நா

நீண்டகாலம் வலையுலகைவிட்டு தள்ளியிருந்ததாலோ என்னவோ எழதுவதற்குக்கூட முடியவில்லை. வார்த்தைகள் கோர்வையாக மறுக்கின்றன. நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்த என்னுடைய வலையுலகம் வேலைப் பளு காரணமாக சிறிது காலம் விட்டு நீங்கிச்சென்று இருந்தது. இப்போது புதிய மாற்றங்களுடன் சென்றுகொண்டிருக்கிறதை உணர முடிகிறது.

என்னதான் மாற்றங்கள் வந்தாலும் தெருச்சண்டைகளையும் டவுசர் அவிழ்த்தல்களையும் பாரம்பரியங்கள் ஆக்கியே தீருவோம் என்ற குரல்கள் இன்னமும் ஒலிப்பது மனத்தை நெருடுகிறது.

இன்றைக்கு ஏன் எனக்கு எழுதவேண்டுமெனத் தோன்றியது? எழுதியே ஆகவேண்டுமென ஒரு அவா; வெறி; ஆதங்கம்; மனக்கிடக்கை. வேறொன்றுமில்லை, ஜதராபாத்தில் நடந்த ஆசிட் சம்பவம்தான்.

விபரத்துக்கு இங்கே செல்லுங்கள்
http://cenimafun.blogspot.com/2008/12/3_12.html
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=7020&cls=&ncat=IN

வாசித்தபோது ஒருவித உணர்ச்சிக் குவியல் (குவியலின் அடிப்பாகம் வெறியில்தான் நிற்கிறது. இது ஒன்றும் அவங்களுக்கு வந்த வெறியல்ல) வந்து இப்போது எழுத்திக்கொண்டிருக்கும்வரை விட்டுவிலகமாட்டேன் என்கிறது.

ஆசிட் ஊற்றப்பட்ட்ட இருபெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்றபோது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அதில் ஒரு பெண்ணின் பார்வை முற்றாகப் போய்விட்டது என வாசித்தபோது ஏன் அந்தப் பெண் தப்பவேண்டும் என அடிமனம் கலங்குகிறது (தப்பாக எடுக்காதீர்கள்)

என்னைப் பொறுத்தவரையில் பெண்கள் மீதான் வன்புணர்ச்சியை விட இந்தவகை கொடுமைகள் எத்தனையோ மடங்கு கொடூரமானது. வன்புணர்ச்சிக்காளாக்கப்பட்ட பெண் காலத்தால் மீண்டுவர சாத்தியம் உளது. ஆனால இந்தப் பெண்கள் என்ன செய்வார்கள். கனத்துப் போகிறது மனம்.

பதிவை நீட்டவில்லை. இறுதியாக ஒரே ஒரு வசனம்.

ஆசிட் ஊற்றியவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவற்றுறையினருக்கு எனது சல்யூட்.

 
இடுகை பிடித்தால் மேல்க்கையிலும், பிடிக்காவிட்டால் கீழ்க்கையிலும் சொடுக்கிவிட்டுப் போங்கோ

7 பின்னூட்டங்கள்.

பழமைபேசி December 14, 2008 at 1:57 AM

வாங்க, வணக்கம்! ஆளே காணோம்??

Mathuvathanan Mounasamy / cowboymathu December 14, 2008 at 2:01 AM

வணக்கம் மணி,
வேலைப்பளு கொஞ்சம் தூரமாக்கிவிட்டது. மீண்டும் ஆரம்பிப்போம். இதோ...

Anonymous December 14, 2008 at 2:35 AM

//ஆசிட் ஊற்றியவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவற்றுறையினருக்கு எனது சல்யூட்.//

REPEAT...

சுபானு December 14, 2008 at 9:10 PM

//ஆசிட் ஊற்றியவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவற்றுறை
இப்படிப் பட்டவர்களுக்கு இம்மாதிரியான தண்டனைதான் கிடைக்க வேண்டும் ...

M.Rishan Shareef January 4, 2009 at 6:08 PM

அன்பின் மதுவதனன்,

இதைப் பார்க்கவும் :)
http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_03.html

தொடரட்டும் உங்கள் சேவை !

Mathuvathanan Mounasamy / cowboymathu January 4, 2009 at 9:28 PM

சுபானு வருகைக்கு நன்றி...

ரிஷான் அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

மதுவதனன் மௌ.

geethappriyan July 18, 2009 at 11:45 AM

மது ரொம்ப நல்ல பதிவுங்கோ..
நானும் படித்து கொதித்தேன்.
இந்த நாட்டில் பெண் பிள்ளைங்க எப்படிங்க நடமாடுறது?
இந்த மனித மிருங்கங்களுக்கு என்ன போதித்தார்கள் அவனுடைய ஆசிரியர்கள்?
என்னை கேட்டால் அவன் ஆசிரியரை போய் விசாரித்து புத்திமதி சொல்லி கவுன்சிலிங் செய்யணும்.
அவன் நினைத்தால் இது போல மாணாக்கரை திருத்தலாம்.
ஏன் எங்கோ இருக்கும் நான் தன்னார்வம் காரணமாக உங்களுக்கு பின்னூட்டம் இடலயா அது போல,

நீங்களும் பின்னூட்டமிடுங்கோ