நா

சரத் பொன்சேகா நாளைக்கு கூட்டத்தில பேசப்போறார் எண்டு இரவோடிரவா ஆரோ கூட்டம் நடக்கவிருந்த மேடை அங்கிருந்த பதாகைகள் எண்டு எல்லாத்தையும் எரிச்சு நீலநிற ரிப்பன்களை போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்களாம்.

பனாதைப் பயலுகள். கூட்டம் நடக்கவிருந்த கிராமத்தில பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்ககாது கூட்டத்துக்கு போகாம இருப்பம் எண்டிருக்கிற சில பல சனம்கூட இதனால் கோபப்பட்டு ஆதரவு தெரிவிக்கும் என்பது எனது கருத்து.

இல்ல எதிர்க்கட்சிதான் இதையே ஒரு வழியாக கடைப்பிடிக்குதோ எண்டு மதுவுக்கு மண்டைக்குள்ள மொக்குச் சந்தேகம் வேற.
அண்ணாவுக்குத் தெரிந்த ஒருவர். நடுத்தர வயதுடையவர். அவரின்ர யதார்த்தைப் பாருங்கோ..


"உந்த ரீவியளைத் திறந்தா ஒரு சீரியல்... மண்டை வெடிக்குது.. தியேட்டருக்குப் போனா வாற படங்களைப் பாத்து மண்டை காயுது.. கொஞ்சக்காலமா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல.. இப்ப நெடுகலும் புளூபிலிம்தான் எடுத்துப்பாக்குறனான்.. உந்தச் சீரியலுகள் படங்கள் பாக்கிறத விட புளூபிலிம் எவ்வளவோ மேல்"..

சீரியலுகளாலயும், அண்மையில் வந்த படங்களலாலயும் மனுசன் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கவேணும் எண்டு பாருங்கோ..
நித்திரை என்பது மிக முக்கியமானது. நித்திரையிலதான் எங்கட கலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக முளைக்கலங்கள். அடுத்தநாள் புதுப் பொலிவோட, நல்ல எண்ணங்களோட, புதுப்புது ஐடியாக்களோட இருக்கவேணுமெண்டா ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

எவ்வளவு நேரம் நித்திரை கொள்ளுறம் என்பது அவசியமில்லை. எவ்வளவு நேரம் தொடர்ந்து நித்திரை கொள்ளுறம் என்பதுதான் அவசியம். அரை அரை மணித்தியாலமா பத்துமணித்தியாலம் நித்திரை கொள்வதில ஒன்றுமே இல்லை. ஆறரை மணித்தியாலம் தொடர்ந்து கொள்வதில முழுப் பயனும் பெறலாம்.


இந்தக் கணினி உலகில நித்திரை சீரின்மை என்பது பெரியொரு பிரச்சினை. நீங்கள் எப்படி?. இங்க போய் பரீட்சித்தப் பாருங்கோ. பிபிசியின் சுட்டி. பயப்படாது தகவல்களை தட்டச்சுங்கோ. உங்களுடைய வாழக்கைமுறை நித்திரைக்குப் பங்கம் விளைவிக்குதா, அதை எப்படி ஒரளவு சீராக்கலாம் என்று இறுதியில் சிறு குறிப்பு என்று நல்ல விடயங்களைச் சொல்லுது.


http://www.bbc.co.uk/science/humanbody/sleep/profiler/

எனக்கு ஒரளவு பரவாயில்லை எண்டு சொல்லுது. என்ர நண்பர் பனர்ஜி நிமலுக்கு நீ ஒரு ஆந்தை எண்டு சொல்லிப்போட்டது.

நித்திரைக்கு முதல் செக்ஸ் வச்சுக்கொள்ளுவீங்களோ எண்டெல்லாம் கேக்குது. கல்யாணம் கட்டினாக்கள்தான பதிலளிக்கவேணுமெண்டில்லை. போய் நீங்களும் ஒருக்கா பரிசோதித்துப் பாருங்களேன்.

படத்தைச் சொடுக்கிப் பாருங்கோ

பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

12 பின்னூட்டங்கள்.

Unknown January 10, 2010 at 11:16 AM

//இல்ல எதிர்க்கட்சிதான் இதையே ஒரு வழியாக கடைப்பிடிக்குதோ எண்டு மதுவுக்கு மண்டைக்குள்ள மொக்குச் சந்தேகம் வேற. //

இதப்பாத்து மதுயிஸம் எண்ட மாட்டன்...
எனக்கு அடிக்கடி அரசியலில இப்பிடிச் சந்தேகம் வாறது...


//சீரியலுகளாலயும், அண்மையில் வந்த படங்களலாலயும் மனுசன் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கவேணும் எண்டு பாருங்கோ..//

உது சட்டிக்குள்ள இருந்து அடுப்புக்குள்ள விழுந்த கதையாவெல்லோ இருக்கு....


//
http://www.bbc.co.uk/science/humanbody/sleep/profiler //

என்ன செய்தாலும் நான் ரொம்ம்ம்ப நல்லவனாம்.... என்ர உடம்பு தாங்குதாம்....

படம்,
அருமை....

Bavan January 10, 2010 at 11:20 AM

//இல்ல எதிர்க்கட்சிதான் இதையே ஒரு வழியாக கடைப்பிடிக்குதோ எண்டு மதுவுக்கு மண்டைக்குள்ள மொக்குச் சந்தேகம் வேற. //

இதிலென்ன சந்தேகம் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

//சீரியலுகளாலயும், அண்மையில் வந்த படங்களலாலயும் மனுசன் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கவேணும் எண்டு பாருங்கோ..//

என்ன செய்யிறது நானும் சீரியல்களால வீட்டில மட்ச்கூடப்பாக்க முடியாம கிரிக் இன்போஃவுடன் இருக்கிறனான்...ஹிம்ம்


//போய் நீங்களும் ஒருக்கா பரிசோதித்துப் பாருங்களேன்.//

பகிர்வுக்கு நன்றி அண்ணா..
எனக்கு 65%..ஹீஹீ

மு. மயூரன் January 10, 2010 at 3:45 PM

//என்ர நண்பர் பனர்ஜி நிமலுக்கு நீ ஒரு ஆந்தை எண்டு சொல்லிப்போட்டது.//

வாய் விட்டுச் சிரித்தேன்.

Subankan January 10, 2010 at 4:01 PM

//என்ர நண்பர் பனர்ஜி நிமலுக்கு நீ ஒரு ஆந்தை எண்டு சொல்லிப்போட்டது.//


நானுப் பாத்தன், என்னை ஒரு வானம்பாடியாம் :)

Mathuvathanan Mounasamy / cowboymathu January 11, 2010 at 4:37 PM

வாப்பா மீத பர்ஸ்ட் கோபி,

எனக்கெண்டா அந்தாள் சரிபோலத்தான் கிடக்குது. உந்த சீரியலுகளை விட புளூபிலிம் உடம்புக்கும் மனசுக்கும் நல்லாயிருக்கும்போலத்தான் கிடக்குது.

வாங்கோ பவன்,
65% மோ. டுவிட்டர விட்டா 85% க்கு எகிறிடப்போகுது.

Mathuvathanan Mounasamy / cowboymathu January 11, 2010 at 4:39 PM

வாங்கோ மயூரன், சுபாங்கன்,

ஹீ ஹீ.. பனர்ஜிக்கு உண்மையாத்தான் சொன்னது.

கன்கொன் || Kangon January 11, 2010 at 5:04 PM

//வாப்பா மீத பர்ஸ்ட் கோபி,

எனக்கெண்டா அந்தாள் சரிபோலத்தான் கிடக்குது. உந்த சீரியலுகளை விட புளூபிலிம் உடம்புக்கும் மனசுக்கும் நல்லாயிருக்கும்போலத்தான் கிடக்குது.//

அண்ணே.... ஒரு சந்தேகம்....
புளூபிலிம் உடம்புக்கு நல்லம் எண்டு சொல்றது விளங்கேல அண்ணே....
விளங்கப்படுத்துங்கோ அண்ணே....

இத விளங்கப்படுத்தித் தனியப் பதிவு போட்டாலும் நான் கவலைப்படமாட்டன் அண்ணே....

யோ வொய்ஸ் (யோகா) January 11, 2010 at 7:55 PM

:)

கருணையூரான் January 14, 2010 at 9:28 AM

///ஆதரவு தெரிவிக்ககாது கூட்டத்துக்கு போகாம இருப்பம் எண்டிருக்கிற சில பல சனம்கூட இதனால் கோபப்பட்டு ஆதரவு தெரிவிக்கும் என்பது எனது கருத்து///
நல்ல அரசியல் செய்யக்கூடிய மூளை இருக்கு போல வாழ்த்துக்கள்

Admin January 14, 2010 at 1:35 PM

அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்

Yadhu January 20, 2010 at 11:26 PM

//"உந்த ரீவியளைத் திறந்தா ஒரு சீரியல்... மண்டை வெடிக்குது.. தியேட்டருக்குப் போனா வாற படங்களைப் பாத்து மண்டை காயுது.. கொஞ்சக்காலமா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல..//

Athu thanoo ipa orey badmintanum...
statinumaaa irukenga..
ena oru kilu kilpaum kana ila... i mean (ISAM)

rooto February 16, 2010 at 4:57 AM

நித்திரை என்பது மிக முக்கியமானது. நித்திரையிலதான் எங்கட கலங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக முளைக்கலங்கள்.//

ஆமா உந்த "முளை" கலங்கள் எங்க இருக்குது?? ஏதும் மதுஇஸமா????

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ