என்றே தெரியவில்லை. சிறிது நேரம் நின்று திரும்பி கௌதமையே பார்த்தாள். ம்ஹீம். கௌதம் தூங்குவதுபோல்தான் அவளுக்கப் பட்டது. சூடான மூச்சை ஆறுதலாக விட்டபடி அறைக்கதவைத் திறந்தாள் வர்ஷா.


"ஏன் இங்க வந்தாய்?" கண்கள் சுருக்கியபடி கேட்டாள் வர்ஷா.

"SMS அனுப்பீட்டுத்தான வந்தனான்" குரலில் எகத்தாளம் தொனித்தது.

"ஏன்? ஒரு கிழமை தொல்லை குடுக்காமத்தான இருந்தனீ. இப்ப என்ன வேணும் உனக்கு? நாங்கள் இங்க ஹோட்டல்ல தங்கியிருக்கிறது எப்பிடித் தெரியும் உனக்கு? உன்னை வரவேண்டாம் எண்டு SMS செய்தனான் இல்ல" கேள்விகள் எல்லாம் குழப்பமான குரலில்.

"ஒரு கிழமையே பெரிய விசயம் வர்ஷா. எப்பிடி புது மாப்பிளை? நல்லாக் களைச்சுப்போய் படுத்திருக்கிறார் போல. ம்ம்ம்... நைட்டியில உன்னைப் பார்த்தபடியே சாகலாம் போல." தலையை ஆட்டியபடி உதட்டைப் பிதுக்கினான்.

வர்ஷா கலக்கத்துடன் கோபமாய்ப் பார்த்தாள்.

"சரி, கொழும்பு வந்து வீட்ட தங்காமல் என்ன இது ஹோட்டல்ல?" கண்களைக் குறுக்கியபடி கேட்டான்.

"அது உனக்குத் தேவையில்லை. போலீசோட சகவாசம் வச்சிருக்கிற உனக்கு நாங்கள் இங்க தங்கியிருக்கிறது தெரிஞ்சிருக்கும் எண்டு யோசிச்சனான். வந்திட்டாய். உனக்கிப்ப என்ன வேணும்?"

"வேற என்னத்தக் கேக்கப்போறன் வர்ஷூ. நீதான். நான் உன்னைப் பிரஷ்ஷாக் கூட ஆசைப்படேல. ஒரே ஒரு முறை."

"விது... இது தப்பு விது. நான் உன்னைப் ப்ரண்டாத்தான் நினைச்சனான். நீ இப்பிடி ஒரு நிலைமைக்குக் கொண்டு வருவாய் எண்டு நான் யோசிக்கவே இல்லை. பார் இப்ப அந்தாளுக்குத் தெரியாம உன்னோட களவாய் கதைத்துக்கொண்டு. நீயெல்லாம் ஒரு மனிசனாடா விது." கிட்டத்தட்ட அழுதிருந்தாள் வர்ஷா.

கௌதம் மீண்டும் அரண்டு படுத்துக்கொண்டான்.

"பார் அவன. பொறின் காரன் எண்டா கோப்பிறேற் பண்ணுவீங்கள் போல. எங்களுக்கு மாட்டீங்களோ."

வர்ஷாவுக்கு கண்கள் நிரம்பியிருந்தன.

"யே... முதல்ல கண்ணைத் துடை. அழகான பெண்கள் அழக்கூடாது."

சிறிது நேரம் யோசித்தவன்... "போட்டோ கொண்டு வந்திருக்கிறன்."

"எத்தனை தரம்தான் அதைக்காட்டிப் பயமுறுத்துவாய் விது. உந்தப் போட்டோவைப் பாக்கேக்க எல்லாம்.. சீ.. தூ.. ப்ரண்சிப்பையே கொச்சைப் படுத்தின நீயெல்லாம் ஒரு மனிசனா? றிப்புக்கு போன இடத்தில லேடீஸ் பாத்ரூமுக்குள்ள இருந்து நீ வெளியில வரேக்கயே யோசிச்சிருக்கோணும். நான் ப்ரண்சிப்பை நம்பினன் விது. ஏன்டா இப்பிடிப் போட்டோ எடுத்து வெருட்டுறாய்?"

"வர்ஷூ.. இது அந்தப் போட்டோ இல்ல. இது வேற. அந்தப் போட்டோக்களை இப்ப ஞாபகப் படுத்தாத. சே... அந்தப் போட்டோக்களில் நீ என்ன அழகடி. உனக்காகச் செத்தாலும் பரவாயில்லை. சரி விடு. அந்தப் போட்டோக்களை நினைச்சாலே ஹார்ட் உதறுது. ம்ம்ம்... இது வேற போட்டோ வர்ஷூ"

"முதல்ல வர்ஷூ எண்டு கூப்பிடுறத நிப்பாட்டு. அத விட வேற என்னடா போட்டோ வச்சிருக்கப்போறாய். வேற எங்கயும் அதேபோல எடுத்தியா?"

"இல்லை வர்ஷூக்குட்டி" சிரித்தான்.

"ஏன்டா.. வேண்டாம் நீ வர்ஷூ எண்டே கூப்பிடு"

"இது... உன்ர ஆளின்ட போட்டோ. பார் ஆளை. திருப்தியாய் நித்திரை கொள்ளுறான். என்னைத்தான் இப்பிடி அலையவிடுறாய்".

"என்ன. அவற்ர போட்டோவா?" இமைகளைச் சுருக்கியபடி சந்தேகமாய்க் கேட்டாள் வர்ஷா.

"போட்டோவைப் பார். பிறகு சந்தேகப்படு. இந்தா போட்டோ" காகோ டவுசரிலிருநத பெரிய பொக்கற்றிலிருந்து எடுத்துக் கையில் அழுத்தி வைத்தான் விது.

என்வெலப்பிலிருந்து போட்டோவை வெளியிலெடுத்தவளுக்கு வெளிச்சம் போதவில்லை.

"சுவருக்கு இந்தப்பக்கம் வெளியில வா வர்ஷூ. போன் டோச் இருக்கு பார்". போனை வெளியிலெடுத்தான்.

புகைப்படத்தில் ஜெனியில் தோளில் கைபோட்டவாறே சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான் கௌதம்.

நிமிர்ந்து விதுவை கோபமாகப் பார்த்தவள்... "இதில என்ன இருக்கு? அதுக்கு முதல் இந்தப் போட்டோ எப்பிடி உனக்குக் கிடைச்சது?"

"எப்பிடிக் கிடைச்சது எண்டது மாட்டர் இல்லை வர்ஷூ. போட்டோவைப் பாத்தியா. ஆரார் நிக்கிறதெண்டு?"

தலையச் சிறிது சரித்தவள்... "தெரீது. கௌதமும் ஜெனியும்"

"என்ன வர்ஷூ. சிம்பிளாச் சொல்லுறாய். கௌதம் ஜெனியை காதலிச்சது தெரியுமா? பிறகு அனுபவிச்சு ஏமாததிப்போட்டு இப்ப உன்னோட... இதை சிம்பிளா எடுக்கிறியே" குரலில் ஆச்சரியம் கலந்திருந்தது.

"இப்ப என்ன சொல்ல வாறாய் வி்து? கௌதம் ஜெனியை ஏமாத்திட்டு என்னோட இருக்கிற மாதிரி, நான் கௌதமை ஏமாத்திட்டு உன்னோட வரவேணுமா?"

"நீ படிச்சவள் வர்ஷூ. டக்கெண்டு விளக்குது. அதுவும் நான் என்னோட வரச்சொல்லிக் கேக்கேல. ஓரே ஒரு நாள். நீ என்னோட வந்தாலும் தப்பில்ல. நியாயம்தான் எண்டு காட்டத்தான் இந்தப் போட்டோ."

"விது... கௌதம் ஜெனியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். பொறின்ல லவ்பண்ணினது பற்றியும் சொன்னவர். ஆனா அவர் ஜெனியை மோசமா ஏமாத்தேல. இந்தப் போட்டோவ முதல்ல சுருட்டிப் பொக்கற்றுக்குள்ள வை. அது சரி இந்தப் போட்டோ எப்பிடி உனக்குக் கிடைச்சது?" சந்தேகம் தொனித்தது.

விதுவின் முகம் சுரத்தை இழந்திருந்தது... "வர்ஷூ... நீ புது மாப்பிளை சொல்லிற எல்லாத்தையும் நம்புறாய்."

"விது. யோக்கியம் கதைக்கிறியா... அதை விடு. இந்தப் போட்டோ எப்பிடிக்கிடைச்சது?"

"எப்பிடிக்கிடைச்சா உனக்கென்ன?"

"விது... உனக்கு போலீஸ் சகவாசம் இருக்கெண்டு தெரியும். ஆனா இந்தளவுக்கெண்டு தெரியாது. இண்டைக்கு காலமை இன்ஸபெக்டர் சூர்யபிரகாஷ் இங்க வந்தவர். இந்தப் போட்டோவைக் காட்டி கௌதமோட ஏதோ கதைத்துக்கொண்டிருந்தவர். நான் கிட்டப் போனதும் கௌதமை மறச்சுக்கொண்டு ஜெனியை மட்டும் காட்டினவர். இந்தப் போட்டோவைப் பற்றி நான் கௌதமோட பிறகு கதைக்கிறன். உனக்கெப்பிடி இது கிடைச்சது?" கண்களை நேரே பார்த்தாள் வர்ஷா.

"தெரியுதில்ல... அதை விடு. உன்ர மற்றப் போட்டோக்கள் என்னட்டத்தான் கிடக்கு. உலகம் இன்ரர்நெற், ஈமெயில் எண்டு சுருங்கி வேற கிடக்குது." குரலில் ஏளனம் தொனித்தது.

 பெருமூச்செறிந்தாள் வர்ஷா... "நடக்காத விசயங்களுக்கு மினக்கடாதே விது. என்னையும் கௌதமையும் சுற்றி ஏதோதோ நடக்குது. ஜெனி... சேகர்..."

"எனக்கென்னவோ, புதுப்பொண்டாட்டி ஆசையில ஜெனியை கௌதம்தான் போட்டுத்தள்ளியிருப்பான் போல" நமட்டுச் சிரிப்புச் சிரித்தான் விது.

"விது. விசர்க்கதை கதையாதே. நாங்கள் கண்டியில இருந்தனாங்கள் அப்ப"

கௌதம் மீண்டும் அரண்டு படுத்துக்கொண்டான்.

"விது... இனியும் என்னால நிக்கேலாது. அவர் எழும்பிடுவார்."

"ஓரே ஒரு நாள் வர்ஷூ.  அதுக்குப் பிறகு உனக்கு இந்தப் பயமெல்லாம் இருக்காது."

"அது நடக்காது. நான் போறன்."

"ம்ம்ம்.. பார்ப்போம். நீ என்ர ப்ரண்ட் எண்டபடியாத்தான் இதுவரை அந்தப் போட்டோக்களை வெளியில விடேல. இப்பிடியே தொடர்ந்து இருக்கமாட்டேன் வர்ஷூ"

"தூ.. ப்ரண்ட் எண்டு சொல்லாத"

"சரி போ போ... அவர் எழும்பீடப்போறார். இந்தக் ஹோட்டல்ல கீழ் புளோரில 23 ஆம் நம்பர் ரூமிலதான் நான் இருக்கிறன். எப்பவும் எவைலபில். ஓகேயா"

"சரி போ போ" பல்லைக் கடித்தாள் வர்ஷூ.

***************************************************


அறைக் கதவை மெதுவாகச் சாத்தியவள்,  பாத்ரூம் கதவை சிறிது சத்தத்துடன் திறந்து உள்ளே சென்றாள். நிறைக் கலக்கங்கள் வந்து போயின. விது, றிப் போட்டோ, இன்ஸ்பெக்டர் சூர்யபிரகாஷ், கௌதம், ஜெனி, மீண்டும் போட்டோ.. நிறையக் குழப்பங்களுடன் பாத்ரூம் கதவை சாத்திவிட்டு கட்டிலில் படுத்தாள் வர்ஷா.

கையை மேல போட்ட கௌதம்... "என்ன குட்டியா? உடம்புக்கு ஏதாவது?"

"ஓண்டுமில்ல கௌதம். பாத்ரூம் போய் வந்தனான்"

"படுக்கேக்கதானே பாத்ரூம் போய் வந்தனாங்கள்" சிரித்தபடி கேட்டான் கௌதம்.

"சும்மா இருங்கோ.. அதுக்கு.. இதெல்லாம் என்ன சொல்லிவச்சா வரும்"

"ஏன் குட்டியா சலிக்கிறாய். நல்லாக் கஷ்டப்படுத்தீட்டனா?"

"இல்ல கௌதம். எல்லாத்தையும் நினைக்கக் குழப்பமாக் கிடக்குது. ஜெனி, சேகர்..."

"ஆரம்பிச்சிட்டியா.. ஜெனியும் சேகரும் என்ர பிரண்ட்.. நான் எல்லாம் சொல்லியிருக்கிறன்.. கவலைப்படவேண்டியது நான்... நானே குழப்பமில்லாம இருக்கிறன்...." இழுத்தான் கௌதம்

"அதுதான் எனக்குக் குழப்பமாக் கிடக்குது கௌதம்..."

கட்டிலில் இருந்து எழுந்தே விட்டான் கௌதம். 

"நீ என்ன சொல்ல வாறாய் வர்ஷா? "

*************************************************************

கட்டிலில் என்ன நடந்தது? மறுநாள் என்ன நடந்தது? இனி லோசனின் கைகளில்.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ | cowboymathu

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

13 பின்னூட்டங்கள்.

கன்கொன் || Kangon December 17, 2010 at 8:05 PM

உள்ளேன்...... :-)

Think Why Not December 17, 2010 at 10:32 PM

/*குட்டியா *? என்டு சொல்லும் போது உங்க டிரேட் மார்க் தெரியுது... :D

KANA VARO December 17, 2010 at 10:37 PM

நல்லாவே கதை போய்க்கிட்டிருக்கு...

ARV Loshan December 17, 2010 at 10:47 PM

அடப் பாவி மது.. அடுத்து நானா?
தலை சுத்துதே..

ஆகா ஆங்காங்கே மது இசம் மண்டையைக் காட்டுது.. படம் உட்பட...

நல்லதெளிவான நடையில் சுத்தாமல் புதிர்களை அவிழ்ப்பதற்கு நன்றி..

நான் ஒரு மாதம் எடுத்துக்கவா? ;)

SShathiesh-சதீஷ். December 18, 2010 at 12:44 AM

மதுயிசம் வாழ்க. முடிச்சுக்கள் அவில தொடக்கி இருக்கின்றன. என்னது கட்டிலில் நடந்ததை பற்றி லோஷன் அண்ணா சொல்ல போறாரா? ஓகே காத்திருக்கின்றோம் அடுத்த பகுதிக்கு#இங்கே எந்த மதுயிசமும் இல்லை.

வந்தியத்தேவன் December 18, 2010 at 3:34 AM

வாவ் மது கிரேட் எப்படி எல்லாம் ஒரு கதை பயணிக்கின்றது. மாட்டினான் நம்ம லோஷன் அங்கிள் அவர் கட்டிலில் இருந்து கதை தொடங்கவேண்டும். ஆங்காங்கே மதுயிசம் எட்டிப்பார்த்தாலும் கதை சொன்ன பாணி கலக்கல். நல்ல காலம் இதில் கொலை நடக்கவில்லை.

அசால்ட் ஆறுமுகம் December 18, 2010 at 9:10 AM

கதை இப்ப நல்லாவே போகுது.......

Subankan December 18, 2010 at 3:43 PM

மதுயிசத்தோடு கதை இன்னும் வேகமெடுக்கிறது. லோஷன் அண்ணாவுக்கு தொடங்க நல்ல இடம் ;-)

தொடரட்டும் :)

Mathuvathanan Mounasamy / cowboymathu December 18, 2010 at 8:09 PM

கங்கு, கதை வேண்டாம், நாலு கதையையும் வாசிச்சிட்டு இப்ப பின்னூட்டம் இடவேணும். :D
===========================
துசி,

குட்டியா என்பது சிலருக்குக் குழப்பத்தைக் குடுக்கும் என்று பின்னர்தான் அறிந்தேன். இங்கே
குட்டியா = குட்டி :)
===========================
வரோ,
நன்றி. இன்னும் இருக்கே :)
===========================
லோசன் அண்ணன்,
ஒரு மாதமா....??? வர்ஷா கர்ப்பமா இருப்பாள் அப்ப.. பரவாயில்லையா..

rooto December 18, 2010 at 8:10 PM

மதுஇஸம்!! வயதுவந்தவர்களுக்கு மட்டும் எண்டு போட்டுதான் எனி லோசன் எழுதணும் போல!!!

Mathuvathanan Mounasamy / cowboymathu December 18, 2010 at 8:11 PM

சதீஸ்,வந்தி, சுபாங்கு,
மதுயிசம் மதுயிசம் என்று கடைசியா இந்தச் சொல்லை அகராதியில வர வச்சுடுவீங்கள் போல...

லோசன் அண்ணா எப்பிடித் தொடங்கிறார் எண்டு பாப்பம். :)
==========================
வாங்கோ அசால்ட்,
நன்றி, தொடர்ந்து மிச்சத்தையும் வாசிச்சு சொல்லுங்கோ.

யோ வொய்ஸ் (யோகா) December 18, 2010 at 9:12 PM

நல்லா கொண்டு போயிருக்கிறீர்கள்

நிரூஜா December 26, 2010 at 4:01 PM

அடுத்த பகுதி எப்ப வரும் எண்டு பாத்து கொண்டிருந்த எனக்கு, இன்டைக்கு தான் தெரியும் இந்த பகுதி வந்தது. :( எப்பிடி தவறவிட்டன் எண்டு தெரியேல்ல.

நால்லாத்தானைய்யா யோசிக்கிறாய்ங்க...!

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ