நா

இந்த சூடு விழுகின்ற சங்கதிகளை இந்தியாவிலும், இந்தியச் சினிமாக்களிலும்தான் பார்த்திருக்கிறோம். இனி இலங்கையிலும் இதற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதில் கொஞ்சம் மகிழ்ச்சிதான் (??).

அவசரமாக காலி வீதிக்குப் போகவேணும் எண்டாலும் குறைந்தது 60 ரூபா அழவேண்டும் முச்சக்கரவண்டிக்காரர்களுக்கு. இந்தியா சினிமாவின் தாக்கத்தால் தமிழர்களிடையே ஆட்டோ என்ற சொல் பாவனையில் இருந்தாலும் இலங்கையில் திறீவீலர் என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். சிங்களவர்களிடையே ஆட்டோ என்றால் அவர்களுக்கு விளங்காது.

குறைந்தது 60 ரூபா, கொஞ்சம் கூடத்தூரம் போனால் 100 ரூபா, வெள்ளவத்தையில இருந்து பம்பலப்பிட்டி முடிவுக்குப் போனால் 150 ரூபா என்று முச்சக்கரவண்டியில் இருந்து போகும்போது மனம் அமைதியாகப் போனதே கிடையாது. வழமையான முச்சக்கரவண்டி எனின் கதைச்சுப் பேசி குறைச்சுக்கொள்ளலாம். சிங்களத்தில அதுவும் கடினம். நான் கூடுதலாக நடைதான். காசும் மிச்சம் உடற்பயிற்சியும் ஆகுது.

மனசுக்குக் கேட்கச் சந்தோசமாக இருக்கிறது. தற்போது இலங்கையிலும் மீட்டர் போட்ட முச்சக்கரவண்டிகள் பாவனைக்கு வந்துவிட்டன. வழமையாக முச்சக்கரவண்டிகள் நிறுத்தத்தில இருந்து வீடுவாறதுக்கும் ஒரு காசு போட்டு, பிறகு போற இடத்துக்கும் அறாவிலையில (கொடுத்துப் பழகியதால் தெரிவதில்லை) காசு போட்டு அவன் இரண்டு மாசத்தில முச்சக்கரவண்டி வாங்கின காசை எடுத்துவிடுவான். இப்போது பரவாயில்லை. விளம்பரத்தைச் சுட்டிய மயூரேசனுக்கு குட்டி நன்றி.


சும்மா பகிடிக்குத்தான் யாராவது இதை உருவாக்கினார்களோ என்று கடைசியாக இருக்கிற அப்பிள் டக்ஸிக்கு தொலைபேசிக்கேட்டேன் இன்று.

சிவந்த அப்பிளின் இனிமையான குரலில் ஒரு பெண் "ஹலோ.. அப்பிள் டக்ஸி" என்றாள். அந்தக் குரலுக்கு மீட்டர் போடாவிட்டாலும் அவர்களுடைய முச்சக்கரவண்டியில் போகலாம். எனினும் விசாரித்துப் பார்த்தேன்.

உண்மைதான். தொலைபேசினால் வீட்டுக்கு வருகின்றார்கள், பெண்ணல்ல... முச்சக்கரவண்டி. அண்மைய டக்ஸி சேவை குறைந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்வார்களாம். சூடு போடமாட்டார்கள் என்று நம்புவோம்.

ம்ம்ம்.. என் உடற்பயிற்சி குறையப்போகின்றது போல் தெரிகின்றது.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

21 பின்னூட்டங்கள்.

யோ வொய்ஸ் (யோகா) June 4, 2010 at 9:37 PM

/////உண்மைதான். தொலைபேசினால் வீட்டுக்கு வருகின்றார்கள், பெண்ணல்ல... /////

ஆஹா சொல்லவேயில்ல

Subankan June 4, 2010 at 9:39 PM

அண்ணே தலைப்பைப்பாத்துட்டு இதென்ன புதுசாக் கேக்கிறியள் எண்டு நினைச்சு வந்தன். இலங்கையில் சூடு விழ கொஞ்ச நாளாகும் :p

//சிவந்த அப்பிளின் இனிமையான குரலில் ஒரு பெண் "ஹலோ.. அப்பிள் டக்ஸி" என்றாள். அந்தக் குரலுக்கு மீட்டர் போடாவிட்டாலும் அவர்களுடைய முச்சக்கரவண்டியில் போகலாம். //

ஆகா

கன்கொன் || Kangon June 4, 2010 at 9:39 PM

அவ்வ்வ்வ்....
யோ வொய்ஸ் அண்ணா ஒழிக... ;)

அதுசரி,
முதல் கிலோமீற்றருக்கு 50 ரூபா எண்டா பிறகென்ன வழமையான அளவு தானே போகும்?

இலாபமா இருக்குமெண்டு நினைக்கிறீங்களா?
கொஞ்சம் நிறையத் தூரமெண்டா இலாபமா இருக்குமெண்டு நம்புறன்....

பகிர்விற்கு நன்றிகள்... ;)

Bavan June 4, 2010 at 9:41 PM

//உண்மைதான். தொலைபேசினால் வீட்டுக்கு வருகின்றார்கள், பெண்ணல்ல... முச்சக்கரவண்டி//

பெண்ணின் குரலைக்கேட்டதுக்கே மீட்டர் போடுறீங்க என்றால்...

ஒரு பெண்ணே ஆட்டோ ஓட்டியிருந்தால்???..:P (அடுத்த முறை அப்பிள் டக்சிக்கு இந்த டெக்னிக்க சொல்லிக்கொடுக்கணும்..ஓகே..)

ARV Loshan June 4, 2010 at 9:42 PM

ஏன்யா ஒரு முடிவெடுத்திருக்கீங்க போலிருக்கே..

ஒரு மாதிரி தலைப்பு..
ஒரு மாதிரி தமிளிஷில் சிறு விளக்கம்..

என்(ன)நா நடக்குது?

ஓ நீங்க மது இசம் தந்தவர் இல்லே. ;)

அபோ நீங்கள் ஆட்டோல அதுவும் அப்பிளில் போக முடிவெடுத்தாச்சா?

யோ வொய்ஸ் (யோகா) June 4, 2010 at 9:43 PM

@கன்கொன் || Kangon

/////கொஞ்சம் நிறையத் தூரமெண்டா இலாபமா இருக்குமெண்டு நம்புறன்....////


அதென்ன கொஞ்சம் நிறைய தூரம்?

Bavan June 4, 2010 at 9:44 PM

//@கன்கொன் || Kangon

/////கொஞ்சம் நிறையத் தூரமெண்டா இலாபமா இருக்குமெண்டு நம்புறன்....////


அதென்ன கொஞ்சம் நிறைய தூரம்?//

ROFL

கன்கொன் || Kangon June 4, 2010 at 9:56 PM

// யோ வொய்ஸ் (யோகா)

கொஞ்சம் நிறையத் தூரமெண்டா இலாபமா இருக்குமெண்டு நம்புறன்....////


அதென்ன கொஞ்சம் நிறைய தூரம்? //

அவ்வ்வ்வ்...
அதுவும் ஒருவகை மொழி தானய்யா...
அதாவது ஓரளவுக்கு தூரமா என்று அர்த்தம்....


@ Bavan:
கவனம்...
விழுந்து உருளேக்க இருக்கிற 2,3 எலும்புத் துண்டுகளும் உடைஞ்சிடப் போகுது.... :@

balavasakan June 4, 2010 at 9:56 PM

கதைக்கிற அப்பளி பெண்ணே ஆட்டோ ஓட்டி வந்தா நல்லாருக்கும்..

Mathuvathanan Mounasamy / cowboymathu June 4, 2010 at 9:57 PM

வாங்கோ யோ..

பதிவுலகம் சூடா இருக்குது... அதுதான் எழுத்துகளும் அப்படியே...

௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮

வாங்கோ சுபாங்கன்

எப்படியோ நாளைக்கு தொலைபேசிப் பாக்கத்தான போறீங்கள்... அந்தப் பெண்ணே இருந்துதொலைக்கட்டும்.. ;-)

௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭௭

வாங்கோ கங்கோன்,

உங்கட போம் விட்டுப்போச்சு என்ன..
ஆரம்பக் கட்டணம் 50 ரூபா என்பதே பரவாயில்லை. களுபோவிலவிலிருந்து காலிவீதிக்கு 70 ரூபா புடுங்குறாங்கள். இதன்படி 50 ரூபாதான் வரும்.. வெள்ளவத்தைக்கு பகல் 120, இரவு 150 கறக்குனானுகள்.. இதன்படி 80 ரூபாதான் வரும். மனஉளைச்சல் இருக்காது என்பது மேலதிகம்..

யோ வொய்ஸ் (யோகா) June 4, 2010 at 9:59 PM

வைத்தியரை வழி மொழிகிறேன்..

Mathuvathanan Mounasamy / cowboymathu June 4, 2010 at 10:02 PM

வாய்யா என்பவன்,

இங்க பெண்கள் முச்சக்கரவண்டி ஓட்டிக் கண்டதில்லை.. இந்தியாவுல் அவர்கள் கராத்தே எல்லாம் பயின்றிருப்பார்களாம்..

௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮௮

வாங்கோ லோசன் அண்ணா,

ஹீ ஹீ.. மதுஇஸத்துக்கு கொப்பிரைட் வாங்கவேணும்..

Mathuvathanan Mounasamy / cowboymathu June 4, 2010 at 10:06 PM

யோ, என்பவன், கங்கோன்..

கங்கோன் பயப்படாதேங்கோ... அண்ணன் இருக்கிறான்..

கொஞ்சத் தூரம் என்பது போன்ற சொற்கள் இலக்கணத்தில் ஒரு வகை. ஆங்கிலத்தில் அவற்றை Oxymoron என்பார்கள்.. உதாரணத்திற்கு

* Dark sunshine
* Happy depression
* Amazing dullness
* Cold sun
* Living Dead
* Dark Light
* Cold Summer
* Smart Failure
* Perfect Human

* Civil War
* Irregular Pattern
* Deafening silence
* Forward retreat
* Friendly Fire
* Jumbo Shrimp
* Peaceful War
* Quiet Riot
* Serious Joke
* Silent Scream
* Sweet sorrow

தமிழில் ஐரணியாக இருக்கவேண்டும் என நம்புகின்றேன்..

கங்கோன்.. இப்பே ஓகேயா..

யோ வொய்ஸ் (யோகா) June 4, 2010 at 10:09 PM

ஆஹா நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு. மது பீட்டர் விட்டு பயமுறுத்துகிறார்

Mathuvathanan Mounasamy / cowboymathu June 4, 2010 at 10:09 PM

வாங்கோ பாலவாசன்..

நல்லா இருக்கும்.. ஒரு கவிதை ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.. கொஞ்சம் மாத்தி

கறுப்பு வளையல் கையுடன் ஒருத்தி
குனிந்து வளைந்து ஆட்டோ ஓட்டினாள்
பர்ஸ் சுத்தமாச்சு
மனசு குப்பையாச்சு.

கன்கொன் || Kangon June 4, 2010 at 10:12 PM

//
கங்கோன்.. இப்பே ஓகேயா.. //

ஹி ஹி...
நன்றி நன்றி நன்றி... ;)


// தமிழில் ஐரணியாக இருக்கவேண்டும் என நம்புகின்றேன்.. //

முரண்தொடை? :-o

தாருகாசினி June 4, 2010 at 10:29 PM

மீட்டர் ஆட்டோ நான் அறிஞ்சு முதலே பாவனைக்கு வந்திட்டுட்டுது...அப்பிள் பெண்ணை பற்றி இப்பத்தான் கேள்விப்படுறன்...;)

வந்தியத்தேவன் June 5, 2010 at 2:54 AM

ஹாஹா வழக்கமான மதுவின் வார்த்தை ஜாலங்களை சரித்தேன். (தலைப்பு உட்பட)

maruthamooran June 5, 2010 at 8:24 AM

////தொலைபேசினால் வீட்டுக்கு வருகின்றார்கள், பெண்ணல்ல... முச்சக்கரவண்டி. அண்மைய டக்ஸி சேவை குறைந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்வார்களாம். சூடு போடமாட்டார்கள் என்று நம்புவோம்.////

நல்லயிருக்கு தங்களுடைய வார்த்தை ஜாலம். ஆட்டோவுக்கு காசு கொடுத்து தேய்ந்தவர்கள் பட்டியிலில் எனக்கும் இடமுண்டு.

Jay June 5, 2010 at 10:06 AM

சிவந்த அப்பிளிற்கு இனிய குரல் இருக்கோ?? ;)

Mathuvathanan Mounasamy / cowboymathu June 6, 2010 at 7:43 PM

வாங்கோ தாரு,

மீட்டர் ஓட்டோ முதலே இருக்கா.. ம்ம்ம்.. எனக்கு இப்பத்தான் தெரியும்..

வாங்கோ வந்தி,

தலைப்புக்களையும் ரசிக்கிறீங்களா.. நல்லது... நல்லது... :)

வாங்கோ மருதமூரான்,

சிலவேளை வார்த்தைகளும் நல்லா வந்துடுது.. நன்றி

வாங்கோ மயூரேசன்,

சிவந்த அப்பிளின் இனிமையை ஒத்த குரல்..அதுதான்.. :)

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ