நா

கூகுள் - CO2 - வெப்பம்
கூகுள் தேடுதல் சுற்றுப் புறச் சூழலைப் பாதிக்கிறது என்ற செய்தி கடந்த மாதத்தில் விடப்பட்டது. அதாவது நாங்கள் செய்யும் இரண்டு கூகுள் தேடுதலானது, ஒரு கோப்பை தேநீருக்கான நீரை கொதிக்கவைக்கும்போது வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டை வெளிவிடும். அதாவது கூகுள் தனது தேடுதல் மேன்மைக்காக பாவிக்கும் கணிணிகள் வெளிவிடும் வெப்பமும் அதனால் வரும் விளைவுமே இது. உறுதிப்படுத்த இங்கே பார்க்க.

நான் கூகுளின் கன்னாபின்னா விசிறி. அவனின்றி அணுவும் அசையாது; கூகுள் இன்றி அவனும் அசையான் என்பது எனது கருத்து. கூகுள் தனது குரோமை சந்தைப்படுத்த செய்யும் வழிமுறைகளில் சிறிது வெறுப்பும் கொண்டவன். மேற்சொன்ன செய்தியை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தர்க்கமாக சிந்திக்கத் தலைப்படுகிறேன்.

ஏதோ மற்றத் தேடுபொறிகளான Yahoo, Live மற்றும் Ask என்பவற்றில் நாங்கள் தேடுதல் செய்ய மறுமுனையில் இருக்கும் நபர் அதைப் பார்த்து காகிதக் கோப்புக்களில் தேடி திரும்ப தட்டச்சி எங்களுக்கு அனுப்புகிறார் என்ற மாதிரியல்லவா இது இருக்கிறது. நல்லா கயிறு விடுறாங்கள். அவர்களும் கணிணிகளையும் தரவுத் தளங்களையும்தான் பாவிக்கிறார்கள். அவையும் வெப்பத்தையும் காபனீரொட்சைட்டையும் வெளிவிடும்தான். ஒரு கோப்பை தேநீருக்காக இல்லாதுவிடினும் முக்கால் கோப்பைக்கானதாக இருக்கும்.

கூகுளின் தேடுமுறைமைக்கான அல்கோறிதம் மிகச்சிறப்பு. அது செயற்படுத்தப்படும்போது நவீன கணிணிகள் தேவைப்படுவதோடு கூடியளவு வெப்பம், காபனீரொட்சைட் வெளிவிடப்படுவது சரியாக இருக்கலாம். ஆனால் கூகுளில் நாங்கள் விரும்பும் விடயத்தை மூன்று முயற்சிகளில் துல்லியமாகப் பெறலாமெனின் மற்றவைகளில் ஐந்து ஆறு முறை முயற்சித்தே ஆகவேண்டும். இப்போது வந்துள்ள கூகுளின் எங்கள் விருப்பத்துக்குரிய முறையில் மாற்றியமைக்கக் கூடிய தேடல் முறை முயற்சிகளை ஒன்றாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


எனக்கு இந்தச் செய்தி சொல்வதென்னமோ இதுதான். கூகுளைப் பாவிக்கும்போது தேடும் முயற்சிகளை குறைக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதாவது கூகுள் தேடுதலில் சரியான முடிவுகளைப் பெற சரியான, இலகுவான மற்றும் நுட்பமான ஏராளமான வழிமுறைகளுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மனதுக்கும் சந்தோசம். சுற்றுப்புறச் சூழலுக்கும் சாதகம்.

"முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியாது".

பிற்குறிப்பு : கூகுள் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் பாறைகளை உருகி வழிந்தோடச்செய்வதாகவும் Yahoo, Live, மற்றும் Ask போன்றன உருகும் நீரை மீண்டும் பனிக்கட்டியாக்குகின்றன என்பது போன்ற கருத்துத் தொனிக்கும் :-) இந்தச் செய்தியை வாசித்தபோது வந்த ஒரு பதிவு இது. உங்கள் கருத்துக்களும் வேண்டும் எனக்கு.

சக்தியைச் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே கறுப்பு நிற பின்புலத்தைப் பாவித்திருக்கிறேன். ;-)

பிற்சேர்க்கை :
கூகுளின் (உத்தியோகபூர்வமானதில்லையெனத் தெரிகிறது) சக்தி சேமிப்புத் தேடுபொறியானது அவுஸ்ரேலியாவில் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து அதிலேயே தேடினால் பிற்காலத்தில நாங்கள் எல்லாவற்றையும் தேடித்திரியவேண்டிய நிலை வந்தாலும் வரலாம். இருந்தாலும் WWW.BLACKLE.COM இற்குச் சென்று பார்த்து விடுங்கள்

மதுவதனன் மௌ.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

24 பின்னூட்டங்கள்.

ARV Loshan January 28, 2009 at 2:15 PM

பின்னிப் பிடல் எடுத்துட்டீங்க.. நானும் ஒரு கூகுள் காதலன்.. இது போல பல வதந்திகள் பரப்பப் பட்டாலும், கூகுளின் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை..

Think Why Not January 28, 2009 at 3:36 PM

கலக்குறீங்க Cowboy anna...

/*...இது போல பல வதந்திகள் பரப்பப் பட்டாலும்,..*/

but Loshan anna, this does not seems to be a rumour. As I'm the news provider for this post, I found that for maintaining the server and to keep the efficient algorithms running so much of power wasted. As நம்ம cowboy suggested, we would better use Google search efficiently whenever needed... :)

☀நான் ஆதவன்☀ January 28, 2009 at 3:48 PM

//"முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியாது".//

நல்ல பன்ச்....

☀நான் ஆதவன்☀ January 28, 2009 at 3:51 PM

//சக்தியைச் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே கறுப்பு நிற பின்புலத்தைப் பாவித்திருக்கிறேன். ;)//

உண்மையாகவா??? கருப்பு நிறத்தால் மின்சார சக்தியை நாம் சேமிக்க முடியுமா???

Karthick January 28, 2009 at 4:17 PM

very well said ngah.. If you see today everyone uses Google for each and everything. Frankly speaking, all of the IT people also uses Google a lot in day to day life and it has become a part and parcel of our work :)

Think Why Not January 28, 2009 at 4:23 PM

yeah.. some people have a habit of typing the website address on Google search box rather than on address bar even when they know the address exactly...

Arulkaran January 28, 2009 at 4:26 PM

My God...!!! Whats happening.. :(

//நான் கூகுளின் கன்னாபின்னா விசிறி. அவனின்றி அணுவும் அசையாது; கூகுள் இன்றி அவனும் அசையான் என்பது எனது கருத்து.//

நாங்களும் தான்...

//கூகுளைப் பாவிக்கும்போது தேடும் முயற்சிகளை குறைக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதாவது கூகுள் தேடுதலில் சரியான முடிவுகளைப் பெற சரியான, இலகுவான மற்றும் நுட்பமான ஏராளமான வழிமுறைகளுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்//

மிகச்சரியாகச் சொன்னீர்கள்...

Think Why Not January 28, 2009 at 4:29 PM

/*...உண்மையாகவா??? கருப்பு நிறத்தால் மின்சார சக்தியை நாம் சேமிக்க முடியுமா???...*/

பெரியளவில் இல்லாவிட்டாலும், நிச்சயமாக சிறிதளவாவது சேமிக்கலாம்.. உங்கள் கணினித் திரையில் கறுப்பு நிற காட்சியை கொடுக்க குறைந்தளவு சக்தியே பயன்படுத்தப்படும்...

Think Why Not January 28, 2009 at 4:34 PM

/*...கூகுளைப் பாவிக்கும்போது தேடும் முயற்சிகளை குறைக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதாவது கூகுள் தேடுதலில் சரியான முடிவுகளைப் பெற சரியான, இலகுவான மற்றும் நுட்பமான ஏராளமான வழிமுறைகளுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்...*/

மதுவதனன் அண்ணாவுக்கு: why don't you write a post about "how to use google search efficiently"... That would be great help for all of us as we know you are a efficient and effective searcher in Google.

It's not just request of mine, request from my next desks as well... ;)

மு. மயூரன் January 28, 2009 at 4:37 PM

சக்தியை சேமிக்க கறுப்பு பயன்படுத்துவது குறித்து கூகிளும் முன்னர் ஒருமுறை பேசியிருந்தது. அதாவது கூகிcஇன் முகப்புப்பக்கத்தை கறுப்பாக மாற்றினால் பிரமாண்டமான அளவில் சக்தி சேமிக்கப்பட முடியும்.

ஆனால் நீங்கள் இதை கறுப்பில் வெள்ளை எழுத்தாகப்போட்டது வாசிக்கும் போது எனக்கு கண் நோவையும் தலையிடியையும் ஏற்படுத்தியது. சாத்தியக்கடதாசி பதிவும் கறுப்பில் போட்டு இப்படித்தான் உயிரை வாங்கிகிறது. இந்த கறுப்பில் வெள்ளை எழுத்தை நான் வாசித்து வந்த தலையிடிக்குப்போட்ட பனடோலை உற்பத்தி செய்யச்செலவான சக்தி, பிறகு தலையிடி காரணமாக நான் மின்விசிறியை போட்டதால் செலவான சக்தி என்பவற்றை கணக்கிட்டு, நீண்ட கால அடிப்படையில் கண்ணாஸ்பத்திரியில் எனக்காக செலவழிக்கப்படவுள்ள சக்தியையும் சேர்த்துப்பார்த்தால் வெள்ளை பின்னணியால் வரும் சக்திச்செலவும் குறைவு போலும் தோன்றுகிறது.

ஈழத்தில் நடக்கும் போருக்கு இந்தியா போன்ற நாடுகள் வழங்கும் ஆயுதத்தில் ஒரு ஏவுகணையை வழங்காமல் விட்டால் அதனால் சூழலுக்கு விளையும் நன்மை, கூகிள் பத்துவருடத்துக்கு தன் வழங்கியை நிறுத்தி வைத்தால் கூட விளையாது.

Mathuvathanan Mounasamy / cowboymathu January 28, 2009 at 9:26 PM

வாங்கோ லோஷன் அண்ணா,

கூகுள் பற்றி வதந்திகள் நிறைய உண்டு. ஆனால் இதில சிறிது உண்மையிருப்பதாகவே படுகிறது. ஆனால் கூகுளில் மட்டும் குற்றம் சாட்டியது கொஞ்சம் கடுப்பைக் கிளப்பிவிட்டது. :)

மதுவதனன் மௌ.

Mathuvathanan Mounasamy / cowboymathu January 28, 2009 at 9:30 PM

Hi "Thinks Why Not - Wonders How"

இதென்னது பெயர்????

நன்றி திங்க்ஸ். கௌபாய்மது என்ற பெயர் எனக்கு பயங்கரமாக பிடிக்கும். தமிழுக்கு ஒத்துவராது என்று பலர் செல்லமாகக் கடிந்ததால் மதுவதனன் மௌ ஆகிவிட்டேன். :)

உண்மைதான் திங்க்ஸ்... செய்தி உண்மையாயிருக்கவே சாத்தியம் அதிகம்.

கௌபாய்மது eka மதுவதனன் மௌ

Think Why Not January 28, 2009 at 9:39 PM

/*...இதென்னது பெயர்????...*/

சும்மா... புதிசு புதிசா யோசிக்கனுமில்ல.. அதுதான்.... at least பெயர்லயாவது ​யோசி என்று வைக்கலாம் என்று... ஏன்னா பொதுவா எல்லாரும் "ஏன் அப்படி" என்று தான் யோசிப்பாங்க... நாம கொஞ்சம் வித்தியாசமா "ஏன் அப்படி இருக்கக்கூடாது" என்று யோசிக்கலாம் என்றுதான்...

Mathuvathanan Mounasamy / cowboymathu January 28, 2009 at 9:39 PM

// நான் ஆதவன் said...
உண்மையாகவா??? கருப்பு நிறத்தால் மின்சார சக்தியை நாம் சேமிக்க முடியுமா??? //

வாங்கோ நான் ஆதவன்,

கணிணிகளில் கறுப்பு நிறத்தை அதிகமாகப் பாவித்தால் பாவிக்கப்படும் மின்சக்தி சிறிது குறையும். ஏராளமானவர்கள் கறுப்புநிறத்தைப் பாவித்தால் குறிப்பிடத்தக்களவு சக்தி சேமிக்கப்படும்.

ஆனால் எமது கண்களையும் கவனிக்கவேண்டும். கண்களுக்கு பச்சை கலந்த நிறமே நன்று.

மதுவதனன் மௌ.

Mathuvathanan Mounasamy / cowboymathu January 28, 2009 at 9:42 PM

Welcome Karthick,

You are absolutely correct. Not only for the IT pepole, Google is becoming part of all the internet users' activities.

cowboymathu eka Mathuvathanan Mou.

Mathuvathanan Mounasamy / cowboymathu January 28, 2009 at 11:03 PM

Thinks Why Not - Wonders How said...
மதுவதனன் அண்ணாவுக்கு: why don't you write a post about "how to use google search efficiently"... That would be great help for all of us as we know you are a efficient and effective searcher in Google.

It's not just request of mine, request from my next desks as well... ;) //

உண்மைதான்... ஒரே பதிவில் போட்டால் போரடிக்கும் என நினைக்கிறேன். பதிவுகளுக்கிடையில அதற்கென ஒரு இடத்தை ஒதுக்கி தொடர்ச்சியாகப் போடலாம் என சிந்திக்கத் தலைப்படுகிறேன். நன்றி திங்க்ஸ

மது மௌ.

Mathuvathanan Mounasamy / cowboymathu January 28, 2009 at 11:09 PM

//மு.மயூரன் said...

சக்தியை சேமிக்க கறுப்பு பயன்படுத்துவது குறித்து கூகிளும் முன்னர் ஒருமுறை பேசியிருந்தது. அதாவது கூகிcஇன் முகப்புப்பக்கத்தை கறுப்பாக மாற்றினால் பிரமாண்டமான அளவில் சக்தி சேமிக்கப்பட முடியும். //
வாங்கோ மயூரன்,

இப்போதும் கூகுள் சக்தி சேமிப்புக்காக தேடுபொறியை வைத்துள்ளது. இதோ இந்தப் பின்னூட்டத்தின் பின் பதிவில் பிற்சேர்க்கையாக அதனை இணைத்துவிடுகிறன்.


மயூரன்... சக்தி சேமிப்புக்காக கறுப்பைப் பாவிக்கிறேன் என்பதுடன் குட்டியாய் ஒரு ஸ்மைலியும் பாவித்துள்ளேன். நீங்கள் சொல்வதும் சரி. இந்தப் பதிவை விட இதனை வேறெங்கும் பாவிக்க சந்தர்ப்பம் வாய்க்காதென்பதாலேயே அதைக் கூறினேன். அதில் உண்மையெனினும் தொடர்ந்து கறுப்பையே பார்த்தால் எங்கட கண்ணுகளும் ஒரேயடியா கறுப்பாகிவிட்டுடும். :-) :)

மேலும் நீங்கள் இறுதியாகக் கூறியதும் உண்மையெனினும் அரசியல் விளையாடுகிறது... நாங்கள் விளையாட்டுப் பொருட்கள்.. வேறன்ன சொல்ல..

மதுவதனன் மௌ.

Mathuvathanan Mounasamy / cowboymathu January 28, 2009 at 11:15 PM

வாங்கோ அருள்கரன் அண்ணா,

சும்மா... செய்தியைப் பாத்து இதென்ன நம்மாளை இப்பிடி பிழையா சொல்றாங்கள் என்று எதிர்ப்பாய் ஒரு அலசல் பதிவு.. அவ்வளவுதான்...

மது மௌ.

புல்லட் January 29, 2009 at 2:44 PM

ம்ம்! நீங்கள் கூகிள் பத்தி ஒரு பி.எச்.டி செய்யலாம்.... சரிசரி நீங்கள் கற்றறிந்தவற்றை எங்களுக்கும் சின்னச்சின்ன விடய்ஙகளா தரலாமல்லெ...
எங்களுக்கு நெட்டில அதிக நேரம் செலவிடக்கிடைக்கிறதில்ல. அதனால உங்களமாதிரி பயனுள்ள தேடல்களை மேற்கொள்ள முடிகிறதில்ல.... கூகிள் எண்டு ஒரு சப் கடகரி ஒண்டு திறந்து அதில எழுதுங்கோ! அடிக்கடி வருவம்..
நல்ல பதிவு... நகைச்சுவையா அதேநேரம் நச்சென்று எழுதியிருக்கிறீங்கள். :)

Mathuvathanan Mounasamy / cowboymathu January 29, 2009 at 11:01 PM

வாங்கோ புல்லட்,

தெரிஞ்சத அப்பப்ப போடலாமெண்டு இருக்கிறன். நன்றி.

மதுவதனன் மௌ.

இரா.செந்தில் January 30, 2009 at 9:53 AM

மதுவதனன் தமிழில் தேதி தெரிய வைப்பது எப்படி? உதவிக்கு நன்றி.

இரா.செந்தில்
www.iraSenthil.com

மு. மயூரன் May 6, 2009 at 6:38 PM

அட இந்தப்பதிவு உங்களுடையதா? பின்னூட்டமிட்டபோது நான் இப்படி நினைத்திருக்கவில்லை. அத்தோடு கௌபாய் மதுவும் நீங்கள்தானா? அடா அடா...

Mathuvathanan Mounasamy / cowboymathu May 6, 2009 at 8:33 PM

மு.மயூரன்,

ஏனிந்த ஆச்சரியம்?

ஏலவே தெரிந்திருந்தால் என்ன மாற்றம் நிகழ்திருக்குமோ... அறிய ஆவலாய் உள்ளேன். கௌபாய்மது தமிழுக்குப் பொருந்தாதென்று பலர் கூறியதால் தவிர்க்க முயற்சிக்கிறேன். எனினும் இணைய உலகில் கௌபாய்மதுவாகத்தான் கன இடங்களில் இருக்கிறேன்.

மதுவதனன் மௌ.

மு. மயூரன் May 6, 2009 at 10:14 PM

மாற்றம் என்று ஒன்றுமில்லை.

அட நீங்கள்தானா அது என்ற மாதிரி ஓர் ஆச்சரிய உணர்வு.

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ