நா

விளம்பரங்களால் மலிந்து கிடக்கும் உலகம் இது. விளம்பரங்களால் எவ்வளவு தூரம் வியாபாரம் அதிகமாக நடக்கிறது எனும் சந்தேகம் இன்னும் இருந்தாலும் அதீத விளம்பரங்களால் வெள்ளியையும் பிளாட்டினம் என்று சொல்லியே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது.


மூன்று வாரங்களில் சிவப்பழகு(??) என்பதிலிருந்து எயிட்ஸை மூன்று நாட்களில் குணப்படுத்துவோம் வரை விளம்பரங்கள் மலிந்து கிடக்கின்றன். மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் பலன் தருவதை விட ஒரு வித பயத்தையே தருகின்றன.

கரீனா கபூர் தனது அழகின் இரகசியத்தை இதோ வெளிப்படுத்துகின்றார் என்று ஒரு புது Body Cream ஒன்றை அறிமுகப்படுத்துகின்றார்கள். கரீனாவுக்கே அன்றுதான் அப்படியொரு கீரீம் இருப்பதே தெரிந்திருக்கும் என்று கற்பூரம் அணைந்து சத்தியம் செய்யத் தயாராய் இருக்கிறேன். (கடவுளுக்குப் பயந்தல்ல, கற்பூரம் சுட்டாலும் பரவாயில்லை என்று).

சொப்பன ஸ்கலிதத்தால் உடல் மெலிந்து தள்ளாடுகின்றீர்களா? இதோ குறைந்த செலவில் இரண்டு நாட்களில் தீர்வு தருகின்றோம் என்று பிரச்சினை இல்லாத ஒன்றுக்கே தீர்வு தரத் தயாராய் இருக்கும் தயாள குணம் படைத்த விளம்பரங்கள் வேறு.

இன்று இலங்கையின் HitAd இல் கண்ட இவ்வகை அபத்தங்களில் ஒன்று இதோ கீழே,


இதிலிருக்கும் பெண் மானநஸ்டவழக்கு (மானநஸ்ட வழக்கு போடுறதுதான் இப்ப Trend என்று அறிந்தேன்) போட்டால் கூடக் குற்றமில்லை.

ம்ம்ம்... Body Cream க்கு என்ன தமிழ்? உடற்பசை ஏனோ ஒட்டுதில்லை.. :)

பிரியமுடன்,
மதுவதனன் மௌ. | கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

14 பின்னூட்டங்கள்.

கன்கொன் || Kangon June 6, 2010 at 7:19 PM

நான்தான் முதலாவது....

கன்கொன் || Kangon June 6, 2010 at 7:21 PM

// பிரச்சினை இல்லாத ஒன்றுக்கே தீர்வு தரத் தயாராய் இருக்கும் தயாள குணம் படைத்த விளம்பரங்கள் வேறு. //

:P :P :P


// இன்று இலங்கையின் HitAd இல் கண்ட இவ்வகை அபத்தங்களில் ஒன்று இதோ கீழே //

என்ன கொடுமை இது... :-o


// மானநஸ்ட வழக்கு போடுறதுதான் இப்ப Trend என்று அறிந்தேன் //

ROFL...

பதிவெல்லாம் எழுதிறீங்கள் இப்ப அடிக்கடி...

எழுதுங்கோ....

எங்கட விளம்பர மாயை போகாது.
:)))

வந்தியத்தேவன் June 6, 2010 at 7:33 PM

மது உடற்பசை ஹாஹா முகப்பூச்சு கிறீம் போல் இது உடற்பூச்சு கிறீம்.

கோபியின் பின்னூட்டத்தில் இருக்கும் சிலேடை ரசித்தேன்.

Mathuvathanan Mounasamy / cowboymathu June 6, 2010 at 7:39 PM

வாய்யா கோபி,

கொடுமைதான்.. விளம்பரத்தை குடுத்தவங்களும் பாக்கேலபோல.. போட்டவங்களும் பாக்கேலப் போல..

வாங்கோ வந்தி,

உடற்பசையோ உடற்களியோ.. கிறீமுக்கு என்ன தமிழ்?...

கோபி.. கொஞ்ச நாளா.. முரண்தொடை, சிலேடை, ஐரணி என்று தமிழில் பிரித்து மேய்கிறார்..

பகீ June 6, 2010 at 7:42 PM

:)

Subankan June 6, 2010 at 7:42 PM

படத்தைப்பார்த்தால் எங்கட பவன் செய்யிற விளையாட்டு போலகிடக்கு, கன்னாபின்னாவென்று சிரித்தேன்.

யோ வொய்ஸ் (யோகா) June 6, 2010 at 7:47 PM

அப்ப அந்த விளம்பரம் பொய்யா?

ஐயையோ நான் ஓடர் செய்ய பார்த்தானே?

anuthinan June 6, 2010 at 7:48 PM

ரொம்ப அவசரமா கிடைக்கிறத சுருட்டிட்டு ஓடுறதுக்கு போட்ட விளம்பரம் போல கிடக்குது!

இதை பார்த்தும் சிலது வாங்கும் பாருங்கள் அதுகள என்ன சொல்லுறது

ஆதிரை June 6, 2010 at 9:38 PM

மானநஸ்ட வழக்கு போடுறதுதான் இப்ப Trend என்று அறிந்தேன்

எங்கட விளம்பர மாயை போகாது...

Vathees Varunan June 6, 2010 at 9:59 PM

உங்கள் ஆதங்கம் புரிகிறது. பல நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 30வீதத்திற்கும் அதிகமான தொகையினை இந்த விளம்பரங்களுக்காக ஒதுக்குகின்றார்களே! அந்தளவிற்கு விளம்பரங்ள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.

தமிழ் மதுரம் June 6, 2010 at 10:00 PM

வியாபாரத்திற்கு விளம்பரம் என்பது இதைத் தானோ? சிறு வயது முதல் உள்ள பற்களின் வெண்மைக்குக் கூட, விளம்பரத்தில் நடிப்பவர் பயன்படுத்துவது- இது என்ற பாணியில் இப்போது புதிதாக வரும் பற்பசைகளைக் காட்டி விளம்பரம் போடுவார்கள்:)

விளம்பரம்- ஒரு வியாபாரத் தந்திரம்.

எல்லா மக்களையும் கவர்ந்திழுப்பதோடு.. ஏமாற்றியும் விடுகிறார்கள்.
மூன்றே வாரத்தில் சிகப்பழகு பெற வேண்டுமா? என்ன அருமையான கிறீம்..

என்ற பாணியில் வாங்கினால் ஏமாற்றம் தான் மிச்சம்.

balavasakan June 6, 2010 at 10:10 PM

உங்களுக்கு நக்கல் நம்ம பாதிக்கபட்ட பயலுகள் யாராவது பார்த்தானுகள் எனடால் ஒருக்கா ட்றைபண்ணினா என்ன ன்னி யோசிப்பானுகள்....

//படத்தைப்பார்த்தால் எங்கட பவன் செய்யிற விளையாட்டு போலகிடக்கு, கன்னாபின்னாவென்று சிரித்தேன்//

ரொம்ப சரி

Nimal June 7, 2010 at 4:54 AM

:-)

மதுவர்மன் June 7, 2010 at 11:50 PM

சரி, படத்தை தான் எல்லாரும் பார்த்தீங்கள்..

அதுக்கு கீழை என்ன எழுதியிருக்கு எண்டு பார்ட்தீங்களோ?

"ஒரு மாதத்தில் நல்ல பலன் & வயதெல்லை இல்லை, பக்க விளைவுகள் இல்லை, வாழ்க்கை முறையில் மாற்றம் தேவையில்லை”

படத்திலை அந்த பெண்ணுக்கு இல்லாமலிருக்கிற முடி வளரவே மூண்டு மாதம் வேணும் போல இருக்கு...

ஒண்டுமே இல்லையெண்டால், அப்ப என்ன தான் பண்ணூறாங்களோ...

மந்திரமாயிருக்கும்....

ஏரோப்பிளேன் ஓட்டுறாங்கள்!!!

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ