நா

 அச்சுவலை - அச்சோ ஒரு கவலை

எவரும் மறந்திடவேண்டாம்

மீண்டும் சந்திப்போம் சிந்திப்போம்

பூரணை விருந்து

மீண்டும் ஒரு சந்திப்பு

அச்சுவலை சந்திப்பு - நேரடி ஒளிபரப்பு

எங்கள் சந்திப்பு - எவரும் மறந்திட வேண்டாம்

இவ்வாறு எத்தனை பதிவுகள் ஆர்வமேலீட்டால் வந்திருந்தன. அதிலொன்றும் தப்பேயில்லை. இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பு தந்த மகிழ்ச்சியும், கன்னி முயற்சியாயினும் அதன் காத்திரமும் இன்னொரு வலைப்பதிவர் சந்திப்புப் போல அழகுறை சுற்றப்பட்ட அல்லது தப்பாக விளங்கிக்கொள்ளப்பட்ட இருக்கிறம் சஞ்சிகையின் "அச்சுவலைச் சந்திப்பு" நடந்தபின் வரும் அதைப் பற்றிய பதிவுகளி்ல் அதிகமானவை மகிழ்ச்சி தருவனவாய் இல்லை.

அச்சுவலைச் சந்திப்பின் குறிக்கோள் என்னவாக இருந்தது? அது வலைப்பதிவர்களையும் அச்சு இலத்திரனியல் ஊடகத்தினரையும் இணைத்தல். இது சாதாரணமாகச் சொல்லிவிட்டு செய்யக்கூடிய குறிக்கோள் அல்ல. இதன் நிறைவேற்றுகைக்கு மிகச் சிறப்பான ஒழுங்குபடுத்தல் தேவைப்படுகிறது. அவ்வாறானவொரு ஒழுங்குபடுத்தலை காணக்கிடைக்கவில்லை.

வலைப்பதிவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் எனும்போது இலங்கைப் பதிவர்கள் கொழும்பிலிருந்து மட்டும் வருபவர்களல்லர். இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வருபவர்கள். மூன்று நாள் தொடர்ந்த விடுமுறையை அனுபவிக்காது சந்திப்பின் காத்திரத்திற்காக பணம், நேரம், உடலசதி பார்க்காது வருபவர்கள். இதனையெல்லாம் இருக்கிறம் சிந்திக்கவில்லையா? கல்முனையிலிருந்து சக பதிவர் முதல் நாள் இரவு பயணித்து இதற்காக வந்து மாலைவரை காத்திருந்து சந்திப்புத் தொடங்கி ஒரு மணித்தியாலங்களில் திரும்பிப் போய்விட்டார். மனதுக்கு உறுத்தலாக இருந்தது.

இருக்கிறத்தின் சந்திப்பில் குறைகளைப் பற்றியே கூறவேண்டியதன் காரணம் என்ன? இச்சந்திப்பை வெளியுலகிற்குக் காட்டிய முறை பிழையானது. இதனையே "அச்சுவலைச் சந்திப்பு - வலைப்பதிவர்களையும் அச்சு இலத்திரனியல் ஊடகத்தினரையும் இணைக்கும்.." என்று வெளியுலகிற்கு காட்டாது, "இருக்கிறத்தின் கலந்துரையாடல் நிகழ்வு - வலைப்பதிவர்களும் அழைக்கப்படுகின்றர்" என்பது போலக் காட்டியிருந்தால் யாருமே குறை குற்றம் கூறியிருக்கமாட்டார்கள்.

---------------------------------------------------------------------------------------------------

இருக்கிறம் ஒரு சஞ்சிகையாக, ஒரு நிறுவனமாக அதனைத் தக்கவைத்துக்கொள்ளவோ (ஏலவே அது ஓரளவு தன்னைத் தக்கவைத்திருக்கிறது புதிதாக வந்த மற்றைய சஞ்சிகைகளுடன் ஒப்பிடும்போது) அதன் இருப்பை வெறும் காலாகாலம் வெளிவரும் சஞ்சிகையாகவன்றி ஏதோ புதுவிதத்தில் வெளிப்படுத்திக்கொள்ளவோ இன்றைய அவசர உலகில் அதிகம் கவனிக்கப்படும் வலைப்பதிவுகளை உள்வாங்கவோ அல்லது வலைப்பதிவுகளினுள் உள்வாங்கப்படவோ வேண்டிய தேவை உளது. அவ்வாறானவோர் தேவையின் சிறுபகுதி இவ்வச்சுவலைச் சந்திப்பில் பூர்த்தியாக்கப்பட்டிருக்கிறது.

இருக்கிறத்தின் இருப்பின் சிறுவரலாறு. சஞ்சிகைகள் பத்திரிகைகளின் இயல்புகள். வித்தியாதரனின் சுவாரசியமான சில அனுபவங்களும், தமிழ்மொழியின் தவறான பாவனையிலான சிறுகோபங்கள், இருக்கிறத்தின் மேம்படுகைக்கான கருத்துரைகள், இருக்கிறம் மலினப்பத்திரிகையல்ல என்றவோர் சிறுவிவாதம் மற்றும் இருக்கிறத்தினைச் சுற்றியே வந்த இதர நிகழ்வுகள் எல்லாம் எதிர்பார்த்துவந்ததினைப் பூர்த்திசெய்யத் தவறியதால் வலைப்பதிவர்களின் ஈர்ப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை.

அச்சும் வலையும் அறிமுகப்ப்படும் சந்திப்பெனின் அதுசம்மந்தமாக ஏன் எதுவும் நிகழவில்லை? எவ்வளவு அருமையான வழிகள் உளளன. சிறு சிறு சுவாரசியமிகு போட்டிகள், அச்சிலிருந்து இருவர் வலையிலிருந்து இருவர் என குழுவாகி அறிமுகத்தை ஏற்படுத்தக்கூடிய சிறு செயற்பாடுகள் போல எவ்வளவோ உளன. அச்சு அச்சாகவும் வலை வலையாகவும் இருந்ததைத்தான் காணமுடிந்தது.

---------------------------------------------------------------------------------------------------

இருக்கிறம்... நீங்கள் அடுத்தமுறை இவ்வாறானதோர் சந்திப்பை ஒழுங்குபடுத்துவதாகவிருந்தால் அதன் நிகழ்ச்சிநிரலை ஏலவே வெளியிடுங்கள். வருகையாளர்கள் உங்கள்மேல் குறையொன்றும் கூற முடியாது.

--------------------------------------------------------------------------------------------------

இருக்கிறத்தின் "அச்சுவலைச் சந்திப்பினை" ஆர்வத்துடன் எதிர்பார்த்து மிக மேல உள்ள பதிவுகளைப் போட்ட வலைப்பதிவர்கள்தான் சந்திப்பின் பின் இப்பதிவுகளைப் போடுகிறார்கள்.

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

அச்சுவலைச் சந்திப்பில் பதிவர்க(ள்/ளும்)

இருக்கிறம் ஏமாற்றியது

எமது "சந்திப்பு வறுமையும்" அச்சுவலைச் சந்திப்பும்

மிக மேலுள்ள பதிவுகளுக்கு எவ்வளவு எதிர்பார்ப்புக்களுடனும் மகிழ்ச்சியுடனும் பின்னூட்டங்கள் கிடைத்ததோ அதைவிட காட்டமாகவும், கவலையுடனும் இவற்றுக்குப் பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன். இவற்றைச் சாதாரணமாகப் புறம்தள்ளிவிட முடியாது. இருக்கிறம் நிர்வாகத்தினர் அடுத்தவோர் சந்திப்பில் இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு சிறப்புறச் செய்யவார்கள் என்று நம்புகிறேன்.

------------------------------------------------------------------------------------------------

நான் எவ்வளவுதான் மேல எழுதியிருந்தாலும் தர்ஷாயணீ லோகநாதன் மூஞ்சிப் புத்தகத்தில் போட்ட Status Message ஆயிரம் கதை சொல்லும். அது....

அச்சுவலைச் சந்திப்பு - சேறும் சகதியும்


பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
(Aka)
கௌபாய்மது

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

8 பின்னூட்டங்கள்.

யோ வொய்ஸ் (யோகா) November 3, 2009 at 4:11 PM

உண்மைதான் நண்பரே வந்தது அநியாயம் என கவலைப்பட்டேன். இந்த நிகழ்வில் என்னை பொருத்த வரையில் உங்களைப்போன்று பலரது முகம் காண கிடைத்தது தான் ஒரே மகிழ்வான விடயம்.

நேற்று இந்த சந்திப்பு காரணமாக எனது விடுமுறை நாளில் 400 கிலோ மீற்றர் மொத்தமாக பிரயாணம் செய்தேன், அது வீணாகிவிட்டது என்னும் கவலையும் உண்டு. இருக்கிறத்தால் இந்த நிகழ்வை இன்னும் காத்திரமாக செய்திருக்கலாம்.

Unknown November 3, 2009 at 4:17 PM

//"இருக்கிறத்தின் கலந்துரையாடல் நிகழ்வு - வலைப்பதிவர்களும் அழைக்கப்படுகின்றர்" என்பது போலக் காட்டியிருந்தால் யாருமே குறை குற்றம் கூறியிருக்கமாட்டார்கள். //

அதே தான்....

அச்சுவலைச் சந்திப்பில் வலை என்பது குறிக்கும் வலைப்பதிவர்கள் தனியே நின்ற உணர்வு...

நிறைய ஏமாற்றங்கள் என்றாலும் சில நண்பர்களை சந்தித்த திருப்தியுடன் வீடுசென்று சேர்ந்தேன்...

Nimal November 3, 2009 at 4:32 PM

//அச்சும் வலையும் அறிமுகப்ப்படும் சந்திப்பெனின் அதுசம்மந்தமாக ஏன் எதுவும் நிகழவில்லை?//

அது அவர்களின் நோக்கமாக இருந்திருக்க முடியாது. தாங்களும் இருந்து தொலைக்கிறோம் என்பதை (தம்மை அறியாத) வலைப்பதிவர்களிடம் கொண்டுசேர்க்கவும், உத்தியோகப்பற்றற்ற விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு ஆள் எடுக்கவுமே இது ஒழுங்கு செய்யப்பட்டது போல் தெரிகிறது. இதைத்தாண்டிய எந்த உரோம நீக்க நோக்கங்களும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.

இருக்கிறம் எதிர்பார்த்தது அதற்கு கிடைத்துவிட்டது. தம்மை வலைப்பதிவர்களின் பேசு பொருளாக்குவதும், சுட்டபழத்தை இனி சுடாத பழம் ஆக்குவதும் நடந்துள்ளது.

பார்க்கலாம், இனி குறைந்தது சுடாத பழங்களாவது விலை கொடுத்து வாங்கப்படுகின்றனவா என்று.

யோகா சொன்னது போல் சில பதிவர்களை சந்திக்க முடிந்தது என்பதை தாண்டி எந்த ஆக்கபூர்வமான விடையங்களும் நடந்ததாக தெரியவில்லை.

Subankan November 3, 2009 at 4:40 PM

எமக்கும் பழைய நினைவுகளில் அதிகரித்த எதிர்பார்ப்புகளுடன் சென்றதால்தான் வந்தது வினை.

KANA VARO November 3, 2009 at 7:45 PM

மீண்டும் சந்திக்கின்றோம் அன்று போல் இன்றும் நடக்கும் எண்டு நினைத்தது தான் எல்லா குழப்பத்துக்கும் காரணம். எல்லோரும் எல்லோரிடமும் பழகினோம் என்பது உண்மை தான்

Mathuvathanan Mounasamy / cowboymathu November 4, 2009 at 8:19 AM

வாங்கோ யோ,

கொழும்பில இருந்ததால எங்களுக்குத் தெரியவில்லை. 400 கிமீ பயணம் உங்களுடையது. அனுதாபங்கள்.. வேறென்ன சொல்ல

---------------------------
வாங்கோ கோபி,

நானும் ஏலவே அறிந்த சிலருடன் கொஞ்சம் நெருக்கமானேன்..

----------------------------
வாங்கோ நிமல்,

கொஞ்சம் அதிக காண்டா இருக்கிறீங்கள்... குறைசொல்ல முடியாது..

----------------------------
வாங்கோ சுபாங்கன்,

பதிவுப்படத்தை விட நேரில நீங்க சின்னப் பொடியன்.. ஹீ ஹீ

----------------------------
வாங்கோ வரோ,

எக்ஸ்பீ பாவிச்சுக்கொண்டிருக்கிற உங்களுக்கு 98 இனை எக்ஸ்பீ மாதிரி இருக்கும் எண்டு சொல்லித் தந்தா எப்பிடியிருக்கும். 98 இல விசயம் இருக்குது. ஆனா எக்ஸ்பீயை எதிர்பார்த்த உங்களுக்கு 98 இல கடுப்புத்தான் வரும்.

அடுத்த முறை Upgrade செய்யவார்கள் என்று நம்பி "இருக்கிறம்"



பிரியமுடன்,
மதுவதனன் மௌ.

மன்னார் அமுதன் November 5, 2009 at 8:47 AM

யோ வொய்ஸ் போன்ற சில நல்ல பதிவர்களையும், ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நண்பர்களையும் காணக் கிடைத்ததே மகிழ்ச்சி.

தேர்தல்களில் மட்டுமே கோலோச்சிய மது இன்று வலைப்பதிவர்கள் வரை வளர்ந்துள்ளது.

சிறப்பான சிந்தனையாற்றலுடைய பதிவர்கள் இருக்கிறம் சஞ்சிகைக்கு எமது கண்டணத்தைத் தெரிவியுங்கள்.

ஆதிரை November 6, 2009 at 9:38 PM

//தேர்தல்களில் மட்டுமே கோலோச்சிய மது இன்று வலைப்பதிவர்கள் வரை வளர்ந்துள்ளது.//

டேய்... வலைப்பதிவுகளில் கள்ளவோட்டு போடுறது நீதானா...?
:P

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ