நா

உங்களுக்கு Badminton விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதா? இப்போதுதான் ஆர்வப்பட்டுப் பழக ஆரம்பித்திருக்கின்றீர்களா? நானும் உங்களைப்போல்தான். கடந்த சில மாதங்களாக Badminton இல் ஆர்வப்பட்டு விளையாடிக்கொண்டிருக்கிறேன். மேற்பார்வையாளர் எவரும் இன்றி YouTube காணொலிகளைப் பார்த்தும், இணைய உதவிகளைக் கொண்டும் சிறிது சிறிதாகவாவது முறையாக விளையாடப் பழகிக்கொண்டிருக்கிறேன்.

இணையத்தில் தேடியபோது 4 GB அளவிலான 30 பகுதிகளைக்கொண்ட காணொலி Badminton வழிகாட்டி கிடைத்தது. ஆனால் அதைத் தரவிறக்க வேண்டியிருந்தது Torrent மூலமாக. என்னைப்போல் ஆர்வக்கோளாறில் முந்நூறு, நானூறு பேர் இருப்ப்பார்கள் போல. அவ்வளவு எண்ணிக்கையான peers ஆனால் பத்தோ இருபதோ seeders. தரவிறக்கவேகம் 3 kbps இனைத் தாண்டியதில்லை. 0.01 kbps இலும் வரும். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எனது மடிக்கணினியை இரவுபகல் பாராது இயங்கவிட்டு முழுமையாக இறக்கிவிட்டேன். முந்தநாள்தான் வெற்றியடைந்தேன்.

இப்போது நானும் ஒரு seeder. என்னால் தரவிறக்க வேகம் சிறிது அதிகரித்திருக்கும். சரி இவ்வளவு கஸ்டப்பட்டு இறக்கினோமே, அதில் பலனிருக்கிறதா என்று பார்த்தால்... ஆம் நிச்சயமாக.

மிக அருமையான ஒரு வழிகாட்டி. தயார்படுத்தல், கையிற்குச் செய்யவேண்டிய பயிற்சிகள், Badminton இன் ஆரம்ப முக்கிய கூறான footworks முதற்கொண்டு எல்லாவற்றையும் சிறப்பாக விளங்கப்படுத்துகிறார்கள். இந்த வழிகாட்டி சீன மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் உபதலையங்கத்தைக் கொண்டிருப்பதால் விளங்கமுடிகிறது.

இப்போதெல்லாம் எனது அறையில் இந்த வழிகாட்டியைப் பார்த்து அதனைச் செய்து பார்க்கவிழைகிறேன். அறையின் மின்குமிழ் சிதறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் தெரிகின்றன. ஒரு Badminton bird இனைவிட மின்குமிழ் விலைகுறைவு என்பது கொசுறுத் தகவல்.

உங்களுக்கும் ஆர்வமிருக்கின்றதா? என்னைத் தொடர்பு கொள்வீர்களானால் அந்த முழுவழிகாட்டியினையும் தந்துதவமுடியும். இந்திய நண்பர்கள் தொடர்புகொண்டு "மாக்கா.. அப்பிடியே எனக்கு பார்சல் செய்யதுவிடு" என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். :-)

வாங்கோ செத்துச் செத்து விளையாடலாம்.


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

19 பின்னூட்டங்கள்.

Ramesh May 11, 2010 at 4:15 PM

ஆகா.. அண்ண வந்துட்டாரே.... இப்படியெல்லாமா கஸ்(பில்)டப்ப(பு)டுவாங்க

Ramesh May 11, 2010 at 4:16 PM

ஹிஹிஹி மித பெஸ்ட்...
அப்படியே நமக்கும் ஒன்று .... வின் 7 வாங்கின ஞாபகம்...

கன்கொன் || Kangon May 11, 2010 at 4:17 PM

:)))

ஆர்வம் போய்விட்டது...

Nimal May 11, 2010 at 5:00 PM

கன்கொன் 'மித பெஸ்ட்' இல்லையா...?!

//நான்கு மாதங்கள் தாண்டு ஒரு பதிவு.//

ஒரு மாதிரி பதிவர் எண்டத நிலை நிறுத்தியாச்சு... :-)

வந்தியத்தேவன் May 11, 2010 at 5:20 PM

இலங்கைப் பதிவர்களின் பிரதம பதிவர் மதுவின் நீண்டகாலத்தின் பின்னரான பதிவு அருமையாக இருக்கின்றது.

நெட்டில் நீச்சலும் பழக்குகின்றார்கள் பழகிப்பாருங்கள்.

தெகிவளைச் சந்திக்கு அருகில் ஒரு இடத்தில் பட்மிண்டன் விளையாடலாம் முடிந்தால் சென்று விளையாடவும்.

Subankan May 11, 2010 at 5:30 PM

Welcome back அண்ணா

எனக்கும் ஆர்வம் இருக்கிறது. கம்பஸ்சின் பல மாலைவேளைகளை அபகரித்தது Badmintonதான். நேரில சந்திக்கும்போது வாங்கிக்கொள்கிறேன். இந்துக்கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாட்டுகள் எப்படிப் போகிறது?

Bavan May 11, 2010 at 6:58 PM

அட... வெல்கம் பாக்..:)))

Bavan May 11, 2010 at 7:04 PM

பட்மின்டன்... ம்ஹிம்... நமக்கு எப்பவும் கிறிக்கற்தான் அண்ணா..:p

கிறிக்கற் பழகுறதுக்கு இப்பிடி ஏதாவது இருக்கா இருந்தா சுட்டியைத்தரவும்..:p

Mathuvathanan Mounasamy / cowboymathu May 11, 2010 at 7:18 PM

வாங்கோ றமேஸ்...

கங்கோனை அடிச்சுக்கொண்டு மீத பெர்ஸ்டா.. :)

இங்கால வந்தா சொல்லுங்கோ.. எழுதி வைக்கிறன்...

கங்கோன்...

ஆர்வம் போய்விட்டதா... அல்லது ஆர்வப்பட்டும் பயனில்லையா... Badminton விளையாடுங்கோ.. நாலு துள்ளுத் துள்ளினா நாலு கிலோ குறையுமாக்கும்..

வாங்கோ நிமல்,

எப்ப நீங்கள் மூடின கடையைத் திறக்குறது...

Mathuvathanan Mounasamy / cowboymathu May 11, 2010 at 7:22 PM

வாங்கோ வந்தி,

நெட்டில நீச்சல் பழகுற சலனங்களைப்பாத்தா எல்லாம் பொம்புளைப்புள்ளைகளாய் கிடக்குது. மனம்தான் சலனப்படுது... எங்களுக்கு Badminton போதும்..

தெகிவளைக்குப் பக்கத்தில இரண்டு மாதம் விளையாடினாங்கள். இப்ப சென் பீற்றர்ஸ், றோயல் கல்லூரிக்கு மாறியாச்சு..


வாங்கோ சுபாங்கன்,
Badminton.. Football எண்டு வாழ்க்கை போகுது... அப்ப நீங்களும் எங்களோட இணையலாம் போல.. உங்களை பிறகு தொடர்பு கொள்கிறேனே..

Mathuvathanan Mounasamy / cowboymathu May 11, 2010 at 7:24 PM

வாங்கோ என்பவன்,

வெல்கம் பாக்??? //

ஏன்யா பாகிஸ்தான இங்க வரவேற்கிறீங்கள்...? :)

கிறிக்கட் பழக சுட்டியா...

இருக்கிற குஞ்சு குருமன்கள், சுட்டிகள் குட்டிகள் எல்லாமே கிறிக்கட் விளையாடும்... (எனக்குத் தெரியதாக்கும் ஹீ ஹீ)

Bavan May 11, 2010 at 7:27 PM

//கிறிக்கட் பழக சுட்டியா...

இருக்கிற குஞ்சு குருமன்கள், சுட்டிகள் குட்டிகள் எல்லாமே கிறிக்கட் விளையாடும்... (எனக்குத் தெரியதாக்கும் ஹீ ஹீ)//

அதுசரி ஆனா த கிரேட் கோச் கன்கொனிட்டத்தான் நான் கிறிக்கற் கோச்சிங் எடுக்கிறன்.. அதுதான் உங்களிட்ட சுட்டி ஏதும் இருக்கா எண்டு கேட்டனான்..:p

கன்கொன் || Kangon May 11, 2010 at 7:32 PM

கிர்ர்ர்ர்ர்....

நான் தரம் 3 இல இருந்து 5,6 வரை பட்மின்ரன் பழகின்னான், பிறகு பிடிக்காம விட்டிற்றன்....
அதுவும் ஒழுங்குமுறையாப் படிச்சனான்.... ;)

ARV Loshan May 12, 2010 at 10:43 AM

ஆகா ஆகா.. உங்கள் கட்டழகுக்கு இவ்விரண்டும் தான் காரணமா?
நானும் Badminton விளையாடியவன்.. இப்போதும் நேரம் கிடைத்தால் ஆடுவதுண்டு..
உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கவும், அனைத்து பகுதிகளுக்கும் பயிற்சி கொடுக்கவும் நல்லதொரு விளையாட்டாம்..

கங்கோன் கிரிக்கெட் பயிற்ருவிப்[பாளர்? ;)
தகவல்கள் தளும்புது..

கன்கொன் || Kangon May 12, 2010 at 11:58 AM

// கங்கோன் கிரிக்கெட் பயிற்ருவிப்[பாளர்? ;)
தகவல்கள் தளும்புது.. //

ஏன்னே இந்தக் கொலைவெறி? ;)

வாகை பிரபு May 12, 2010 at 12:59 PM

Hi,
Am a beginner in badminton and i want to be a good player.. can you please help me..
As you told am in india.is it possible to send it?

Mathuvathanan Mounasamy / cowboymathu May 12, 2010 at 1:36 PM

வாங்கோ லோஷன் அண்ணா,

உடலை கட்டாக வைத்திருக்கவேண்டும் என்பதும் Badminton விளையாடுவதன் பிரதான நோக்கங்களில் ஒன்றுதான்.. வாற பொண்ணுக்கு இடைஞ்சல் தராதவாறு உடம்பை வச்சிருக்கவேணும் பாருங்கோ.. ஹீ ஹீ...

வாங்கோ வைகை,

இப்புடிக் கேட்டுட்டீங்களே.. 4.08GB கோப்பையும் எங்கே நான் ஏத்துவது.. எவ்வாறு நீங்கள் எப்படி இறக்குவது. யாராவது நண்பர்கள் இந்தியா வந்தால் DVD ஆக தந்துதவலாம..

உங்களுக்கு உடனடியாக வேணும் எண்டாச் சொல்லுங்கோ.. அதில 30 எபிசோட்கள் உள்ளன. தனித்தனியா ஏத்தி விடுறன்.. நீங்கள் இறக்கக் கூடியதாக இருக்கும். என்ன கொடுமை எண்டால் என்னிடம் 2GB இடம்தான் இருக்குது. நீங்கள் இறக்க இறக்க நான் அழித்துவிட்டுத்தான் மற்றவைகளை ஏற்ற முடியும்.

பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.. என்ன செய்யலாம் என்று.

KANA VARO May 12, 2010 at 7:20 PM

வாங்கோ செத்துச் செத்து விளையாடலாம்.//

நான் பட்மிண்டனுக்கு வரல, இதுக்கு வேணுமுன்னா....

வாகை பிரபு May 20, 2010 at 6:17 PM

Thanks brother,
Can you upload half part so i can download from torrent.
Rest half we will do after..

Thanks again brother..

Vagai.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ